இந்திய தேசிய வரைபடத்தை தவறுதலாக வெளியிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய அரசு கொண்டுவந்துள்ள வரைவு மசோதா குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் ஐ,நா பிரதிநிதி, ஐ.நா. பொது சபையின் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள தேசிய புவியமைப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றலை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
மேலும, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதி இந்திய வரைபடத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
அண்மையில் மலேசியா வெளியிட்ட இந்திய வரைப்படத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்திய தேசிய வரைபடத்தை வெளியிடும் முன் அது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய சட்ட வரைவு மசோதாவையும் மத்திய அரசு குழு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய வரைபடத்தை தவறாக வெளியிடுபவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம்
இந்தோ-வங்காளதேச எல்லையில் லேசான நிலநடுக்கம்
இந்தோ- வங்காளதேச எல்லைப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானது. பிற்பகல் 3.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் இல்லை
ஏங்க பிடிபட்ட ரூ.570 கோடியை கோவை வங்கிக்கு எண்ணுவதற்காக மட்டுமே கொண்டு போனாங்கலாமே ! இன்னமும் மர்மங்கள் தொடருதேங்க !
அமைச்சர் மகன் மீது திமுக புகார்
அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார் அளித்துள்ளார். ஆயிரம்விளக்கு தொகுதியில் நேற்று 45,46-வது வாக்கு சாவடிகளை கைப்பற்ற மூவேந்தன் முயற்சி என மனு அளித்துள்ளார். மூவேந்தன் மீது அளித்த புகாரில் துணை ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பர்வேஸ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேட்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்வு
கடந்த 24 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரபாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 692 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த திடீர் நீர்வரத்தால் நேற்று 232.8 கோடி கனஅடியாக இருந்த நீர் இருப்பு 237.4 கோடி கன அடியாக அதிகரித்து உள்ளது.
பேஸ்புக் ’ரியாக்சன்’-களை பயன்படுத்த வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை
இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து கொள்ளும் பேஸ்புக், நம்மை வகைப்படுத்திக் கொண்டு நமக்கேற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் ஈட்டுகிறது.
இதன் மூலம் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் அவர்கள் மார்க்கெட்டிங் செய்வது மேலும் எளிதாகுகிறது.
எனவே உங்களுடைய தனியுரிமையை பாதுகாக்க விரும்பினால், அதனை பயன்படுத்துவதை பற்றி சிந்தியுங்கள் என எச்சரித்துள்ளனர்.
உலகின் உயரிய மான்புக்கர் பரிசை வென்ற ‘தி வெஜிட்டேரியன்’
இறைச்சி உண்ணும் பழக்கத்துக்கு எதிரான நோக்கத்தை மக்கள் மனங்களில் விதைக்கும் வகையில் ‘தி வெஜிட்டேரியன்’ என்ற நாவலை எழுதிய தென்கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஹான் காங் என்பவர் உலகில் எழுத்துத் துறைக்கு வழங்கப்படும் மிகஉயரிய மான்புக்கர் பரிசை வென்றுள்ளார். பரிசுத்தொகையான 72 ஆயிரம் டாலர்களை இந்நாவலின் எழுத்தாளரான ஹான் காங் மற்றும் மொழிபெயர்ப்பாளரான டெபோரா ஸ்மித் ஆகியோர் சரிசமமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
போலீசாரை தாக்கிய நடிகைக்கு சிறை
கன்னட நடிகை மைதிரியா கௌடா தனது சகோதரி சுப்ரியா மற்றும் தனது உறவினர்கள் ரூபா மற்றும் ரேகாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைதிரியா போனில் பேசியபடி கார் ஒட்டியைத் கண்ட போக்குவரத்து தலைமைக் காவலர் சிவக்குமார் காரை நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் மைதிரியாவிற்கும், தலைமைக் காவலர் சிவக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும், அப்போது மைத்ரியா உள்ளிட்ட நான்கு பெண்களும் காவலர் சிவக்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது;
இது தொடர்பான வழக்கில் நடிகை மைத்ரியாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்தது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல் மற்ற மூன்று பெண்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து காவலரை தாக்கிய வழக்கில் மைத்ரியாவின் சகோதரி உள்ளிட்ட 3 பெண்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரிலும் மறு தேர்தலா ?
பிளஸ் 2 மாவட்ட வாரியான தேர்ச்சி : ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்
சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக அதிக தேர்ச்சி பெற்றவர்களில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்…
1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
5. சிவகங்கை : 95.07 சதவீதம்
6. விருதுநகர் : 95.73 சதவீதம்
7. தேனி : 95.11 சதவீதம்
8. மதுரை : 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்
10. ஊட்டி : 91.29 சதவீதம்
11. திருப்பூர் : 95.2 சதவீதம்
12. கோவை : 94.15 சதவீதம்
13. ஈரோடு : 96.92 சதவீதம்
14. சேலம் : 90.90 சதவீதம்
15. நாமக்கல் : 94.37 சதவீதம்
16. கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
17. தர்மபுரி : 90.42 சதவீதம்
18. புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
19. கரூர் : 93.52 சதவீதம்
20. அரியலூர் : 90.53 சதவீதம்
21. பெரம்பலூர் : 96.73 சதவீதம்
22. திருச்சி : 94.65 சதவீதம்
23. நாகை : 86.80 சதவீதம்
24. திருவாரூர் : 84.18 சதவீதம்
25. தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
26. விழுப்புரம் : 89.47 சதவீதம்
27. கடலூர் : 84.63 சதவீதம்
28. திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
29. வேலூர் : 83.13 சதவீதம்
30. காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
31. திருவள்ளூர் : 87.44 சதவீதம்
32. சென்னை : 91.81 சதவீதம்
புதுவை மாநிலத்தில் 87.74 சதவீதம் மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர

