தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிட்டு படு மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நிலையில், வைகோவை சகுனியாக தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சமூகவலை தளங்களை பயன்படுத்திய பயன்பாட்டாளார்களை சகுனி வாசிகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஆதரவாளார் எவரோ ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் வைகோவை சகுனியாக தவறாக பதிவிட்வர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அந்த பதிவை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளார்.
வைரலாக பரவிவரும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :-
இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் அரசியல் திருவிழா பல்வேறு கேள்விக்கனைகளுடன் முடிவுகளை தந்து இருக்கிறது.
நாங்கள் அமைத்த மாற்று அரசியல் கூட்டணி படுதோல்வியை சந்தித்து உள்ளது.
மக்களின் முடிவுகளை மனதார ஏற்றுக்கொள்கிறோம்.
இனி மேல்தொடங்கப்போவது கள அரசியல் . இன்று சமூக வலைத்தளங்களில் வைகோ அவர்களை தேர்தல் சகுனியாக சித்திரிக்கும் வலைதள வாசிகளே, இளைய தலைமுறையினரே அவரல்ல. இந்த தேர்தலின் சகுனி. நீங்கள் தான் இந்த அத்தியாயத்தின் சகுனியாக இருக்கிறீர்கள்.
விஜயகாந்த் மீது இன்று அனுதாபம் தெரிவிக்கும் நீங்கள் தான் தேர்தலுக்கு முன்னர் அவரை கோமாளியாக சித்தரித்தீர்கள். விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்து வெற்றி பெற்று இருந்தால் ஊழல் கட்சியுடன் கூட்டணி என்பீர்கள்.
நான் சொல்கிறேன்
உங்களுக்கு தேவை மாற்று அரசியல் அல்ல. இன்று இணையதளத்தில் பொழுது போக்க ஏதாவது ஒரு விஷயம். லைக் வருமா வராத. சேர் பண்ணுவாங்களா மாட்டாங்களா?..
அந்த மனிதன்………..
முல்லைப் பெரியாறு அணையை காக்க போராடும் போது நீங்கள் யாரோடு போரடித்து கொண்டு இருந்தீர்கள்?
மீத்தேனை விரட்டி அடித்த போது நீங்கள் யாரை விரட்டிக் கொண்டு இருந்தீர்கள்?.
சீமை கருவேலையயை அழிக்க சட்ட போராட்டாம் நடத்திய போது எதை புடிங்கி கொண்டு இருந்தீர்கள்?.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை பாதுகாத்து போது நீங்கள் யாரை பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்?.
ஸ்டெர்லை ஆலையை மூட சட்ட போராட்டாம் நடத்தும் போதும் நீங்கள் எதை மூடிக் கொண்டு இருந்தீர்கள்?.
தமிழகத்தின் அனைத்து ஏரிகளும், குளங்களும் தூர்வார பட வேண்டும் என ஆனை பெற்ற போது யாருடன் நீங்கள் யாருடன் தூர்வாரிக் கொண்டு இருந்தீர்கள்?
மூவர் தூக்கு தண்டனையை அறுத்த போது நீங்கள் யாருடன்அற கதை அளந்து கொண்டு இருந்தீர்கள்
மது விலக்கை அமல்படுத்த நடைபயணமாக மக்களை சந்தித்து போது நீங்கள் எந்த பாரில் சரக்கு அடித்து கொண்டு இருந்தீர்கள்.
விடுதலை புலிகளை இன்றும் ஆதரிப்பேன் நாளையும்ஆதரிப்பேன் என்று கூறியதற்காக இரண்டரை வருடங்கள் சிறை வாசம் அனுபவித்தாரே, நீங்கள் யாரை சிறை படுத்தி கொண்டுஇருந்தீர்கள்.
அந்த மனிதனின் 50 ஆண்டு கால வாழ்க்கையில் ஏதேனும் குற்றம் சொல்ல முடியுமா?…
தன் வாழ் நாள் முழுவதும் கள போராட்டங்களிலே வாழ்க்கையை இழந்தவர். கட்சி கொடி காட்டாமல். ஏதேனும் அரசியல் தலைமை உண்டா இந்த தமிழகத்தில்..
இத்தனை போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட தலைமை இந்த தமிழகத்தில் உண்டா. இந்த மனிதனின் மீது என்றாவது நீங்கள் அனுதாப பட்டது உண்டா… ஆதரவுக்கரம் நீட்டியதுதான் உண்டா?…
பணம் வாங்கினார் கதை அளக்கும் நீங்கள் பல தொழில் அதிபர்களின் பகையை சம்பாதித்து வைத்து உள்ளாரே.. இணங்கி போய் சம்பாதிக்க தெரியாதா?..
2ஜீயையும், நில அபகரிப்புகளையும், சொத்துத்குவிப்புகளையும் மறந்த உங்களிடம் மாற்று அரசியல் பேசி பயனில்லை.
நீங்கள் எவ்வளவு தூற்றினாலும் அந்த மனிதன் தான் முதல் ஆளாக களத்தில் நிற்பார். மற்றவர்களை போல் அறிக்கை விட்டு கொண்டு இருக்க மாட்டார்.
அந்த மனிதன் நிறுத்திய 29 வேட்பாளர் களின் குறிப்புகளை அலசி ஆராய்ங்கள். ஒருவர் மீதும் விரல்நீட்டி குற்றம்சொல்ல முடியுமா உங்களால்?..
மக்களுக்காகவே 70 ஆண்டுகள் போராடும் கம்யூனிஸ்ட் களையே ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் யாருக்கு பஜனை பாட போகிறீர்கள்?.
தாழ்த்தப்பட்ட இனத்தின் விடியாலை வந்த திருமாவளவனையே அரவணைக்க தெரியாத நீங்கள் யாரோடு உறவாட போகிறீர்கள்?.
இதை விட தொலைநோக்கான தேர்தல் அறிக்கையை எவராலும் சொல்ல முடியாது. இதை விட மாற்றுக் களம் இந்த தமிழகம் சந்தித்து இருக்காது..
மாற்று அரசியல் களத்தில் தோற்றது நாங்கள் அல்ல. நீங்கள் தான்.
ஆனால் எங்கள் மாற்று அரசியல் தொடரும்……
என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது.



