தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகும், புகார்கள் வந்தால் மறுதேர்தல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்..
சட்ட மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பணப் பட்டுவாடா தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் கண்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட பணம், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



