Home Blog Page 5931

சொத்துகுவிப்பு வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன்

 

 .

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான வீரபத்ர சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய எஃகு வளத்துறை முதலமைச்சராக இருந்தவர். முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வீரபத்ர சிங் மீதான புகார் குறித்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், வருமான வரி தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஐ போலீசார், வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரது வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சிபிஐயின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வீரபத்ர சிங் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்க இயக்கம் அண்மையில் வழக்குப்பதிவு செய்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வீரபத்ர சிங், அவரது உறவினர்களுக்கு சொந்தமான இல்லங்களிலும் அமலாக்க இயக்கம் சோதனை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், டெல்லியில் உள்ள அமலாக்க இயக்கத்திலுள்ள விசாரணை அதிகாரிகள் முன்பு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வீரபத்ர சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

 

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து சனிக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவது போக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு பிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் பாசனத்திற்காக 28.11.2015 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2,59,663 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த முயற்சியால் 17 வயதில் பாலத்தை கட்டி ஹீரோவாக வலம் வரும் மாணவன்

பொது நல நோக்கில் கடமையை செய்ய தவறிய அரசாங்க நகராட்சி நிர்வாகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் அரசு செய்ய தவறிய அடிப்படை வசதியை 17 வயது மாணவன் அவனது சேமிப்புப்பணம், மற்றும் நண்பர்களிடம் கடன் என பெரும் பணம் திரட்டி பாலத்தை கட்டியுள்ளதால் பெரும் பாராட்டு குவிந்தவாறு உள்ளதாக ஒரு புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் புகைப்படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியாவது :-

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில்ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்து இருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில்
இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்கள் இடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சி களிடமும் இந்த
வி­ஷயம் சென்று இருக்கிறது.

ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள் போல. தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.

வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம் நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.

பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏ- க்களும் எம்.பி-க்களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இ­­ஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரி க் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பலே.!

17 வயது காலேஜ் பையன்கள் பேருந்து மேல் ஏறி நடனமாடுவதும், டாஸ்மாக்கில் சரக்கு அடிப்பது எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் போலிருக்கிறது.

இந்த பையனை பாரட்ட நினைத்தால் ஷேர் செயுங்கள். என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் புகைப்படத்துடன் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி ? கைப்பாவையாக மாறிய காவல் துறையினர் ? : விஜயகாந்த் கடும் தாக்கு

தேமுதிக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலையில் அதிமுக அரசாங்க ஆட்சி நடைபெறுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளளார்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லை கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நாட்களை பொதுமக்கள் எண்ணிவரும் நிலையில், அத்துமீறல்களும், அராஜகங்களும் தலைவிரித்து ஆடுகின்றன.

ஆளும்கட்சியினரின் கைப்பாவையாக மாறி, ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையினர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்.

ஆட்சிமாற்றம் ஏற்படும்போது இதற்கெல்லாம் பதில்சொல்ல வேண்டிய இடத்தில் காவல்துறையினர் மட்டுமே இருப்பார்கள், காவல்துறையை ஏவிவிடுகின்ற ஆளும்கட்சியினர் யாரும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கமாட்டார்கள். இதை மனதில் கொண்டாவது காவல்துறையினர் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ், சென்னை மாநகராட்சியின், ஆலந்தூர் மண்டல உதவி ஆணையாளர் அவர்களை நேரில் சந்திக்க கைபேசிமூலம் முன் அனுமதி பெற்று, நேற்று (26.11.2015) ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு சென்றார்.

அந்த மண்டலத்திற்கு உட்பட்ட கண்ணன் காலனியில் உள்ள ஐந்து தெருக்களில் கடந்த பதினைந்து நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில், மழைநீர் தேங்கியுள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும், பிற தெருக்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தீவுபோல் உள்ளதென்றும், விமானநிலைய குடியிருப்பு பகுதியில் இருந்தும், தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் இருந்தும், கழிவுநீர் அந்த இடத்தில் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் உடனடியாக மாநகராட்சியின் மூலம் தேங்கியுள்ள மழைநீரையும், கழிவுநீரையும் அப்புறபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளிப்பதற்காக சென்றார்.

