Home Blog Page 5774

அ.தி.மு.க.- தி.மு.க வுடன் கூட்டணி இல்லாமல் வருங்காலங்களிலும் பா.ம.க தேர்தலில் போட்டியிடும் ! : முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி

 
 
அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி சேராது என பா.ம.க கட்சியின் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிமுக
 
அன்புமணி ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க.வினருக்கு எங்களது வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம்.
 
பா.ம.க.வுக்கு மாநிலம் முழுவதும் 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேரும் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர்.
 
தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை. முன்பை வேகமாக பணியாற்றுவோம்.தேர்தல் முடிவில் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றாலும் பண பலத்தினாலேயே வெற்றி பெற்று உள்ளார்கள். பா.ம.க. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
 
அ.தி.மு.க.- தி.மு.க வுடன் பா.ம.க இனி எப்போதுமே கூட்டணி கிடையாது. வருங்காலங்களிலும் பா.ம.க. தனித்தே போட்டியிடும். நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது என்று தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆழ்வார்கள் பன்னிருவர்: ஓர் அறிமுகம்

1. பொய்கையாழ்வார்

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும்

பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்.

 

அவதரித்த ஊர்:  திருவெஃகா (காஞ்சிபுரம்)

மாதம்:  ஐப்பசி

நட்சத்திரம்:  திருவோணம்

அம்சம்:  பாஞ்சஜன்யம் (சங்கு)

அருளிச் செய்த பிரபந்தம்:  முதல் திருவந்தாதி

 

***

2.  பூதத்தாழ்வார்

எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்

வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை  – மண்ணியில் நீர்

தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்

ஓங்குமுறையூர் பாணனூர்.

.

அவதரித்த ஊர் : திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்: அவிட்டம்

அம்சம்: கதாயுதம்

அருளிச் செய்த பிரபந்தம்: இரண்டாம் திருவந்தாதி.

***

3.  பேயாழ்வார்

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து

நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர்

என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு

நின்றது உலகத்தே நிகழ்ந்து.

 

அவதரித்த ஊர்:  திருமயிலை (மயிலாப்பூர்)

மாதம்: ஐப்பசி

நட்சத்திரம்:  சதயம்

அம்சம்: நந்தகம் (வாள்)

அருளிச் செய்த பிரபந்தம்: மூன்றாம் திருவந்தாதி.

***

4. திருமழிசையாழ்வார்

தையில் மகம் இன்று தாரணியீர்! ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன்  – துய்ய மதி

பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருமழிசை

மாதம்: தை

நட்சத்திரம்: மகம்

அம்சம்: ஸ்ரீசக்ரம்

அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி,  திருச்சந்த விருத்தம்.

 ***

5.  நம்மாழ்வார்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்  – சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

 

அவதரித்த ஊர்:  திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)

மாதம்: வைகாசி

நட்சத்திரம்:  விசாகம்

அம்சம்:  சேனை முதலியார்

அருளிச் செய்த பிரபந்தங்கள்:   திருவிருத்தம்,  திருவாசிரியம்,  பெரிய திருவந்தாதி,  திருவாய்மொழி.

 ***

6.  மதுரகவியாழ்வார் :

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த

சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்

உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.

 

அவதரித்த ஊர்:  திருக்கோளூர்

மாதம்:  சித்திரை

நட்சத்திரம்:  சித்திரை

அம்சம்:  குமுத, வைநதேயம்

அருளிச் செய்த பிரபந்தம்:  கண்ணிநுண்சிறுத்தாம்பு.

***

7.  குலசேகராழ்வார்

மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்

தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில்  – பேசுகின்றேன்

கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்

நல்லவர்கள் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருவஞ்சிக்களம்

மாதம்:  மாசி

நட்சத்திரம்:  புனர்ப்பூசம்

அம்சம்: கௌஸ்துபம்

அருளிச் செய்த பிரபந்தம்: பெருமாள் திருமொழி.

***

8.  பெரியாழ்வார்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !

இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன்  – நன்றிபுனை

பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த

நல் ஆனியில் சோதி நாள்.

 

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆனி

நட்சத்திரம்: சுவாதி

அம்சம்: கருடன்

அருளிச் செய்த பிரபந்தம்:  பெரியாழ்வார் திருமொழி.

