தேர்தல் முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்த தயங்க மாட்டோம் ! : ராஜேஷ் லக்கானி
3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சர் தலையீடு : கருணாநிதி
அதிமுக மற்றும் திமுகவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ! : ராமதாஸ்
தேர்தல் அதிகாரியின் மேசை மீது பணத்தை வீசி வாக்கு வாதம் செய்த பாமக வேட்பாளர் !
சினிமா பிரபலம் மூலம் நல்லது செய்யும் நடிகர்: ” மா ” விழாவில் இயக்குனர் பாண்டிராஜ்
‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் .
வருடா வருடம் தனது “மைம்” கலையின் மூலமாக நடத்தும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார் . இந்த வருடம் HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது . சென்னை காமராஜர் அரங்கத்தில் 14 .மே மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் சினிமாத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . அம்மா வின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது ..
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர் .
விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் ….. மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழசசி …தனக்கு கிடைக்கும் சினிமா புகழ் மூலமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி , நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன் .
சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும் , நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .
நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன் . இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம் . கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல , ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார் . தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு என்று பேசினார் .
விழாவில் நடிகர் கிஷோர் பேசும்போது … கோபியை நான் பாராட்டுகிறேன் , பிரமாதமான ஒரு நிகழ்ச்சி ,எனக்கும் மைம் குழுவில் சேர்ந்து இது போன்று நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது , அடுத்த வருடம் நான் இந்த கலையை கோபியுடன் கற்றுக்கொண்டு இதே மேடையில் நடிப்பேன் என்றார் .
விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன் , கரு பழனியப்பன் ,மகிழ் திருமேனி ,பாலாஜி மோகன் ,சிவா , ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் , நடிகர்கள் காளி வெங்கட் ,சரவணன் , பாண்டி ,முரளி ,ஆத்மா ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
பண பட்டுவாடாவைத் தடுக்க இயலாத ராஜேஷ் லக்கானி ராஜினாமா செய்ய கோரிக்கை !

தடையை மீறி பேஸ்புக்கில் பிரசாரம் செய்த பா. ஜ. க வேட்பாளர்.!
பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான ஜே.லோகநாதன் அந்த கட்சியின் சார்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சார்பில் ஆவடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார தடையை மீறி இன்று 14-05-2016 மாலை சுமார் 8.20 மணி அளவில் அவரது பேஸ்புக் பக்கத்தில் .Dear Social Media Friends.Please Vote for BJP in Avadi Constituency. ***Vote for Lotus***Jai Hind என கூறி அவர் வாக்கு கேட்டு பேசிய காணொளியை பதிவிட்டுள்ளதாக அவர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. பா. ஜ. க வேட்பாளர் ஜே.லோகநாதன் தடையை மீறி பிரசாரம் செய்தை உறுதி படுத்தும் வகையில் அவரது பேஸ்புக் பக்கத்தினை ஸ்ரின் ஸாட் எடுத்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார தடையை மீறி பா.ஜ. க வேட்பாளர் ஜே.லோகநாதன் பேஸ்புக் பக்கத்தில் பிரசாரம் செய்தமைக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது .
தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்க மாட்டேன்: கருணாநிதி
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டியதில்லை. அவரை நான் பழிவாங்குவேனோ என்று அவர் பயப்பட வேண்டாம். அண்ணா அவர்கள் பழிவாங்குவது என்னவென்று எனக்கு கற்பிக்கவே இல்லை. பழிவாங்குவது என்னவென்பதை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்காததால், நான் பழிவாங்கமாட்டேன் என்றார்
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் அணி அபார வெற்றி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் லயன்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்ற

து. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ராயல்
சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 248 ரன்கள் எடுத்தது. கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். 249 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து.
மு.க.அழகிரி மீண்டும் நீக்கம்: திமுக., அறிவிப்பு?
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று மு.க அழகிரி அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் திமுக- வில் இருந்து அழகிரி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக திமுக அறிவிப்பை விரைவில் வெளியிட கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மு.க ஸ்டாலினுக்கும் மு.க அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக மு.க ஸ்டாலின் கொடுத்த குடைச்சலால் திமுக- வில் இருந்து ஏற்கனவே மு.க அழகிரி திமுக- வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அதனால் கோபம் அடைந்த மு.கஅழகிரி கடந்த சில வருடங்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தலின் போது கூட திமுக- விற்கு எதிராக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார். இந்த நிலையில் மு.கஅழகிரி – மு.க ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள விரோத போக்கு முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் மு.க அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்ததாக திமுக அறிவித்தது.
அதற்கு அழகிரியின் துாதுவராக அவரது சகோதரி செல்வி நின்று எடுத்த முழு முயற்சியே. இருந்த போதிலும் மீண்டும் மு.க அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தபோது மு.க அழகிரியும் வெகு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் மு.கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
அழகிரி – கருணாநிதிசந்திப்பு குறித்து மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவும் இல்லை’ என்று செய்தியாளர்களிடம் கருத்துச்சொன்னார்.
மு.க அழகிரி அந்த சந்திப்பின்போது திமுக- வில்மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக கூறப்படுகிறது .
அதன் பின்னர் மு.க அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்த நிலையில் திமுக தனது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால் அந்த பட்டியலில் மு.க அழகிரி யின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்பு அளிக்கப்படும் என மு.க அழகிரி உட்டபட அனைவரிடமும் இருந்தது.
ஆனாலும் அதில் மு.க ஸ்டாலின் ஆட்களுக்கே பெருமளவு தேர்தலில் போட்டியிட வாய்பு அளிக்கப்பட்டது. அதனால் வெறுப்பு அ டைந்த
மு.க அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன் ‘மதுரையில் திமுக தோற்கும்’ என்று கொந்தளித்து கொதிப்பை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின்போது மு.க அழகிரி ஊடகங்கள் வாயிலாக வாயை வாய் திறந்து திமுக- விற்கு எதிராக செயல் பட்டு விடுவார் என்றே அனைவரிடமும் கருத்து இருந்தது. அதன் காரணமாக தான் மு.க அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் என பரவலாக சொல்லப் பட்டது .
இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,’ நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு பெண் எப்பவும் தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்டார். அதற்கு மு.க.அழகிரி நான் சொல்றத செய்யுங்கம்மாஎன்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தநிலையில் வீட்டிற்குள் போன அழகிரி மீண்டும் வெளியே வந்து அவரின் ஆதரவாளர்களிடம் வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க” என்று கண் கலங்கி தெரிவித்தார். அதைக் கேட்ட அழகிரியின் ஆதரவாளர்கள்,” நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் என்றனர்.
அதற்கு அழகிரி “பார்க்கலாம். பார்க்கலாம். அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட மு.க அழகிரி அவரின் ஆதரவாளர்களிடம் தெரிவித்தமைக்காக மு.க. அழகிரி திமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக மீண்டும் திமுக.அறிவிப்பை விரைவில் வெளியிட கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

