Home Blog Page 5930

பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

ஜல்லிக்கட்டு அனுமதி   பிரதமருக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும்
வனத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கடிதம்

 அவர் எழுதிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாப்படுகின்ற ஒரு வீரவிளையாட்டாகும். இந்த
விளையாட்டு அறுவடை மற்றும் பண்டிகை காலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த
விளையாட்டில் பங்குபெறும் காளைகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்த
படுவதில்லை அவற்றிற்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக அரசும்
உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதோடு இந்த வீரவிளையாட்டுகளில் பங்குபெறும்
காளைகளின் உரிமையாளர்கள் அதிக அளவு பணம் செலவு செய்து அதை பராமரிப்பதோடு,
முறையான பயிற்சியும் கொடுத்துவருகிறார்கள். நீண்ட நெடுங்காலமாக
வரலாற்று பின்னணியோடு, தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டோடு கலந்த இந்த
வீரவிளையாட்டை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டுள்ளார்

சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதம் செய்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்

 

சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யபட்டுள்ளார்

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஃபதேதாபாத் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைத் தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், ஃபதேதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தக்கூட்டத்தின்போது, ஃபதேதாபாத்தில் உள்ள கிராமத்தில் போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவது குறித்து காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியாவிடம் அமைச்சர் அனில் விஜ் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மாவட் காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா, அந்தச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றதில் பொறுமை இழந்த சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியாவை ஒருமையில் கூறியுள்ளார்.இருந்த போதிலும் அங்கிருந்து வெளியேற சங்கீத் மறுத்துவிட்டார்.

அவர் மீது இருந்து கோபத்துடன் அமைச்சர் அனில் விஜ் அந்தக் கூட்டத்தை விடுத்து வெளியேறினார்.

அமைச்சர்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடையே நடைபெற்ற வாக்குவாதம், “வாட்ஸ் அப்’ மூலம் கைப்பேசிகளில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. பெண் அதிகாரியிடம் கண்ணியக்குறைவாக நடந்ததற்காக சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தொடந்ர்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஃபதேதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீத் காலியா, அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவதாக ஹரியாணா மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், சங்கீத் காலியா எந்தப் பொறுப்புக்கு எங்கு மாற்றப்பட்டுள்ளார் எனும் விவரத்தை சுற்றறிக்கையில்
கூறவில்லை .

வெள்ள நிவாரணம்: உதவிய சூர்யா, விஷால், தனுஷ்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம்  நிதி  திரட்டி வருகின்றனர்.

இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா.

மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது நன்கொடையாக ரூ 5 லட்சத்தை தலைவர் நாசரிடம் வழங்கினார்.

பெண்களை மோசமான வார்த்தைகளால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார்

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார் கூறி அவரை

தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவருமான விஜயதாரணி, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தமிழக காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும் சில நாட்கள் பரபரப்பாக இருப்பதும் வாடிக்கையானது. சில நேரங்களில் சண்டை சென்னையோடு நிற்காமல் பஞ்சாயத்துக்காக அந்த கட்சியினர் புது தில்லி வரை செல்லுவது வாடிக்கையானதே .

சமீபத்தில் கூட தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக்கோரி குமரி அனந்தன், ப.சிதம்பரம்,வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

தமிழக காங்கிரஸ் நிலைமையை பார்த்து சோனியா வெறுத்துப் போய், யாரை தலைவராக போட்டாலும் இப்படித்தானே புது தில்லிக்கு புகாருடன் வருகிறீர்கள் என்று கோவமாக கூறியுள்ளார். அடிக்கடி பிரச்சினை கிளம்புவதே தமிழக காங்கிரசின் சாபக்கேடு என்று தொண்டர்கள் தொடர்ந்து புலம்புகிறார்கள்.

தற்போது போது சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மூலம் சர்ச்சை கிளம்பியுள்ளது.

விஜயதாரணி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது :-

மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த 19 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியையொட்டி வைக்கப்பட்ட இந்திரா படம் போட்ட பேனரை இளங்கோவன் ஆதரவாளர்கள் அகற்றி ஆண்கள் கழிவறையில் வீசிச் சென்றனர். அதை நானே போய் எடுத்து வந்தேன்.

