திருப்பூரில் பிடிபட்ட ரூபாய் 570 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டினை பதிவு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த ரூ.570 கோடி பணத்தை கைபற்றியுள்ளனர்.
பிடிபட்ட அந்த பணம் முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பணம் நிரப்பட்ட கன்டெய்னர்கள் இருந்தது என கடந்த சிலநாட்களுக்கு முன்னரே வைகோ கூறியதையும் சுட்டி காட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .



