தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சமூகவலை தளங்களில் கருத்துகளை வெளியிட விதித்துள்ள தடையை நாளை நீக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது .
கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக ஐ.டி. பிரிவுஅளித்திருந்த புகாரின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு தடை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேஸ்புக் பதிவு குறித்து விளக்கம் அளிக்குமாறு தி.மு.க தலைவர் கருணாநிதி வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தடை நீக்கும் வரை தேர்தல் குறித்து எந்த பதிவும் வெளியிடக் கூடாது தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ள நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை நாளை 17ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நீக்குவாரா? என்ற கேள்வி தி.மு.க வட்டாரங்களில் எழுந்துள்ளது .



