Home Blog Page 5879

பிறந்த நாள் பரிசு வேண்டாம்; வெள்ள நிவாரணத்தில் ஈடுபாடு கொள்க: கனிமொழி வேண்டுகோள்

சென்னை:

தன் பிறந்த நாளுக்கு பரிசுகள் எதுவும் வேண்டாம் என்றும், வெள்ள நிவாரணத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார். அவர் தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் விடுத்த வேண்டுகோள்…

சமீபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பிற கடலோர மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயின. மக்களின் வாழ்வு எளிதில் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், சிறு கடைகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள் என்று பாதிக்கப்பட்ட பட்டியல் முடிவின்றி நீள்கிறது. தற்போது மழை நின்றுவிட்டாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நிறைவடைய பல மாதங்கள் ஆகும்.
இந்த ஆண்டு எனது பிறந்த நாளை முன்னிட்டு, பரிசுப் பொருட்களையோ, பூங்கொத்துகளையோ அல்லது சால்வைகளையோ ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்குப் பதிலாக தற்போது நடைபெற்று வரும் வெள்ள நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேரடியாக பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எனது நலன் விரும்பிகள் விளம்பர தட்டிகள், பதாகைகள் அமைப்பதை விட்டு வெள்ள நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கடந்த போன சில வாரங்கள் நம்மிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் தூண்டுவதாக இருக்கட்டும். இப்பேரழிவால் ஏற்பட்ட துயரங்களை களைவதில் நமது முயற்சிகளைத் தொடர்வோம் என நம்புகிறேன். நன்றி.
We recently witnessed the recent rains and floods that wrecked havoc across Chennai, Thiruvallur, Kanchipuram, Cuddalore and other coastal districts of Tamil Nadu. In those few days, lives have been affected irrevocably. Along with so many citizens, I, too, have tried to do whatever possible to help with flood relief efforts. Though the rains have stopped pouring, rehabilitation of those affected could take months, if not years.
For my birthday this year, I have decided to not accept any gifts, bouquets or shawls from my well-wishers. Instead, I appeal to everyone to directly contribute towards ongoing relief and rehabilitation efforts. I would like to see my well-wishers distribute relief material or help rebuild damaged infrastructure rather than erect hoardings, banners or put up posters.
Let these past few weeks trigger a positive change for us all. Through this message, I hope we can all continue in our efforts to help alleviate the suffering of this recent disaster. Thank you.

 

 

சமீபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பிற கடலோர மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பிற்கு உள…

Posted by Kanimozhi Karunanidhi on Saturday, January 2, 2016

 

 

கோழிக்கோடில் முத்தப் போராட்டம்: கல்வீச்சு, தடியடி; 32 பேர் கைது

திருவனந்தபுரம்:

கோழிக்கோடில் முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பெரும் ரணகளமானது. இதில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பொது இடத்தில் முத்தமிட்டு போராட்டம் நடத்த ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மதவாதம் மற்றும் சகிப்பின்மைக்கு எதிராக கோழிக்கோட்டில் புத்தாண்டு தினமான நேற்று (1–ந்தேதி) பொது இடத்தில் முத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு ‘கிஸ் ஆப் ஸ்டிரீட்’ என்றும் பெயரிடப்பட்டது. இந்த போராட்டத்தை அறிவித்த அமைப்பினர் சமூக வலை தளங்கள் மூலம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்கள். அதேசமயம் அனுமன் சேனை அமைப்பு உள்பட சில அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொது இடத்தில் முத்தப் போராட்டம் நடத்த விடமாட்டோம் என்று அவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில் முத்தப் போராட்டக்காரர்கள் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் திரண்டனர். ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் முத்தப்போராட்டத்திற்கு தயாரானார்கள்.

