Home Blog Page 5785

பிபிசி ஒளிபரப்புக்கு தடை : சீனா அதிரடி

சீனாவை பற்றிய இங்கிலாந்து ராணியின் சர்ச்சை கருத்தால் சீனாவில் பிபிசி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிகாரிகளின் நடத்தை மோசம் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராணியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிபிசி நிறுவனத்தின் ஒளிபரப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு போட பணம் வாங்கினால் அல்லது வழங்கினால் ஓராண்டு சிறை!!

0
ஓட்டு போட வேட்பாளரிடம் பணம் வாங்கினால் இந்திய தண்டனை விதி 171-பி பிரிவின்படி, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-
 
ஓட்டு போட பணம், பொருள் பெற்றால் அந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், எந்தவொரு வேட்பாளரை அல்லது வாக்காளரை அல்லது ஏதேனும் ஒரு நபரை எந்த வகையிலாவது அச்சுறுத்தினாலும் மேற்கண்ட தண்டனையே விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கையூட்டு அளிப்பவர், பெறுபவர் மீது வழக்குகளைப் பதியவும், வாக்காளர்களை அச்சுறுத்துகிறவர்கள், கட்டாயப்படுத்துகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புகார்களை பெறுவதற்காக 1800 425 7012, 044-2530 3825, 94451 90473 என்ற எண்களில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.1

கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் விழுந்த விபத்தில் ஒருவர் பலி : 20 பேர் காயம்

0
சென்னை தாம்பரம் அருகே உள்ள பொழுதுபோக்கு கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் . 20 பேர் காயமடைந்தனர்.
 
தாம்பரம் அருகே தர்காஸ் பகுதியில் பொழுதுபோக்கு, விளையாட்டுப் பூங்கா அமைந்துள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு, விளையாட்டுகள் உள்ளன. சாகசம் நிறைந்த விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.
 
சென்னை அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் விடுமுறை நாள்களில் பொழுதைக் கழிக்க இங்கே வருகின்றனர்.குறிப்பாக நீர்ச்சறுக்கு விளையாட்டு, நீரில் சவாரி செய்வது, ராட்சஸ ராட்டினங்களில் சவாரி செய்வது உள்பட பல விளையாட்டுகள் உள்ளன.
 
இங்கு நேற்று பணி நேரம் முடிந்து, பார்வையாளர்கள் வெளியேறிய பிறகு புதிதாக ஒரு ராட்சஸ ராட்டினம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த ராட்டினம் அமைக்கப்பட்டவுடன், அங்கே பணி செய்யும் ஊழியர்களே ராட்டினத்தில் சவாரி செய்து ஒத்திகை பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சஸ ராட்டினம் அறுந்து விழுந்தது.
index
இதில் அங்கு பணி செய்த குன்றத்தூர் அருகே புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணி (35) நிகழ்விடத்திலேயே பலியானார் . இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் உடல் குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சோமங்கலம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கட்அவுட்கள் சாலையில் சரிந்து விழுந்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

0
நெல்லை – தூத்துக்குடி சாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையினால் முதலமைச்சர் ஜெயலலிதா பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 20 சட்டமன்ற தொகுதி முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
 
இதற்காக நெல்லை – தூத்துக்குடி சாலையில் நீதிமன்றம் எதிரே உள்ள பெல் மைதானத்தில் பல ஏக்கர் பரப்பளவு இடம் வேலி போட்டு வளைக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவாயிலில் 100 அடி நீளம் 40 அடி உயரத்திற்கு வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் நெல்லையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த வளைவு நெல்லை – தூத்துக்குடி சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. 1

துணைவேந்தர் நியமன முறைகேடா?: இளங்கோவன் மீது ஆளுநர் அவதூறு வழக்கு

சென்னை:

துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக ஆளுநர் கே.ரோசய்யா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் பெற்றுக்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்’ என்றும் ஏப்ரல் 30-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த நேர்காணலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் ஆளுநரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துகளை இளங்கோவன் கூறியிருப்பதாகவும் ஆளுநர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் குற்றவியல் அவதூறு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

கேரளத்தில் பட்டினி சாவைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?: உம்மன் சாண்டிக்கு கேரள பாஜக கேள்வி

திருவனந்தபுரம்:

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நாகரிகம் குறித்துக் கேள்வி எழுப்பிய கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அந்த மாநில பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் கேரளத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேரள பழங்குடி இனத்தவர் முன்னேற்றம் குறித்து பேசியபோது, சோமாலியா நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனைக் கண்டித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், கேரளத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியது மாநிலத்தை அவமதிக்கும் செயல் என்றும், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தேசிய சராசரியைவிட கேரளம் உயர்வாகவே உள்ளது என்றும் சாண்டி சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், கேரளம் குறித்த தவறான கருத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாண்டி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறியதாவது:
அண்மையில் கண்ணூர் மாவட்ட மலைவாழ் மக்கள் காலனியில் இரு சிறார்கள் குப்பைத் தொட்டியில் இருந்து உணவைத் தேடிய செய்தி வெளியாகி, தேசத்தின் மனசாட்சியையே உலுக்கியது. இதுபோன்ற சூழ்நிலையில் கேரளத்தில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் தவறானவை அல்ல.

கேரளத்தில் அரசு சரியாக செயல்பட்டிருந்தால், இரு சிறார்கள் உணவுக்காக குப்பைத் தொட்டியைத் தேட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. அட்டப்பாடியில் 143 சிறார்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இவற்றையெல்லாம் முதல்வர் உம்மன் சாண்டி மறந்துவிட்டார்.

மாநிலத்தில் பட்டினிச் சாவைச் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை அவர் முதலில் விளக்க வேண்டும். மாநிலத்தைப் பற்றி சாண்டி கூறும் புள்ளி விவரங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே அதிர்ச்சியளிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்றார் ராஜசேகரன்.

