Home Blog Page 5783

முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர்   ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த  போது  அவரது வீட்டின் பின்புறம், கார் நிறுத்துமிடம், மாடிப்படிகள், தோட்டப் பகுதியிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 10 நிமிடம் இந்த சோதனை நீடித்தது.

முதலமைச்சர்  வீட்டில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகார் அளித்தவர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஓட்டு பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கதிர்காமம் பகுதியில் உள்ள ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

2 ஆண்டு சிறை தண்டனையாம் .! ஜாக்கிரதை

    0
    சமூக ஊடகங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016 எவ்விதமான தேர்தல் கருத்து கணிப்புக்களை14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் வெளியிட்டாலோ அல்லது பகிர்வு செய்தாலோ 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
     
    தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 14-05-2016ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் நாளை 14-05-2016ம் தேதிமாலை 6 முதல், ஓட்டுப்பதிவு நாளான 16-05-2016ம்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கள் நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என எச்சரிக்கை விக்கப்பட்டுள்ளது.
     
    பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    அரசியல் கட்சிகள் சார்பில் டிவி, இணையதளம், சினிமா அரங்குகள் ஆகியவற்றில் செய்யப்பட்டு வரும் விளம்பரங்களுக்கு 48 நேர தடைவிதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அழைத்து வரப்பட்ட தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் நாளை மாலைக்கு பிறகு தொகுதிகளை விட்டு வெளியேறி விட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்து
    உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் என தேர்தல் வானிலை மைய” இயக்குனர் “லக்கோனி” அறிவிப்பா ?

    1அவசர செய்தி : தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் : தேர்தல் வானிலை மைய” இயக்குனர் “லக்கோனி” என வாட்ஸ்ஆப்பில் வைரலாக
    வைரலாக பரவிவரும் அறிவிப்பில் கூறப்படுவதாவது :-
     
     
    அவசர செய்தி
     
    தேர்தல் “வானிலை மையம் எச்சரிக்கை”
     
    தமிழகத்தின்
     
    “தென்மேற்கு” வங்கக்கடலில்
     
    மையம் கொண்டுள்ள
     
    “அம்மா பணப்புயல்”
     
    “வடமேற்கு” வங்கக்கடலில்
     
    மையம் கொண்டுள்ள
     
    “2ஜி பணப்புயல்”
     
    தமிழத்தை நோக்கி
     
    நகர்வதால் கடந்த
     
    ஒருவாரமாக தமிழகத்தில்
     
    ஆங்காங்கே பெய்த
     
    “பணமழை” அடுத்த
     
    24 மணி நேரத்தில்
     
    தமிழகத்தை கடுமையாக
     
    தாக்கக்கூடும் என
     
    “தேர்தல் வானிலை மைய”
     
    இயக்குனர் ” லக்கோனி”
     
    எச்சரித்துள்ளார்.
     
    “பணமழை” தாக்கம்
     
    இரவு 10 மணி முதல்
     
    அதிகாலை 6 மணி வரை
     
    கடுமையாக இருக்குமெனவும்
     
    மற்ற நேரங்களில்
     
    “விட்டு விட்டு” பணமழை
     
    பெய்யலாம் என்றும்
     
    “லக்கோனி” தெரிவித்தார்.
     
    மேலும் இதன் தாக்கம்
     
    15 தேதி இரவு வரை
     
    நீடிக்கும் எனவும்
     
    “பொதுமக்கள்” தங்கள்
     
    “வீட்டு கதவை” திறந்தே
     
    வைக்குமாறும்
     
    கேட்டுக் கொண்டார்.
     
    மேலும் தமிழகத்தை
     
    இந்த ” பெரு நாசத்திலிருந்து”
     
    காப்பாற்ற 1.50 கோடி
     
    இளம் வாக்காளர்கள்
     
    “நல்லவர்களுடன்.
    இணைந்து பயணிக்குமாறு
     
    நாட்டுநலனில் அக்கறையுள்ள
     
    நடுநிலையாளர்கள்
     
    ஆலோசனை வழங்கியுள்ளனர் ….. என்று சவாட்ஸ்ஆப்பில் வைரலாக
    வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

    ஆபீசருக்கு பியூன் வேலை; பியூனுக்கு ஆபீசர் வேலை: தேர்தல் ஆணையம் கூத்து!