அவர்களை தடுத்து நிறுத்த அனுமன் சேனா உள்பட சில அமைப்பினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. திடீரென்று இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. முத்தப் போராட்டத்திற்காக திரண்டு நின்றவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கற்களை வீசினார்கள். அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது. தங்கள் கைகளில் இருந்த கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது.

kiss of love hidden muslim agenda

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து வன்முறை நடந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதன்பிறகே போராட்டக்காரர்கள் கலைந்து ஓடினார்கள். இந்த வன்முறை தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த முத்தப்போராட்டத்தை முதன் முதலில் தொடங்கிய ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவி உள்பட சிலர் சமீபத்தில் ஆன்லைன் மூலம் விபசாரம் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செயலிழந்த தமிழக காவல் துறை : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

 
தமிழக காவல் துறை செயலிழந்து விட்டதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார் .
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாஜ பிரமுகர் சிவப்பிரகாசம் நேற்று மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வாணியம்பாடிக்கு விரைந்து வந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவப்பிரகாசத்தை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:
ஆண்டின் முதல் தேதியான இன்றே(நேற்று) தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சவால்விடும் வகையில் இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர். சிவப்பிரகாசத்தை வழிமறித்து இந்த கொடூர சம்பவத்தில் மர்மகும்பல் ஈடுபட்டது அதிர்ச்சியூட்டுகிறது. ஏற்கனவே பாஜகவில் இதுவரை 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சிவபிரகாசத்தையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.தமிழக அரசின் காவல்துறை செயலிழந்து விட்டது. இதில் மிக வெட்கக்கேடானது தமிழகத்திலேயே, வேலூர் மாவட்ட காவல்துறை செயலிழந்தது தான். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்னரே சிவப்பிரகாசம் தனக்கு அச்சுறுத்தால் இருப்பதாக வாணியம்பாடி காவல் நிலையத்திலும் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவிலும் புகார் செய்தார். ஆனாலும், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

திமுக., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிறது: கருணாநிதியின் அழைப்பு காரணம்?

சென்னை:

கருணாநிதியின் அழைப்பு காரணமாக, காங்கிரஸ், திமுக., இடையே பேரவைத்தேர்தலில் கூட்டணி உறுதியாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாமல் தனித்து போட்டியிட்டது. ஆனால் இப்போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.

இதற்கு அச்சாரமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தொனியில், கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பினாலும் தேர்தலில் கூட்டணி தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அந்த வகையில் மதசார்பற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் இது பற்றி காங்கிரஸ் மேலிடம்தான் இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கண்டிப்பாக இடம் பெறும் என தெரிகிறது. தில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார். எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி வருகிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்க்க விஜயகாந்திடம் பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏழுந்துள்ளது.

இந்தியன் பனோரமாவில் ‘லென்ஸ்’ படம் தேர்வு!

சென்னை சர்வதேச திரைப்பட விழா..

இந்தியன் பனோரமாவில் ‘லென்ஸ்’ படம் தேர்வு!

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் லென்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது லென்ஸ் படம். ஜெயப்பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்துக்கு ஏற்கெனவே டெல்லியில் நடந்த பயாஸ்கோப் க்ளோபல் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதினைப் பெற்றார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.

இந்த நிலையில் சென்னையில் நடக்கும் 13வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட லென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் சாமி, ஜெயப்பிரகாஷ், அஸ்வதி, மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் பின்னணி இசையமைத்துள்ளார். சுப்பிரமணியபுரம் புகழ் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜனவரி 6 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் லென்ஸ் படத்தைக் காணலாம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்..

எழுத்து – இயக்கம்: ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்

இணைத் தயாரிப்பு: சித்தார்த் விபின்

எடிட்டிங்: ஜெய்னுல் அபிதீன் – காஜின்

ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்

கலை: விஆர்கே ரமேஷ்

மக்கள் தொடர்பு: எஸ் ஷங்கர் – கேஎஸ்கே செல்வா

இசை: சித்தார்த் விபின்

தயாரிப்பு: க்ளோவிங் டங்ஸ்டன்

Actors: Jayaprakash Radhakrishnan, Anand Samy, Misha Ghoshal, Ashwathi Lal

Production Company;: Glowing Tungsten

Director/Producer: Jayaprakash Radhakrishnan

Background score: Siddharth Vipin.

Cinematographer: S.R.Kathir

Art Director: V.R.K. Ramesh

Co-producer: Siddharth Vipin.

Editors: Jainul Abdeen, Gaugin

Public Relations: S Shankar, KSK Selva

ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்

“ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?”
“ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்.”

கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மகா பெரியவா. தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதானபாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேக்வேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள்,மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே,மீனாட்சி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே?பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாட்சி பாட்டி..”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன். இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே…அதுக்கான சந்தர்ப்பம் வரலே.. ஆனா,இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே..இவ எம் பொண் வயத்துப் பேத்தி.இந்த ஊர்ல பொறந்ததால காமாட்சினு பேரு வெச்சுருக்கு.நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன்.படிப்பு ஏறலே. அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு.வயசு பதினஞ்சு ஆறது..இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன். சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாட்சி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள். “ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு.பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார்.அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம்,பிக்கல் புடுங்கல் இல்லே.ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா. எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி
முடுச்சுடுவேன். ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி,நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரட்ட [இரட்டை]
வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா. பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.
தலா ஒரு பவுன்ல இவ ரண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி வெச்சுருக்கேன்…அதான் என்னால முடிஞ்சது.

நா எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்… ஸ்வாமிகள், “ரட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப்
போடணும்கறயா, சொல்லு?” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாட்சி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம் பெரியவா,நா அப்டி சொல்ல வரலே.ஒங்களை தரிசனம்
பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே..அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய பூர்த்தி
பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது?அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன்சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு..பத்து பவுன் கேக்காத எடமாபார்த்துக்கோ.அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.

உடனே மீனாட்சி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டுபோகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம்,அவாத்துலரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரட்ட வடத்தோட வரணும்னுஆசைப்படறா..வேறு இண்ணுமில்லே பெரியவா,நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார்,

“நா ஒரு கார்யம் சொல்றேன்….பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன்.என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாட்சியம்மன் கோயிலுக்குப் போ.ரெண்டு பேருமாசேந்து, “எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம்ஜாம்ஜாம்னு நடக்கணும்….நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம்பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ…ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாட்சி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாட்சி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே.அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மகா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம்பண்றவ அவ,அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்தித்தாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன்நகர்ந்தார்.பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கேஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார்.பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி. வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.அன்னை காமாட்சி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள்.

இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர். பேத்தியின் நட்சத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசதம் வாங்கிக்கொண்டாள் பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி’யையே பிரார்த்திதபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நஸ்காரம்பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி,பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி
விரைந்தாள்.மடத்தில் ஏகக் கூட்டம்.மீனாட்சி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.

பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், “இன்னிக்கு அனுஷ நட்சத்ரம். பெரியவாளோட
நட்சத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னக்கி மௌன விரதம்.யாரோடயும் பேசமாட்டாராம்.முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாட்சி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரட்ட வட சங்கிலியபத்திஞாபகப்படுத்தலாம்னுநெனச்சுண்டிருந்தேனே,அது இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றிஅப்படியே அமர்ந்திருந்தது,அந்த பரப் பிரம்மம்.”எட்டு பவுன்ரட்டவட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.

மகா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக்கடுமையாக,”பாட்டி,நகருங்கோ…நகருங்கோ..பெரியவாஇன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார்.பின்னாலே எத்தனபேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.காமாட்சியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக்கட்டினாள்.அன்றைக்கும் காமாட்சியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும்.அடுத்தடுத்து ஞாயிறு,திங்கள் இரு நாட்களும் மகா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார்.

இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும். பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள்.”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே,ஒண்ணுமே நடக்கலியே…அம்மா காமாட்சி கண் திறந்து பாப்பாளா,மாட்டாளா?” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி.

செவ்வாய்க்கிழமை விடிந்தது.அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும் கலகலப்பாக இருந்தது.ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரவாத்தில்
ஆழ்த்திக்கொண்டு இருந்தது. ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்!

இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம். வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி,முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான்கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத்தேங்காய்கள்,சாத்துக்குடி,ஆரஞ்சு,பூசணி,மொந்தன் வாழைக்காய்வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு,மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம்விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார். பிறகு கண்களை இடுக்கிக்கொண்டுஅந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர்,

நீ நீடாமங்கலம்மிராசுதார்கணேசய்யரோடஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே..ஏதோ சொல்லிதுக்கப்பட்டுண்டே..இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோடநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாட்சி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு,”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமாஎங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்தஅவலத்தைச் சொல்லி அழுதேன்.நீங்கதான் இந்த ஊர்காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி,அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம் பண்ணி..அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன்.என்ன ஆச்சரியம் பாருங்கோ..பதினஞ்சு நாளக்கி முன்னாடி,ஜாம்ஷெட்பூர் டாடாஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னுவந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார். எல்லாம் அந்த காமாட்சி கிருபையும்,ஒங்க அனுக்கிரகமும்தான் பெரியவா”
என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்..ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா…இவ்ளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே,”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா.அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.
ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி..ஒம் பொண்ணு,மாப்ளய திருப்பியும் அம்மா காமாட்சிதான் சேத்து வெச்சிருக்கா,அதனால்நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்குஅர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா…இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன்.பெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்
.
“பேஷா,பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்..ஞாபகம் வெச்சுக்கோ”என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.
_______________________________________________________
அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால்பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக்கட்டினாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டுவியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம்,”அடியே காமாட்சி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம்.

நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா,அஞ்சு ஜோடி வாழப்பழம்,வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா,பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடி யே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்

பாட்டி: “அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா.நீதான் எப்டியாவது அந்த
எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின் தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.
நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்து கொண்டு இருந்தனர் இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்திரும்பிப் பார்த்த பாட்டி,ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே? என்ன பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.
“ஒண்ணும் பறிபோகலே பாட்டி,கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள்.

பேத்தி.அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். பேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா.. அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது…
அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது அறுந்துருக்கே பாட்டி..பவுனா..முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.

அ’தைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி,”பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி,காமாட்சி,எட்டு..எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.இது பெரியவா கிருபைல காமாட்சியேநமக்குஅனுக்கிரகம்பண்ணியிருக்கா.சரி…சரி….வா,வெளியே போவோம்,மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன்புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாகவெளியே வந்துவிட்டாள்.அன்று பிரதட்சிணத்தில், “பஞ்சஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள்.

மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர்.பேத்தியுடன் வந்த மீனாட்சி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்தவிஷயத்தைச் சொல்லலாமா…வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்குகாமாட்சியம்மன் கொயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம்கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..ஆனா ஒம் பேத்தி கைலகெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து!அந்த சந்தோஷம்….நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்னபண்ண விடலே. காமாட்சி பூர்ணமா அனுக்கிரகம்பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே..என்ன நான் சொல்றது சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்….அந்த சந்தோஷத்துலஇன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்” என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ….அறுந்தத பத்த வக்கறத்துக்கோ
மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி. ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு,
அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”

“அம்பாள் காமாட்சிக்கு.”

“நீயே சொல்லு…அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்ல முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து,கை நடுங்க
ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணிஇரண்டு,மீனாட்சிபாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது,கலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினிஅம்புஜம் அம்மாள், சொகமே உருவாகத் திரும்பி வந்துஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,

“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே,

“வேற ஒண்ணுமில்லே பெரியவா,ரண்டு மாசத்துக்கு முன்னாடிஒங்க உத்தரவுபடி காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவைபண்றச்சே,’பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா,எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்’னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடிஅந்த ரட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப்போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன்.

ஒரு எடத்லயும் கிடைக்கலே…இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?”என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாட்சி பாட்டியின்பக்கம் தன் பார்வையைத் திருப்பி, அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.

ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி. பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா பங்கஜம்… நீ தவறவிட்ட ரட்ட வடம் இதுவா பாரு?” என்று காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள் “இதேதான்….இதேதான்…..பாட்டி..இது எப்படி இங்கே வந்தது?

ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள்.நடந்த விஷயங்கள்அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாட்சி பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள்….

“பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்ருக்கேன். இன்னிக்கு சாயந்தரமேஒங்களையும், பேத்தி காமாட்சியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய்,எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன்.அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள். ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாட்சியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.

