Home Blog Page 5933

செய்வீ ர்களா ? செய்வீ ர்களா ? நீங்கள் செய்வீ ர்களா ? நடிகர் அமீர்கானை அறைந்தால் ரூ 1.லட்சம் பரிசு

டெல்லியில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம்ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமீர்கானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும்,வலுத்து வருகிறது. யாரும் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதை தடுக்கக் கூடாது என்று பாரதீய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சில தலைவர்களும் அமீர்கான் தான் விரும்பும் எந்த நாட்டுக்கும் போகலாம் என்று தெரிவித்தார். பல சமூக ஊடகங்களில் அவர் தேச விரோத சக்தி என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளார்.

சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்தது, விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், நானோ, எனது மனைவியோ இந்த நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. அந்த எண்ணமும் எங்களிடம் இல்லை என கூறி உள்ளார்.

இந்நிலையில், ஆமீர்கான், தான் நடித்துவரும் டங்கல் என்ற படத்தின் படபிடிப்பிற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டலின் வெளியே, பஞ்சாப் சிவசேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது

ஆமிர்கானின் போட்டோக்களை போராட்டத்தின்போது, எரித்து சிவசேனா எதிர்ப்பை காட்டியது. அப்போது பேசிய சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன்

ஆமீர்கானை கன்னத்தில் அறைந்தால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும். இந்த ஓட்டலின் மேனேஜரோ, அல்லது ஊழியரோ, திரைப்படத்தில் பணியாற்றும் ஊழியர்களோ கூட ஆமீர்கானை அடித்து ரூ.1 லட்சம் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.

தைரியமும், தேசப்பற்றும் கொண்ட இந்தியர்கள், அமீர்கானை லூதியானாவில் வைத்து அடித்து ரூ.1 லட்சத்தை பரிசாக பெறலாம் என்று கூறினார். இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்முறையை தூண்டிய பேச்சுக்காக ராஜிவ் தாண்டன் கைது செய்யப்படலாம் என்று பரவலாக கூறப்படுகின்றது.

மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

 

தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது .

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மாநில தலைவராக மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளராகவும், எம்.அப்துல் ரஹ்மான் முதன்மை துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 7 துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்..
புதிய நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 510 பேர் பங்கேற்றனர்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது :–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் நடத்தி வரும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 169 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய – மாநில அரசுகள் நிவாரண பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுப்படுத்த வேண்டும்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தி.மு.க. தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

மாநாட்டின் நிறைவின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அஹமது சாகிப் எம்.பி., கேரள மாநில தலைவர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள து

நாடாளுமன்றம் விவாதிக்க மிகச் சிறந்த இடம் : பிரதமர் மோடி

இந்திய நாடாளுமன்றம் விவாதிக்கவும், கலந்தாலோசனை செய்யவும் மிகச் சிறந்த இடமாக விளங்குவதாகவும், அதுதான் நாடாளுமன்றத்தின் ஆன்மா என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் தெரிவித்துள்ளார்

மேலும், நமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

மிகச் சிறந்த எண்ணங்களால் நாடாளுமன்றம் மிண்ணும் என்றும், சிறந்த விவாதங்களும், புதிய திட்டங்களும் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் இடம் பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் தற்கொலை முயற்சி

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட, மதுரை வழக்கறிஞர் மாளவியா விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

மதுரை அருகே உள்ள உத்தங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மாளவியா (35). சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்ட வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், விஷ்ணுப்பிரியா, வழக்கறிஞர் மாளவியாவிடம் கைப்பேசியில் அதிக நேரம் பேசியிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸார் மாளவியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த வழக்கில் தன்னை சிக்கவைக்க சிபிசிஐடி போலீஸார் முயற்சிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், உத்தங்குடியில் உள்ள தனது வீட்டில் மாளவியா நேற்று பிற்பகலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

அவரது நண்பர் மூலமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் மாளவியாவிற்க்கு நெருக்கடி கொடுத்து வருவதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது . மாளவியா தற்கொலைதொடர்பாக, அண்ணா நகர் காவல் நிலையத்தினர். வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை தீப பிரச்சனை : இந்து முன்னணியினர் கைது

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் 40க்கும் மேற்ப்பட்டோர் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 150 அடி உயர மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியில் அமைந்துள்ள தீப மேடையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வருடந்தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் மலை உச்சியில் உள்ள தூணில் தான் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் தடையை மீறி தீபம் ஏற்றப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மலை உச்சியில் உள்ள தூணின் நாலா புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளனர். அவர்கள் மலையில் இருந்தபடியே 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இதில் ஒருகாவல் ஆய்வாளர் 4 போலீசார் வீதம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி மலையில் உள்ள குதிரை சுனை, நெல்லி தோப்பு, உச்சிபிள்ளையார் கோவில், பழனி ஆண்டவர் கோவில் காசி விசுவநாதர் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட மலையின் நாலாபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மலையின் அடிவாரப் பகுதியில் கோட்டை தெருவில் உள்ள சாவடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், முருகன் கோவிலுக்குள்ளும் மற்றும் நகரின் நாலாபுறமும் 25 காவல் ஆய்வாளர்கள் 60 காவல் ஆய்வாளர்கள்உதவி உள்பட 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

 

விஜய் 60வது படம் பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல்!

