Home Blog Page 5880

ஆரிப் ராஜா வீடியோஸ் விருதுகள் – 2015 : அரசியல்வாதிகள் மற்றும் நடிகரை நக்கல், நையாண்டி, செய்து வாட்ஸ்ஆப்பில் வெளியான காமடி காணொளி

2015-ம் ஆண்டுக்கான ஆரிப் ராஜா வீடியோஸ் விருதுகள் எனும் தலைப்பில் ஒரு காமடி காணொளி இன்று ( 02-12-2016 ) வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளது.
வைரலாக பரவிவரும் அந்த காணொளியில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபல திரைப்பட நடிகரையும் செமையாக நக்கல்,நையாண்டி, செய்து காமடி காணொளியில் கலாய்த்துள்ளனர்.
 
மேலும்அந்த காணொளி சமூக விழிப்புணர்வு காணொளி நிச்சயமாக பாருங்க…உங்கள் கருத்துக்களை பதிவிடுங்க என்று வாட்ஸ்ஆப்பில் என்று கூறியுள்ளனர்.

அரசியல்வாதிகளில் சிறந்த காமெடி அரசியல்வாதி யார்? ஆயா டிவி” அவார்ட்ஸ் எனும் தலைப்பில் நேற்று ( 01-01-2016) தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளை செமையாக காமடி காணொளியில் கலாய்த்து முகனூல் பக்கத்தில் வெளியானது குறிப்பிட்டதக்கது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் ஆரிப் ராஜா வீடியோஸ் விருதுகள் – 2015 எனும் காமடி காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நாச்சியாரின் திருமொழி கூறும் உட்பொருள்

ஆண்டாளின் திருப்பாவை அநுபவம் நாச்சியார் திருமொழி என்னும் மற்றொரு பிரபந்தத்திலும் தொடர்ந்தது. திருப்பாவையிலே, எம்பெருமானே உபாயம் என்றும், அவன் உகப்புக்கான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும் தன் உறுதியை அறுதியிட்ட பின்பும், தன் விருப்பப்படி அவனைப் பெறாமையாலே, அவனைப் பெற வேண்டும், என்ற ஆவல் ஏற்பட்டவளாய், அறிவு கலங்கி, பிரிந்தாரைக் கூட்டும் இயல்புடைய காமதேவனை, ‘‘அனங்கதேவா! வேங்கடற்கென்னை விதிக்கிற்றியே’’, என்று ஆஸ்ரயித்தாள், நாச்சியார் திருமொழியின் முதற்பதிகமான ‘‘தையருதிங்களில்’’.

இது கண்டு பொறாத எம்பெருமான் விரைந்து வந்து முகம் காட்ட ஊற்றில் இழைத்துக் கொண்டிருப்பதையும், அவன் இவளைப் பற்றி மெய்ப்பினக் கிட்டதையும் (அணைத்தையும்) பேசினாள் இரண்டாம் திருமொழியான ‘‘நாமமாயிரத்தில்’’

இப்பதிகத்தில் ஏற்பட்ட அவனோடான இணைப்பு தொடர்ந்ததால் ஆனந்த மிகுதியால் இவளுக்கு உயிர்தியாகம் ஏற்படும் என அஞ்சிய உறவினர்கள் கண்ணனையும், இவர்களையும் பிரித்து நிலவறைகளிலே அடைத்தனர், அப்பிரிவாற்றமையாலும் இவர்களுக்குப் ப்ராணஹாநீ உண்டாகும் நிலை ஏற்பட, அது கண்ட உறவினர்கள், ‘‘பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதர்குச் செய்யும் பனி நீராடுதல் என்றும் நோன்பைச் செய்வதற்காக இவர்களை வெளியில் விட, இவர்களும் கண்ணனோடு சேர்ந்தும் பிரிந்தும் படும் வருத்தங்களைத் தவிர்ப்பதற்காக அவன் அறியாதபடி ஒரு பொய்கைக்குச் சென்று ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு விரஹதபம் ஆறும்படி அங்கு வந்து இவர்களின் ஆடையை எடுத்துக் கொண்டு கரையில் இருந்த குருந்தில் ஏறி வீற்றிருந்ததையும் இவர்களும் குளித்துக் கரையேறியவுடன் ஆடை ஆபரணங்களைக் காணாமல், இவனை மரத்தின் மேலே கண்டு இவனிடம் இரந்து கேட்பதாய் வாழ்த்துவதாய், கோபமாய் சீறுவதாய் பலவிதமாகக் கெஞ்சிக் கேட்க அவனும் ஆடை ஆபரனங்களைக் கொடுத்து அருளியதையும் பேசினான் மூன்றாம் திருமொழியான ‘‘கோழியதைப்பதில்’’

இந்தக் கூட்டு பிரிவிலே முடிய ‘‘மறுபடியும் கண்ணபிரானோடு கூடவல்லானோ?’’ என்று கூடல் இழைத்ததைப் பேசினாள் நாலாம் திருமொழியான ‘‘தெள்ளியாரில்’’.

உயிரற்றதான கூடல் மறுமொழி கூறாமையாலே உயிருள்ள குயிலைப் பார்த்து எம்பெருமான் வரும்படிகூவ பிராத்திக்கிறாள் ஐந்தாம் திருமொழியான ‘‘மன்னு பெரும் புகழில்’’,

குயில் கூவி அவன் வராதிருக்கவே மிகவும் வருத்தமுற இவளை உயிர்தரிகச் செய்வதற்காக, இவளின் விருப்பபடி ஒன்றும் குறையதபடி பாணிக்கிரஹணம் வரை கனவிலே ஆண்டாளை கண்ணபிரான் அனுபவிக்கச் செய்ய, அவ்வனுபவத்தைத் தோழிக்குச் சொல்லுகிறாள் ஆறாம் திருமொழியான ‘‘வாரணமாயிரத்தில்’’<

கனவிலே கண்ணனோடு ஏற்பட்ட உறவு நீட்டிக்கப் பெறமையாலே, அவனோடு எப்போதும் சேர்ந்திருக்கும் ஸ்ரீபாஞ்சஜன்யத்தைப் பகவதனுபவம் இருக்கும்படியைப் பலவாறு கேட்கிறாள் ஏழாம் திருமொழியான, ‘‘ கற்பூரம் நாறுமோ’வில்.

அவன் வருவதாகச் சொன்ன மழைக்காலத்தில் அவன் வராதது கண்டு, மேகங்களை திருவேங்கட முடையானுக்குத் தூதாக விட்டதைப் பேசினாள். எட்டாம் திருமொழியான ‘‘விண்ணீல்மேலப்பில்’’.

மேகங்களும் தூது செல்லாமல், நின்ற விடத்திலே நின்று மழைபொழிய, அதனாலே மழைக்காலத்தில் உண்டாகும் இந்திர கோபங்கள், முல்லைகள், காயா முதலிய மலர்கள், களங்கனி முதலான கனிகல், வண்டினங்கள், பூஞ்சுனைகள் முதலானவை உண்டாகி எம்பெருமானுடைய திருமேனி அவயங்களை நினைவுபடுத்தித் தனை நலிவ்தைப் பேசினாள். ஒன்பதாம் திருமொழியான ‘‘சிந்துரச் செம்பொசி‘யில்.

இவ்வாறு மனம் வருந்தியவளாய் ‘‘நமக்கு உயிர்தரிக்க வழி உண்டோ?’’ என ஆராய்ந்து ‘‘மற்றவையெல்லாம் தப்பினாலும் பெரியாழ்வாரோடு நமக்குண்டான உறவு தப்பாது. அவனுக்கான சுதந்திரந்திரத்தையும் மாற்றி, நம்மை அவன் திருவடிகளில் சேர்த்து விடும்’’ என்று உறுதி பூண்டமையைப் பேசினாள் பத்தாம் திருமொழியான ‘‘கார்கோட‘‘லில்,

இவள் உறுதியோடு இருந்த பின்பும், கண்ணபிரான் தமக்கு முகம் கொடுக்காததாலே மிகவும் நோவுப்பட்டு இருக்கும் நிலையைக் கண்டு, தாய்மார், தோழிமார் முதலானவர்கள் இவளைக் காண வந்து திரண்டு நிற்க, ‘‘ அவன் நம்மை வைத்த நிலையைப் பார்த்தீர்களா’ என்று வெறுத்து வார்த்தை சொல்லி, பின்பு, ‘‘நம்மௌஇப் போன்ற சில பெண்களுக்கு உதவினவன் பெரியாழ்வார் பெற்றெடுத்த நமக்கும் கட்டாயம் உதவாமல் இருக்க மாட்டான்’’, என்று தேறுதலாயாப் பேசினாள் பதினோராம் திருமொழியான ‘‘தாமுகக்குக் தம்கை’’யில்.

இப்படி உறுதி பூண்டிருந்தும் அவன் வராமையாலே நடக்கவும் இயலாத நிலையை அடைந்து, அருகில் இருப்பாரைப் பார்த்து ‘‘அவன் இருக்கும் தேசத்திலே என்னைக் கொண்டு சேருங்கள்’’ என்கிறாள் பன்னிரண்டாம் திருமொழியான மற்றிருந்தீர்களில்.

இப்படி இவளின் வேண்டுகோளை ஏற்று அவன் இருக்கும் தேசத்திலே இவளைக் கொன்டு சேர்க்க இயலாமையாலே, ‘‘அவ்னோடு தொடர்புள்ள ஏதாவதொன்றைக் கொன்டு வந்து என்னைத் தொடச்செய்து உயிர் தரிக்கச் செய்யுங்கள்’’ என்று பிராத்திருக்கிறாள். பதிமூன்றாம் திருமொழியான ‘‘கண்ணனென்றும் கருந்தெய்வத்தில்’’

இவளுக்கு பரம பக்தியை விளைவிக்கச் செய்யும் பொருட்டு, அவன் முகம் காடாமல் இருக்க, அதனால் இவளின் ஆற்றாமை கரைபுரண்டு, அவனைப் பெறாமல் உயிர்தரிக்க மாட்டாத நிலை ஏற்பட, ஆட்கொண்டான், ‘‘பட்டி மேய்ந்து’’ என்னும் இப்பதினாலாம் திருமொழியில், ஒவ்வொரு பாட்டிலும் முன்பாதியில் ‘‘கண்டீரே’’ என்று கேட்கிறவர்கள் பேச்சாகவும், பின்பாதியில் ‘‘கண்டோம்’’ என்று பதில் சொல்கிறவர்கள் பேச்சாகவும் முறையே தமக்குப் பிறந்த பரம பக்தியையும், பெற்ற பேரின்பத்தையும் இருவர் பேச்சாகப் பேசி நாச்சியார் திருமொழியாகிய இப்பிரபந்ததை நிறைபடுத்துகிறாள் ஆண்டாள்.

திருப்பாவை காட்டும் வாழ்வியல்

எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டகின்றனவோ, எவனால் இவையாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும்,

&எது, வாக்கினாலும், மனத்தினாலும், துதிக்கவும், அறியவும் அருமையாக இருக்குமோ அந்தப் பிரமத்தை அறிந்து கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சார் என்றும்,

&சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை சிருஷ்டித்து க்ரஹித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தான் என்றும்,

&அந்தப் பரன் விஷ்ணு என்னும், நாமமுடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும்,

&அவனுடைய நபீ கமலத்திலிருந்து ப்ரும்மா பிறந்தான் என்றும், அப் ப்ரும்ம்மனுடைய புருவங்களீல் மத்திய பிரதேசத்திலிருந்து ருத்ரன் பிறந்தான் என்றும்,

&ஓங்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்ரும், வேத வசனஙக்ளுக்கும் நாயகன் அவனே என்றும்,

&ஜீவர்கள் அந்த ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே அவனி அடைகிறார்கள் என்றும்,

&அப்படிப்பட்ட ஓங்காரத்தில் ப்ரதம (முதல்) ஸ்வரமான அகாரம் அப்பரமனையே குறிப்பிடுகிறது என்றும்

&அந்த நாராயணன் ஒருவனே பாபங்களைக் களைபவன் என்றும்,

&ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து ப்ரும்மா, ருத்ரன், முதலான் முப்பத்து முக்கோடி தேவர்கள்ளும் பிறந்தார்கள் என்றுஇம்

&நாராயணனே ப்ரப் ப்ருமமம் என்றும்

& தன்னுடைய நாபீக் கமலத்திலிரந்து ப்ரும்மாவும், அவனுடைய புருவங்களின் இடையிலிருந்து ருத்ரனும், அவனிடத்திலிருந்து ஆறுமுகனும் பிறந்தான் என்று பகவானே கீதையில் அருளிச் செய்திருக்கிறார் என்றும்,

&பகவான் வியாசரும், ‘‘எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பரதெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாக சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்களுக்கு மத்தியில் ப்ரமாண பூர்வமாக சொல்ல விழைகிறேன்’’ என்று கையை மேலே உயர்த்தி முறை சத்தியம் செய்து, ‘‘வேதங்களுக்கு மிஞ்சின பரதெய்வமுமில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் என்றும்,

&இவ்வாறு சமஸ்த்த தேவர்களில் நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாக்ஷ்ரம் ஒன்றே பரதத்வநிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும், ஆழ்வார் அருளிச் செய்தார்.

திருப்பாவை

‘‘மார்கழித் திங்கள்’’ என்னும் பாசுரத்திலே யசோதை இளம்சிங்கமான கண்ணபிரானே நமக்கு உபாயம் என்பதலே, இந்த நோன்பைக் காரணமாக வைத்து க்ருஷ்னானுபவம் பெறவாருங்கள் என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறாள் ஆண்டாள்.

‘‘வைய்யத்து வாழ்வீர்காள்’’, பாசுரத்திலே நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடியதான காரியங்களாக பாற்கடலில் பைய்யத் துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு, அவர்கள் வேண்டு அளவு பொருள்களையும், பி¬க்ஷயையும், கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக் கூடாததான காரியங்களாக, நெய், பால் போன்றவற்றை அமுது செய்யாமலும், மையிட்டுக் கொள்ளாமலும், பூக்கள் சூடிக் கொள்ளாமலும், பெரியோர்கள் செய்யாதன செய்யாமலும், தவராஅன சொற்களை சொல்லாமலும் இருக்க வேண்டும் என்று ஆண்டாள் அருளிச் செய்கிறாள்.

‘‘ஓங்கி உலகளந்த’’ பாசுரத்தில் தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்கு கிடைக்கும் பலனகளாக, தேசம் முழுவதும் ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்திடும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற்பயிர்களின் நௌவே கயலமீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும். நல்ல பருத்திப்பனவான பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொறிந்திடும். இப்படிப்பட்ட அளவில்லாத ஸம்பத்துகள் நிறைந்திடும் என்று சொல்கிறாள்.

