Home Blog Page 5855

இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது?

இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது?
***
ஜல்லிக்கட்டுக்கு தடை; தெக்கத்தி மக்கள் வருத்தம் மற்றும் கோபத்தில்! பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு… திடீரென இல்லை என்றால் ஏமாற்றம் இல்லாமலா?

சரி… இப்போதைக்கு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடத்தப்படும் விளையாட்டுக்கு தடை விதித்திருக்கிறார்கள். வாடிவாசல் வழியாக காளைகளை விரட்டி, ஒட்டுமொத்தமாக குதித்து விளையாடும் விளையாட்டை தற்போது நிறுத்தி வைப்போம். ஆனால், நெல்லை மாவட்ட வழக்கப்படி… காளைகளை தனியாக சாலையில் அவிழ்த்துவிட்டு… அவற்றைக் கட்டிப்பிடித்து, விளையாடுவதற்கு எந்தத் தடையும் கிடையாதல்லவா?

இந்த முறை அந்த முயற்சியைச் செய்யலாமே!

சாலைகளில் அந்தக் காளைகளை அவிழ்த்து விடுங்கள். அவற்றை மிரள விடாமல் பார்த்துக் கொண்டு, சாலையில் துரத்தி ஓட்டி, அல்லது துரத்தப் பட்டு ஓடி மாட்டுக்கும் நமக்குமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தலாமே! 

இல்லாவிடில், மாடும் நம்முடனான தொடுதலை மறந்துவிடும், நாமும் மாட்டை நெருங்குவதை மறந்துவிடுவோம்!

இதற்கு இடம் கொடுக்கக் கூடாது!

மிருக வதை என்பது பசு மாட்டையும் எருமை மாட்டையும் வதைக்கூடங்களில் அறுத்து ரத்த விளார் ஆக்கி துடிக்கத் துடிக்க கொலை செய்து குரூர புத்தியுடன் அதைத் தின்று தொலைப்பது!

உடனே, கன்றைக் காட்டி பசுவை ஏமாற்றி பால் கறப்பது என்ன நியாயம் என்பார்கள். அதுவும் சரிதான்!
பழங்காலத்தில் அப்படி அல்ல, இன்று நீங்கள் வெண்மைப் புரட்சி என்று ஊசியும் கையுமாகத்தானே அலைகிறீர்கள். வர்த்தக மயமாக்கி வாட்டுகிறீர்களே!

இன்றைய இந்தச் சூழலில், சில வருடங்களுக்கு முன்னர் மாட்டுப் பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற போது எழுதிய ஒரு குறிப்பினைப் படிக்க நேர்ந்தது.

அதை மீண்டும் படித்துப் பார்த்தேன்…

விருப்பம் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்….
***

முன்பெல்லாம் பொங்கலுக்கு ஊருக்குப் போவதென்றால் கொண்டாட்டமாக இருக்கும். நண்பர்கள் வட்டம் ஒன்று. இரண்டாவது மக்களிடம் இருக்கும் உற்சாகம். தெருவில் களைகட்டும் பொங்கல் பானைகள். குறிப்பாக மாட்டுப் பொங்கல் உற்சாகம்.

எல்லாம் 90களில் முடிவுக்கு வந்துவிட்டது. எப்போது தனியார் தொலைக்காட்சி யுகம் தொடங்கியதோ… அப்போதே! பொங்கல் பண்டிகையும் ஏதோ ஒரு நாள் டிவி பொட்டி முன் உட்கார்ந்து பார்த்த ஜோக்கையே பார்த்து, பார்த்த பாட்டையே பார்த்து, ஏதேனும் நடிகைகள் பல்லிளித்தால் அதையே பார்த்து புளகாங்கிதம் அடைந்து, சினிமாக்காரருகளை வைத்து சில தினங்களுக்கு முன்னரேயே ஷூட்டிங் செய்து எடுக்கப்பட்ட செயற்கைப் பொங்கல் குலவையை மிடறு விழுங்காமல் பாத்து ரசித்து…. அடச் சே!

எவ்வளவு செலவு செய்து, பஸ்ஸுக்கும் ரயிலுக்கும் காத்துக் காத்து, அடிதடி போட்டு, நெருக்கடியில் இடம்பிடித்து, சிரமப்பட்டு ஊருக்குப் போய், அங்கும் டிவியில் மூஞ்சியை வைத்தால்…? எதற்குப் போவானேன்!

நானும்தான் தெருவில் இறங்கிப் பார்த்தேன்… தீபாவளி என்றால் ஒவ்வொருவர் வீட்டு முன்னும் பட்டாசு வெடித்த பேப்பர் குப்பைகள் இருந்தாகணும். பொங்கல் என்றால் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் இருந்தாகணும். இது எழுதப் படாத விதி. ஆனால்…. அப்படி இந்தப் பொங்கலுக்கு காட்சி அமையவில்லை.
25 வருடங்களுக்கு முன்பு….

யலேய் மக்கா… பிட்றா… பிடி… இது இன்னாமா சீறுது. யப்பா நம்மால துரத்த முடியலடே… அந்தப் பயவுள்ள என்ன தீவனம் போடுதானோ!?

– எல்லாம் தெருவில் துரத்தி விடப்பட்ட இந்தக் காளை மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் வேக வைத்த பனங்கிழங்குக்குதான்! சிறுவர்களாயிற்றே! அதில் அப்படி ஓர் ஆசை!

ஒவ்வொருவராக முயன்று, மாட்டைத் துரத்தித் துரத்தி, கொம்பின் நடுவில் கட்டப்பட்ட பனங்கிழங்கைக் கைப்பற்றி வெற்றி வீரனாகக் கோப்பையைப் பெற்ற பெருமிதத்தில் இருப்பவன் மாபெரும் வீரன்!
அந்தப் பனங்கிழங்கின் சுவை இன்றும் நினைவுகளின் மடிப்பில்!

இன்று… பனங்கிழங்கையும் காணோம்! மாட்டையும் காணோம்! பத்தி விடுபவனையும் காணோம்! துரத்துபவனையும் காணோம்! பெருமிதத்தையும் காணோம்! மகிழ்ச்சியையும் காணோம்! அந்த மகிழ்ச்சி… டிவி பெட்டி முன்னால் அமர்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்கும் மண்ணாந்தைகளின் முகத்தில் தெரிகிறது. ஆனால்… அது உண்மையான மகிழ்ச்சி அல்ல!

மாட்டுப் பொங்கலுக்கு மாடுகளின் கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ணம் பூசி பளிச்சென்று வைப்பார்கள்!

சில விபரீத புத்திக்காரர்களும் நெல்லை ஜில்லாவில் உண்டு! தாங்கள்தான் கரை வேட்டி கட்டி அடிமைப்படுவது போதாதா? அதென்ன… கட்சிக் கலரைப் போய் மாட்டின் கொம்புகளில் தீட்டிக்கொண்டு..!? கறுப்பு -சிவப்பு, கறுப்பு வெள்ளை சிவப்பு, வெள்ளை சிவப்பு, பச்சை வெள்ளை சிவப்பு… இத்யாதிகள் மாடுகளின் கொம்புகளை ஆக்கிரமிக்கும்!

இதனால் எழும் விபரீதங்களையும் சிறிய வயதில் கண்டதுண்டு! அதன் தாக்கம்… ஒரு ஹைக்கூ மாதிரி என்று நினைத்துக் கொண்டு எழுதினேன்! (பத்தாம் வகுப்பு படித்தபோது!)

கொடூரமாய்க் கொலையுண்டன மாடுகள்!
அட…
அதன் கொம்புகளில் கட்சிச் சாயங்கள்!

முகனூல் மூலம் காதல் மலர்ந்து பாகிஸ்தான் சென்று காதலனை திருமணம் செய்த இந்திய காதலி

 
இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் மெகருன்னிசா (வயது22) மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் இஜஸ்கான் (24) என்ற வாலிபரும் முகனூல் மூலம் நட்புடன் பழக ஆரம்பித்தனர் . பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்து.
 
இந்த நிலையில் மெகருன்னிசாவின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மெகருன்னிசா சுற்றுலா விசாவில் பாகிஸ் தானுக்கு சென்ற போது அங்கு சுவாத் மாவட்டத்தில் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள காதலன் இஜஸ்கான் (24) வீட்டில் தங்கினார்.இஜஸ்கானை மறக்க முடியாத மெகருன்னிசா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இஜஸ்கான் வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் மெகருன்னிசா பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டார். மாத சுற்றுலா விசா நாளையுடன் முடிகிறது.
 
