+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்தியதாக சமூக ஊடகங்களில் இருவருடைய புகைப்படங்களுடன் செய்தி வைரலாக பரவி வருகிறது.
வைரலாக பரவிவரும் அந்த தகவலில் கூறியுள்ளதாவது :-
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
கீழே புகை படத்தில் உள்ள பெண் அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல் அவரது மகள் விஜயலெட்சுமி வயது 17.அவரை கீழே இரண்டாவது இருக்கும் புகைபடத்தில் உள்ள 35 ,வயது மதிக்க ஆண் ஒருவன் +2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை சேனல் உங்களுக்கு 25 ஆயிரம் தருவதாக கூறி விருதுநகருக்கு அவரது தந்தை தாய் உடன் அருப்புக்கோட்டையிலிருந்து அழைத்து
வந்து விருதுநகர் தெப்பம் அருகே தாய் தந்தையை ஏமாற்றி விட்டுவிட்டு மாணவியை
கடத்தி சென்றுள்ளான். 

மாணவியின் தந்தை சண்முகவேல் விருதுநகர் பஜார் போலிசில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடிவருகினர். மேற்கண்ட செய்தியை படித்துவிட்டு படித்ததோடு பதினொன்றாக சென்றுவிடாமல் அந்த மாணவியின் அண்ணனாக ,அப்பவாக ,சக தோழனாக ,காக்கிசட்டை போடாத காவலனாக எண்ணி துரிதமாக செயல்பட்டு எந்தவித அசம்பாவிதமும் அந்த பெண்ணிற்கு நடக்கும் முன் காவல்துறையிடம் ஒப்படைக்க உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

அவர்களை பற்றி தகவல் கூற இந்த 94981 83849, 94434 30099, 94981 11107, 94981 83950 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அந்த எண்ணில் கொள்ள இயலவில்லை என்றால் என்னை எந்நேரமும் இந்த 94981 84936 எண்ணில் தொடர்புகொள்ளவும்.
நன்றி
இவன். உதவி கண்காணிப்பாளர்.விருது நகர்
குறிப்பு : உங்கள் தேடுதல் பேரூந்துகள் விடுதிகள் ரயில் நிலையங்களில் தீவிரமாக இருக்கட்டும் .
ஜெய்ஹிந்த் !!!!! என சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பரவிவருகிறது.