அப்போது ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் இருந்த, அத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் மற்றும் அவருடன் இருந்த அதிமுக குண்டர்களும் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் மனு அளிக்க வந்தவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அங்கே இருந்த காவல்துறையினரும், அதிமுக வினருடன் சேர்ந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவத்தால் தேமுதிக தொண்டர்களை உருட்டி, மிரட்டி, பணியவைக்கலாம் என்றால் அது பகல்கனவாகவே இருக்கும். இதற்கெல்லாம் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அச்சமடையவோ, பயப்படவோ மாட்டார்கள்.

மழைநீரையும், கழிவுநீரையும் அகற்றக்கோரி மனுக்கொடுக்க வந்தது தேசதுரோக குற்றமா? எதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்? ஏவல்துறையாக மாறியுள்ள காவல்துறையும், அதிமுக வினருடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் என்ன?

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம் இதுதான் என்பது, நாட்டு மக்களுக்கு நன்குதெரியும். மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்களின் புகாரை பெறுவதற்கு காவல்துறை மறுத்துள்ளது. படுகாயம் முற்று மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதற்கெல்லாம் மேலாக குற்றம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கை திருப்பிப்போடும் அவலமும் நடந்தேறியுள்ளது.

மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ், மாவட்ட கழக துணைசெயலாளர் செல்வஜோதிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் நாராயணன், பகுதி கழக துணைசெயலாளர் கலைவாணன், மகளிர் அணி துணைசெயலாளர் கலா கலைவாணன், 162வது வட்ட கழக செயலாளர் வினோத் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில், எட்டு பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதுபோன்ற பொய் வழக்குகளை கண்டு அஞ்சுகின்ற தேமுதிக தொண்டர்கள் யாருமில்லை. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், நீதிமன்றத்தில் நிரூபித்து, அப்பழுக்கு அற்றவர்களாக வெளியே வருவார்கள். காவல்துறையை தன்கையில் வைத்திருக்கும் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா, இதற்கு பொறுப்பேற்று தவறு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீதும், அதற்கு துணை போன காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குளச்சல் துறைமுகம் : சில அடிப்படைத் தகவல்கள்

குளச்சல் துறைமுகம் தென்தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலேயே மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இருந்து சூயஸ் கால்வாய் சீனா, ஜப்பான் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கரையோர நாடுக்கு செல்லும் கடற்பாதையாகும். மேலும் குளச்சல் துறைமுகம் இந்தியாவில் மிகவும் ஆழம் உள்ளதாகவும் கடற்கரையில் 60 அடி ஆழம் உள்ள துறைமுகமாகும். குளச்சல் துறைமுகம் பூலோக ரீதியில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் கொச்சி, மங்ளூர், மார்கோவா, மும்பை, காண்டலா துறைமுகங்களும், கிழக்குப் பகுதியில் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா துறைமுகங்களும் அமைந்துள்ளது. குளச்சல் இதன் காரணமாக இந்திய துறைமுகங்களுக்கு நடுமையமாக பண்டக மற்றும் சரக்கு பரிமாற்றம் செய்ய தகுந்த துறைமுகமாக விளங்குகிறது.

தற்சமயம் இந்தியா வெளிநாடுகளில் உள்ள கொழும்பு மற்றும் துபாய், சிங்கப்பூர் துறைமுகங்களின் உதவியுடன் இந்தியாவின் பொருட்கள் மற்றும் கன்டைனர்கள் மாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. இதற்கு காரணம் இந்தியாவின் எல்லாத் துறைமுகங்களும் ஆழம் குறைந்தவை ஆனதால்100000 டன்களுக்கு குறைவான எடையுள்ள கப்பல்களே இந்திய துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றி இறக்க முடியும். இதன் காரணமாக பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகம் ஒன்று இந்தியாவின் தெற்கு கோடியில் குளச்சலில் அமைவது மிகவும் தேவையாகிறது. குளச்சல் துறைமுகத்தில் 50000 டன்களுக்கு மேலான எடையுள்ள கப்பல்களும் வந்து செல்ல வசதியும் ஆழமும் அதற்கேற்ற அமைப்பும் கொண்டது. இதன் காரணமாக 1995 – ம் ஆண்டு இந்திய கடல் போக்குவரத்து வல்லுநர்கள் இந்தியாவில் குளச்சல் துறைமுகத்தை பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகமாக மாற்றி, வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கான கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூரின் பண்டக பரிமாற்றம் செய்யும் பங்கை எடுத்துப் போட தீர்மானம் செய்தனர்.