 
ஆனால் இந்தியா திரும்பி செல்ல பயமாக இருப்பதாக மெகருன்னிசா கூறினார்.இஜஸ்கானுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதால் மனிதாபிமான அடிப்படையில் தன் சுற்றுலா விசாவை நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மெகருன்னிசா கோரிக்கை மனு கொடுத்துள்ள போதும் இன்று வரை மெகருன்னிசா வேண்டு கோளை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை என்பது ல குறிப்பிடதக்கது.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா வரவேற்பு !

ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

 

மேலும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்,அரசு அலுவலகங்கள் மீது கல்வீசி தாக்குதல், பேருந்துகள் கண்ணாடி உடைப்பு. கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் போன்றச ம்பவங்கள் நடைபெற துவங்கியுள்ளன.

 

இந்த நிலையில் ‘காதலன்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல திரைப் பட நடிகையும் தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை வரவேற்றுள்ளார். 

 

நடிகை நக்மா கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு காங்கிரஸ் கூட்டனி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசி தேர்தல் பிரசாரம் செய்தது குறிப்பிடதக்கது.

ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை : அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

 
ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ திமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடு தயாராக இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது .பொங்கல் பண்டிகை தமிழக மக்களின் உணர்வோடு கலந்த ஒன்றாகும். எனவே ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். தமிழக மக்கள் சார்பாக இந்த அவசர சட்டத்தை விரைவாக கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
 
ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தை மத்திய அரசு சட்டப்பூர்வமாக அணுக வேண்டும் என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.மேலும் ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்று கூறிஉள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
 
தமிழக மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆளும் அதிமுக அரசு தவறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏதும் விதிக்கப்படமாட்டாது என்ற வார்த்தைஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது?மேலும், அதிமுக அரசு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அதிமேதாவிபோல் செயல்படுவதாலேயே, இதுபோன்ற சட்ட ரீதியான பிரச்சனைகளில் அடிக்கடி சிக்கிக்கொண்டு, தமிழக மக்களின் உரிமையை இழந்து வருகிறது என்று விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பாஜக தலைவர் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்
 
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று பா.ஜ. க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ஜல்லிக்கட்டை எதிர்த்து வழக்கு போட்டுள்ளனர். சட்ட ரீதியாக ஆராய்ந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழிசை உறுதியளித்துள்ளார்.மேலும் இந்த ஆண்டு பொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும்.என்றும் தெரிவித்துள்ளார்,
 
பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமனி
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மத்திய அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமனி வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ்
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து 2014 ஆம் ஆண்டு மே 7&ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் இவ்விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு தவறான நம்பிக்கையை தரும் செயல்களிலும், சட்டத்தின்முன் செல்லுபடியாகாத நடவடிக்கைகளிலும் மட்டுமே ஈடுபட்டனவே தவிர, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான மாற்றுவழிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும். மத்திய அரசின் நிர்வாக ஆணைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிதாக அவசரச்சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்திருக்கும் யோசனையை செயல்படுத்த முடியுமா? என மத்திய அரசு ஆராய வேண்டும். உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு
 
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
 
மதிமுக பொதுச் பொதுச் செயலாளர் வைகோ
 
ஜல்லிக்கட்டு பிரச்சனையை மத்திய அரசு முறையாக அணுகவில்லை. ஒப்புக்காக அறிக்கை வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வரும் ஒப்புக்கு கடிதம் எழுதி காலங்கடத்தியதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் தலையில் இடியாக இறங்கிவிட்டது உச்சநீதிமன்ற தடை என வைகோ கூறியுள்ளார்.மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது ஒப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
 
ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராதது ஏன் எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது எதிர்பார்த்ததுதான் என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் அரசுகள் இறங்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன்
 
மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்,

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை: மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு: ராமதாஸ்

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டவிவகாரத்தில் இன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