‘‘ஆழிமழைக் கண்ணா’’, பாசுரத்தில் மழைக்குத் தலைவனான வருண தேவனை அழைத்து, இராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பர்ணங்களைப் போல், உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடுபடியாகவும், மழைபெய்வாயாக’’., என்று கேட்கிறார்கள் கோபியர்கள்.

அப்பஎண்களிலே ஒருத்தி, ‘‘நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் செய்த பாவங்களால் இந்த நோன்பு இடையூறில்லாமல் நிறைவேரா வேண்டுமே’’ என்று கவலையோடு கேட்க, அதற்கு வடமதுரை மைந்தனை யமுனிஅத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும், என்று பதில் சொல்கிறாள், ‘‘மாயனை மன்னு’’ பாசுரத்திலே.

இவ்வாறாக முதல் ஐந்து பாட்டுக்களாலே இருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டிய உபகரணங்களை சொன்னவர்கள், மேல்பத்து பாசுரங்களாலே அவ்வனுபவத்துக்காக தன் சக தோழிகளை எழுப்புகிறார்கள்.

‘‘புள்ளும் சிலம்பினகான்’’ பாட்டிலே புதிதாக இப்பொழுதுதான் பகவத் விஷயத்தில் ரஸமறிந்திருந்தும் அதை மறந்து உறங்கிக் கிடக்கும் ஒருத்தியையும் எழுப்புகிறார்கள்.

‘‘கீழ்வானம் வெள்ளென்று’’ பாசுரத்திலே கண்ணபிரானால் விரும்பப் பட்டவளான ஒருத்தியைம் ‘‘கோதுகலமுடைய பாவாய்’’, என்று எழுப்புகிறார்கள்.

‘‘தூமணிமாடத்து’’ பாசுரத்திலே, ‘‘உடமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உள்ள கடமையல்லவா’’, என்று கண்மூடிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

கண்ணனுடைய அண்டை வீட்டில் இருப்பவளும், எல்லோரும் கண்ணபிரானைக் கன்டு மயங்கி நிறக, அக்கண்ணனே மயங்கும்படியான மகிமை உடையவனாக ஒருத்தியை ‘‘அருங்கலமே’’ என்று அழைத்து எழுப்புகிறார்கள், ‘‘நோற்றுச் சுவர்க்கம்’’ பாசுரத்திலே.

‘‘கற்றுக் கறவை‘‘ பாசுரத்திலே, கண்ணனைப் போல ஊக்கு ஒரு பெண்பிள்ளையாய் இருப்பவளும் அவனைப் போல் உயர்ந்த குடிப் பிறப்புடையவளாய் ஊல் கொன்டாடப் படுபவளாயும் இருப்பவளான ஒருத்தியை ‘‘கோவலர் தம் பொற்கொடியே’’, என்று அழைத்து எழுப்புகிறார்கள்.

ஸ்ரீராமபிரானை எப்போதும் பிரியாது கைங்கரயம் செய்யும் இளைய பெருமானைப் போல் க்ருஷ்ண கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருப்பவனுடைய தங்கையை எழுப்புகிறார்கள். ‘‘கனைத்திளங்கற்றெருமை’’, பாசுரத்திலே.

‘‘புள்ளின் வாய்க் கிண்டானை’’ பாசுரத்திலே ‘‘நாம் கண்ணழகியாய் இருக்கும்போது கண்ணன் நம்மைத் தேடி வரவேண்டுமேயழிய நாம் அவனிருந்தவிடம் செல்ல வேண்டியதில்லை‘‘, என்று செருக்கோடு கண்மூடியிருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இவர்கள் காரியங்களுக்கெல்லாம் முன் நிற்பவளாய், எல்லோரையும் தானே எழுப்புதவதாக சொல்லி வைத்து, அதை மராந்து உறங்குபவளை ‘‘நாணாதாய்! என்று கூறி எழுப்புகிறார்கள், ‘‘உங்கள் புழக்கடை’’ பாசுரத்திலே.

எல்லே இளங்கிளியே’’ பாசுரத்தில், எல்லாப் பெண்களுடைய கூட்டத்தையும் காண ஆசைப்பட்டு இருக்கும் ஒருத்தியை எழுபுகிறர்கள்.

இவ்வாறாக எல்லாப் பெண்களையும் எழுப்பி, பின் எல்லோருமாகக் கூடி, ஸ்ரீநந்தகோபர் திருமாளிகையின் வாசலில் சென்று கோவில்காப்பானையும், திருவாசல் காக்கும் முதலிகளையும், ‘‘நேய நிலைக்கதவம்’’,. நீக்குமாறு வேன்டுகிறவர்கள், ‘‘நாயகனாய் நின்ற’’, பாசுரத்திலே

அவர்களும் கதவைத் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்க உள்ளே போய் நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் எழுப்புகிறார்கள். ‘‘அம்பரமே’’ பாசுரத்தில்.

நந்தகோபர் முதலானவர்களை அவர்களை முன்னிட்டுக் கொண்டு கண்ணனை எழுப்பியும் அவன் எழாதிருப்பதைக் கண்டு புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை முன்னிடாமையாலே பேசமலே இருக்கிறாள் என்று அறிந்து, நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். ‘‘உந்து மதகளிற்றன்’’, பாசுரத்திலே.

‘‘செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப வந்து திறவாய்’’ என்று இவர்கள் வேண்டியவுடன் நம்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி எழுந்திருந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறக்க வேண்டும் என நினைத்து கண்ணபிரான், இவள் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். இடை அறிந்த பெண்கள், ‘‘நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய்திறவாய்‘‘, என்று கண்ணனை எழுபுகிறார்கள், ‘‘குத்து விளக்கெரிய’’ பாசுரத்திலே.

‘‘ஒரு கணநேரமும் கன்ணனை துயில் எழ சம்மதியாமலும், சிறிது போதும் அவனைவிட்டு பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் ஸ்வரூபத்துக்குத் தகுந்ததென்று, உன் சுபாவத்துக்கும் தகுந்ததன்று’’ என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்க, அவளூம், ‘‘தக்க சமயம் பார்த்து விண்ணபிக்கலாம்’’, என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். கோபித்துக் கொண்டதால் தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, ‘‘பிராட்டியைப் பேசின பேச்சைக் கேட்டு திருவுள்ளம் கலங்கினான்’’, என்று அறிந்து அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை விண்ணப்பிக்கிறார்கள், ‘‘முப்பத்து மூவர்‘‘ பாசுரத்திலே.

அவர்களும் கதவைத் திறந்து இவர்களை உள்ளே அனுமடிக்க, உள்ளே போய் நந்த கோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும் பலராமனையும் எழுப்புகிறார்கள். ‘‘அம்பரமே’’ பாசுரத்தில்.

