Home Blog Page 5779

இந்திய அணிக்கு பயிற்சியாளராக திராவிட் தகுதியானவர்: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் திராவிட்தா சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.  “ராகுல் திராவிட் போன்ற வேறொரு வீரரை பிசிசிஐ நிச்சயம் காண முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. திராவிட் இந்தப் பொறுப்புக்கு ஆர்வம் காட்டினார் என்றால் நிச்சயம் அவர் சிறந்த பயிற்சியாளரகவே இருப்பார். அவரிடம் அதற்கான அறிவும் திறமையும் உள்ளது, 3 வடிவ கிரிக்கெட் ஆட்டங்களையும் நன்கு புரிந்து வைத்திருப்பவர், நல்ல அனுபவசாலி என கூறியுள்ளார்.

வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்!

சென்னை:

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு: 3,361 பேர் கணக்கில் செண்டம்

சென்னை:

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மேலும், இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: பாடவாரியாக செண்டம் எடுத்தவர் எண்ணிக்கை

சென்னை:

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள்…

உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.

வணிகக் கணிதம் பாடத்தில் 1072 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

303 மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 3,084 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகிய இருவர் முதலிடம் !

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த தேர்வில் 1195 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த தேர்வில் 1195 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு இன்று காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மறு கூட்டலுக்கும் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அவற்றை பயன்படுத்தி கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் வரும் 25-ந்தேதி வெளியிடப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வில் வெற்றியை பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் சார்பில் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் இருவர் முதலிடம் !

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த தேர்வில் 1195 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கி ருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த தேர்வில் 1195 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு இன்று காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆ ட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மறு கூட்டலுக்கும் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அவற்றை பயன்படுத்தி கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் வரும் 25-ந்தேதி வெளியிடப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வில் வெற்றியை பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் சார்பில் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

புதுச்சேரியில் +2 முடிவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

1185.. முதல் மதிப்பெண்.பெத்தி செமினார் பள்ளி.மாணவர் மார்ட்டீன் பிரெஞ்சு பாடம்

1183… இரண்டாம் இடம்,. காரைக்கால் நிர்மலா ராணி பள்ளி மாணவி காயத்திரி மற்றும் சங்கரவித்யாலயா பள்ளி மாணவி மீனா கதிஜா

1182..மூன்றாம் இடம் அமலோற்பவம் பள்ளி. மாணவி புவனேஸ்வரி

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : இருவர் முதலிடம்

WhatsApp Image 20160517 - 2026பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவி மற்றும் ஜஸ்வந்த் என்ற இருவர் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மையங்கள், மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

200 மதிப்பெண்கள்: விலங்கியல்- 10; வணிகவியல் 3084; வணிக கணிதம் 1072. தாவரவியல் 20;  கணிதம் 3,361; கம்ப்யூட்டர் சயின்ஸ் 303 பேர் 200. வேதியியல்- 1703; உயிரியல்- 775. இயற்பியலில் 5.

ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க முதல்வர் முடிவு

திறமையான இளைஞர்களை அமைச்சரவையில் சேர்க்கும் நோக்கில், ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SID_1460941g

இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அமைச்சரவையில் இருந்து சில அமைச்சரவைகளைக் கைவிடவும், புதிதாக சிலரை சேர்க்கவும் முடிவு செய்துள்ளோம்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து மே 13-ஆம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 3 ஆண்டுகால ஆட்சி திருப்தி அளித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை செயல்படுத்தியிருக்கிறோம். நாங்கள் அளித்த 160 வாக்குறுதிகளில் 120-ஐ நிறைவேற்றியிருக்கிறோம். 4-ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் தருணத்தில், மீதமுள்ள வாக்குறுதிகளையும் செயல்படுத்துவோம். இதுதவிர, புதிய பல திட்டங்களையும் அறிவித்து அமல்படுத்துவோம்.