குளச்சல் துறைமுகத்தை பண்டகப் பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகமாக 1998-ம் ஆண்டு டெசிட் என்ற துறைமுக அமைப்பு பரிந்துறைச் செய்தது. தமிழக அரசின் பரிந்துரைபடி மலேசியாவின் துறைமுக அமைப்பு நிறுவனம் 2001-ம் ஆண்டு குளச்சல் துறைமுகம் அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு துறைமுக அமைப்பு மற்றும் ரோடுகள் மற்றும், ரயில் பாதை அமைப்பு, சம்மந்தமான மேம்பாடு பரிசோதனை மற்றும் ஆய்வுகள் செய்து குளச்சலில் பண்டக மற்றும் பண்டக மற்றும் பரிமாற்றம், செய்யும் பெருந்துறைமுகம் அமைக்க பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப ரீதியான, சாதகமான அறிக்தை அளித்தது.

1.குளச்சல் பெருந்துறைமுகம் அமைக்கவும் அதற்கு முன் ஆய்வு அறிக்கைகள் திட்ட அறிக்கைகள், பரிசோதனை அறிக்கைகள் தயாரித்து அதன்படி துறைமுகத்தை அமைக்கவும் சர்வதேச டென்டர்கள் சர்வதேச அளவில் பத்திரிகைகளில் வெளியிடப்படல் வேண்டும்.

2. குளச்சல் சரக்கு மற்றும் பெட்டக பரிமாற்றல் துறைமுகம் தன் முழு அளவு செயல்பாடு காலத்தில் 70000 தொழில் நுணுக்க வல்லுனர்களுக்கு வேலை அளிப்பதுடன் மறைமுகமாக 15 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அளிப்பதுடன், 30000 கோடி ரூபாய்களுக்கு மேல் வெளிநாட்டு மூலதனம் துறைமுகம் மற்றும் ரோடு, ரயில்வே மற்றும் தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படும். ஆகையால் தென்தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் மேம்பாடு திட்டத்தை முழுமையாக கவனிக்க தமிழக அமைச்சரவையில் தனியாக ஓர் அமைச்சருக்கு பொறுப்பு கொடுக்கப்படல் வேண்டும். கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச பெருந்துறைமுகம் அமைப்பு திட்டத்தை மேற்பார்வையிட திரு.எம். விஜயகுமார் என்ற அமைச்சர் தனியாக பொறுப்பு வைப்பதால் துரிதமாக திட்டம் செயல்படுகிறது. சென்னையில் தமிழக செயலகத்தில் குளச்சல் துறைமுக முன்னேற்றம் சம்மந்தமாக கடந்த சில ஆண்டுகளாக எந்ந நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை, எந்த பொறுப்பான பதிலும் கொடுக்கப்படுவதும் இல்லை. ஆகையால் 3, கோடி ரூபாய்க்கு மேல் மூலதனத்துடன் செயல்பட போகிற குளச்சல் பெருந்துறைமுகமாக, திட்டத்தை செயல்படுத்த தமிழக செயலகத்தில் தனி பிரிவு அமைக்கப்படல் வேண்டும்.

4. குளச்சல் பெருந்துறைமுக் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே குளச்சல் மணவாளக்குறிச்சி கடற்பகுதியில் 500 ஏக்கர் அரசாங்;க நிலம் வள்ளியாறு முகத்துவாரத்திலிருந்து குளச்சல் மைனர் துறைமுகம் அலுவலகம் வரையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. குளச்சல் கடற்கரையில் அமைந்துள்ள இந்த 500 ஏக்கர் நிலம் குளச்சல் பெருந்துறை முகம் அமைக்க உடனடி தேவைகளுக்கு உபயோக படுத்தலாம். மேலும் தேவைப்படும் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஏற்கனவே ஏற்பாடுகள் முடிந்த நிலையில் அவற்றிற்கான ஆவணங்கள், படவரைவுகள், ஏற்கனவே கல்குளம் தாலுகா அலுவலகம். அஸிஸ்ட்ன்ட் கலெக்டர், தக்கலை. (கன்னியாகுமரி மாவட்டம்) அலுவலகத்தில் உள்ளது. அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குளச்சல் பெருந்துறைமுக திட்டம் பக்கத்து துறைமுகங்;;களான சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களுக்கும், ஏனைய துறை முகங்;;களுக்கும், துணையாக செயல்பட்டு இந்திய துறைமுகங்;களுக்கும், ஏனைய துறை முகங்;களுக்கும், துணையாக செயல்பட்டு இந்திய துறைமுகங்;;களின் முன்னேற்றத்திற்கு உதவிடும்

குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் மீனவர் போராட்டம் தேவையற்றது: நுகர்வோர் சங்கம்

கன்னியாகுமரி:
குளச்சல் வர்த்தக துறைமுகம் விவகாரத்தில் மீனவர்கள் போராட்டம் தேவையற்றது என நுகர்வோர் சங்கம் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டமான குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை மீனவர்கள் எதிர்ப்பது தேவையற்றது என குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளனர்.இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது.
தென்மாவட்ட வளர்ச்சிக்கான மிகப்பெரிய திட்டமான குளச்சல் வர்த்தக துறைமுகம் என்பது மாவட்ட மக்களின் 40 ஆண்டு கால கனவு திட்டம்.
இந்த திட்டம் வருவதற்காக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஆதரிப்பதும், எதிர்கட்சி ஆன பின்பு எதிர்ப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது மக்கள் என்ணி நகையாடும் நிலை. தற்பொழுது கேரளா மாநிலம் விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்க திட்டமிட்ட பின்பும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் 21,500 கோடி செலவில் மதர் கண்டெய்னர் போர்ட் (இந்தியாவிலே மிகப்பெரிய வர்த்தக துறைமுகமாக அமைய உள்ளது).
ஏற்கெனவே மீனவ மக்கள் வசிக்கும் மும்பை, கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்களை எடுத்து கொண்டால் அந்த பகுதி மீனவ மக்களுக்கு எந்த விதமான ஒரு சிறிய பாதிப்புகள் இல்லாமல் மீன்பிடித்து நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள். இங்கு மேற்படி வர்த்தக துறைமுகம் ஏற்கெனவே 18 நாடுகளில் கடலில் விமான நிலையம் உள்ளது போன்று தென்மாவட்டமே வளர்ச்சி தரும் வகையில் கடலிலே இந்த துறைமுகம் மிகுதியான பகுதி அமைய உள்ளதாக அறிகின்றோம். இந்த துறைமுகங்களை எல்லாம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று அந்த பகுதி மீனவர்கள், மக்கள் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளார்கள் என்பதை நேரில் சென்று பார்வையிட்டாலே அதன் உண்மை தன்மை தெரியவரும். மேலும் தற்பொழுது நமது மாவட்டத்தில் மட்டும் சின்னமுட்டம், முட்டம், தேங்காய்பட்டணம், ராஜாக்கமங்கலம் போன்ற பெரிய, சிறிய மீன்பிடித் துறைமுகம் மிகுதியான அளவு மீன்பிடிக்க வசதியாக உள்ளது. திட்டம் குறித்த தெளிவான விபரம் தெரிவதற்கு முன்பே மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த திட்டத்தில் ஒரு சில இடங்களில் சிறிய அளவு பாதிப்புகள் இருந்தாலும் கூட குமரி மாவட்டத்திலுள்ள 18 இலட்சம் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும். குமரி மாவட்ட இளைஞர்கள் வேலைக்காக வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு சென்று வேலை பார்;ப்பதற்கு பதிலாக உள்ளுரிலே மிகப்பெரிய வேலைகள் கிடைக்க நல்ல வசதிகளும், வாய்ப்புகளும் ஏற்படும். இதனால் வேறு மாநில மக்களும் நம் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் கொடுக்கும் நிலை ஏற்படும். மாவட்ட மக்களின் வாழ்க்கை தரம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புகள் ஏற்படும். மாவட்ட வளர்ச்சியை தடுக்காதீர்கள். 40 ஆண்டுகால மாவட்ட மக்களின் கனவு திட்டம் நிறைவேற ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகத்தையும், அனைவரையும் வேண்டுகிறோம் என தமது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