நந்தகோபர் முதலானவர்களை எழுப்பி, அவர்களை முன்னிட்டுக் கொண்டு கண்ணனை எழுப்பியும் அவன் எழாதிருப்பதைக் கண்டு புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை முன்னிடாமையாலே பேசாமலே இருக்கிறாள் என்று அறிந்து, நப்பின்னப் பிராட்டியை எழுப்புகிறார்கள், ‘‘உந்து மதரி£லிற்றன்’’, பாசுரத்திலே,

செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப வந்து திறவாய்’’, என்று இவர்கள் வேண்டியவுடன் நப்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி எழுந்திருந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறக்க வேண்டும் என நினைத்து கண்ணபிரான், இவள் திறக்க முடியாதபடி அணைத்துக் கொடான். இதை அறிந்த பெண்கள், ‘‘நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்’’, என்று கண்ணனை எழுப்புகிறார்கள், ‘‘குத்து விளக்கெரிய’’ பாசுரத்திலே.

‘‘ஒரு கணநேரமும் கண்ணனை துயில் எழ சம்மதியாமலும், சிறிது போதும் அவனைவிட்டு பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் ஸ்வரூபத்துக்குத் தகுந்ததன்று, உன் சுபாவத்துக்கும் தகுதந்தன்று’’ என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்க, அவள்ளும், ‘‘தக்க சமயம் பார்த்து விண்ணப்பிக்க்லாம்‘‘ என்று சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள். கோபித்துக் கொண்டதால் தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, ‘‘பிராட்டியைப் பேசின பேச்சைக் கேட்டு திருவுள்ளம் கலங்கினான்’’, என்று அறிந்து அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை விண்ணப்பிக்கிருக்கிறர்கள், ‘‘முப்பத்து மூவர்’’ பாசுரத்திலே.

இவ்வாறு எழுப்பப்பட்ட நப்பின்னைப் பிராட்டி, ‘‘என்னைச் சரண்டைந்த பின்பு உங்க்ளுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ?, ஆகையால் நாம் எல்லோரும் கூடி கண்ணை எழுப்புவோம்’’ என்று கூரி அவர்கள் அனைவரும் கூடி அவனை எழுப்புகிறார்கள், ‘‘ஏற்றக் கலங்கள்’’ பாசுரத்திலே

‘‘பெரிய தேசங்களை எல்லாம் ஆண்டுவரும் அரசர்கள், தங்களுடைய அகங்காரம் குலைந்து, வந்து உன் பள்ளிக் கூட்டில் கீழே திரளாகக் கூடியிருப்பதைப் போல, நாங்களும் அகதிகளாக வந்துள்ளோம், உடன் தாமரைத் திருக்கண்களால் சிறிது சிறிதாக எங்கள் மேல் விழிக்க மாட்டாயா?‘‘ என வேண்டுகிறார்கள், ‘‘அங்கண்மா ஞாலத்து’’, பாசுரத்திலே.

இவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டவுடன் கண்ணபிரான், பிராட்டியைச் சேர்ந்தவர்களான இவர்களை இப்பாடுபடி கொண்டிருந்தோமே‘‘, என்று தனைத் தானே நொந்து, இவர்களுக்கு நல்ல வார்த்தைகள் அருளிச் செய்ய, இவர்கலும் இவன் நடையழகைக் காண நினைத்து, ‘‘சீரிய சிங்கமென புறப்பட்டு எழுந்தருளி, மேன்மையான சிங்காசனத்தில் இருந்து எங்கள் குறையை விசாரித்துருள வேண்டும்’ என்கிறார்கள், ‘‘மாரிமலை முழைஞ்சில்’’ பாசுரத்திலே.

கண்ணபிரானும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சீரிய சிங்காசனத்திர்கு நடக்க ஆரம்பிக்க, இவர்கள் தம்மை மறந்து, உலகமளந்து அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்திற்கும் சக்டாசுரனை அழியும்படி உதைத்த அவன் கீர்த்திகும், குன்று குடையான எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெருக்கும் வேலுக்கும் மங்களாசானம் செய்து தாங்கள் அவனிடம் பறை கொள்ளுவதற்காக வந்தோம் என்று வேண்டுகிறார்கள். ‘‘அன்றிவ்வுலகம் பாசுரத்திலே.

‘‘மங்களாசாசனம் செய்யும் நீங்கள் பறை கொள்ள வேண்டி வந்தாய் சொல்கிறீர்களே இரண்டும் பொருத்தமானதாக இல்லையே! என்று கண்ணபிரான் கேட்க ‘‘பறாஇ என்பது வ

சென்னையில் திருவையாறு: இசை நிகழ்ச்சி நிரல்

பாரதநாட்டின் அருங்கலைகளில் தென்னிந்தியாவின்கர்நாடக சங்கீதம்முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்வரிய கர்நாடகசங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம்தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக் கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பத்து வருடங்களாகசென்னையில் திருவையாறு” என்கிற விழாவினைலஷ்மன்ஸ்ருதி இசையகம்(Lakshman Sruthi Musicals)வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டும், எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், வித்வத் தன்மையிலும், வித்தியாசமான ரசிப்புத் தன்மையிலும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும்அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக் குழுவாய் அமைத்து, இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை

பூர்த்திசெய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான்சென்னையில் திருவையாறுவிழா!

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும்சென்னையில் திருவையாறு விழா திகழ்கிறது.

இந்த ஆண்டு எமது இசை விழாவிற்கு வயது பதினொன்று. இவ்வினிய விழாவருகிற டிசம்பர்18ஆம்தேதிபிற்பகல்12.05மணிக்குவியாசைகோதண்டராமன்அவர்களின்நாதஸ்வரஇசைநிகழ்ச்சியுடன்தொடங்குகிறது.

.

நிகழ்ச்சிநிரல் 2015
லஷ்மன்ஸ்ருதியின்சென்னையில்திருவையாறு’பருவம் 11
18 – 25காமராஜர்அரங்கம்டிசம்பர்
18.12.2015வெள்ளிக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
பிற்பகல் 12.05மணிவியாசைகோதண்டராமன்நாதஸ்வரம்
பிற்பகல்2.50 மணிபி.எஸ்.நாராயணசாமிபஞ்சரத்னகீர்த்தனைகள்
மாலை5.00 மணி

சென்னையில்திருவையாறு11வதுஆண்டுஇசைவிழாவை நடனப்புயல்

பிரபு தேவாஅவர்கள்குத்துவிளக்குஏற்றி,துவக்கிவைக்கிறார்.

மாலை5.15மணிசிருட்டிஸ்கர்நாடிகாவழங்கும் –  பாரதரத்னாஎம்.எஸ்.சுப்புலஷ்மிஅவர்களுக்கு 100  இசைக்கலைஞர்கள்புகழ்அஞ்சலி (சுதா ராஜா, கர்நாடிகாசசிகிரண், காயத்ரிவெங்கட்ராகவன், S.ஐஸ்வர்யா, கீபோர்டுசத்யநாராயணன்ஸ்மிதா மாதவ்)
இரவு 7.30 மணிஅனில்சீனிவாசன் / நரேஷ்ஐயர் / சைந்தவி / பிரவிண்கோட்கிண்டிபாரம்பரியஇந்தியஇசை
19.12.2015சனிக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிஉடையாளூர் கல்யாணராமன்நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணிசுபத்ராமாரிமுத்துபரதநாட்டியம்
காலை10.30மணிசர்ச்சில்பாண்டியனின்உத்சவ்இசைவழங்கும் – கொண்டாடுவோம்கலாம்கனவுகளை
பிற்பகல் 1.00 மணிவிதிஷாபரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணிகர்நாடிகாசகோதரர்கள்&துஷ்யந்த்ஸ்ரீதர்சீனிவாசகல்யாணம்
மாலை 4.45 மணிஓ.எஸ்.அருண்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிஷோபனாபரதநாட்டியம்
20.12.2015ஞாயிற்றுக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிகடலூர்கோபிநாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணிஎஸ்.ஜெ.ஜனனிவாய்ப்பாட்டு
காலை 10.30 மணிகிருஷ்ணகுமாரிநரேந்திரன்பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணிசாந்திசுரேஷ்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிஊர்மிளாசத்யநாராயணன்பரதநாட்டியம்
மாலை 4.45 மணிபி.உன்னிகிருஷ்ணன்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிபர்வீன்சுல்தானாஇந்துஸ்தானிவாய்ப்பாட்டு
21.12.2015திங்கட்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிஹைதராபாத்பி.சிவாதிருப்பாவைஇசைநிகழ்ச்சி
காலை 9.00 மணிஇடாபாலகிருஷ்ணாஇந்துஸ்தானிவாய்ப்பாட்டு
காலை 10.30 மணி

லால்குடிஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன்&

விஜயலட்சுமி

வயலின்
பிற்பகல் 1.00 மணிஸ்ருதிலேகாபரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணிதிரிச்சூர்பிரதர்ஸ்வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணிராஜேஷ்வைத்யாவீணை
இரவு 7.30 மணிகத்ரிகோபால்நாத்சாக்ஸஃபோன்
22.12.2015செவ்வாய்க்கிழமைகலைஞர்கள்பிரிவுகள்
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிசுசித்ராஹரிகதா
காலை 9.00 மணிகே.திவ்யாதேவிபரதநாட்டியம்
காலை 10.30 மணிநர்த்தகிநடராஜன்பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணிவித்யாகல்யாணராமன்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிநிர்மலாராஜசேகர்வீணை
மாலை 4.45 மணிமஹதிவாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிநித்யஸ்ரீமகாதேவன்வாய்ப்பாட்டு
23.12.2015புதன்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிபூர்ணிமாஹரிகதா
காலை 9.00 மணி

பாரதிதிருமகன்

கலைமகன்

சங்கீதஉபன்யாசம்
காலை 10.30 மணிமதுரைமுரளிதரன்வழங்கும்அவதாரபுருஷன்
பிற்பகல் 1.00 மணிஅஸ்வத்நாராயணன்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிஹரிணிவாய்ப்பாட்டு
மாலை 4.45 மணிபிரியாசகோதரிகள்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிஹரிசரண்வாய்ப்பாட்டு
24.12.2015 வியாழக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிமணிகண்டன்பக்திபிரசங்கம்
காலை 9.00 மணிரித்விக்ராஜாவாய்ப்பாட்டு
காலை 10.30 மணிபிரசன்னாகிட்டார்
பிற்பகல் 1.00 மணிமீனாட்சிராகவன்பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணிரேவதிகிருஷ்ணாவீணை
மாலை 4.45 மணிஎஸ்.செளம்யாவாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிவிஜய்பிரகாஷ்வாய்ப்பாட்டு
25.12.2015 வெள்ளிக்கிழமை
நேரம்கலைஞர்கள்பிரிவுகள்
காலை 7.00 மணிசெங்கோட்டைஹரிநாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணிகவிதாராமுபரதநாட்டியம்
காலை 10.30 மணிஷோபனாவிக்னேஷ்வாய்ப்பாட்டு
பிற்பகல் 1.00 மணிடாக்டர்.கணேஷ்வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணிஷோபாசந்திரசேகர்வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணிஅருணாசாய்ராம்வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணிகார்த்திக்வாய்ப்பாட்டு

திங்கள் மும்மாரி பெய்ய…திகழட்டும் பாவை நோன்பு

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்

தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்

பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்

வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
– என்றார் வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள்.

பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத உச்சம்! பக்தி புக வேண்டிய இள வயதில் கண்ணனின் பக்தி ஆழமாகப் புகுந்து, அதனால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் பக்தி இலக்கியத்துக்கும் ஒருசேரப் பெருமையும் வளமையும் தந்தவர் ஸ்ரீஆண்டாள்.

பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது காத்யாயனி விரதம். மார்கழி மாதத்தில் இளம் பெண்களால் விரதம் கைக்கொள்ளப் பட்டது. பனி மிகுந்த இம்மாதத்தில் இறைச் சிந்தனையில் காலம் கழித்து, ஊன் மறுத்து, உடலுக்கு உரமூட்டும் பாலும் தயிரும் நெய்யும் விலக்கி விரதம் கொண்டனர் இளம் பெண்கள்.

இதனையே செய்துகாட்டினார் ஸ்ரீஆண்டாள். தோழியருடன் சேர்ந்து கண்ணனை நினைந்து அவர் கொண்ட விரதமே பாவை நோன்பாக வெளிப்பட்டது. முப்பது நாளும் நாளொரு பாட்டாக முப்பதாகி திருப்பாவை மலர்ந்தது. பாவைப் பாட்டுடன், பூவைச் சூடி அழகுபார்த்து அரங்கனுக்கு மாலையிட்ட ஆண்டாளின் நோன்பு, அன்பர்களின் ஆன்மிக சாதனைக்கு ஒரு கருவியாகப் போனது.

மார்கழித் திங்கள் பிறந்தால், மனதில் திருப்பாவையும் குடிகொள்ளும். பாவை நோன்பின் மூலம் கண்ணனை அடைந்த விதத்தைப் படிப்படியாகச் சொல்லி அந்த அனுபவத்தை ஊட்டிய ஆண்டாள் அன்றோ இந்த மாதத்தின் நாயகியாகத் திகழ்கிறார்!

இந்த மண்ணின் ஆன்மிகம், இறைவனை அன்பரோடு ஒருவராக இருத்தி அழகு பார்த்தது. நண்பனாக, தலைவனாக, தம்பியாக, அண்ணனாக, தந்தையாக, ஏன் வேலைக்காரனாகக்கூட இறைவன், தன் அடியாரோடு கைகோத்து வந்த சங்கதிகள் ஏராளம். அப்படி அந்தக் கடவுளைக் காதலனாகக் கண்டு பாடிய உள்ளங்களும் அநேகம். அவர்களில் ஆண்டாள் இயல்பாகவே பெண் ஆனதால், காதல் ரசம் பொங்க கண்ணனைப் பற்றும் உபாயத்தைத் தன் பாசுரங்களில் வெளிப்படுத்தினார்.

திருப்பாவை முதல் பாசுரத்தில் கண்ணபிரானே உபாயம் என்பதால், இந்த நோன்பைக் காரணமாக வைத்து கிருஷ்ணானுபவம் பெற வாருங்கள் என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறார். இரண்டாம் பாசுரத்தில், பாற்கடலில் பையத் துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு அவர்கள் வேண்டும் அளவு பொருட்களையும், பிட்சையையும் கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடிய செயல்கள்… நெய், பால் போன்றவற்றை அமுது செய்தல், கண்களில் மையிட்டுக் கொள்ளல், பூக்கள் சூடிக் கொள்ளல், பெரியோர்கள் செய்யக் கூடாதென விலக்கியவற்றை செய்தல், தவறான சொற்களை சொல்லுதல் போன்றவை நோன்பு நோற்பவர்கள் செய்யக் கூடாத காரியங்கள் என தெளிவிக்கிறார்.

‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்தில், தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்குக் கிடைக்கும் பலன்களை அடுக்குகிறார். நாட்டுக்கு ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்யும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற் பயிர்களின் அளவுக்கு கயல்மீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும், பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொரியும்… என்கிறார்.

‘ஆழிமழைக் கண்ணா’ பாசுரத்தில், மழைக்குத் தலைவனான வருண தேவனை அழைத்து, கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, மேகமாகி, ஊழி முதல்வன் உருவம் போலே கறுத்து, ராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பாணங்களைப் போலே, உலகத்தார் அனைவரும் வாழும் படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடும் படியாகவும் மழையைப் பொழியச் செய்வாயாக” என்று வேண்டுகிறார்கள் கோபியர்கள்.

அப்போது ஒருத்தி, “நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் பாவங்களால் இடையூறு ஏதுமில்லாமல் நோன்பு நிறைவேற வேண்டுமே” என்று கவலையோடு கேட்கிறாள். அதற்கு, வடமதுரை மைந்தனை யமுனைத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும் என்று பதில் சொல்கிறார் ஆண்டாள்.

இப்படி, முதல் ஐந்து பாசுரங்களாலே கிருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டியதைச் சொன்னவர்கள், அடுத்த பத்து பாசுரங்களில் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்காக தோழிகளை எழுப்புகிறார்கள்.

“உடமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உள்ள கடமை அல்லவா”, என்று “தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் பாவையே உடனே எழுந்து வா” என்று கண்மூடிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

ராமபிரானை விட்டு கண நேரமும் பிரியாது கைங்கர்யம் செய்யும் லட்சுமணனைப்போல் கண்ணனின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருப்பவனான நற்செல்வனின் தங்கையை எழுப்புகிறார்கள்!

“நாமே மிகச் சிறந்த கண்ணழகியாக இருக்கும்போது, அந்தக் கண்ணன்தான் நம்மைத் தேடி வரவேண்டுமே அன்றி, நாம் அவன் இடம் தேடிச் செல்ல வேண்டியதில்லை” என்று செருக்கோடு கண்மூடிப் படுத்திருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இவர்களின் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பவளாகச் சொல்லி, எல்லோரையும் தானே முதல் ஆளாகச் சென்று எழுப்பி அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு, ஆனால் அதை மறந்து உறங்குபவளை “நாணாதாய்! நாவுடையாய்!” என்று கூறி எழுப்புகிறார்கள்.

இவ்வாறாக எல்லாப் பெண்களையும் எழுப்பி, ஸ்ரீநந்தகோபர் திருமாளிகை வாசலுக்குச் சென்று நிற்கிறார்கள். கதவு அடைத்திருப்பது கண்டு, கோயில் காப்பானையும், திருவாசல் காக்கும் முதலிகளையும், நேய நிலைக்கதவம் நீக்குமாறு வேண்டுகிறார்கள்.

இவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த அவர்களும் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கிறார்கள். அங்கே நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் துயில் எழுப்புகிறார்கள் இந்தப் பெண்கள்.

எல்லோரும் எழுந்திடினும் கண்ணன் விழிக்காதது கண்டு, நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் என்று பிராட்டியை எழுப்புகிறார்கள்.

‘செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப வந்து திறவாய்’, திறந்தால் மகிழ்வோம் என்று இவர்கள் வேண்டியவுடன், நம்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி துயில் கலைந்து எழுந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறந்து விட வேண்டும் என்று நினைத்த கண்ணன், அவள் கதவைத் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். இதை அறிந்த பெண்கள், “குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் உறங்கும் மலர்மார்பா, வாய்திறவாய், மைத் தடங்கண்ணினாய் உன் மணாளனை துயில் எழ ஒட்டாயோ?” என்று நப்பின்னையையும் கேட்டவாறே கண்ணனைத் துயில் எழுப்புகிறார்கள்.

“கணநேரமும் கண்ணனை எழ சம்மதியாமலும், ஒரு சிறிதும் அவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் இயற்கையான குணத்துக்குத் தகுந்ததன்று” என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்கிறார்கள். அவளும், “தக்க நேரம் பார்த்து விண்ணப்பிக்கலாம்” என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். நாம் கோபித்துக் கொண்டதால்தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, “பிராட்டியை நாம் பேசின பேச்சைக் கேட்டு கண்ணன் திருவுள்ளம் கலங்கினானோ” என்று எண்ணி அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள்.

நப்பின்னைப் பிராட்டி, “என்னைச் சரணடைந்த பின் உங்களுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ? ஆகையால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்… கண்ணனை எழுப்புவோம்” என்றாள்.

“உலகில் மிகப் பெரும் தேசங்களை ஆட்சிசெய்யும் அரசர்களும்கூட, தங்களுடைய அகங்காரம் கரைந்து, உன் பள்ளிக் கட்டிலின் கீழே திரளாகக் கூடியிருக்கிறார்கள். அதைப் போலே, நாங்களும் அகதிகளாக வந்துள்ளோம், உன் தாமரைக் கண்கள் எங்கள் மீது பதியும் வண்ணம், சிறிது எங்கள் மேலும் விழிக்க மாட்டாயா?” என வேண்டுகிறார்கள் இப்பெண்கள்!

இப்படி இவர்கள் நெஞ்சுருக நெக்குருக விண்ணப்பித்தவுடன், கண்ணன், பிராட்டியை அண்டினவர்களான இவர்களை இவ்வளவு பாடு படுத்திவிட்டோமே! என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, இவர்களுக்கு நல்வார்த்தைகள் சொன்னான். இவர்களும் கண்ணனின் நடையழகைக் காணும்படி செய்யுமாறு வேண்ட, கண்ணனும் அதனை ஏற்றான். சீரிய சிங்காசனம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த நடையழகிலே இவர்கள் தம்மை மறந்தார்கள். உலகமளந்த அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்துக்கும், சகடாசுரன் அழியும்படி உதைத்த அவன் புகழுக்கும், கோவர்த்தனக் குன்றை குடையாக எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெடுக்கும் வேலுக்கும் அவர்கள் மங்களாசாசனம் செய்தார்கள்.

பின், “நாங்கள் உன்னிடம் பறை கொள்வதற்காக வந்தோம்; எங்கள் மீது இரக்கம் காட்டவேணும்” என்று வேண்டுகிறார்கள்.

“மங்களாசாசனம் செய்யும் நீங்கள், பறைகொள்ளுதற்காக வந்ததாகச் சொல்கிறீர்களே; இரண்டும் பொருத்தமானதாக இல்லையே!” என்று கண்ணன் கேட்கிறான். “பறை என்பது ஒரு காரணமே! உண்மையில் உன்னிடம் உன்னையே யாசித்து வந்தவர்கள் நாங்கள்” என்று இவர்கள் உரைக்கிறார்கள்…!

“சரி! என்னை வேண்டும் நீங்கள், ஏன் பறையை வேண்ட வேண்டும்?” என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு இவர்கள், “உன்னைக் காண்பதற்கு வாய்ப்பாக ஒரு நோன்பை நோற்கச் சொன்னார்கள். அந்த நோன்புக்கு மார்கழி நீராட்டம் என்கிற அனுஷ்டானத்தை முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அந்நீராட்டத்தை முடிக்க வேண்டுமாயின், சங்கங்கள், பெரும் பறைகள், பல்லாண்டை இசைப்பவர்கள், கோல விளக்காகிய மங்கல தீபங்கள், கொடிகள், விதானங்கள் ஆகியன தந்தருள வேண்டும்” எனப் பிரார்த்திக்கிறார்கள் ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில்!

மார்கழி நீராட்ட நோன்புக்காக அவர்கள் கேட்ட அனைத்தையும் கண்ணபிரான் கொடுக்கிறான். பின்னர், “உங்களுக்கு வேண்டியது இவ்வளவுதானே, போதுமா?” என்க, அதற்கு, “நோன்புக்கு வேண்டுபவை இவையே, அது போதும்…நோன்பு நோற்ற பிறகு உன்னிடம் பரிசாக சிலவற்றைப் பெற விரும்புகிறோம்” என்றார்கள். “அது என்ன?” என்று அவனும் கேட்க, “நீயும் பிராட்டியும் ஆபரணங்களாகிய சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ ஆகியவற்றையும், ஆடைகளையும் அணிந்து கொண்டு வரவேண்டும். அதன் பின் உங்களுடன் ஒன்றாக அமர்ந்து, ‘மூட நெய் பெய்து முழங்கை வழிவார’ பால் அமுது செய்ய வேண்டும்” என்ற தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள்.

கண்ணனும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கிறான். பின் மனத்தில் இப்படி நினைத்தான்…“ஊருக்கு வேண்டிய பறையை நம்மிடமிருந்து பெற்றுவிட்டார்கள். இனி தங்களுக்கான பறையை (அதாவது, தம்மைத்தான்) கேட்கப் போகிறார்கள்” என்பதை அறிந்து கொள்கிறான். பிறகு, “நீங்கள் விரும்பும் பறையைப் பெற ஏதாவது சாதனங்களை அனுஷ்டானம் செய்ததுண்டா? எதையும் அனுஷ்டிக்காமல் என்னைப் பெற முடியாதே” என்றான். அதற்கு அவர்கள் “நாங்கள் எந்த சாதனமும் செய்ய அருகதையற்ற அஞ்ஞானிகளல்லவா? பசுக்களின் பின்னே சென்று காடுகளை அடைந்து உண்டு திரிவோம். அறிவொன்றும் இல்லாத எங்கள் ஆயர் குலத்தில் உன்னைப் பிறக்கப் பெறுவதற்கு ஏற்ற புண்ணியங்கள் செய்தவர்களாக இருக்கிறோம். எம்பிரானே! உன்னோடு எங்களுக்குள்ள உறவு ஒழிக்க ஒழியாது. அன்பினாலே கட்டுண்டோம். அந்த அன்பினால் உன்னை ஏதாவது விபரீதமாகச் சொல்லியிருந்தாலும் பொறுத்துக்கொள்… இந்த அன்பால் நாங்கள் விரும்பும் பறையை எங்களுக்கு அருள வேண்டும்” என்கிறார்கள்.

“காலம் உள்ளளவும் உனக்கே அடிமை செய்வோம்” என்று ‘தாங்கள் பறை என்று சொல்லுவது கண்ணனின் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே’ என்று முடிவாக நிர்ணயிக்கிறார்கள். அந்தக் கைங்கர்யமும் அவன் உகப்புக்காகவே அன்றி, தங்கள் ஆனந்தத்துக்காக அன்று என்னும் அரும்பொருளை அறிவிக்கிறார்கள். இதைக் கேட்ட கண்ணன் அதை உகந்து அருளினான். அதற்கு இவர்கள், “கண்ணனே, இவ்வாறு நாங்கள் உன்னருள் பெற்ற வைபவத்தை ஆண்டாள் அருளிய சங்கத்தமிழ் மாலையாகிய திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் தப்பாமல் ஓதுபவர்கள், செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாகிய கண்ணபிரானால் எல்லாவிடத்திலும் அவனுடைய திருவருளைப் பெற்று இன்புறுவர்கள்” என்று கூறி திருப்பாவை பாடினால் கிடைக்கும் புண்ணிய பலனைச் சொல்கிறார் ஸ்ரீஆண்டாள்.

 

முதலமைச்சர் ஜெயலலிதா நீதி விசாரணைக்கு தயாரா? : மு.க.ஸ்டாலின்

 
முதலமைச்சர் ஜெயலலிதா செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது தொடர்பாக விளக்கங்களைத் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து நீதிவிசாரணை நடத்தத் தயாரா என்று தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியுடன் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
. “கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே தெரியவில்லை’ எனப் பேசிவந்த ஜெயலலிதா, இப்போது சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதற்கான வியூகம் வகுக்கப்படும் என சொல்லியிருக்கிறார். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டமும் பொய்கள் நிறைந்ததாக நடந்து முடிந்துள்ளது. இது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
நமக்கு நாமே பயணம் மீதமுள்ள 22 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கி பிப்ரவரி மாத இறுதிவரை நடைபெறவுள்ளது. நமக்கு நாமே பயணத்திட்டம் பொதுமக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் கவர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஆயா டிவி” அவார்ட்ஸ் 2015 : அரசியல்வாதிகளில் சிறந்த காமெடி அரசியல்வாதி யார்?

 
2015-ம் ஆண்டுக்கான அரசியல்வாதிகளில் சிறந்த காமெடி அரசியல்வாதி யார்? ஆயா டிவி” அவார்ட்ஸ் எனும் தலைப்பில் ஒரு காமடி காணொளியை உருவாக்கி இன்று ( 01-01-2016) சுமார் மதியம் 2.00 மணியளவில்தமிழச்சி (Tamizachi) எனும் முகனூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளை செமையாக காமடி காணொளியில் கலாய்த்துள்ளனர்.
மேலும் அந்த முகனூல் பதிவில் கூறியுள்ளதாவது :-.
 
2015- அரசியல்வாதிகளில் சிறந்த காமெடி அரசியல்வாதி யார்?
“ஆயா டிவி” அவார்ட்ஸ் அறிவித்திருக்கிறது. ஏன் ஆளும் கட்சியினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் எதிர் கேள்வி கேட்க கூடாது.
ஏன்னா… இது “ஆயா டிவி” அவார்ட்ஸ்ஸ்சு.
‪#‎அதிமுக‬ ‪#‎ADMK‬ என்று கூறியுள்ளனர்.
images india d - 2026
இது வரை அந்த காணொளியை 1339 பேர் முகனூல் பக்கத்தில் பார்வையிட்டு விரும்பியும் 1553 பேர் அவர்களது முகனூல் பக்கத்திற்கு பகிர்ந்தும் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது அந்த காணொளி.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

புத்தாண்டு 2016 தித்திப்பாக மலர்ந்துள்ளது. அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருநெல்வேலி இனிப்பு அல்வா போல வரும் நாள்கள் இருக்க வேண்டும்.

கட்டுரை / தகவல் : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

***

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா பற்றிய குறிப்புகள்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .

1930 – 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !
மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:

அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !
இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் – கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் – அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் – பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் – 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி ” இருட்டு கடை அல்வா” என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளிவந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.

இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது (பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும்!)
உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட, சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டியுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது.

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! (ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது) இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா – ஒரு கிலோ 140 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?

இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது !

‪#‎ksrposting‬ ‪#‎ksradhakrishnanposting‬ ‪#‎இருட்டுக்கடைஅல்வா‬‪#‎அல்வா‬

முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து ஸ்டிக்கர் அரசாங்கம் நடத்துவதாக விஜயகாந்த் குற்றசாட்டு!

 
தமிழக பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வைகயில் சாலைகளில் பிளக்ஸ் போர்டுகளை வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து ஸ்டிக்கர் அரசாங்கம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
மழைவெள்ளத்தால் சென்னை மாநகரமே சிக்கித்தவித்து, பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுகூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு குறிப்பிட்ட காலத்தில் நடத்தவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதியாகும். ஆனால் மழை வெள்ளத்தால் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டு, நொந்து நூலாகிப்போயுள்ள சென்னை வாழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆடம்பரத்துடனும், வெகு விமரிசையாகவும் இதை நடத்தலாமா?
 
ஜெயலலிதா செல்கிறார் என்றால் அவர் செல்லும் வழியெங்கும் புயல் வேகத்தில் சாலை போடப்படுகிறது. ஆனால், சாமான்ய மக்களுக்காக எந்தப் பணியும் நடப்பதில்லையே!
 
இதைக்கூறினால் அதிமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பேருந்தில் பயணம் செய்து மிக எளிமையாக வந்தார்கள் என கதை பேசுவார்கள். அனைத்து அமைச்சர்களுமா பேருந்தில் வந்தார்கள்? முதலமைச்சர் ஜெயலலிதாவும் பேருந்திலா வந்தார்? ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தானே பவனி வந்தார்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகிறார் என்பதற்காக, வரும் வழியெங்கும் இடைவெளியே இல்லாமல் மிக பிரம்மாண்டமான பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். அதை வைப்பதற்கு தடையாக இருந்த மரங்களையெல்லாம் வெட்டியுள்ளனர். நடைபாதையை அடைத்தும், அதில் பள்ளம் தோண்டியும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வந்து சென்ற சாலைகள் மட்டும் புதியதாக போடப்பட்டு பளபளவென காட்சியளிக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்ற வழியிலுள்ள மத்திய கைலாஷ் பகுதி சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, கடந்த 20 நாட்களாக மூடப்படாமல் அப்படியே இருந்தது. ஆனால் முதலமைச்சர் அவ்வழியே சென்றதால் அவசர அவசரமாக அது சரி செய்யப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா, இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சாலை வழியாக நேரடியாக சென்றிருந்தால், அவர் செல்லும் வழியெங்கும் சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? முதலமைச்சர் நேரடியாக செல்லும்போது மக்களுக்கான நிவாரணப்பணிகளும் விரைந்து நடைபெற்றிருக்கும் அல்லவா? இதைத்தானே தமிழக மக்கள் முதலமைச்சரிடம் எதிர்பார்க்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா என்கின்ற தனி நபருக்காக புயல் வேகத்தில் நடக்கும் பணிகள், சாதாரண சாமான்ய மக்களுக்காக நடக்காதா?
சென்னையில் பல சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஸ்டிக்கர் அரசாங்கத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா, மூன்று மணிநேரம் நடைபெறும் தங்கள் கட்சி நிகழ்ச்சிக்காக, மக்களின் வரிப்பணம் பல கோடிகளை வாரி இறைத்து செலவிடும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இதுபோன்று செலவிட்டு விரைந்து சீரமைக்கலாமே? முதலமைச்சர் செல்வதற்காக வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகலாக பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் அதே வேகத்தில் மக்களுக்காக பணியாற்ற தயங்குவது ஏன்? மக்களின் வரிப்பணத்தில் தானே அவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது.
 
ஒருபுறம் பேரழிவிற்கு காரணமாக இருந்துவிட்டு மறுபுறம் மக்களால் நான், மக்களுக்காக நான், நான் உங்களோடு இருக்கிறேன், உங்கள் துயரங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்றெல்லாம் வாட்ஸ்ஆப்பில் பிதற்றிவிட்டு, மக்களின் இன்னல்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், ஆணவப்போக்கோடு தனது கட்சிக்காகவும், தன்னுடைய சுயநலத்திற்காகவும் அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். முதலமைச்சரின் முடங்கிப்போயுள்ள நிர்வாகத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும், ஆட்சியின் முறைகேடுகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 

இந்து மதத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க “பாண்டவ சேனா” எனும் அமைப்பை உருவாக்கிய வழக்கறிஞர்

 
இந்து மதத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க “பாண்டவ சேனா” எனும் அமைப்பை உருவாக்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக தொழில் செய்து வரும் முத்துக்குமார் சங்கரன் என்பவர் கூறியுள்ளார்.

மேலும் வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கரன் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-

பாண்டவ சேனா… பாண்டவ சேனா… “இந்து என்று சொல்லடா” எழுச்சியுடன் செல்லடா * என்கிற காலம் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போ விட்டது
தமிழ் நாட்டை பொறுத்த வரையில் மதம் மாறியவர்களில் இந்துக்கள் எழுபது சதவீதமும் .. கிறிஸ்தவர்கள் பதினான்கு சதவீதமும், இஸ்லாமியர்கள் ஒன்பது சதவீதமும் மீதி உள்ளவர்கள் இதர மதத்தை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்து மத கோட்பாடுகளையும், இந்து மத நம்பிக்கைகளையும் இந்து பெற்றோர்கள் சிறுவயது முதலே தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டாததே ஆகும்.
“நீரு இல்லா நெற்றி பாழ்” என்கிற காலம் போய் “நீரு இல்லா நெற்றியை பார்” என்று இந்துக்களை ஏளனம் செய்யும் காலம் வந்து விட்டது. இன்று இந்துக்கள் நெற்றி நிறைய விபூதி அணிவது இல்லை. சந்தனம் மற்றும் குங்குமம் வைப்பது நாளுக்கு நாள் மறைந்து வருகிறது.
எல்லா மதமும் எங்கள் மதமே “சர்வ மத சங்கம்” என்று சமாதானம் பேசி வரும் இந்துக்கள் மாற்று மதத்தினரால் இளிச்சவாயர்கள் என்று பேசபடுகின்றனர்.
இந்துக்களின் கோவில்களில் மாற்று மதத்தினர் வியாபாரம் நடத்த கடைகள் ஒதுக்கபடுகிறது .. இந்துக்கள் வெறுத்து ஒதுக்கபடுகின்றனர். எனவேதான் மாற்று மதத்தினரின் உணர்வுகளை குறுக்கிடாமல் இந்து மதத்தினரின் உரிமைகளை மீட்டு எடுக்க இந்த”பாண்டவ சேனா” என்னும் அமைப்பு இன்று உருவாக்கபடுகிறது.
“இன்னுயிர் கொடுப்போம்” இந்து மதம் காப்போம் * என்ற முழக்கத்தோடு உருவாக்கப்படும் இந்த இயக்கத்தில் நான் நிறுவனர் / தலைவராக இருக்கிறேன்.
இந்த இயக்கத்தில் இனைந்து இந்துமதம் காக்க விரும்பும் நண்பர்கள் இந்த முகநூலில் தங்களது பெயர் மற்றும் அலைபேசி எங்களை comments செய்யவும்.
அல்லது இந்த timeline க்கு விபரங்களை பதிவு செய்யவும் கேட்டு கொள்கிறேன்.ஜெய் ஹிந்த் .. வாழ்க பாரதம். என்று அவரது முகனூல் பதிவில் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் முத்துக்குமார் சங்கரனின் கைப்பேசி எண் 098421 77572, மற்றும் 073736 29573 என அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் பதிவிடபட்டுள்ளது.