சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய சேர்மனாக சஷாங்க் மனோகர் போட்
டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த சூதாட்டம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சோதனையாக அமைந்தது. இதனால் சீனிவாசன் பதவி விலக நேரிட்டது. புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜக்மோகன் டால்மியா மரணம் அடைந்தார். இதையடுத்து 2015ல் ‘மிஸ்டர் கிளீன்’ என அழைக்கப்படும் சஷாங்க் மனோகர், பி.சி.சி.ஐ., தலைவராக தேர்வு
செய்யப்பட்டார்.
ஐ.சி.சி., தலைவரானார் மனோகர்
எனது பிரசாரம் சிறப்பாக உள்ளது: சரத் குமார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகத்தில் சமக தலைவர் சரத்குமார், காரில் கைப்பற்றப்பட்ட 9 லட்சம் குறித்து 2 மணி நேர விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
முறைப்படியான அனைத்து ஆவணங்களையும் காட்டியுள்ளதாகவும், அபிடவிட் தாங்கல் செய்யும் போது கையிருப்பு ரூ.30 லட்சம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறினார்.
மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக ஆட்சிக்கு வருவார், எனது பிரச்சாரம் சிறப்பாக உள்ளது. திருச்செந்தூர் தொகுதியை முன் மாதிரியான தொகுதியாக்க பாடுபடுவேன் என்று கூறினார் சரத் குமார்.
இலவச பொருட்களால் மக்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது : ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடப்படுவதாகவும் , இதற்கென செலவழிக்கப்பட்ட ரூ. 11 ஆயிரத்து 500 கோடியில் 25 ஆயிரம் பள்ளிகள் திறந்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேர்தல் பிரசாரத்
தில் பங்கேற்று பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தி.மு.க.,வும், அதி.மு.க.,வும் இலவசம் கொடுத்து மாநிலத்தை பாதாள
த்திற்கு கொண்டு சென்று மாநில அரசை இரு கட்சிகளும் கடனில் மாநில அரசை இரு கட்சிகளும் கடனில் தள்ளி விட்டது என அவர் கூறியுள்ளார்.
ஓசூர் தேர்தல் பயிற்சியில் இன்று ஆசிரியர்கள் வெளிநடப்பு
தபால் ஓட்டு இன்றுவரை வழங்கப்படாததை கண்டித்து தேர்தல் பணியாற்றும் அனைவருக்கும் வழங்கிட ஏற்பாடு செய்யக் கோரி ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர். ஓசூர் தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் அரைமணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வராதவர்கள் பட்டியல் எடுத்து மாவட்டத்திற்குள் இன்றும் பிற மாவட்டத்திற்கு மாவட்ட வாரியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததால் ஆசிரியர்கள் பயிற்சிக்கு திரும்பினர்.
ரியோ ஒலிம்பிக் தூதராக ஆர். ரஹ்மான் நியமனம்
31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்
த நிலையில் அந்த சர்ச்சையிலிருந்து தப்பிக்க மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்களாக நியமிப்பதில் ஐஓஏ தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான், அபிநவ் பிந்த்ரா ஆகியோரைத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியதோடு, அவர்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அபிநவ் பிந்த்ரா, சச்சின் ஆகியோர் ஐஓஏவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் நல்லெண்ணத் தூதராகப் பணியாற்ற ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
காற்று மாசினால் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை
உலகம் முழுவதும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் காற்றில் மாசுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் எடுத்துள்ளன.
இந்நிலையில், இ
து குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, காற்று மாசு அதிகரிப்பு காரணமாக ஆண்டிற்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.
மேலும், இந்தியாவில் குவாலியர், அலகாபாத், பாட்
னா மற்றும் ராய்பூர் நகரங்களில் காற்று மாசு கடுமையாக உள்ளதாகவும், உலக காற்று மாசு நகரங்களின் பட்டியலில் டெல்லி 9வது இடத்தில் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹை ஹீல்ஸ் அணியாத பெண் பணியிலிருந்து நீக்கத்தால் சர்ச்சை
லண்டனில் ஒரு சர்வதேச நிறுவன அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றி வரும் பெண் “ஹை ஹீல்ஸ்” காலணிகளை அணிந்து வராததால் பணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் சர்
ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ப்ரைஸ் வாட்டர் கூப்பர் ( PwC) நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருபவர் 27 வயதான, நிக்கோலா தோர்ப் . ஹேக்னி என்ற லண்டன் பகுதியைச் சேர்ந்த இவர் தனது அலுவலகத்துக்கு வந்த போது, அவர் “இரண்டு இன்ச்சிலிருந்து 4 இஞ்ச் வரை உயரமுள்ள ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிந்து வருமாறு கூறப்பட்டாராம்.