மாணவியை கும்பலாக மாணவர்கள் கற்பழித்து அந்த சம்பவத்தை காணொளியாக வாட்ஸ் அப்பில் பரவிட்ட கொடுமை

 
நான்கு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து பதினைந்து வயதான சக பள்ளி மாணவியை கற்பழித்து, அந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரவிட்ட கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. ஒரு பள்ளி மாணவியை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் படிப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, ஒரு மாணவரின் வீட்டிற்கு அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வர வைத்துள்ளனர்.
 
அந்த சிறுமி அங்கு சென்ற போது அந்த பெண்ணை வரவழைத்த மாணவனின் நண்பர்கள் மூன்று பேர் இருந்துள்ளன. அந்த மூன்று பேரும் சிறுமிடயுன் படிக்கும் சக மாணவர்கள்.அந்த நான்கு மாணவர்க சிறுமியை கொடூரமாக கற்பழித்து அதை கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
 
கற்பழிப்பு சம்பவத்தை யாரிடமாவது கூறினால், அந்த காணொளியை இணைய தளங்களில் போட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.சக மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்த அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை.
 
இந்நிலையில் அவர்கள் எடுத்த காணொளியை கற்பழிப்பில் ஈடுபட்ட ஒரு மாணவன் அவ னது நண்பனுக்கு அனுப்பியுள்ளான். அப்படியே அந்த காணொளி வாட்ஸ் அப் மூலம் மும்பை முழுவதும் வைரலாக பரவியுள்ளது.
 
மேலும் அந்த காணொளி கற்பழிக்கப்பட்ட பெண்ணுடைய அத்தையின் கைப்பேசிக்கே வாட்ஸ் அப் மூலம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமி அங்கு நடந்த விவரங்களை அவரிடம் தெரிவித்தார்
 
உடனடியாகஅந்த சிறுமியின் அத்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அந்த நான்கு மாணவர்களையும் கைது செய்த காவல் துறையினர் ,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அந்த மாணவர்கள், நான்குபேரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தற்காலிக இடைநீக்கம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் அந்த பதவி மற்றும் தமிழகம் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் பதவியில் இருந்தும் அதிரடியாக தற்காலிகமாக

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் கினி மானுவேல் தலைமையில் நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக் கூட்டத்தில் செல்வத்தை தற்காலிக இடைநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை மற்றும், 42 வழக்கறிஞர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அகில வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆகியோரை சந்தித்து, வழக்கறிஞர்கள் மீதான தற்காலிக இடைநீக்க நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தவும் வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் சங்கத்தின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது என தெரிகிறது .

தேமுதிக பாமக கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் : அன்புமணி

தேமுதிக பாமக கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:–

தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது. ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.பாட்டாளி மக்கள் கட்சி தேமுதிக வுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இருவரும் ஒரே அணியில்தான் இருந்துள்ளோம் .

2014 கூட்டணி கடை பிடித்த திடத்தின் படி மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்பதால் அதிமுகவிற்கு எதிரான ஓட்டுகள் அதிமுக திமுகவிற்கு ஆதரவாக திரும்பாது. 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டெடுத்த விஷால் நற்பணி மன்றத்தினர்!!

நடிகர் விஷால் அவர்கள் அன்பு வேண்டுகோளின் பெயரில் “புரட்சி தளபதி விஷால் மன்றம்” சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நேற்று தாம்பரம் அருகில் உள்ள காரப்பாக்கம் என்னும் இடத்தில் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. அங்கே ஒருவர் தன் வீட்டின் கீழ் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுவிட்டதால், முதல் மாடியில் சிக்கிகொண்டார் அவரை அந்த பகுதியை சேர்ந்த விஷால் நற்பணி மன்றத்தினர் படகில் சென்று மீட்டனர்.

காரப்பாக்கம் மட்டுமின்றி புதுச்சேரி, அரியலூர், திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.