தூத்துக்குடி:
தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகத்தில் சமக தலைவர் சரத்குமார், காரில் கைப்பற்றப்பட்ட 9 லட்சம் குறித்து 2 மணி நேர விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
முறைப்படியான அனைத்து ஆவணங்களையும் காட்டியுள்ளதாகவும், அபிடவிட் தாங்கல் செய்யும் போது கையிருப்பு ரூ.30 லட்சம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறினார்.
மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக ஆட்சிக்கு வருவார், எனது பிரச்சாரம் சிறப்பாக உள்ளது. திருச்செந்தூர் தொகுதியை முன் மாதிரியான தொகுதியாக்க பாடுபடுவேன் என்று கூறினார் சரத் குமார்.