ஆச்சார்யாள்,மீனாட்சி பாட்டியைப் பார்த்து,,”இன்னிக்கு நீயும்ஒம் பேத்தியும் கொயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே.சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம்பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.மீனாட்சி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய விமான படை தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : 3 வீரர்கள் பலி

 
பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தின் மீது விமான படை தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து டில்லியில் மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில்உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது . விமான படை தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார். மேலும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார். இந்த கூட்டத்தில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு துறை தேசிய செயலர் அஜித் தோவல் , பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் . பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்திய எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை கடத்தி சென்று, அதுனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
புத்தாண்டு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன்னும் நேற்று பஞ்சாப் மாநில எல்லைக்குள் 4 முதல் 5 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக
உளவுத்துறை எச்சரித்திருந்தது . இதனால் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என விமானப்படை தள அதிகாரிகள் கூறியு ள்ளனர்.

நன்றி சொல்லுவோம்: சென்னையின் இளைஞர்க்கான நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி

சென்னையின் பெருமைகளாக எல்.ஐ.சி. கட்டடம், ரிப்பன்கட்டடம், மெரினா பீச், அண்ணா நினைவிடம், கன்னிமரா நூலகம் போன்று சிலவற்றைக் கூறலாம்.

இப்போது இவை எல்லாவற்றையும் முந்திக் கொண்டு உலகம் முழுதும் பேசப்படுவதாக தன்னார்வலர்களின் தொண்டு சென்னையின் பெருமையாகியுள்ளது.

மழை வெள்ள பாதிப்பையும் தாண்டி உதவிக்கு நீண்ட கரங்கள் மழை சோகத்தைக் கூட மூழ்கடித்து விட்டன. தன்னலம் கருதாத அவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் சென்னையில் பாராட்டுவிழா மற்றும் நன்றி கூறும் விழா நடைபெற்றது. தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்து உருவான ‘நன்றி சொல்வோம் ‘ என்கிற பாடல் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை போரூர் லீ பேலஸ் ஓட்டலில் நடந்தது.

இசையமைப்பாளர் பி.பி. பாலாஜி இசையில் , ஏர்டெல் சூப்பர் சிங்கர் வென்ற பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், தீப்தி, வீணா, கிருஷ்ணசாய், வித்யா லெட்சுமி, சுஷ்மிதா பாடியுள்ளனர்.கவிஞர் விவேகா தன்னார்வலர்களின் சேவையில் மகிழ்ந்து சம்பளம் எதுவும் பெறாமல் இலவசமாக பாடல் எழுதிக் கொடுத்து ஊக்குவித்து இருக்கிறார்.

மனோஜ் கிருஷ்ணா, சமூக ஆர்வலர் ஏ.ராஜசேகர், ராஜகோபால் ,ராஜாராம்ஆகியோரால் இம் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

விழாவில் பாடலை கவிஞர் விவேகா வெளியிட்டார்.

சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட வர்கள் சென்னையில் தொடங்கவுள்ள மருத்துவமனை ‘சென்னை நேஷனல் மருத்துவ மனை’ இதன் கட்டமைப்பு வேலைகள் நடை பெற்று வருகின்றன. அடுத்த மாதம் மருத்துவமனை தொடங்கவுள்ளது.

கட்டமைப்புவேலைகள் நடைபெற்று வரும் போதே சென்னை வெள்ளம் வரவே மருத்துவமனையை நிவாரண முகாமாக மாற்றி, சமையல் கட்டாக மாற்றி சுமார் 15 ஆயிரம் பேரைக் காப்பாற்றி ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு சமைத்து உதவியிருக்கிறார்கள்

விழாவில் இந்த சென்னை நேஷனல் மருத்துவ மனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் டி.ஆர். ஹேமநாயக்குலு பேசும் போது

” நாங்கள் செய்தது சிறு உதவிதான். வெள்ளம் என்று கேள்விப் பட்டவுடன் ஹொகனெக்கல் நினைவுக்கு வந்தது. முதல்நாள் 10 பரிசல்களை வரவழைத்தோம். மறுநாள் 15 பரிசல் களை வரவழைத்தோம். பலரைக் காப்பாற்றினோம். பரிசல் ஆட்களில் ஓட்டுபவருடன் உதவிக்கு ஒருவர் என்று வரவழைத்தோம். சிறப்பாகப் பணி செய்தார்கள். ” என்றார் அடக்கமாக .

