3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் சிறுதாவூர் மெகா பங்களாவில் கன்டெய்னர்களில் பணம் இருந்தது என தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். அது குறித்தான பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் கூறிய நிலையில் அனைத்து ஊடகங்களும் மெகா பங்களாவில் கன்டெய்னர்கள் இருந்ததை பட ஆதரத்துடன் செய்தி வெளியிட்டன.
ஆனால் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் சோதனையிட செல்லாமலே அதுபோன்ற கன்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு அறிவித்தனர் என்றும் அவர்களால் சொல்லபட்டதும் செய்தி வெளியானது .
அதை தொடர்ந்து நத்தம் விசுவநாதன் மற்றும் இரண்டு மூன்று அமைச்சர்களின் நெருங்கிய நண்பர் அன்புநாதன் வீட்டில் பணம் இருப்பதாக கிடைத்த தகவலால் நடந்த சோதனை பற்றிய செய்திகள் வந்தன
அன்பு நாதன் வீட்டிற்குசென்ற அமைச்சர்கள் யார் ? யார் ? அங்கே சட்டதிற்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றன என்பது குறித்து அன்பு நாதன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இருந்த பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட கண்காணிப்பு வீடியோ கேமராவை சோதனை செய்து பார்த்தால் எல்லாம் தெரிந்து விடும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை அது தொடர்பான எவ்விதமான தகவலையும் அரசு அதிகாரிகள் வெளியிடவில்லை. அந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட அன்புநாதன் சில நாட்கள் தலைமறைவாக இருந்து விட்டு நீதி மன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்றுக் கொண்டு எங்கோ சென்று விட்டார்.
தற்போது 570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரில் எந்த உரிய ஆவணங்களும் கொண்டு செல்லப்பட்ட பணம் திருப்பூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் பெருமாநல்லூர்-குன்னத்தூர் செல்லும் சாலையில் விரட்டிச் சென்று சோதனை நடத்தியதால் பிடிபட்டுள்ளது.
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து
இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
இந்த இந்த நிலையில் 570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ளதை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டதால் தான், வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரம் படைத்த வர்கத்தினர் மக்களுக்கு எப்போதாவது உண்மையை சொன்னது உண்டா.? அவர்கள் உண்மையை சொல்லாமல் இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்.? என்கின்றனர் பொது மக்கள்.