அட்லீ படத்தையடுத்து விஜய் பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், விஜய்  நடிக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எங்கள் வீட்டுப்பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய்60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை).

 இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.  பி. நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன்  பி வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள்  மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பபட்டது.

மகா தீபத்தை திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒருபகுதியாக கடந்த நவம்பர் 21ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ம் தேதி கொட்டும் மழையில் பெரிய தேரோட்டத்துடன் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றது.

மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு தீபவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோயில் மூலவர் சன்னிதியில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் குவிந்து ஏற்றப்பட்ட மகா தீபதரிசனம் செய்தனர் .

 

 

உல்லாசமாக இருந்துவிட்டு இளம் பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை

கோவை மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, கொலை செய்த பட்டறை தொழிலாளி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மெட்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 30. பட்டறை தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

அவர் கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதனால் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அந்த வீட்டில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதைத் தொடர்ந்து, செல்வராஜ் தலைமறைவாகி விட்டார்.

அரைநிர்வாணமாகவும் ,உடல் அழுகிய நிலையிலும், கொலை செய்யப்பட்டுக் கிடந்த அந்த இளம் பெண்ணைக் குறித்தும் கொலையாளியைக் குறித்தும் காவல்துறையினர் தீவர விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் செல்வராஜூவுடன், ஒரு இளம் பெண் இருப்பதை வீட்டு உரிமையாளரின் மகன் விஜய் பார்த்ததாகக் கூறினார்.

அதனால் செல்வராஜ்தான் அந்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் கருதினர். இதனால் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், கரூரில் செல்வராஜ்பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவலர்கள் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய சத்யா என்பதும் தேனியை சேர்ந்தவர் என்றும், அவர் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள காப்பகத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட செல்வராஜை காவல்துறையினரிடம் அளித்துள்ள பாபரப்பு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது :-.

எனது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மிஸ்டுகால் வந்தது. அதன் பின்னர் நான் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

எதிர்முனையில் ஒரு பெண் பேசினார். அதனால் நான் பேச்சை தொடர்ந்தேன். அப்போது அவர், தனது பெயர் சத்யா என்றும், அரக்கோணத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் வேலை செய்வதாகவும் கூறினார்.

மிஸ்டுகால் மூலம் பேச தொடங்கிய நாங்கள் மணிக்கணக்கில் பேசுவோம். ஆனால் எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது என்பதை அவரிடம் மறைத்து விட்டேன்.

இதனை தொடர்ந்து சத்யாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு அழைத்தேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தீபாவளிக்கு மறுநாள் கோவை வந்தார்.

போனில் பேசும்போது தேன் குரலாக பேசிய சத்யா நேரில் பார்த்தபோது அழகாக இல்லையே என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இருந்தாலும் தவிர்க்க முடியாமல் சத்யாவை அழைத்து கொண்டு கோவையில் பல இடங்களுக்குச் சென்று சுற்றிக் காண்பித்தேன்.

பின்னர் நான் தங்கி இருந்த வீட்டுக்கு சத்யாவை அழைத்து வந்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். இந்நிலையில் எனக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதை சத்யாவிடம் கூறினேன்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சத்யா நீங்கள் எனக்கு மட்டும்தான் சொந்தம், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், தன்னுடன் உல்லாசமாக இருந்ததை எனது குடும்பத்தினரிடம் அம்பலப்படுத்துவேன்.

மேலும் காவல்துறையினரிடம் புகார் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சத்யாவை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த சுத்தியலால் அவரது மார்பில் ஓங்கி அடித்தேன்.

பின்னர் சத்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினேன். தற்போது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் செல்வராஜ் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முட்டை கொள்முதலில் ஊழல் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வேலூர் மாவட்ட முட்டை ஒப்பந்ததாரர் ஒருவர் முட்டைக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முட்டை ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியுள்ளதாவது :-.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு மாறாக தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை திருத்தி அனுபவம் இல்லாத முன்பே கர்நாடகா அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்ட இரண்டு நிறுவங்களுக்கு உள் நோக்கத்தோடு உரிமம் வழங்கி இருப்பதால் அவைகளை ரத்து செய்ய வேண்டும் .

மேலும் ஒரு முட்டைக்கு 98 பைசாவில் இருந்து 1 ரூபாய் 75 காசுகள் வரை அதிக விலை கொடுத்ததால் பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்றும் மனுவில் மனுவில்
கூறி இருந்தார் .

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,தமிழக அரசு 2 வார காலஅளவிற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு அரசின் தலைமைச் செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைககள் வளர்ச்சி திட்ட இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மீண்டும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 27 முதல் 29-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

வங்க கடலின் தென் மேற்கில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக தெற்கு அந்தமான் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருதால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

மேலும் அந்த மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில்
27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். சென்னை உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கும் க னமழையும், மிக கனமழையும் பெய்யும் என ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.