தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கப்பள்ளி என்ற இடத்தின் அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு அவ்வழியாக வந்த 3 கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்டர். அதில் கண்டெய்னர் முழுவதும் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்ட அதிகாரிகள் உடனடியாக மூன்று லாரிகளையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
570 கோடி ரூபாய் பணம் பொதுத்துறை வங்கிக்காக கோவையில் இருந்து ஹைதராபாத்திற்கு எடுத்து செல்லப்பட இருந்ததாக லாரி ஓட்டுனர்கள் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தெரிவித்துள்ளனர். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் தொடர் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கின்றது. நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 570 கோடி ரூபாய் கைப்பற்ற பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி அதிகாரிகள் 570 கோடி ரூபாய் பணத்தை 3 கண்டெய்னர் லாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றி அனுப்ப வாய்பே இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.



