ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை காஞ்சிபுரம் அருகே குப்பையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடையாள அட்டைகள் கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்டவையா எனும் கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை என்ற சாலையோரமுள்ள குப்பை மேடுகள் மற்றும் குட்டையில் ஆயிரக்கணக்கணக்கில் வாக்காளர் பட்டியல் மற்றும் பூத் ஸ்லிப்புகள் போன்றவைகளை மூட்டை மூட்டையாகக் கட்டி சிலர் வீசிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அருண் தம்புராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ளநிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் முடுக்கி விட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் தொகுதி வாக்காளர்களுடையது என தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் அந்த வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடபட்டுள்வர்கள் உத்தரமேரூர் தொகுதி உண்மையான வாக்காளர்களா ? அல்லது அல்லது கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளா என்று அப்பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர்.




