அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மாரடைப்பால் சற்றுமுன் மரணமடைந்தார் என்ற தவறான செய்தி வைரலாலக பரவிவருகிறது..
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வெற்றி பெற்றவர் சீனிவேல்.
அவர் மாரடைப்பால் சற்றுமுன் மரணமடைந்தார் என்ற தவறான செய்தியை நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதாக தெரிகிறது. 

அதன் அடிப்படையில் ஸ்கிரீன் ஸ்சாட்டுடன் அந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாலக பரவிவருகிறது.

வைரலாலக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-
மதுரை* திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற *சீனிவேல்* மாரடைப்பால் சற்று முன் மரணமடைந்தார். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் முன்பே மரணமடைந்த பரிதாபம் என்று கூறப்பட்டுள்ளது.
வைரலாலக பரவிவரும் அந்த தகவல் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சீனிவேலின் மைத்துனர் மனோகரனின் கைப்பேசி எண்: 9597060003-ல் நமதுதினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் செய்தியாளர் கேட்டபோது எம்.எல்.ஏ சீனிவேல் உடல் நலகுறைவு காரணமாக தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், சீனிவேல் நலமாக உள்ளதாகவும், அவர் மரணமடைந்தார் என்று பரவிவரும் செய்தி பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.