சேலம் ஈஸ்ட் வெஸ்ட் குழுமத்தைச்சேர்ந்த டாக்டர் சபரிஷ் மோகன் குமார்பேசும் போது

” நாங்கள் மருந்து தயாரிப்பு கம்பெனி வைத்திருக்கிறோம். சென்னையில் நேஷனல் மருத்துவ மனை தொடங்கவுள்ளோம். மழையின் போது உதவுவது களத்தில் இறங்குவது என்று முடிவு எடுத்தோம். எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 50 பேர் இறங்கினோம். பரிசல் மூலம் மீட்டது, உணவு, உடை, மருந்துகள் வழங்கியது, மருத்துவ முகாம் என்று பல ஆயிரம் பேரை காப்பாற்ற முடிந்தது. இதில் எங்களுடன் பலரும் இணைந்து கொண்டனர் எங்கள் ஊழியர்கள் ஆளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று கொடுத்தனர். சில ஊழியர்கள் அரைமாத சம்பளம் கூட தரத்தயார் என்றனர். மும்பையில் எனக்கு பேராசிரியராக இருந்தவர் நிமேஷ்.அவர் 250 வாட்டர் பில்டர்கள் அனுப்பி வைத்தார்.

இதற்காக எங்களுடன் கரம் கோர்த்தவர்கள் பலர். சேலம் ‘சிட்டிசன் போரம்’ மூலம் பியூஷ் என்பவர் மூங்கில் வீடுகள் செய்து அனுப்பி யிருந்தார். சேலத்திலிருந்து இப்படி உதவி பொருள்கள் 22 லாரிகளில் வந்தன. ‘விஸ்வரூபம்’ போன்ற பல தன்னார்வ குழுக்கள் எங்களுடன் இணைந்து கொண்டது மகிழ்ச்சி யான நெகிழ்ச்சி அனுபவம். இதிலிருந்து ஒன்று புரிகிறது. உதவி செய்ய பணம் வேண்டாம். மனம் போதும் ” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசும் போது ” இந்த வெள்ளம் நமக்குப் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. எத்தனை கோடி கையில் வைத்திருந்தாலும் ஒரு பிடி சோற்றுக்காக காத்திருக்க வைத்தது. அப்போது தாயினும் சாலப் பரிந்து உதவிய இந்த தன்னார்வலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒலிம்பிக்கில் நாம் 10 தங்கப் பதக்கங்கள் வாங்கியிருக்கலாம். இந்தியா 10 நோபல் பரிசுகள் வாங்கியிருக்கலாம். அப்போதெல்லாம் கூட இவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்து இருக்க மாட்டேன். சென்னையின் தன்னார்வலர்களின் உதவிகளைப் பார்த்து உலகமே திரும்பிப் பார்த்தது. அந்த மனித நேயத்தை எண்ணி மகிழ்ந்தேன்;நெகிழ்ந்தேன். சாதிகளைக் கடந்து மதங்களைக் கடந்து வேற்றுமைகளைக் கடந்து மனித நேயம் வெளிப்பட்டு இருக்கிறது.

2016- ஐ வரவேற்கும் நாம், நம் இளைஞர்கள் மூலம் விதைக்கப் பட்டுள்ள மனித நேயம், நம்பிக்கை பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த மனித நேய எழுச்சி.பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. சமூக வலைதலைங்களில் வம்பளப்பது மட்டுமே இளைஞர்கள் வேலை, வதந்தி பரப்புவது மட்டுமே இளைஞர்கள் வேலை என்று கேட்டவர்களை வாயடைத்து இருக்கிறது.அவர்களின் பணி போற்று தலுக்குரியது. அந்த உதவும் எண்ணம். முனை மழுங்கடிக்கப் படக் கூடாது. என்கிற வகையில் ‘நன்றி சொல்வோம்’ பாடல் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உதவும் கரங்களே உயர்ந்த கரங்கள் .

அப்படிப்பட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை கௌரவப் படுத்தும் முயற்சியில் என்னாலான பங்காக இந்தப்பாடல் எழுதியுள்ளேன்.இந்த உயரிய செயலைச் செய்த தன்னார்வலர்களை உச்சிமோந்து பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும் ” என்றார்.

இசையமைப்பாளர் பி.பி.பாலாஜிபேசும் போது, ” வெள்ளம் வந்த போது நான் வீட்டில் இல்லை. வெளியிலிருந்து வீடு போன போது கார் நீரில் மூழ்கியிருந்தது. அந்த வேளச்சேரி முழுக்க நீர். நாமும் ஏதாவது செய்ய எண்ணி உதவினேன். உதவியவர்களுக்கு ஏதாவது செய்ய எண்ணிய போது என்னை மனோஜ்கிருஷ்ணா, ஏ.ராஜசேகர்.ராஜகோபால், ராஜாராம் என்னை ஊக்கப் படுத்தி முன்னெடுத்து இம் முயற்சியை சாத்தியமாக்கினார்கள்.விவேகா இலவசமாகப் பாடல் எழுதி உதவியுள்ளார்” என்றார்.

தலைவாசல் விஜய் பேசும் போது”உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். வெள்ளம் மழை உதவிகளோடு நின்று விடாமால் பிளாஸ்டிக்கை ஒழிக்கவும் முன்வர வேண்டும் ” என்றார். இந்நிகழ்ச்சியில்ஏராளமான தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.

காவிரி ஸ்நான பலன் கிடைச்சுடுத்தோ சந்திரமௌலீ!

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.

கட்டுரை: ரமணி அண்ணா

பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மஹா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.

ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிக்ஷை அளித்து வழி படுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மறுநாள் காலை ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், “சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே ? ஒரு நாளைக்கு உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.

உடனே என் தந்தையார், “நானும் அதக் கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக்கிழமையே வைச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும் ?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.

காரியஸ்தர் சிரித்தபடியே, “சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர செலவு. எல்லாம் முடிஞ்சு ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை) அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு பிடிக்கும்! உங்கள் ஊர்ல வசூலாயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல், “பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், “அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார். “ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

“பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்ரஹித்த ஸ்வாமிகள், “ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலைத் தாழ்த்தி, “மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரக்கிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் முப்பது வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. நானூறு ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும் ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக மொத்த வசூல் ஐநூறு ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.

இனி பெரியவாளின் பாத சமர்ப்பணைக்குத் தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு, அவர் சரியாகவே தூங்கவில்லை.

வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில் – கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம் ?’ என்கிற கவலை அவருக்கு.

திடீரென்று ஒரு கருணைக் குரல்: “சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன் அங்கேயே நின்னுண்டிருக்கே ?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.

“என்ன சந்தானம்! நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியா ?” என்று வினவினார் ஸ்வாமிகள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல பெரியவா. ஞாயித்துக்கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், “அது சரி சந்தானம்… லௌகீகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என் சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.

அவர் சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கிற மாதிரியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார். திடீரென, “ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நிறைய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார்.”காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார் ?” என்று அனைவரும் குழம்பினர்.

“போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.

பெரியவா விடவில்லை. “அது சரி, நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே ?”

“ஒரு வாரம் முன்னாடி, பெரியவா!” – என் தகப்பனார் பதில் சொன்னார். “அதிருக்கட்டும்… இப்போ ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ ?” – இது பெரியவா.

உடனே அருகில் இருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, “இன்னிக்கிக் கார்த்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.

ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. “சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியா எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, “சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளைக்கு விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதான்னு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறி விட்டு, ‘விசுக்’ கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.

‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணி விட்டு வருவதற்காகத் தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேக்கறா போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.

சனிக்கிழமை. பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும், தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: “நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தான் ஜலம் போறது! பெரியவா கிட்ட போய் சொல்லணும்.”

தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார், என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, “சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ…புண்ணியமுண்டு” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர் ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தக்ஷணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர் தான். அப்பா வழித் தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருதுவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்க ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட்டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திர மௌலீச்வர ஸ்வாமி தான் எங்க குலதெய்வம்.”

“நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா”ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்கு கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், “ஆமா, சாஸ்த்ரிகளே! ரயிலை விட்டு எறங்கி வரச்சே பார்த்தேன். நிறைய பேர் மடிசாரும், பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம் ? ” என்று கேட்டார்.

ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித்தார். அவருக்கு பரம சந்தோஷம். “கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்றபடி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஐநூறு ரூபாய்.