இளங்கோவன் தொடர்ந்து என்னையும், எனது ஆதரவாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படுகிறார். பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசி காயப்படுத்துகிறார். இது பெண் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், இளங்கோவன் மட்டும் காங்கிரஸ் மீது பெண்கள் அதிருப்தி கொள்ளும் வகையில் செயல்படுகிறார். அவர் பதவியில் நீடிப்பது கட்சிக்கு களங்கம். கட்சியை காயப்படுத்தி விடும்.

எனது 28 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் யார் மீதும் குற்றம் சொன்னது கிடையாது. இப்போது நான் வேதனை அடைந்து இருக்கிறேன். எனவே இந்த விஷயத்தில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக காத்து இருக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு விஜயதாரணி எழுதியுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்? ஜாக்குவார் தங்கம் ஆவேசம்

மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என்.முத்துக்குமார் தயாரிப்பில் ‘தென்னிந்தியன்’, ‘சூரத்தேங்காய்’ படங்களின் ஆடியோ வெளியீடு மற்றும் அறிமுகவிழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பாடல்களை வெளியிட்டு கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும் போது, “இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன்.’கோலி சோடா’ சின்னபடம்தான்.அது 40 கோடி லாபம் சம்பாதித்தது சிறு படங்கள் வர வேண்டும் . சில படங்களில் நடித்துள்ள ‘சூரத்தேங்காய்’ நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார் .அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இது தான் நம் நாட்டு நிலைமை.

இங்கே இதைப் பேசக்கூடாது என்றிருந்தேன் ஆனால் பேசவேண்டியிருக்கிறது. ஆந்திராவில் புயல்,வெள்ளம் வந்த போது எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்கிற பட்டியலைப் பார்த்தேன் .இங்கே கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.நம் தமிழ்நாட்டில் நடிகர்கள் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? ஒன்றுமே இல்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டில் எல்லாம் இழந்து சொந்த நாட்டிலேயே தமிழ்மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள் . நான் எம்.ஜி.ஆர். வீட்டிலேயே மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவர் அள்ளி அள்ளி கொடுத்தார். அவருக்குள்ள மனம் ஏன் இப்போது இவர்களுக்கு இல்லை?. தயவு செய்து கொடுத்து உதவுங்கள் நீங்களும் உயர்வீர்கள். எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறுபடங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். எப் எம் எஸ் என்கிற வகையில் 120 நாடுகளுக்குப் நம் படங்கள் போகின்றன ஆனால் 10 லட்சம் கொடுத்து நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள். இது மாற நடவடிக்கை எடுப்போம். ” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் முத்துக்குமார் பேசும்போது ” இந்த விழாவே எங்களுக்கு வெற்றிவிழா தான். நான் இன்ஜினியரிங் பட்டதாரி இவருக்கு ஏன் படம் தயாரிக்கும் வேண்டாத வேலை என்று கேட்டார்கள் சின்ன வயதில் குழந்தை நடனம் ஆடும்போது அம்மா கை தட்டுவாள். கலை எல்லாருக்கும் மனசுக்குள் இருக்கும் .சினிமாவுக்குவரத் தனித்தகுதி தேவையா? உலக உருண்டை தெரியாதவர்களுக்கும் ஏவிஎம் உருண்டை தெரியும். அப்படிப்பட்டது சினிமா ஆர்வம் .நான் 1983ல் ‘இவர்கள் வருங்காலத்தூண்கள்’ போன்ற சில படங்களில் நடித்தேன் வெளிநாடு போனேன் தற்காப்புக் கலை கற்றேன். 5 வகை நடனம் கற்றேன். தேசிய அளவில் விருதுகூட பெற்றேன் 12 ஆண்டுகள் 3 படங்களுக்கு இணை தயாரிப்புப்பணி , ஐந்து படங்களில் தயாரிப்பில் என பங்கு பெற்றுள்ளேன். இளையராஜா சாரை வைத்துக் கூட படம் தயாரிக்கிறேன். இப்படி எனக்கு சினிமா அனுபவம் உள்ளது. பணம் இருந்தால் மட்டும் படம் தயாரிக்க முடியாது. சினிமா அனுபவமும் தேவை.இந்த ‘சூரத்தேங்காய்’ நேரடித் தமிழ்ப்படம்.. ‘தென்னந்தியன் ‘ மலையாளத்தில் வெற்றிபெற்ற படம். இரண்டையும் தயாரித்துள்ளேன். வெற்றிபெற ஆதரவு தாருங்கள் ” என்றார்.

