தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு ஊழல் செய்த கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது என தங்கள் அம்மா, அய்யாக்களுக்கு மாணவர்களும் குழந்தைகளும் கட்டளையிட்டு வருகின்றனராம்.
மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களின் பெற்றோரிடம் கூறுவதாவது :-
இதுநாள் வரை சில அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் அறிவித்துள்ள இலவசப் பொருள்களுக்கும் அவர்கள் ஓட்டுப் போடக் கொடுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் பார்த்து ஓட்டுப் போட்டது போதும். இலவசமா கொடுக்க போகிறோம் என இருக்கிற திட்டங்களை அரசியல்வாதிகள் அவங்க சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கப் போவது கிடையாது. பொதுமக்கள் கட்டுகிற வரிப் பணத்தில் இருந்துதான் இலவசப் பொருட்களை கொடுக்க போகிறார்கள். ஏற்கெனவே இலவசமா தேவையில்லாத திட்டப் பொருட்களுக்கு மக்களின் வரிப் பணத்தை செலவு செய்ததால்தான் அரசாங்க கஜானா காலியாகி இரண்டே முக்கால் லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளளது .
இலவசத் திட்டங்களுக்கு அரசாங்கம் செலவு செய்தது எனும் பெயரில் சில ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தரமற்ற பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியும் பல்வேறு முறைகேடுகளை செய்தும் கமிஷன் பெற்று கோடி கோடியா கொள்ளையடித்து அவங்க கஜானாவை நிரப்பிவிட்டனர். தேவையில்லாத இலவசத் திட்டங்களுக்கு ஆசைப்பட்டு வாக்கு அளித்ததால்தான் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன.
அரசு அலுவலகளில் கையூட்டு கொடுத்தால்தான் எந்த வேலையும் நடைபெறுகிறது. இப்ப நம்ம நாட்டுல நடுத்தர குடும்பத்தினர் வாழ்க்கை நடத்துவதே ரொம்ப கஷ்டமா உள்ளது. ஏற்கெனவே பல வரிகளைப் போட்டு நம்ம ரத்தத்தை உறிஞ்சி குடிச்சுகிட்டு இருக்கு அரசாங்கம்!
சாப்பிடுகிற சாப்பாட்டுக்குக் கூட வரியைப் போட வைத்து விட்டார்கள் ஊழல் அரசியல்வாதிகள்.
இன்னும் கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு வளர விட்டீங்கன்னா இந்த நாடு நாசமா போயிடும்.
இளைய தலைமுறையினராகிய நாங்கள் பிள்ளை குட்டிங்களோட கஷ்டப்படாம வருங்காலத்தில் நம்ம நாட்டுல நல்லா வாழணும் என நீங்க நினைச்சீங்கன்னா… கொஞ்சம் சிந்தியுங்க.! நீங்க எந்த கட்சியில வேணுமானாலும் இருந்துவிட்டுபோங்க.! ஆனால் அரசியல் கட்சிதான் முக்கியம் என்பதை பாராமல் இலவசத் திட்டங்களை அறிவிக்காத அரசியல் கட்சியை சேர்ந்த அல்லது நேர்மையான சுயேட்சை வேட்பாளருக்கு சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என பெற்றோருக்கு மாணவ மாணவிகள், குழந்தைகள் கட்டளையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நாடும் வீ டும் வளம் மிகுந்து வளர்ச்சி அடைந்து வேண்டும் நமது நாட்டில் நாம் நலமுடன் வாழ வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் சரிதான் என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.