***

9. ஆண்டாள்

இன்றோ திருவாடிப் பூரம்  எமக்காக

அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத

வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளா ராய்

 

அவதரித்த ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்

மாதம்: ஆடி

நட்சத்திரம்: பூரம்

அம்சம்: பூதேவி

அருளிச் செய்த பிரபந்தங்கள் :  திருப்பாவை,  நாச்சியார் திருமொழி.

***

 10.  தொண்டரடிப்பொடியாழ்வார்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்

என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்

மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால்

நான்மறையோர் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  திருமண்டங்குடி

மாதம்:  மார்கழி

நட்சத்திரம்:  கேட்டை

அம்சம்:  வநமாலா.

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.

***

11.  திருப்பாணாழ்வார்

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்!

வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால்  – ஆத்தியர்கள்

அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்

நன்குடனே கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர்:  உறையூர்

மாதம்:  கார்த்திகை

நட்சத்திரம்:  ரோஹிணி

அம்சம்:  ஸ்ரீவத்ஸம்

அருளிச் செய்த பிரபந்தம்:  அமலனாதிபிரான்.

***

12. திருமங்கையாழ்வார்

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ

ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் – ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.

 

அவதரித்த ஊர்:  திருவாலி திருநகரி

மாதம்: கார்த்திகை

நட்சத்திரம்: கார்த்திகை

அம்சம்: சாரங்கம் (வில்)

அருளிச் செய்த பிரபந்தங்கள்:  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,  திருநெடுந்தாண்டகம்,  சிறிய திருமடல்,  பெரிய திருமடல்,  திருவெழுகூற்றிருக்கை.

***

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்?

அருளிச் செயலை அறிவார் ஆர் ? – அருள் பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்

பேதை மனமே ! உண்டோ பேசு.

.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.

அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்ததாக தவறான செய்தியை நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதா ?

அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மாரடைப்பால் சற்றுமுன் மரணமடைந்தார் என்ற தவறான செய்தி வைரலாலக பரவிவருகிறது..
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வெற்றி பெற்றவர் சீனிவேல்.
 
அவர் மாரடைப்பால் சற்றுமுன் மரணமடைந்தார் என்ற தவறான செய்தியை நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதாக தெரிகிறது. a
 
அதன் அடிப்படையில் ஸ்கிரீன் ஸ்சாட்டுடன் அந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாலக பரவிவருகிறது.indexDDDD
 
வைரலாலக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
மதுரை* திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற *சீனிவேல்* மாரடைப்பால் சற்று முன் மரணமடைந்தார். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் முன்பே மரணமடைந்த பரிதாபம் என்று கூறப்பட்டுள்ளது.
 

வைரலாலக பரவிவரும் அந்த தகவல் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சீனிவேலின் மைத்துனர் மனோகரனின் கைப்பேசி  எண்: 9597060003-ல் நமதுதினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் செய்தியாளர் கேட்டபோது எம்.எல்.ஏ சீனிவேல் உடல் நலகுறைவு காரணமாக தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், சீனிவேல் நலமாக உள்ளதாகவும், அவர் மரணமடைந்தார் என்று பரவிவரும் செய்தி பொய்யானது  என்றும் அவர் கூறியுள்ளது  குறிப்பிடதக்கது.

 

ப்ளஸ்-2 வில் அதிக மார்க் வாங்கியதற்கு டிவியில் பரிசு தருவதாகக் கூறி மாணவியைக் கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு !

+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்தியதாக சமூக ஊடகங்களில் இருவருடைய புகைப்படங்களுடன் செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
வைரலாக பரவிவரும் அந்த தகவலில் கூறியுள்ளதாவது :-
 
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
 
கீழே புகை படத்தில் உள்ள பெண் அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல் அவரது மகள் விஜயலெட்சுமி வயது 17.அவரை கீழே இரண்டாவது இருக்கும் புகைபடத்தில் உள்ள 35 ,வயது மதிக்க ஆண் ஒருவன் +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை சேனல் உங்களுக்கு 25 ஆயிரம் தருவதாக கூறி விருதுநகருக்கு அவரது தந்தை தாய் உடன் அருப்புக்கோட்டையிலிருந்து அழைத்து
வந்து விருதுநகர் தெப்பம் அருகே தாய் தந்தையை ஏமாற்றி விட்டுவிட்டு மாணவியை
கடத்தி சென்றுள்ளான். index
 
