Home Blog Page 5782

விமலின் அடுத்த படம் ‘கடம்பன்’

0

vimal-kalavani-31-07-10விமல் நடித்த ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா,கேத்ரின் தெரஸா நடிக்கும் படத்துக்கு ‘கடம்பன்’ அப்படின்னு பெயர் வைக்க போறதாகவும் , கிறிஸ்துமஸ் வெளியீடாக கடம்பன் படம் வெளிவரும் அப்படின்னு செய்திகள் வருது .

பணத்தை வாங்கி கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டாம்: சகாயம் பேட்டி

sagayam
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பணத்துக்காகவோ, பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டோ வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.

கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் விவகாரம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

jayalalitha
கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் முயற்சியை தடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவில் பழைய தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைகட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. கச்சத்தீவு தேவாலயம் செல்லும் தமிழர்களின் ஆலோசனையை இலங்கை அரசு கேட்கவில்லை எனவும் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து தேவாலயத்தை புதிப்பிக்கலாம் என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களை ஆலோசிக்காமல் இலங்கை தேவாலயம் கட்டுவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் ஒப்புதலை பெற்று தேவலாயத்தை கட்ட மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மதுவிலக்கு பற்றி பேசும் போது குடிநீர் பிரச்சனை குறித்து பேசலாமா? பெண்களிடம் வைகோ ஆவேசம்

கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுவிலக்கை பற்றி பேசியபோது குடிநீர் பிரச்னை குறித்து பெண்கள் கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்தார்.

தூத்துக்குடி மாவvai koட்டம் கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மதுவிலக்கு குறித்து பேசிய வைகோ, சென்னை போ
ன்ற பெரு நகரங்களில் பெண்களே குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், வைகோவிடம் குடிநீர் சரியாக வருவதில்லை என முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வைகோ நான் மதுவின் கொடுமை பற்றி பேசும்போது, நீங்கள் குடிநீர் பிரச்னை பற்றி பேசி பேச்சை மாற்றுகிறீர்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 15, 16ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்று அழுத்த தாழ்வு நிலை தாrainingழ்வு பகுதியாக மாறி 16ந் தேதிக்குள் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மை
ய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 15 மற்றும் 16ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’!

0
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அரசியல் கட்சிகளின் சார்பில் 89 எம்எல்ஏக்கள் மீண்டும்
தமிழக சட்டப் பேரவை தேர்தலில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் சராசரியாக 4.35 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அவர்களின் சொத்து மதிப்பு சராசரி 8.63 கோடியாக அதிகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சொத்தின் மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் 51 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது 2016ஆம் ஆண்டில் 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
அதேபோல் முன்நாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011ஆம் ஆண்டில் 44 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது, நடப்பாண்டில் 62 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேமுதிகவின் 11 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 27 லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 15 லட்சம் ரூபாயும், பாமக 2 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ. 1 கோடியும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவின் சொத்து மதிப்பு சராசரியாக 3 கோடி ரூபாயும் உயர்ந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுகவின் 51 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும், திமுகவின் 16 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீச்சா ?

 
ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை காஞ்சிபுரம் அருகே குப்பையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடையாள அட்டைகள் கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்டவையா எனும் கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை என்ற சாலையோரமுள்ள குப்பை மேடுகள் மற்றும் குட்டையில் ஆயிரக்கணக்கணக்கில் வாக்காளர் பட்டியல் மற்றும் பூத் ஸ்லிப்புகள் போன்றவைகளை மூட்டை மூட்டையாகக் கட்டி சிலர் வீசிச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்த தகவல் அறிந்த காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அருண் தம்புராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ளநிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் முடுக்கி விட்டுள்ளது.
 
கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் தொகுதி வாக்காளர்களுடையது என தெரியவந்துள்ளது.
 
இருந்தபோதிலும் அந்த வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடபட்டுள்வர்கள் உத்தரமேரூர் தொகுதி உண்மையான வாக்காளர்களா ? அல்லது அல்லது கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளா என்று அப்பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் கீழப்பாவூர் பேரூராட்சிகுட்பட்ட வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார் அவருடன் நகர செயலாளர் சேர்மகனி,ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் தேமுதிக ,மக்கள் நலக் கூட்டணி,தமாகா தொண்டர்கள் உடனிருந்தனர் dmdk raj

தமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல் !

