தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை கெடுத்தது ஸ்டாலின் தான் என்றும் திமுக தோல்விஅடையும் வகையில் தொலைக்காட்சியில் வெளியான தகவலை பார்த்துவிட்டு அழகிரி மிக சந்தோசத்துடன் சிரித்ததாக இன்று காலை அவரது வீட்டில் கூடிய அழகிரியின் ஆதரவாளர் சிலர் கூறுகின்றனர் .
அழகிரியின் ஆதரவாளர் கூறுவதாவது :-.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்று தெரிவித்திருந்தார்.
அழகிரி கூறியபடியே அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.
அதிமுக முன்னிலை என்று தொலைக்காட்சியில் வெளியான தகவலை பார்த்துவிட்டு அண்ணன் பலமாக சிரித்தார். பார்த்தீங்களா, நான் சொன்னது நடந்துவிட்டது என்று அழகிரி ஆதரவாளர்களிடம் கூறினாராம். என்னை ஒதுக்கிவிட்டு வென்றுவிடலாம் என ஸ்டாலின் போட்ட கணக்கு என்னாச்சுன்னு பார்த்தீங்களா?
தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் ஈஸியா ஜெயிச்சிருக்கலாம். எல்லாத்தையும் கெடுத்தது ஸ்டாலின் தான். இனி கட்சி என்ன செய்கிறதுன்னு பார்க்குறேன் என்று அழகிரி சந்தோஷமாக சிரித்ததாக அழகிரியின் ஆதரவாளர்கள் கூறுவதாக பரவலாக பேசப்படுகிறது.