‘சூரத்தேங்காய்’ பட இயக்குநர் சஞ்ஜிவ் ஸ்ரீநிவாஸ் பேசும் போது ” நான் 200 படங்களில் பிரபு தேவா, லாரன்ஸ், சிவசங்கர் போன்ற மாஸ்டர்களிடம் நடன உதவி இயக்குநராக பணியாற்றியவன் .சுமார் 50 படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவன். சூரத்தேங்காய்’ படத்தில் 45 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். தயாரிப்பாளர் தொழில்நட்பக் கலைஞர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் விரைவில் படத்தை முடித்தேன். அனைவருக்கும் நன்றி ”என்றார்.

தமிழக மக்களை கடனாளியாக்கியதே திராவிடக்கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : மருத்துவர் ராமதாஸ்

 

ரூ.31 ஆயிரம் வரை தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக்கியதே தமிழகத்தை ஆண்ட திராவிடக்கட்சிகளின் சாதனையாகும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் தெரிவித்ததாவது :-

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து இந்தியா ஸ்பெண்ட் எனும் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், 2014- 15 வரையில் தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பதாகவும், அதில் தனிநபர் கடன் சரசாரியாக ரூ.29 ஆயிரமாக உள்ளதாகவும், அது 2015-16 ம் ஆண்டில் வாங்கிய கடனையும் சேர்த்தால் தனிநபர் கடன் சுமை ரூ. 31,132 ஆக அதிகரிக்கும். மேலும், பொதுத்துறை கடன் ரூ. 2. 01 லட்சம் கோடியையும் கணக்கில் கொண்டால் தமிழகத்தில் தனிநபர் கடன் ரூ. 60,766 ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் 108 சதவீதம் கடன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 20110 -11 முதல் 2014-15 கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. வருவாயில் பெரும் பகுதியை வட்டியாகச் செலுத்தும் நிலையை உருவாக்கியது தான் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் சாதனையாகும்.

மேலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த சபதத்தில் மது விற்பனையில் முதலிடம் என்பதை நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதே தவிர ஆட்சியாளர்களின் நிலை மிகவும் செழிப்பாகவே உள்ளது. முதலமைச்சரின் அருகிலுள்ளவர்கள் சென்னையில் 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும், பல திரையரங்குகளை வாங்குவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். தமிழக அமைச்சர்களும், தமிழகம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை எனும் நிலைதான் உள்ளது. இந்த ஆட்சியின் 18 மிகப்பெரிய ஊழல்களின் பட்டியல் தமிழக கவர்னரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.

தமிழகத்தை வெள்ள நீரை வெளியேற்றும் வடிகாலாகவே காவிரியை கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது. தற்போது அததை கழிவு நீர்க்கால்வாயாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆபத்து தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் காவிரி நீரால் 25 லட்சம் ஏக்கர் பாசனமும், 5 கோடி மக்களுக்கு குடிநீருக்கும் ஆதாரமாகவும் திகழ்கிறது. இத்தகையை பெருமை கொண்ட காவிரியில் கழிவுநீர் கலப்பது பாவச் செயலாகவும். கங்கை ஆற்றை தூய்மைப் படுத்த மத்திய அரசு ரூ. 2,100 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல் காவிரியை தூய்மைப்படுத்தவும் கர்நாடகம், தமிழகம் இரு மாநிலங்களிலும் காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு நிதி ஒதுக்கி சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கங்கை நதியின் தூய்மைக்கு தனி ஆணையம் ஏற்படுத்தியிருப்பது போல் காவிரி ஆறின் தூய்மைக்கும் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இப்பகுதியில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கறம்பக்குடி ஒன்றியத் தலைவர் கங்கையம்மாள் , சொக்கலிங்கம் ஆகியோர் தாங்கள் பகுதி பிரச்னைக்காக அமைச்சரை சந்தித்து உள்ளனர். முத்தரையர் சேர்ந்த அவர்களை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதைக் கண்டித்து கடந்த 5 -ஆம் தேதி முத்தரையர் சமுதாயத்தினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போராட்டத்துக்கு காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவமரியாதைக்குள்ளான சொக்கலிங்கம் கங்கையம்மாள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது சமூக அமைதிக்கு வழிவகுக்காது. எனவே, அமைச்சர் விஜயபாஸ்கரை பதவு நீக்கம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரைக்கு அடுத்ததாக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. தமிழக அரசின் அலட்சியம் காரணமாக கடந்த போட்டிக்ள நடத்தப்படவில்லை. பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமனத்தில் சட்டச திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய குழு வெள்ள பகுதிகளை முறையாக பார்வையிடவில்லை. ஆனால் அவர்களை சந்திப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. ரூ. 940 கோடி போதாது ரூ. 20 ஆயிரம் கோடி தேவை என பாமக வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து உண்மையான நிலவரத்தை மத்திய குழுவுக்கு காட்டவில்லை. அவர்களிடம் விவரம் தெரிவித்து அதிக நிதியை வாங்க முயற்சிக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக குரல் கொடுப்பார். ஜெயலலிதா கடிதம் பிரதமருக்கு போவதுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மத்திய அமைச்சர்கள் கூறியதால் நிதி ஒதுக்கீடு செய்யதார்களே தவிர வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர்கள் செயல்பாடுகள் பூஜ்யம். மக்கள் நல கூட்டணியின் செயல்பாடுகளைக்கவனித்து வருகிறோம் பாமக- வைபொறுத்தவரை எங்கள் தலைமை ஏற்று திமுக அதிமுகவை தவிர எந்தக்கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.மெகா கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில்தான் கூறமுடியும். அது தொடர்பாக திரைமறையில் பேச்சு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

