234 தொகுதிகளில் பணப்பட்டுவாடா தடுக்க 7, 500 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் இன்று இரவு முதல் முழு நேர ரோந்து பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழகத்தில் 350 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவடையும். மிச்சம் உள்ள பூத் சிலிப்கள் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்படும். மக்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொ
ள்ளலாம். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் மற்ற ஆவணங்கள் வைத்து ஓட்டு போடலாம்
பணப்பட்டுவாடா குறித்து மக்கள் எந்தநேரத்திலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக அவர்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நேற்று இரவு ஒரே நாளில் மட்டும் பணப்பட்டுவாடா குறித்து 150 புகார்கள் வந்துள்ளன. இன்று இரவு முதல் 7.500 குழுக்கள் கண்காணிப்பு பணியில் இறங்கும். 24 மணி நேரமும் இந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருக்கும். வரும் 15ம் தேதி காலை முதல் மதியம் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர்
கூறினார்.