எது நடக்கக்கூடாது என்று தமிழக மக்கள் வேண்டிக்கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அடுத்த 4 வாரங்களுக்கு இந்த இடைக்காலத் தடை பொருந்தும் என்பதால் வரும் 15 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மதுரை மாவட்டத்திலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து 2014 ஆம் ஆண்டு மே 7&ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் இவ்விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு தவறான நம்பிக்கையை தரும் செயல்களிலும், சட்டத்தின்முன் செல்லுபடியாகாத நடவடிக்கைகளிலும் மட்டுமே ஈடுபட்டனவே தவிர, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தடை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 19.05.2014 அன்றே தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் 19 மாதங்களாகிவிட்ட நிலையில் அம்மனுவை விரைவாக விசாரித்து, தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிடவில்லை. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஆதரவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்திருந்தால் கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியிருக்க முடியும். ஆனால் அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. நடப்பாண்டிலாவது ஜல்லிக்கட்டை  நடத்த தமிழக அரசு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

ஒருவேளை உச்சநீதிமன்றம் விதித்த தடையை சீராய்வு மனு மூலம் அகற்ற முடியாவிட்டால், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்டத்திருத்தம் செய்யலாம் என்று தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆதரவைக் கேட்டு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்கே வந்து சந்தித்துவிட்டு சென்றார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சட்டப்படியாக  அனுமதி பெற்றுத் தந்தால் தான் மத்திய அரசை ஆதரிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து அதை சாதித்திருக்க முடியும். ஆனால், தமது நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் நிபந்தனையாக வைத்து சாதித்துக் கொண்ட முதலமைச்சர், மக்கள் உணர்வு சார்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி பெற்றுத்தருவதற்கு தவறி விட்டார். அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டிகளை எப்படியாவது நடத்தியே தீருவோம் என வாக்குறுதியளித்த பாரதிய ஜனதாவும் கடைசி நேரம் வரை எதையும் செய்யவில்லை. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடரிலாவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. இறுதியாக அவசர சட்டம் பிறப்பிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினேன். ஆனால், மத்திய அரசோ நிர்வாக ஆணை பிறப்பித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் எளிதாக தடை விதித்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் மனதில் நம்பிக்கையையும், ஆசையையும் விதித்து, அது உச்சநீதிமன்றம் மூலம் உடனடியாக பறிக்கப்படுவதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான மாற்றுவழிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும்.  மத்திய அரசின் நிர்வாக ஆணைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிதாக அவசரச்சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்திருக்கும் யோசனையை செயல்படுத்த முடியுமா? என மத்திய அரசு ஆராய வேண்டும். உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒரு மாதத்தில் 500 மீனவர்களை கைது செய்ய துடிப்பதா? : ராமதாஸ்

 ஒரு மாதத்தில் 500 மீனவர்களைக் கைது செய்ய துடிப்பதா? இலங்கையை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆணையிட்டிருக்கிறார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இலங்கை அமைச்சரின் இந்த அகம்பாவப் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறியிருக்கிறார். ‘‘ இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் தான் பொங்கல் திருநாளுக்கு பிறகு ஒரு மாதத்தில் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்ய சிங்கள கடலோர காவல்படைக்கும், கடற்படைக்கும் ஆணையிட்டிருக்கிறேன். இந்தியா எங்கள் நட்பு நாடு தான். இந்தியா கேட்டுக்கொண்டால் சில காலத்திற்கு பிறகு மீனவர்களை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வோம். ஆனால், மீனவர்களின் படகுகளை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம்’’ என்று இலங்கை அமைச்சர் திமிராக கூறியிருக்கிறார்.

