இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரின் பேரில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து தொகுதியில் தேர்தல் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் லக்கானி மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளனர் .
அதன் வெளிப்பாடாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன.
பேஸ்புக்கில் Anbalagan Geetha எனும் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது : –
அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையம் செய்த தவறு ..மக்கள் கடுங்கோபம்… வாக்கு பதிவிற்க்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் தேர்தல் ஒத்திவைப்பு தேவையில்லாத ஒன்று வெளிநாடு, வெளிமாநிலம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து விடுமுறை எடுத்து வாக்களிக்க வந்த நிலையில்.பணம் பட்டுவாடா தடுக்க வக்கில்லாத தேர்தல் ஆணையம். தேர்தலை நிறுத்தியுள்ளது..மேலும் ஒரு வாரம் கழித்து தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகிவிடுமா….. தள்ளிவைப்பு அரசியல்வாதிகளுக்கு சாதகம் தான்….ஆனால் மக்களை இன்னல்கலுக்கு உட்படுத்தி மகிழ்வது வேதனை அளிக்கிறது. அமைதியான் அரவவக்குறிச்சி தொகுதியை மோசமான தொகுதியாக சித்தரித்த லக்கானி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Anbalagan Geetha வின் அந்த பதிவின் கீழ் அவரது பேஸ்புக் நண்பர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளாவது : –
பிரபாகரன் சேரவஞ்சி : Exactly ! ஓட்டு சதவிகிதம் தான் குறையும் !
Shareef Askar Ali : மிகத் தைரியமான அறிக்கை உங்களுடையது.மக்களை அலைக்கலைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.இவர்கள் நோய்க்கு நாம் எப்படி கஷாயம் சாப்பிட முடியும்?
Esanathamr Selvaraj : தவறு செய்தவர்களுக்கு தண்டனையா அல்லது வாக்களர்களுக்கு தண்டனையா,தேர்தலை 23 ம் தேதிக்கு மாற்றுவதால் தண்டனை யாருக்கு,அப்படியானல் பணம் பறிவர்த்தனை சரியாகி விடுமா,பணம் கொடுத்தவர்கள் தேர்தல் ஆணையத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறார்களா,பணம் கொடுத்தற்கு என்ன பறிகாரம் செய்ய போகிறது தேர்தல் ஆணையம்,23 தேதி தேர்தல் என்றால் வாக்களர்களுக்கு மட்டும்தான் தண்டனையா, இதில் வேட்பாளர்களுக்கு இதில் பங்கு என்ன இதற்கு சாரியான தீர்வு கொடுக்க வேண்டும்,தீர்ப்ப மாத்துங் நாட்டாமை என்று சொல்லும் நிலைதான் இங்கு உள்ளது
Abu Thahir : 19 ந்தேதி வாக்கு எண்ணிக்கையை 25 ந்தேதியாக மாற்றியமைக்க வேண்டும்…. 233 தொகுதி வேட்பாளர்களையும் யோக்கிமானவர்களாக சித்தரித்து அரவாக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களையும் அத்தொகுதி மக்களையும் குற்றவாளியாக்கி அலைகலைக்க வைக்கும் தேர்தல் ஆனணயத்தின் செயல் வெட்கக்கேடானது….! பணப்பட்டுவாடவை தடுக்கத்தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லாத ஆணையம்…. தேர்தல் ஒத்திவைப்பு ஜனநாயக நாட்டில் அதிகாரவர்க்கத்தின் ஆணவச்செயலாகவே தெரிகிறது…..!
Abu Thahir : அரவை ரிசல்ட் விமர்சனத்திலேயே பிரகாசமாக தெரிகிறது.
Ilango Nallamuthu : பணம் கொடுத்த அந்த இரண்டு வேட்பாளர்களையும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும். தள்ளி வைப்பது தீர்வு ஆகாது. பணம் கொடுக்க உதவிய கட்சி ஊழியர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிடப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மே16 ஆம் தேதிக்குப் பதில் மே 23-ந் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆனணயத்தின் அறிவிப்பால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது.? என்கிறது தமிழகம்.