    அரசு அலுவக உதவியாளரை அதிகாரியாகவும், அதிகாரியை அலுவலக உதவியாளராகவும் மாற்றி வாக்கு சாவடி பணி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்!

    தமிழகத்தில் தேர்தல் பணியாற்ற விண்ணப்பித்த அரசு அலுவக பியூனை அதிகாரியாகவும் அதிகாரியை பியூனாகவும் மாற்றி வாக்கு சாவடியில் பணியாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளதாக பல்வேறு மாவட்டங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணியாற்ற தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் அலுவக பியூன் வரை அவர்களது கல்வி தகுதி, தற்போது பணியாற்றும் பணியின் பதவி நிலை, ஆகியவற்றை குறிப்பிட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலக உத்தரவின்படி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர்.

    1500 வாக்காளர்கள் கொண்ட ஒரு வாக்கு சாவடி பணிக்கு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி ஒருவரும் அவரது கீழ் நிலையில் வாக்கு பதிவு நடத்தும் அலுவலர்கள் 1, 2, 3, என்ற நிலையிலும் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு சுமார் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    வாக்கு பதிவு நடத்தும் அலுவலர் நிலை 2க்கு ( அரசு துறைகளில் எழுத்தர், தட்டச்சர், ஆசிரியர், உதவி அதிகாரி போன்ற பல பதவிகளில் பணியாற்றுவோர்) வாக்காளர்கள் வாக்கு அளிக்க கொண்டு வரும் ஆவணங்ளை ஒப்பிட்டு பட்டியலை சரிபார்த்தல், வாக்கு பதிவு குறித்தான வாக்காளர் பேரேட்டில் எழுதுதல், வாக்கு பதிவு குறித்தான சதவிகிதத்தை கணக்கு பார்த்தல் போன்ற பணிகள் இருக்குமாம்.

    வாக்கு பதிவு நடத்தும் அலுவலர் நிலை3க்கு (அரசு துறைகளில் அலுவலக பியூனாக பணியாற்றுவோர் ) வாக்காளர்களின் விரலை துடைத்து மை இடுதல், மாற்று திறனாளிகளுக்கு வாக்களிக்க உதவுதல் போன்ற பணிகள் இருக்குமாம். ஆனால் தற்போது அரசு அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கிய உத்திரவுகளைப் பார்த்தால் ஒரே அலுவலகத்தில் (அரசு துறைகளில் எழுத்தர், தட்டச்சர், உதவி அதிகாரி போன்ற பல பதவியில் பணியாற்றுவோர்) வாக்கு சாவடியில நிலை 3லும், பியூனுக்கு நிலை 2 பதவியிலும் அமர்த்தி உத்திரவு வழங்கப்பட்டுள்ளதாம்.

    பல்வேறு மாவட்டங்களில் மேற்படியான தேர்தல் பணி உத்திரவு வழங்கிய அதிகாரிகளின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அவர்களிடம் நேரில் சென்று நாங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் இடும் உத்திரவை செயல் படுத்தும் பியூனுக்கு வாக்குச்சாவடியில் எழுத்து பணியும், எங்களுக்கு மை இடும் பணியையும் கொடுத்தது ஏன் எனக் கேட்டு தேர்தல் பணியை மாற்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனராம்.

    மேலும் ஆறாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தமிழ் மொழியில் எழுதவே ததிங்கனத்தோம் போடுபவர்கள், பெரும்பாலான மக்கள் வாக்கு சாவடியில் வாக்களிக்க கொண்டு வரும் ஆவணங்ளை ஒப்பிட்டு பட்டியலை சரிபார்த்தல், வாக்கு பதிவு குறித்தான வாக்காளர் பேரேட்டில் எழுதுதல், வாக்கு பதிவு குறித்தான சதவிகிதத்தை கணக்கு பார்த்தல் போன்ற பணிகளை எப்படி செய்ய முடியும் என தேர்தல் பணி உத்திரவு வழங்கிய அதிகாரிகளிடம் கேள்வியும் எழுப்பினராம். பெரும்பாலானோர் தேர்தல் பணியே வேண்டாம் எனக் கூறினராம்.