சகிப்பின்மை குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. சிந்தனையாளர் ஒருவர் கர்நாடகவில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் எதிரொலியாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் விஞ்ஞானிகள் உள்ப 200க்கும் மேற்பட்டவர்கள் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர். இது போன்ற நிலைமை இந்தியாவில் முன் எப்போதும் இருந்ததில்லை. பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் பல்வேறு குழுக்கள், சமயங்கள், மதங்கள் பரவிக்கிடக்கும் நிலையில், சமூக நல்லிணக்கம் சமூக ஒருமைப்பாடு பேணப்பட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ்செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வளைத்து போடும் ஆசையில் திட்டம் தீட்டி வலம் வரும் நித்யானந்தா

நித்யானந்தாவின் காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்பது நித்யானந்தா சுவாமியின் தாரக மந்திரம்.

நித்யானந்தாவின் தாரக மந்திரம் ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய் சர்வதேச ஊடகங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் வலம்வந்தவர் நித்தியானந்தா என்றாலும் அது மிகையாகாது.

அது ஒருபுறம் இருக்க பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட மதுரை ஆதீனத்தைக் கைப்பற்ற நினைத்த நித்யானந்தாவின் ஆசையும் பெரும் பிரச்சனைகளால்
தவிடு பொடியானது.

மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போகவே காவிரி டெல்டாவில் உள்ள மடங்களைக் கைப்பற்றுவதில் நித்யானந்தா தரப்பு கடந்த சில மாதங்களாக குறியாக இருந்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தற்போது சர்ச்சை சாமியார் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல கோடி ரூபாய் சொத்துகளைக் உடைய இந்து மடங்கள் சாமியார்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் நித்யானந்தாவின் ஆசையால் நிம்மதி இழந்து உயிருக்கு பயந்து மிரண்டு கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்ட த்தை சேர்ந்த ஆத்மானந்தா சுவாமி .சேலம், காரைக்குடியில் சாரதா கல்லூரிகளை இலவசமாக நடத்தி வருகிறார்.

ஆத்மானந்தா சுவாமியின் கட்டுப்பாட்டில் வேதாரண்யம் அருணாசல சுவாமி மடம், கந்தசாமி சாதுக்கள் மடம், திருவாரூர் சோமநாதர் கோயில் ஆகியவை இருக்கின்றன.

அ ந்த மடங்கள் மற்றும் கோவிலுக்குப் பொறுப்பாளாராக ஞானேஸ்வரனாந்தாவை ஆத்மானந்தா நியமித்துள்ளார்.

கல்லூரிகளை நடத்திய வகையில் கடன் ஏற்பட்டு அதில் இருந்து மீள்வதற்கு ஆத்மானந்தா கையை பிசைந்து கொண்டிருந்த போது அவரின் உதவியால் வளர்ந்த நித்யானந்தாவிடம் கடன் கேட்டு ரூ2.15 கோடி கடன்
பெற்றுள்ளார் ஆத்மானந்தா.

இந்த நிலையில் அ ந்த கடனுக்கு பதிலாக ஆத்மானந்தாவின் பொறுப்பில் உள்ள திருவாரூர் கோவில், வேதாரண்யம் மடங்கள், ஆகியவற்றுக்கு தம்மை மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் நித்யானந்தா நிபந்தனை விதித்திருக்கிறார்.