மாணவியின் தந்தை சண்முகவேல் விருதுநகர் பஜார் போலிசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகினர். மேற்கண்ட செய்தியை படித்துவிட்டு படித்ததோடு பதினொன்றாக சென்றுவிடாமல் அந்த மாணவியின் அண்ணனாக ,அப்பவாக ,சக தோழனாக ,காக்கிசட்டை போடாத காவலனாக எண்ணி துரிதமாக செயல்பட்டு எந்தவித அசம்பாவிதமும் அந்த பெண்ணிற்கு நடக்கும் முன் காவல்துறையிடம் ஒப்படைக்க உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.r
 
அவர்களை பற்றி தகவல் கூற இந்த 94981 83849, 94434 30099, 94981 11107, 94981 83950 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அந்த எண்ணில் கொள்ள இயலவில்லை என்றால் என்னை எந்நேரமும் இந்த 94981 84936 எண்ணில் தொடர்புகொள்ளவும்.
 
நன்றி
 
இவன். உதவி கண்காணிப்பாளர்.விருது நகர்
 
குறிப்பு : உங்கள் தேடுதல் பேரூந்துகள் விடுதிகள் ரயில் நிலையங்களில் தீவிரமாக இருக்கட்டும் .
ஜெய்ஹிந்த் !!!!! என சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவிவருகிறது.

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு ?

 
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகி விட்டதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வருகிற 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32  அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். 
 
அமைச்சரவை பட்டியல் குறித்த விவரம் பின்வருமாறு
 
1..ஆர்.கே. நகர் – ஜெ.ஜெயலலிதா- முதலமைச்சர் ., உள்துறை, சட்டம் ஒழுங்கு
 
2.போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை 
 
3.மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
 
 4.  ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
 
5.ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
 
6. மதுரவாயல்- பா.பெஞ்சமின்-  உள்ளாட்சி, நகர நிர்வாகம்
 
7.  திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை
 
8. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
 
9. செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
 
10. வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
 
11. பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
 
12. விழுப்புரம்- சி.வி.சண்முகம்-  பொதுப்பணித் துறை
 
13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)
 
14, ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
 
15. எடப்பாடி- கே.பழனிசாமி-  தொழிலாளர் நலத் துறை…
 
16. ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
 
17. குமாரபாளையம்- கே.டி.தங்கமணி-  கைத்தறி, ஜவுளித் துறை…
 
18. கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை
 
19. திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை. 
 
20.  தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
 
21.  பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
 
22.  திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை
 
23.   வேதாரண்யம்–ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
 
24. கடலூர்-எம்.சி. சம்பத்-  வனத் துறை
 
25. நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
 
26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
 
27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை 
 
28. திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார்    –   மின்சாரத் துறை
 
29. சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை            
 
30. உடுமலை- ராதாகிருஷ்ணன்-   இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை
 
 31 சிரிவைகுண்டம்-  சண்முகநாதன்- கனிமவளத் துறை
 
32. ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை
 
இதுதவிர,  அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்றும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக அரசுக்கு வாழ்த்து‌ தெரிவித்த திமுக பொருளாளர் மு‌.க.ஸ்டாலின் !

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார்.
 
இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசுக்கு தனது வாழ்த்து‌களைத் தெரிவித்துக் கொள்வதாக கொளத்தூரில் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
மேலும், ஜெயலலிதா இந்த முறையேனும் தேர்தலை முன்னிட்டு‌ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக பொருளாளர் மு‌.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசி தொகுதி எம்.எல்.ஏ., காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்

தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் MLA 19.5.16

விஜயகாந்த்திற்கு அட்வைஸ் கொடுக்கும் தேமுதிகவினர் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி எனும் தொண்டர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார்.
 
தேமுதிக தொண்டர் மாலிக் அன்சாரி அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :- untitleds
 
தலைவர் #கேப்டன் அவர்களுக்கு வணக்கம்.
 
கழத்தின் மீதும் உங்கள் மீதும் மாறாத பாசம் கொண்ட கடைக்கோடி தொண்டனின் கடிதம்.
 