வேட்பாளரின் கார் மீது ஆசிட் வீச்சு : காவல் துறையினர் சமாதானப் பேச்சு

0
1சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசன் மவுலானா அவரது நண்பர்களுடன் அத்திப்பட்டு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரது கார் மீது மர்மநபர்கள் சிலர் ஆசிட் வீசினர். இதையடுத்து கார் ஓட்டுநர் காரை நிறுத்தி, கதவை திறந்த போது ஏற்பட்ட ஆசிட் நெடியால், அசன் மவுலானா மற்றும் அவரது நண்பர்கள் மயக்கமடைந்தனர். சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அசன் ஆரூணை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
 
இதையடுத்து மருத்துவமனையில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.மருத்துவமனையில் அசன் மவுலானாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கேரளத்தை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள்: உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்:

கேரளத்தை சோமாலியாவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதற்கு பதிலடியாக, உம்மன் சாண்டி, ’கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள்’ என்று கூறியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் வரும் 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதுவரையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போட்டிபோட்டு விமர்சனங்களை முன்வைத்தனர். பிரதமர் மோடி பிரசார கூட்டங்களில் பேசியபோது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளை விமர்சனம் செய்தார். இதில் ஒருபடி மேலே போன பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார். பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டது உம்மன் சாண்டிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் அரசியல் நாகரித்தை வெளிக்காட்ட கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதை திரும்ப பெறவேண்டும் என்று உம்மன் சாண்டி வலியுறுத்தி உள்ளார். கேரளாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளின் உடல்நலத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து உள்ள கேரளா முதல்-மந்திரி உம்மன் சாண்டி பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் கேரளா தேசிய சராசரியில் உயர்நிலையில் உள்ளது. ஆனால் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிஉள்ளார் என்று கூறிஉள்ளார். சோமாலியாவுடன் தேசத்தின் ஒருமாநிலத்தை ஒப்பிடுவது பிரதமர் மோடிக்கு அவமானம் கிடையாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு வருட ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் விமர்சனம் செய்து உள்ளார்.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து உள்ள உம்மன் சாண்டி, “பிரதமர் மோடி அவர்கள் நான் கோரிக்கை விடுக்கின்றேன், கேரளாவில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்கு முன்னதாக குஜராத் மாநில வளர்ச்சியை பற்றி பேசுங்களேன். நீங்கள் குஜராத் மாநிலத்தில் பணம் படைத்தோருக்கு சாதகமான கொள்கையினை செயல்படுத்திய போது, உண்மையில் ஏழை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். எங்களுடைய மாநிலத்திலும் இதுபோன்ற கொள்கையினை அமல்படுத்தவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?. நாங்கள் எப்போது எல்லாம் பெரிய திட்டங்களை அமல்படுத்துகிறோமோ, அப்போது எல்லாம் நாங்கள் சாதாரண மனிதனின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்,”

பீகார் மாநிலத்தில் கோடிக் கணக்கில் திட்டங்களை அறிவித்தீர்கள் ஆனால் பிற மாநில மக்களை ஏமாற்றினீர்கள்.. இந்த முறை நீங்கள் இதுபோன்று பெரிய வாக்குறுதியை மாநிலத்திற்கு அறிவிக்கவில்லை, இதுவே எங்களுக்கு பெரிய நிவாரணம். உங்களுடைய அரசின் தோல்வியை பட்டியலிட விரும்புகின்றேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை நிறுத்தினீர்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் நீங்கள் இதுவரையில் பொதுமக்கள் நலம்பெறும் வகையில் ஆயில் விற்பனை விலையை குறைக்கவில்லை. வங்கிகளுக்கு கடன் கொடுக்கவேண்டிய விஜய் மல்லையாவை பத்திரமாக நாட்டை விட்டு வெளியே அனுமதித்துவிட்டீர்கள் என்று உம்மன் சாண்டி பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேலும் கடந்த 4 வருடங்களில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது உங்களுக்கு தெரியாது, இதில் 45 ஆயிரம் கடந்த 2 வருடங்களில் மூடப்படவில்லை? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிஉள்ளார். ஏழைகளுக்கு எதிரான திட்டங்களையே பிரதமர் மோடி குஜராத் மற்றும் பிற பகுதிகளில் அமல்படுத்தி உள்ளார். “உங்களுடைய பொய்யான வாக்குறுதிகளை மக்கள் பார்த்துவிட்டனர், நீங்கள் கேரளாவையில் கால்பதிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்,” என்று உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.

பிரதமர் மோடி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசியதை தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்படுகிறது. #PoMoneModi (Go Off Modi) என்ற ஹஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்குள் பதிவு செய்யப்படுகிறது.

நெல்லையில் பலத்த மழை: ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வளைவு சரிந்தது

திருநெல்வேலி:

நெல்லையில் பலத்த மழை பெய்தது. இதனால், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்தன.

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்றும் பிற்பகலில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

முதல்வர் ஜெயலலிதா தமது பிரசார பயணமாக இன்று நெல்லை வருகிறார். நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 20 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வேட்பாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக பிற்பகல் 3 மணிக்கு ஹெலிகாப்டரில் நெல்லை வருகிறார்.

நெல்லை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். அங்கிருந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள பெல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இருந்தபடி மக்களை சந்திக்கிறார். இதில் பகலில் வெயில் நேரத்தில் வரும் பெண்கள் அமர சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் இடிமின்னலுடன் பலத்த மழையினாலும், காற்று வேகமாக அடித்ததாலும், அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் சரிந்து விழுந்தன. பின்னர் அவற்றை சரிசெய்யும் பணி நடந்தது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்:வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
மழை அடுத்த சில நாள்களுக்கு நீடிக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.