ஜெ., வெற்றிக்காக இன்று தென்னிந்திய பிரபல நடிகை நமீதா திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஜெ., வெற்றிக்காக நமிதா திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றம்
13 – வயது தமிழக சிறுவன் 2 பட்டங்களை பெற்று சாதனை
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் 13 வயதான பிரணவ் கல்யான் என்ற தமிழக சிறுவன் மைக்ரோ சாப்ட் பட்டம் வென்றுள்ளார். தற்போது கணித மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை படித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்தது. இதனால், சென்னை மாநகருக்கு மீண்டும் பலத்த மழை ஆபத்து ஏற்படும் என்ற சூழலில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்தது.
இப்போது வங்கக் கடலில் இருந்து அரபிக் கடல் நோக்கி காற்றில் மேகங்கள் இழுத்துச் செல்லப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்செட்-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
அண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் மே 2 ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டான்செட் நுழைவுத்தேர்வு இயக்குனர் மல்லிகா, டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்ததாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலை கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இதுவரை 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூன் 11 ம் தேதி எம்.பி.ஏ, எம்.சி.ஏ மாணவர்களுக்கும், ஜூன் 12 ல் எம்.இ, எம்.டெக் மாணவர்களுக்கும் 80 மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார். விண்ணப்பங்களை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: நாளை குடியரசு தலைவருடன் சுகாதார துறை அமைச்சர் சந்திப்பு
மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து நாளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா சந்திக்க உள்ளார். மருத்துவ நுழைவு தேர்வு அவசரச் சட்டம் குறித்து பிரணாபிடம் அமைச்சர் நட்டா விளக்கமளிக்க உள்ளார்.
பிசிசிஐயின் இளம் தலைவரானார் அனுராக் தாக்கூர்
மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாக்கூர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, காலியாகும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு, மகராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜய் ஷிர்கேவை தேர்வு செய்ய அனுராக் தாக்கூர் முன்மொழிந்துள்ளார். 41 வயதான அனுராக் தாக்கூர், பிசிசிஐயின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
F.I.R பதிவு செய்வது எப்படி?
By. Vinodh, Thiruthani Reporter
First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.
“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.
உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்றபிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.
சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்க வாட்டில் இரு வெள்ளைக்கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண் டும்.
அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்கு மூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதி செய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்ட த்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.
பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.
ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக்கூடாது. கார்பன்தாள் வைத்து எழுதப்படும்மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதி மன்றம் என விநியோகிக்க வேண் டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படி தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.
சமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே? என்னமா நீங்க இப்படி பன்னறீங்களே மா.?
ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !


