Home Blog Page 5932

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016-ல் முதலமைச்சர் வேட்பாளர் கலெக்டர் சகாயமா ??? “ரமணா” பட பாணியில் வேலைகள்.!

 

அட ஆமாங்க, எவ்வளவு நாள் தான் “செய்வாங்க செய்வாங்கன்னு” திராவிடக்கட்சிகளுக்கும்,அவர்களுக்கு கூட்டணியா இருந்த தோழமை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டுட்டு ஏமாந்து கொண்டே இருப்பாங்க.நம்ம டெல்லியில் மக்கள் ஒரு மாற்றத்துக்காக எப்படி அரவிந்த் கேஜிரிவாலை தேர்ந்தெடுத்தார்கள்.

அரவிந்த் கேஜ்ரிவால் கூட அண்ணா ஹசாரேவின் லோக்பால் பிரச்சனைல மக்களுக்கு அறிமுகமானார். இன்று அவர் நடத்தும் ஆட்சியில் கூட பிரச்சனைகள் மலிந்து தான் இருக்கு.நேற்றைக்கு கூட கலவர வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனா நம்ம தமிழ்நாட்டுல “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம மனசுக்குள் சட்டுன்னு ஞாபகம் வருபவர் சகாயம் ஐஏஎஸ். அவர் சென்ற இடமெல்லாம் நேர்மையாக இருந்ததன் விளைவு பல இட மாற்றங்கள்.சமீபத்தில் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நுழைந்த வேகத்துக்கு இரண்டு தேசிய விருகளை பெற்றுத்தந்தவர். புதிய மாற்றங்களை உருவாக்கியவர்.தற்பொழுது மதுரை கிரைனட் முறைகேடுகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக பொறுப்புவகித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு மதுரை கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமாக லட்சக்கணக்கான இளைஞர்கள்இவருக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இவருக்கு சில சமூக விரோதிகளால் மிரட்டல் வரும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் “உங்களுக்கு துணையாக நாங்க இருக்கோம்” என்று ஒன்று திரள்கிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு செய்தி பெரிய அளவில் உலா வருவது என்னவென்றால் “ரமணா” பட பாணியில் யாரெல்லாம் நேர்மையான அரசு அதிகாரிகளாக செயல்பட்டு ஓய்வுபெற்றவர்களை தொகுதி வாரியாக சேகரித்து, வரும் தமிழக சட்டமன்ற 2016 தேர்தலில் அவர்களை தொகுதி வேட்பாளராகவும் கலெக்டர் சகாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முயற்சி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஒரு வேலை இந்த தகவல் உண்மையென்று இருந்தால் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல நேர்மையான தலைமை அமையும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

 

 – கவின் –

கந்துவட்டி கொடுமையால் குடும்பமே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி : 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கந்துவட்டி கொடுமையால் புத்தகக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவரது மனைவி, மகன் இருவரும் பலியானார்கள். மாமனார், மருமகள் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்த புத்தக கடை நடத்தி வருபவர் பால கிருஷ்ணமூர்த்தி (வயது 63).சின்னாம்பாளையம் ஊராட்சி தலைவர் பானுமதி ரவி என்பவரது வீட்டில் அவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தியின் மனைவி உஷாராணி (53), மகன் பாலவிஜயபிரகாஷ் (35), அவரது மனைவி நித்யா (30) ஆகியோர் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நித்யா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தியின் மகள் சித்ராவுக்கு திருமணம் ஆகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தொழிலை விரிவுப்படுத்தபாலகிருஷ்ணமூர்த்தி ரூ.80 லட்சம் வரை கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. போதிய அளவு புத்தக கடையில் வருமானம் இல்லாததால், அவரால் கடனையும், அதற்குரிய வட்டியையும் திரும்ப செலுத்த முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இதற்கிடையில் வஞ்சியாபுரம் பிரிவை சேர்ந்த மோகன்குமார் (42) என்பவர், பாலகிருஷ்ணமூர்த்திக்கு கடனாக வழங்கிய ரூ.5 லட்சத்தை கேட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது மோகன்குமார் தகாத வார்த்தைகளால் பேசி, பணத்தை கொடுக்கவில்லை என்றால், மீண்டும் தகராறு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதை வீட்டுக்குள் இருந்தபடி பாலகிருஷ்ணமூர்த்தியின் மகன் பாலவிஜயபிரகாஷ் கேட்டு உள்ளார். இதனால் மனமுடைந்த பாலவிஜயபிரகாஷ், கடனால் தனது குடும்பத்தின் மானமே போய்விட்டது. இதற்கு மேல் உயிருடன் இருக்கக்கூடாது. அனைவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று குடும்பத்தினரிடம் பேசி முடிவு செய்ததாக தெரிகிறது.

பின்னர் தென்னை மரத்திற்கு வைக்க கூடிய பூச்சிக் கொல்லி மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடும்பத்துடன் நேற்று முன்தினம் நள்ளிரவு குடித்துள்ளனர். பாலகிருஷ்ணமூர்த்தி, விஷத்தை குடிக்கும் போது, பதற்றத்தில் முகத்தில் மருந்தை சிந்தி உள்ளார். பின்னர் அவர், தனது குடும்பம் கண்முன்னே பிணமாகபோவதை எண்ணி துடிதுடித்தார். இதன் காரணமாக அவரையும் மீறி வீட்டிற்கு வெளியே ஓடி வந்து கதறி அழுதார். சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே உஷாராணி, பாலவிஜயபிரகாஷ், மருமகள் நித்யா ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதை தொடர்ந்து ஆம்புலன்சை வரவழைத்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாலவிஜயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதில் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உஷாராணியும் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நித்யா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில்போலீசார் வஞ்சியாபுரம் பிரிவை சேர்ந்த மோகன்குமார், பொள்ளாச்சியை சேர்ந்த கணேஷ்பாபு (40), பெருமாள் (41), ஆட்டோ டிரைவர் நசீர்பாய் ஆகியோர் மீது கந்துவட்டிக்கு பணம் கொடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தற்கொலை தொடர்பாக மோகன்குமார், கணேஷ்பாபு, பெருமாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குஷ்புவும் நக்மாவும் இருந்தால் நல்லதுதானே! : வசந்தகுமார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் 17 ஆண்டுகளாக இருந்த ஹெச்.வசந்தகுமார், அந்த பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தமிழ்நாடு காங்.கமிட்டியில் துணைத் தலைவர் பொறுப்பில் வசந்தகுமார் தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறியுள்ளார்.

வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் இந்த அறிவிப்பால் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம், மறியல் என்பதோடு பலர் கட்சிப் பொறுப்புகளை விட்டும் விலக தொடங்கியுள்னர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் வசந்தகுமார்
கூறியுள்ளதாவது :-

காங்கிரஸ் கட்சி புதிய அரசியலை நோக்கி பயணம் செய்கிறது. குஷ்பு, நக்மா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பைக் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் அவர்களுக்கான வேலைகளை செய்யும்போது கட்சிக்கு நல்லதுதானே நடக்கும். கட்சி வளரத்தானே செய்யும். இரண்டும் நல்லதுதானே என்று வசந்தகுமார் கூறியுள்ளார்.

நடிகர் நெப்போலியன் துணைத் தலைவராகிறார் : தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

திமுக முன்னாள் மத்திய மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரங்களை அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை
பாரதீய ஜனதா கட்சியில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் நெப்போலியன் முதலில் திமுக வில் இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அழகிரியின் ஆதராவாளரான அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் தரப்பட்டது.

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் எழுந்த போது, கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் திமுகவிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதுவரை அக்கட்சியில் அவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை. தற்போது அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மது விற்பனைக்கு ஏப்ரல் மாதம் முதல் தடை

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

1977-78 ஆகிய ஆண்டுகளில் மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்தோம். ஆனால், இது பயனளிக்கவில்லை. ஆனால், பெண்கள் மதுவின் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே வரும் நிதியாண்டு முதல் மது விற்பனைக்கு தடை விதிக்க கூடிய பணிகளை துவங்க வேண்டும் எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, அம்மாநில முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்து இருப்பதால், மாநிலத்தில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ரூ.1.06 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கிரானைட் முறைகேட்டில்  இழப்பு

 

தமிழக அரசுக்கு மதுரை கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்படி, 7025 பக்கங்கள் கொண்ட அந்த அறிகையில், விண்ணப்பித்ததில் ஆரம்பித்து கனிம வளங்களை வெட்டி எடுத்தது வரை விதிமீறல் மற்றும் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் குழு தெரிவித்துள்ளது. மொத்தம் 84 குவாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கிரானைட் முறைகேட்டை தனி நீதிமன்றம் அமைத்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சகாயம் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள கிரானைட் கற்களை சர்வதேச சந்தையில் ஏலம்விட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மதுரை பகுதியில் நடந்த கனிம வளங்கள் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சகாயம் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே சகாயம் தரப்பில் முதல் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் அவரது வழக்கறிஞர்சுரேஷ் ஆகியோர் ஆஜரானார்கள், சகாயத்தின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிகையில் உள்ள சில விபரங்கள்தான் தற்போது அதிர்ச்சி தகவலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

404

404: Not Found

Sorry, but the content you requested could not be found

ஹாலிவுட் பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட “கர்மா” தமிழ் திரைப்படம்!

கர்மா”- R.அர்விந்த் எழுதி இயக்கிய தமிழ் திரைப்படம். மிகவும் வித்தியாசமான Thriller கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறும் “Hollywood Sky Film Festival” க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திரைப்பட விழா குழுவினர் அதிகாரப்பபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற “All Lights India International Film Festival” –ல் முதன் முறையாக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் “கவிப்பேரரசு” வைரமுத்து அவர்கள் பாடல் எழுதியுள்ளார். இசை L.V.கணேசன், ஒளிப்பதிவு V.B.சிவானந்தம் மற்றும் படத்தொகுப்பு வினோத்பாலன்.

கேரளாவில் தொடங்கியது கள்ளன் படப்பிடிப்பு!

இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கரு.பழனியப்பன்,நிகிதா,நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் ‘கள்ளன்’ படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சினைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியை  நேரில் சந்தித்த மூடு டாஸ்மாக்கை மூடு பாடகர் கோவன்

திமுக தலைவர் கருணாநிதியை மூடு டாஸ்மாக்கை மூடுபாடலை இயற்றி பாடிய கோவன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது தான் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும், விடுதலைக்காக வலியுறுத்தியதற்காகவும் கோவன் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவன் கடந்த30-10-2015 அன்று தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்த கோவனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்துள்ளார்.

மதுஒழிப்பை வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் என பாடகர் கோவன்
கேட்டுக்கொண்டதாக பரவலாக கூறப்படுகிறது.