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர் நேராகச் சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். என் தகப்பனார், மடத்து காரியஸ்தரிடம் சென்று, “பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதான்னு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், “பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்கள் பிரமிப்பு அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷா வந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக, அந்த ஐநூறு ரூபாயை வைத்து சமர்ப்பித்தார். பழத்தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.

மின்சாரம் வாங்குவதில் தொடரும் ஊழல்: வரவு-செலவு கணக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
மின்சாரம் வாங்குவதில் ஊழல் தொடர்வதாகவும், அதன் வரவு-செலவு கணக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அதை சீரமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் மின்வாரியத்தின் நிதிநிலையை மேலும் மோசமாக்கும் வகையில் மின்சார கொள்முதலில் முறைகேடு தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து LSHS எனப்படும் தொழிற்சாலை எரிபொருளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை பெருமளவில் குறைந்துள்ளது. சில பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றுக்குரிய நிலைக் கட்டணம் ரூ.1.50 தவிர ஒரு யூனிட் ரூ.4.27 என்ற விலையில் மின்சாரம் விற்பனை செய்ய முன்வந்துள்ளன. ஆனால், அந்த நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் மறுத்து விட்டது. மாறாக சில தனியார் நிறுவனங்களிடம் நிலைக் கட்டணம் ரூ.1.50 தவிர ஒரு யூனிட் ரூ.5.05 என்ற விலையில் மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக குறுகியக் காலம் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து தினமும் 2 கோடி யூனிட் அளவுக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது.

ஒரு யூனிட்டுக்கு 78 பைசா அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால் மின்வாரியத்திற்கு தினமும் ரூ.78 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. எவ்வளவு காலத்திற்கு இந்த மின்சாரம் வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மாதத்திற்கு ரூ.23.40 கோடியும், ஆண்டுக்கு ரூ.284.70 கோடியும் வாரியத்திற்கு இழப்பு ஏற்படும். இதையெல்லாம் நன்றாக தெரிந்து கொண்டே அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரியம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதும், அதைவிட அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுவதும் உண்மை தான் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரே ஒப்புக்கொண்டிருப்பதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை மட்டும் தான் வாங்க வேண்டும். ஆனால், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மின் வாரியம் முடிவு செய்திருக்கிறது என்றால் அதன் பின்னணியில் ஊழல் நடந்திருக்கிறது என்று தான் பொருளாகும்.

இந்தியாவிலேயே மிக மோசமான நிலையில் உள்ள மின்வாரியங்களில் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் தான் மின்வாரியத்தின் கடன்சுமை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன்சுமை ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. மின்சார வாரியத்தின் கடன்சுமை அதிகரித்ததற்கான காரணங்களில் முக்கியமானது தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது தான் என்பது அனைவரும் அறிந்ததே.

உதாரணமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 40 விழுக்காடு மின்சாரத்தை மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்கிறது. 30 விழுக்காடு மின்சாரம் பொதுத்துறை மின் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 30% மட்டுமே தனியாரிடம் வாங்கப்படுகின்றன. 2013-14 ஆம் ஆண்டில் 40% மின்சாரத்தை தயாரிக்க ரூ.7613 கோடி மட்டுமே செலவாகியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கு விலையாக சுமார் ரூ.9000 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கிய அதே அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூ.21,000 கோடிக்கு மின்வாரியம் வாங்கியிருக்கிறது என்பதிலிருந்தே அதற்கு எவ்வளவு கூடுதல் விலை தரப்படுகிறது; அதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதை உணரலாம்.

முந்தைய தி.மு.க. ஆட்சியும், இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியும் தமிழ்நாடு மின்வாரியத்தை பணம் காய்க்கும் மரமாக கருதி ஊழல் செய்கின்றன. ஆட்சியின் கடைசிக்காலத்தில் கூட மின்சார வாரியத்தை சுரண்ட வேண்டும் என்பதற்காகத் தான் இப்போதும் அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் பதில் கூறியாக வேண்டும்.

ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக 2014 ஆம் ஆண்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் 2014&15 நிதியாண்டு முடிந்து 10 மாதங்களாகியும் அதற்கான வரவு-செலவு கணக்கை மின்சார வாரியம் வெளியிடவில்லை. ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வியை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்வாரியத்தின் வரவு-செலவு கணக்குகளையும், கடன் விபரத்தையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.