இலங்கை அமைச்சர் அமரவீராவின் பேச்சில் இருந்து தெளிவாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவெனில்,  ‘‘எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக இலக்கு நிர்ணயித்து கைது செய்யப்படுகிறார்கள்’’ என்பது தான். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் அதில் குறைந்தபட்சம் நியாயம் இருக்கலாம். ஆனால், ஒரு மாதத்திற்குள் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், இந்திய மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறது என்று தான் பொருள். 500 மீனவர்களை கைது செய்வதற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய சிங்களக் கடற்படைக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிப்பதாகத் தான் கருத வேண்டும். இது இந்தியாவின்  வலிமைக்கும், இறையாண்மைக்கும் சவால் விடும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலாக கடல் எல்லை மிகவும் குறுகலானது. அதனால் இரு நாட்டு மீனவர்களையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் மீன்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. அதுமட்டுமின்றி இரு நாடுகளின் கடல் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பிருந்தே பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அத்தகைய பாரம்பரிய உரிமையை பன்னாட்டு நீதிமன்றங்களும் அங்கீகரித்துள்ளன. இத்தகைய நிலையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தான் சரியான செயலாக இருக்கும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை இலக்கு நிர்ணயித்து கைது செய்வதாக கொக்கரிப்பது சரியான செயலாக இருக்காது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்களை அத்துமீறி நுழைந்து சிறை பிடிப்பதையும், மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை அரசு வழக்கமாக வைத்துள்ளது. இன்றைய நிலையில்  தமிழக மீனவர்கள் 104 பேர் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 66 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இதனால் அந்தப் படகுகள் சேதமடைந்து வருகின்றன. படகுகளை விடுவிக்கும்படி இப்போதைய இலங்கை அதிபர், பிரதமர் ஆகிய இருவரிடமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியும் அதற்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, இனி இந்தியா கோரினாலும் படகுகளை திரும்பத்தர மாட்டோம் என்று கூறுவது இந்திய அரசை சீண்டும் செயல் ஆகும். கச்சத்தீவை தாரை வார்த்தது உட்பட இலங்கையை ஆதரவு நாடாக மாற்றுவதற்காக இந்தியா தேடித்தேடிச் சென்று செய்த உதவிகளும், அளித்த சலுகைகளும்  தான் இந்தியாவைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் அளவுக்கு இலங்கைக்கு திமிரை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் அத்துமீறலை இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே 21.10.2003 அன்று தில்லியில் நடைபெற்ற  பேச்சுக்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகளை மட்டும் வழக்கு விசாரணை முடியும் வரை பறிமுதல் செய்து வைத்துக்வைக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது (It was agreed that while it was important that the fishermen should be released early, the boats may be held till the judicial processes in the two countries are completed)’’எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு தான் தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்கிறது. 

இலங்கைக்கு இன்று சென்று அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன்  பேச்சு நடத்தவிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்களை கைது செய்வதோ, படகுகளை பறிமுதல் செய்வதோ கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டும்; இலங்கையில் இப்போது சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அத்துடன், இரு நாடுகளும் இணைந்து 21.10.2003 தேதி வெளியிட்ட கூட்டறிக்கை உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.

மாமியாரை அடித்துத் துன்புறுத்திய மருமகள்: ரகசிய கேமராவில் சிக்கிய காட்சியால் அதிர்ச்சி

லக்னோ:

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிஜ்னூர் பகுதியில், தனது மாமியாரை மருமகப் பெண் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில், மாமியாரைத் தாக்குவது, எலக்ட்ரிக் சாதனம் உள்ளிட்டவற்றால்  துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 5-ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆளான மாமியார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் காட்சிகளைக் காண கேமராவை வைத்தவர் அந்தப் பெண்ணின் கணவர். அதாவது தனது  தாயார் துன்புறுத்தப் படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கேமராவை வைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த போது,  “என்னுடைய மனைவியின் நடவடிக்கையை அறியவே அந்த சிசிடிவி கேமராவை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பொருத்தினேன். இருப்பினும் தற்பொழுதும் அவள் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை” என அந்தக் கணவர் தெரிவித்தார்.

இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசே முடிவு எடுக்க முடியும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்று கூறிஉள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை: அலங்காநல்லூரில் போராட்டம்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதியில்களில் போராட்டம் நடைபெற்று பெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை அடுத்து தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும் : தமிழிசை சவுந்தர்ராஜன்

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று பா.ஜ. க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

  மேலும் இந்த ஆண்டு பொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும்.

அரசாணை மட்டுமே பிறப்பித்தால் போதுமானது, அவசரச் சட்டம் தேவையில்லை என்று கூறிய சட்ட வல்லுனர்களின் கருத்தின்படியே மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. நல்லெண்ணத்தில்தான் இந்த அறிவிப்பை மத்திய அ்ரசு எடுத்தது. சிக்கல் வராது என்ற எண்ணத்தில்தான் அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டது. எனவே சிக்கல்களை நிவர்த்தி செய்து ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அ்ரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.