மக்கள் எதிர்ப்பார்த் தூய்மயான கூட்டணியை அமைத்தீர்கள், இந்த கூட்டணி மீது மக்களின் பார்வையும் பட்டது என்பது தான் உண்மை…
 
பாராளுமன்ற தேர்தலிலும் இந்தியாவே எதிர்ப்பார்த்த கூட்டணியை தான் அமைத்தீர்கள், அந்த கூட்டணி மீதும் மக்களின் நம்பிக்கையை பெற்றது…
 
ஆனால் இரண்டிலும் நாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளோம்…
 
காரணம் என்ன? என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது…
 
கூட்டணியை காலம் தாழ்த்தி அறிவிப்பது தான், அதை ஊடகங்கள் உங்கள் மீது சேற்ற வாரி வீச அவகாசமாக அமைந்துவிடுகிறது…
 
தேர்தல் சிறப்பு மாநாட்டில் கூட்டணியை நீங்கள் அறிவித்திருந்தால் வெற்றி அடைந்திருப்போமோ என்று எண்ண தோன்றுகிறது…
 
மேலும் நீங்கள் முதல்வர் வேட்பாளர், உங்களின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கண்ணாணிக்கிறார்கள், என்ன தான் பிரமாதமான தேர்தல் அறிக்கை என்றாலும் அதை நீங்கள் உங்கள் வாயால் சொன்னால் தான் மக்களை வசீகரிக்கும்…
 
எனவே நான் ஆட்சிக்கு வந்தால், என்ன என்ன திட்டங்கள் செய்வேன், அதனால் யார் பயன் அடைவார்கள், எவ்வளவு பேர் பயன் அடைவார்கள் என்பதை தெள்ள தெளிவாக அரை மணி நேரமாவது விளக்க நீங்கள் பயிற்சி மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்.
 
மக்களின் வரிபணத்தில் செய்ததை எல்லாம் ஆண்டவர்கள், ஆளுபவர்கள் மேடையில் பேசும் போது, உங்கள் பணத்தில் நீங்கள் இதுவரை செய்ததை ஏன் கூற மறுக்கிறீர்கள்? முடிந்தவரை மேடையில் பட்டியல் இடுங்கள், அது உங்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்…
 
இப்படிப்பட்ட பெரிய மாற்றத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் தலைவா…
 
இப்படிக்கு
உங்கள் மீது மாறாத பற்றுடன் உண்மைத்தொண்டன்
Malik Ansari.
 
என்று விஜயகாந்த்திற்கு மாலிக் அன்சாரி ஆலோசனைகளை கூறி அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

அதிமுகவின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலினே காரணம் ! : மு.க.அழகிரி சிரிப்போ சிரிப்பு !

தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுகவின் வெற்றியை கெடுத்தது ஸ்டாலின் தான் என்றும் திமுக தோல்விஅடையும்  வகையில்  தொலைக்காட்சியில் வெளியான தகவலை  பார்த்துவிட்டு அழகிரி மிக சந்தோசத்துடன்  சிரித்ததாக இன்று காலை அவரது வீட்டில்  கூடிய அழகிரியின் ஆதரவாளர் சிலர் கூறுகின்றனர்  .

அழகிரியின் ஆதரவாளர் கூறுவதாவது :-.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்று தெரிவித்திருந்தார்.

அழகிரி கூறியபடியே  அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும்  அதிமுக  ஆட்சி அமைக்கும் வகையில் தேர்தல்  முடிவுகள்  வெளிவந்துள்ளதால்   அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.

அதிமுக முன்னிலை என்று தொலைக்காட்சியில் வெளியான தகவலை  பார்த்துவிட்டு அண்ணன் பலமாக சிரித்தார். பார்த்தீங்களா, நான் சொன்னது நடந்துவிட்டது என்று அழகிரி ஆதரவாளர்களிடம் கூறினாராம். என்னை ஒதுக்கிவிட்டு வென்றுவிடலாம் என ஸ்டாலின் போட்ட கணக்கு என்னாச்சுன்னு பார்த்தீங்களா?

தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில்  ஈஸியா ஜெயிச்சிருக்கலாம். எல்லாத்தையும் கெடுத்தது ஸ்டாலின் தான். இனி கட்சி என்ன செய்கிறதுன்னு பார்க்குறேன் என்று அழகிரி சந்தோஷமாக சிரித்ததாக அழகிரியின்  ஆதரவாளர்கள் கூறுவதாக பரவலாக பேசப்படுகிறது.

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார் ! : பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா வாழ்த்து

 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார்.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்ட சட்டமன்ற தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. எனவே, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்ற தகவல் பரவியதையடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள்.
 
இதற்கிடையே, தமிழக ஆளுனர் ரோசய்யா, தொலைபேசியில் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை மோடி அவரது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகமுதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மம்தா பானர்ஜிக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
 
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, மக்களுக்கு எப்போதும் சேவை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.