அவ்வாறு அணிய மறுத்த நிக்கோலா , ஆண் சகாக்கள் அவ்வாறு குதிகால் உயர்ந்த செருப்புகளை அணியுமாறு வற்புறுத்தப்படுவதில்லையே என்று கூற, அவரை சம்பளமில்லாமல் வேலையிலிருந்து திருப்பி அனுப்பி விட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலையை லைவ் வீடியோ மூலம் ஒளிபரப்பிய பெண்ணால் பரபரப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், மின்சார ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை டுவிட்டர் வலைதளத்தில் ளை வீடியோவுக்காகப் பயன்படுத்தும் பெரிஸ்கோப் ஆப் மூலம் லைவ் வீடியோவைப் பதிவு செய்தார்.
இந்த வீடியோப் பதிவைப் பார்த்த ஒருவர்
கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த இளம்பெண் சாகும் தருவாயில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதற்குக் காரணமானவரின் பெயரைக் குறிப்பிட்டதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது ? : மத்திய உளவுத்துறை ரகசிய சார்வே லீக் ஆனதாக தகவல் !
மோடியே உன்னை பிரதமராக பெற்றதற்கு நாங்கள் பாக்கியசாலிகள்
சபரிவெங்கட்
பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும் திறமைசாலி.
இவரது திறமையை அறிந்து வியந்த மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் தேசிய விருதினை வழங்கி கவுரவித்தது.வழக்கமாக இந்த விருதினை இந்திய பிரதமர் வழங்குவார், ஆனால் விருது வழங்கும் நாளன்று பிரதமர் மோடி சென்னை வெள்ளத்தை பார்வையிட வந்துவிட்டதால் பிரதமர் சார்பில் அமைச்சகமே விருதினை வழங்கியது.
நடந்த சம்பவத்தை பிரதமருக்கு கடிதமாக எழுதி அனுப்பிய சபரி வெங்கட், உங்கள் கையில் விருது வாங்கவேண்டும், உங்கள் அருகாமையில் இருக்கவேண்டும் என்பது என் கனவு அது நடக்கமுடியாமல் போய்விட்டது என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 5ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து சபரி வெங்கட்டிற்கு ஒரு போன் வந்தது.நாளை கோவை வரும் பிரதமர் உங்களை சந்திக்கவிருக்கிறார் விமான நிலையம் வந்துவிடவும் என்று போனில் பேசியவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் பகல் 12.30 மணி உச்சி வெயிலில் வந்திறங்கிய பிரதமரை வரவேற்க விமானம் அருகே அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் கட்சி வேட்பாளர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரே ஒருவர் சபரி வெங்கட் மட்டுமே.
வேட்பாளர்கள் 11 பேருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் அனைவருககும் வணக்கம் தெரிவித்து ஒரே நிமிடத்தில் அனுப்பிவிட்டார், அடுத்து தனியாக நின்றிருந்த சபரிவெங்கட்டிடம் வந்தார்.
சபரி வெங்கட்டின் துணைக்கு உடன் நின்ற அப்பா சீனிவாஸ் தன் மகன் சபரி வெங்கட் பெயர் சொல்லி பிரதமருக்கு அறிமுகம் செய்துவைக்க, எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் சபரியிடம் பேசஆரம்பித்தார்.சபரி பிரதமரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை பிரதமர் கையில் கொடுத்து வாங்கிக்கொண்டார்.
சபரி இந்தியில் பேச, இன்னும் உற்சாமான பிரதமர் சபரிவெங்கட்டின் உயரத்திற்கு குனிந்து அவனது தோளில் கைபோட்டுக்கொண்டு சகஜமாக பேசஆரம்பித்தார்.
தங்களை பார்க்கவேண்டும் என்ற என் கனவு நிறைவேறியது மிக்க நன்றி ஐயா என்ற சபரியிடம் ‘உனது அடுத்த கனவு என்ன?’ என்ற போது ‘ஐஏஎஸ் ஆக வேண்டும் தங்களைப்போல நிர்வாகத்திறமை பெறவேண்டும்’ என்று சொல்லவே நிச்சயம் அது உன்னால் முடியும் நான் உனக்கு உதவுவேன் என்றார்.
எங்கே உன் தனித்திறமையை காட்டு என்றதும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை சுருக்கமாக நிகழ்த்த மனம் நெகிழ்ந்த பிரதமர் சபரியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்து பாராட்டினார்.
நீங்களும் சபரிவெங்கட்டிடம் பேசவேண்டுமா? :9788103475.

