தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், 21ம் தேதியும், அ.தி.மு.க., வெற்றி பெற்றால் வரும், 23ம் தேதியும், அரசு பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர ஏனைய 232 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது .
232 சட்டமன்ற தொதிக்கானான தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை1 9ம் தேதி, நடக்கிறது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் , ஆட்சியை பிடிப்போம் என, அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் .
அதேபோல் தற்போது ஆட்சியில் உ ள்ள அ.தி.மு.க.வின் மீண்டும் ஆட்சியே மீண்டும் தொடரும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர் .
தி.மு.க., வெற்றி பெற்றால், வருகிற 21ம் தேதி கருணாநிதி முதலமைச்சராக பதவியை ஏற்க,தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்தால், வருகிற 23ம் தேதி, ஜெயலலிதா முதலமைச்சராக பதவி பதவியை ஏற்க, அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ எவர் ஆட்சி அமைத்தாலும் சுயநலன் பாராமல் இனியாவது பொதுமக்களுக்கு பயன் தரும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்த மக்களின் வரிபணத்தை செலவிட்டு ஊழல் அற்ற வெளிப்படையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பார்கின்றனர்.