    ஆனாலும் தேர்தல் பணி உத்திரவு வழங்கிய அதிகாரி நான் அளித்த பணி உத்திரவை மாற்றம் செய்து தர முடியாது என்றும் தேர்தல் பணி கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும் என்றும் கூறிவிட்டதாக முக்கியமாக கோவை,திருப்பூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் அலுவக பியூன் வரை அவர்களது கல்வி தகுதி, தற்போது பணியாற்றும் பணியின் பதவி நிலை, ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பத்தை பார்த்து அவருக்கு வாக்கு சாவடியில் என்ன பணி வழங்க வேண்டும் என்பதைக்கூட தீர்மானிக்கும் தகுதியில்லாதவர்களை எப்படி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கலாம் என பாதிக்கப்பட்டோர் வினாவும் எழுப்புகின்றனராம்.

    எது எப்படியோ, தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 16-ந் தேதி வாக்கு சாவடியில் என்னென்ன கூத்து நடைபெற போகிறதோ? அனைவரும் பொறுத்து இருந்து பார்ப்போம் .

    தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரங்கசாமி

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சாலை ஓரத்திலும் வாடகை  வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பேசிய அவர்  மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். மேலும் குடிசை இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

    ராஜபக்சேவின் சகோதரர் கைது

    இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே இன்று காலை கைது செய்யப்பட்டார்.

    மாத்தறை பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பான சர்ச்சை pasailஒன்றில் விசாரணைக்கு நேரில் வந்த அவரை போலீசார் கைது செய்தனர் என கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிதிமோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு பின்னர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பசில் ராஜபக்சே, இலங்கையின் முன்னள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படமாகிறது கலாமின் ‘அக்னி சிறகுகள்’

    அப்துapjல் கலாமின் சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் படமாக உள்ளது.பிரபல பாலிவுட் இயக்குனர் பிரமோத் கோர் இப்படத்தை இயக்க உள்ளார்.கலாமின் வேடத்தை இந்தி நடிகர் இர்ஃபான் ஏற்க உள்ளார்.கலாமின் உறவினர்களிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    வெளியாகும்.

    தேர்தல் அலுவலர்களின் இரவு ரோந்து பணி இன்று முதல் தொடங்கும்: ராஜேஷ் லக்கானி

    234 தொகுதிகளில் பணப்பட்டுவாடா தடுக்க 7, 500 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் இன்று இரவு முதல் முழு நேர ரோந்து பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
    தமிழகத்தில் 350 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவடையும். மிச்சம் உள்ள பூத் சிலிப்கள் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்படும். மக்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொrajeshள்ளலாம். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் மற்ற ஆவணங்கள் வைத்து ஓட்டு போடலாம்

    பணப்பட்டுவாடா குறித்து மக்கள் எந்தநேரத்திலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக அவர்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நேற்று இரவு ஒரே நாளில் மட்டும் பணப்பட்டுவாடா குறித்து 150 புகார்கள் வந்துள்ளன. இன்று இரவு முதல் 7.500 குழுக்கள் கண்காணிப்பு பணியில் இறங்கும். 24 மணி நேரமும் இந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருக்கும். வரும் 15ம் தேதி காலை முதல் மதியம் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும்  அவர்
    கூறினார்.

    காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 11-ல் தேர்தல்

    தமிழகம் உள்பட 15 மாநிலங்parilimentகளில் உள்ள  57 உறுப்பினர்களின் பதவி காலம் முடிகிறது. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூன் 11-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், வில்லியம் ரபி பெர்னார்ட், மனோஜ்பாண்டியன், கே.பி.ராமலிங்கம், சுதர்சன நாச்சியப்பன், தங்கவேலு ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    துளிர் விட்டது கோலி – அனுஷ்கா காதல்

    சமீபகாலமாக, நடிகை அனுஷ்கா சர்மாவை சந்திப்பதை தவிர்த்த வந்தார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அனுஷ்காவும், போனால் போகட்டும் என விட்டு விட்டார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா, தன், 28வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினாanushkaர். அவருக்கு, ‘டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ என சமூக வலைதளங்கள் மூலம், உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தாராம் கோலி. அனுஷ்காவின் மனதும் இளகி விட்டதால், மீண்டும் இருவருக்கும் இடையேயான காதல் துளிர் விட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.