நெல்லை – தூத்துக்குடி சாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையினால் முதலமைச்சர் ஜெயலலிதா பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 20 சட்டமன்ற தொகுதி முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக நெல்லை – தூத்துக்குடி சாலையில் நீதிமன்றம் எதிரே உள்ள பெல் மைதானத்தில் பல ஏக்கர் பரப்பளவு இடம் வேலி போட்டு வளைக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவாயிலில் 100 அடி நீளம் 40 அடி உயரத்திற்கு வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த வளைவு நெல்லை – தூத்துக்குடி சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. 