அதன்படி ஆத்மானந்தாவும் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு பத்திர பதிவுக்குப் போயிருக்கிறார்.. ஆனால் அப்படியெல்லாம் நித்யானந்தாவை மடாதிபதியாக்கிட சட்டத்தில் இடம் இல்லை என்பதால் பெரும் பிரச்சனை கிளம்பியது.

அந்த பிரச்சனையில் காரைக்குடியில் வசித்துவரும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வன்முறையைத் தூண்டி வசூல் வேட்டை நடத்தும் ஒருமுக்கிய பிரமுகர் களம் குதித்தாக கூறப்படுகின்றது

அந்த பிரமுகர் களம் குதித்தால் ரூ2.15 கோடி கடனை திருப்பிக் கொடுக்க ஆத்மானந்தா ஒப்புக் கொண்டிருக்கிறார். இருந்த போதிலும் நித்யானந்தா அதரவாளர்கள் எப்படியும் மடங்களை அபகரித்து விடுவது என்ற நோக்கத்துடன் அவ்வப்போது அந்த மடங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் வேலையை செய்து வருகிறது.

திருவாரூரில் உள்ள சோமநாதர் கோவிலில் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர் ராகவன் எனும் நபர் ஆத்மானந்தாவின்

அதரவாளரான அர்ச்சகர் ராமமூர்த்தியை கழுத்தை நெரித்து படுகொலை செய்ய முயற்சித்த விவகாரம் காவல்
துறையினர் வரை சென்றுள்ளது.

நடைபெற்ற சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஆத்மானந்தா அதரவாளர்கள் திருவாரூரிலும், வேதாரண்ய மடங்களில் இருந்த நித்யானந்தா சீடர்களை அடித்து விரட்டியுள்ளனர் .

கடந்த சிலநாட்களுக்கு முன் தஞ்சாவூரில்உள்ள பால்சாமி சித்தர் மடத்தையும் ஆக்கிரமிக்க முயன்றதால் நித்யானந்தா சீடர்கள் பொதுமக்களால் அடித்து விரட்டினர்.

நித்யானந்தாவின் சாமியார் எனும் போர்வையில் காவி உடைக்குள் ஒளிந்து கொண்டு பல்வேறு சித்து விளையாட்டுகளை நடத்தி பல கோடி ரூபாய் சொத்துகளைக் வளைத்து போடும் ஆசையில் திட்டம் தீட்டி வலம் நித்யானந்தா வருதாக பரவலாக கூறப்படுகின்றது.

 

தமிழகத்தில் ‘குடி மகன்களுக்கு’ 50 சதவீத தள்ளுபடி விலையில் சரக்கு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்

‘குடி’மகன்களுக்கு, 50 சதவீத தள்ளுபடி விலையில் சரக்கு வழங்க கோரி வருகிற 7ம் தேதி சென்னை அம்பத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக சென்னை,காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவினால் ஒரு பக்கம் கணவர், சகோதரர்களை பெண்கள் இழந்து வருகின்றனர். இப்போது மாணவர்களும் களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை நம்பி மகளை விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை. பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மதுவை ஒழித்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்கிறார்கள்.இலவசங்களை நிறுத்தினாலே இந்த இழப்பை ஈடுசெய்ய முடியும்.

பொது மக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு மது சிகரட் விற்பனைக்கு தடை விதிக்க கோறி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசாங்கம் பொது மக்கள் நலன் மீது அக்கறையின்றி செயல்படுவதாகவே பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ‘குடி’மகன்களுக்கு, 50 சதவீத தள்ளுபடி விலையில்சரக்கு கோரி வருகிற 7ம் தேதி சென்னை அம்பத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் அறிவித்துள்ளது.

பிரபல நடிகர் கார்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

 

பிரபல திரைப்பட நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல்,பொன்னுமணி உள்ளிட்ட படங்களில் பிலிம்பேர் விருதுகளையும் வாங்கியுள்ளார். . கலைமாமணி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் நந்தி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வேளையில் திடீரென அரசியலிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு நுழைந்து அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவரானார்.

இந்த நிலையில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார் கார்த்திக்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்ற குணம் உள்ளவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

நடைபெறவுள்ள 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக்குதிடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்றிரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ள்ளார்.

மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை தீவிர அளித்து வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது

 

விருதுநகர் மாவட்டம் அருகேயுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் முத்துராஜ்(47). அவரது வகுப்பில் பிளஸ்-2 படிக்கும் சில மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து ஒரு மாணவி பெற்றோருடன் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஆசிரியர் முத்துராஜைக் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்