 
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கப்பள்ளி என்ற இடத்தின் அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு அவ்வழியாக வந்த 3 கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்டர். அதில் கண்டெய்னர் முழுவதும் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்ட அதிகாரிகள் உடனடியாக மூன்று லாரிகளையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
 
570 கோடி ரூபாய் பணம் பொதுத்துறை வங்கிக்காக கோவையில் இருந்து ஹைதராபாத்திற்கு எடுத்து செல்லப்பட இருந்ததாக லாரி ஓட்டுனர்கள் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தெரிவித்துள்ளனர். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் தொடர் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கின்றது. நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 570 கோடி ரூபாய் கைப்பற்ற பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்கி அதிகாரிகள் 570 கோடி ரூபாய் பணத்தை 3 கண்டெய்னர் லாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றி அனுப்ப வாய்பே இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஓட்டு போடணுமா?: ‘அம்மா’, ‘அய்யா’க்களுக்கு மாணவர்களின் அன்புக் கட்டளை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு ஊழல் செய்த கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது என தங்கள் அம்மா, அய்யாக்களுக்கு மாணவர்களும் குழந்தைகளும் கட்டளையிட்டு வருகின்றனராம்.
மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களின் பெற்றோரிடம் கூறுவதாவது :-

இதுநாள் வரை சில அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் அறிவித்துள்ள இலவசப் பொருள்களுக்கும் அவர்கள் ஓட்டுப் போடக் கொடுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் பார்த்து ஓட்டுப் போட்டது போதும். இலவசமா கொடுக்க போகிறோம் என இருக்கிற திட்டங்களை அரசியல்வாதிகள் அவங்க சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கப் போவது கிடையாது. பொதுமக்கள் கட்டுகிற வரிப் பணத்தில் இருந்துதான் இலவசப் பொருட்களை கொடுக்க போகிறார்கள். ஏற்கெனவே இலவசமா தேவையில்லாத திட்டப் பொருட்களுக்கு மக்களின் வரிப் பணத்தை செலவு செய்ததால்தான் அரசாங்க கஜானா காலியாகி இரண்டே முக்கால் லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளளது .
இலவசத் திட்டங்களுக்கு அரசாங்கம் செலவு செய்தது எனும் பெயரில் சில ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தரமற்ற பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியும் பல்வேறு முறைகேடுகளை செய்தும் கமிஷன் பெற்று கோடி கோடியா கொள்ளையடித்து அவங்க கஜானாவை நிரப்பிவிட்டனர். தேவையில்லாத இலவசத் திட்டங்களுக்கு ஆசைப்பட்டு வாக்கு அளித்ததால்தான் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன.
அரசு அலுவலகளில் கையூட்டு கொடுத்தால்தான் எந்த வேலையும் நடைபெறுகிறது. இப்ப நம்ம நாட்டுல நடுத்தர குடும்பத்தினர் வாழ்க்கை நடத்துவதே ரொம்ப கஷ்டமா உள்ளது. ஏற்கெனவே பல வரிகளைப் போட்டு நம்ம ரத்தத்தை உறிஞ்சி குடிச்சுகிட்டு இருக்கு அரசாங்கம்!
சாப்பிடுகிற சாப்பாட்டுக்குக் கூட வரியைப் போட வைத்து விட்டார்கள் ஊழல் அரசியல்வாதிகள்.
இன்னும் கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு வளர விட்டீங்கன்னா இந்த நாடு நாசமா போயிடும்.
இளைய தலைமுறையினராகிய நாங்கள் பிள்ளை குட்டிங்களோட கஷ்டப்படாம வருங்காலத்தில் நம்ம நாட்டுல நல்லா வாழணும் என நீங்க நினைச்சீங்கன்னா… கொஞ்சம் சிந்தியுங்க.! நீங்க எந்த கட்சியில வேணுமானாலும் இருந்துவிட்டுபோங்க.! ஆனால் அரசியல் கட்சிதான் முக்கியம் என்பதை பாராமல் இலவசத் திட்டங்களை அறிவிக்காத அரசியல் கட்சியை சேர்ந்த அல்லது நேர்மையான சுயேட்சை வேட்பாளருக்கு சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என பெற்றோருக்கு மாணவ மாணவிகள், குழந்தைகள் கட்டளையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நாடும் வீ டும் வளம் மிகுந்து வளர்ச்சி அடைந்து வேண்டும் நமது நாட்டில் நாம் நலமுடன் வாழ வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் சரிதான் என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.