பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான ஜே.லோகநாதன் அந்த கட்சியின் சார்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சார்பில் ஆவடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார தடையை மீறி இன்று 14-05-2016 மாலை சுமார் 8.20 மணி அளவில் அவரது பேஸ்புக் பக்கத்தில் .Dear Social Media Friends.Please Vote for BJP in Avadi Constituency. ***Vote for Lotus***Jai Hind என கூறி அவர் வாக்கு கேட்டு பேசிய காணொளியை பதிவிட்டுள்ளதாக அவர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. பா. ஜ. க வேட்பாளர் ஜே.லோகநாதன் தடையை மீறி பிரசாரம் செய்தை உறுதி படுத்தும் வகையில் அவரது பேஸ்புக் பக்கத்தினை ஸ்ரின் ஸாட் எடுத்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள தேர்தல் பிரசார தடையை மீறி பா.ஜ. க வேட்பாளர் ஜே.லோகநாதன் பேஸ்புக் பக்கத்தில் பிரசாரம் செய்தமைக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது .



