Home Blog Page 5780

கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும்

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்துவருகிறது. தொலைதுார புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரைகளில் நிறுத்தியுள்ள படகுகளை பாதுகாக்குமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை

 
தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர்
 
இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி ஆகிய 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. பிடிபட்ட ரூ.570 கோடி தங்கள் பணம் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு ஆஜராகி கோரிக்கை விடுத்ததாவது :-
 
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அருகே ரூ.570 கோடி 3 கண்டெய்னர்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் கூட இதுபற்றி எந்த கருத்தும் வெளியிடாமல் இருப்பதால் இது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிக்கிறது.
 
இந்த பெரிய தொகை கைப்பற்றப்பட்டு 3 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட துறைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மர்மம் அப்படியே நீடித்து வருகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து விரிவான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்என்று அவர் கூறினார்.
 
அதற்கு நீதிபதிகள், ‘இந்த சம்பவம் தமிழ் நாட்டுக்குள் நடைபெற்று இருப்பதால் இதுபற்றி சம்பந்தப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி அங்கே மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.
 
அதற்கு வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, ‘இது தமிழ்நாட்டில் நடந்ததுடன், இந்த பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்வதாக கூறியதால் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகிறது. எனவே உச்ச நீதிமன்றம் விசாரிப்பது முறையாக இருக்கும்’ என்று கூறினார்.
 
அதற்கு நீதிபதிகள், ‘சம்பவத்தில் தொடர்புடைய லாரிகள் தமிழ்நாட்டுக்குள் கைப்பற்றப்பட்டதால் சென்னை உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக  ராஜேஷ் லக்கானி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

 

கொண்டு போயிட்டாங்க.! பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை கொண்டு போயிட்டாங்க.!

 
திருப்பூர் அருகே கடந்த 14ம் தேதி மூன்று, 3 கண்டெய்னர் லாரிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று (மே 17) காலை 5.30 மணிக்கு கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
காவல் துணை ஆணையாளர் தங்கவேல் தலைமையிலான காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; ஒவ்வொரு நடவடிக்கையும்,காணொளி பதிவு செய்யப்பட்டது.
 
சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
பிடிபட்ட ரூ.570 கோடி முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
 
மேலும் வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து ஏன் முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்?
 
இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய ரூபாய் 570 கோடி சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கீழ் கூறபட்டுள்ள கேள்விகள் எழுந்து பெரும் விவாதமாகி உள்ளது.
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
பிடிபட்ட 570 கோடி ரூபாய் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இது வரை ஏன் எவ்விதமான விளக்கமும் அளிக்கவில்லை ?
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
 
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொதுமக்கள் அனைவரும் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் எனும் பொதுமக்கள் கோரிக்கையும் வலுத்துள்ளது.
 
இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று பிடிபட்ட 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
 
 
 

நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதால் நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

Captureவங்கக் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதாகவும் இதனால் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்று கணக்கான பைபர் மற்றும் நாட்டு படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிடிபட்ட ரூபாய் 570 கோடிக்கு விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி !

 
தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து ஏன் முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி தெரிவித்தார் .
தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய ரூபாய் 570 கோடி சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கீழ் கூறபட்டுள்ள கேள்விகள் எழுந்து பெரும் விவாதமாகி உள்ளது.
 
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
 
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
 
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
 
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
 
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
 
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
 
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
 
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
 
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
 
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
 
பிடிபட்ட 570 கோடி ரூபாய் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இது வரை ஏன் எவ்விதமான விளக்கமும் அளிக்கவில்லை ?
 
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
 
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவரது ஓட்டினை பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த ரூ.570 கோடி பணத்தை கைபற்றியுள்ளனர்.
 
பிடிபட்ட அந்த பணம் முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பணம் நிரப்பட்ட கன்டெய்னர்கள் இருந்தது என கடந்த சிலநாட்களுக்கு முன்னரே வைகோ கூறியதையும் சுட்டி காட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
 
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிடிபட்ட ரூ.570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என திட்டவட்டமாக கூறுவது உண்மை தான? என்று பொதுமக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது .
 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் அதற்கான ஆதாரங்களையும், பிடிபட்ட ரூ.570 கோடி பணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விவாதமாகி உள்ள மேலே கூறபட்டுள்ள கேள்விகளுக்கு என்ன விளக்கம் அளிக்க போகிறார் ?
 
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொதுமக்கள் அனைவரும் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமானது. அது அவரின் கடமையும் கூட.

கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் தடா !

 
தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சமூகவலை தளங்களில் கருத்துகளை வெளியிட  விதித்துள்ள தடையை நாளை  நீக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது .
 
கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்திடம்  அதிமுக ஐ.டி. பிரிவுஅளித்திருந்த புகாரின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு தடை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பேஸ்புக் பதிவு குறித்து விளக்கம் அளிக்குமாறு தி.மு.க தலைவர் கருணாநிதி வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தடை நீக்கும் வரை தேர்தல் குறித்து எந்த பதிவும் வெளியிடக் கூடாது தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ள நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு விதிக்கப்பட் தடையை நாளை 17ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நீக்குவாரா? என்ற கேள்வி தி.மு.க வட்டாரங்களில் எழுந்துள்ளது .
 

நெல்லை எம்.பி.பிரபாகரன் வாக்களித்தார்

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆலங்குளம் சட்டமன்ற  தொகுதிக்குட் பட்ட தனது சொந்த ஊரான கீழப்பாவூரில் உள்ள இந்து நாடார் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்krp vote

பிடிபட்ட ரூபாய் 570 கோடி முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது : வைகோ

 
திருப்பூரில் பிடிபட்ட ரூபாய் 570 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டினை பதிவு செய்தார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த ரூ.570 கோடி பணத்தை கைபற்றியுள்ளனர்.
 
பிடிபட்ட அந்த பணம் முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பணம் நிரப்பட்ட கன்டெய்னர்கள் இருந்தது என கடந்த சிலநாட்களுக்கு முன்னரே வைகோ கூறியதையும் சுட்டி காட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

பதவியேற்பு தேதி கூட முடிவு செஞ்சிட்டாங்கமா ! : திமுக., அதிமுக., முடிவு செஞ்சிட்டாங்க !

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், 21ம் தேதியும், அ.தி.மு.க., வெற்றி பெற்றால் வரும், 23ம் தேதியும், அரசு பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர ஏனைய 232 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது .
232 சட்டமன்ற தொதிக்கானான தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை1 9ம் தேதி, நடக்கிறது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் , ஆட்சியை பிடிப்போம் என, அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் .
 
அதேபோல் தற்போது ஆட்சியில் உ ள்ள அ.தி.மு.க.வின் மீண்டும் ஆட்சியே மீண்டும் தொடரும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் .
 
தி.மு.க., வெற்றி பெற்றால், வருகிற 21ம் தேதி கருணாநிதி முதலமைச்சராக பதவியை ஏற்க,தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்தால், வருகிற 23ம் தேதி, ஜெயலலிதா முதலமைச்சராக பதவி பதவியை ஏற்க, அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எது எப்படியோ எவர் ஆட்சி அமைத்தாலும் சுயநலன் பாராமல் இனியாவது பொதுமக்களுக்கு பயன் தரும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்த மக்களின் வரிபணத்தை செலவிட்டு ஊழல் அற்ற வெளிப்படையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பார்கின்றனர்.