Home Blog Page 5929

நெஞ்சே ஏழு – இசை புயல் A .R .ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி!

உலக நாடுகளில் பல நிகழ்ச்சியின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் A.R. ரகுமானின் நேர்முக இசை நிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி சென்னையிலும், ஜனவரி 23ஆம் தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில் நடை பெற உள்ளது என Noice அண்ட் Grains எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர்.

‘இந்த அறிவிப்பு வந்த சில நொடிகளில் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ள எதிர்ப்பார்ப்பு, நிகழ்ச்சியின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது. இந்தத் தருணத்தில் எங்களது நிறுவனத்துக்கு ஆதரவும், ஊக்கமும் தரும் ரகுமான் சாருக்கும் ஏ கே ஆர் Events நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி’ என்றுக் கூறினார் ‘Noice and Grain’ நிறுவனத்தினரின் முதன்மை அதிகாரி.

கோவை, மதுரை ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்க வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா!

தனது இசை வளத்தால் உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களை கட்டி போட்ட யுவன் ஷங்கர் ராஜா, தற்போது பல்வேறு பாடகர்கள், மற்றும் இசை கலைஞர்கள் என்று ஒரு பெரிய இசைக் குழுவுடன் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

துபாய், கோலாலம்பூர், சென்னை, மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இதற்க்கு முன்னர் நடந்த நிகழ்சிகள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான கோவையிலும், மதுரையிலும் நடக்க உள்ளது.

கோவையில் வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்திலும், ஜனவரி 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்திலும் நடக்க உள்ளது. யுவனுடன் இது வரை பணியாற்றிய இயக்குனர்களுடன், இசைஞானி இளையராஜாவும் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்த படத்தை எல்லாரு ரசிக்கலாம்… ரஜினி முருகன் பட இயக்குநர் பேட்டி!

டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினி முருகன் படம் பற்றி இயக்குனர் பொன்ராம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,
 
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு வணக்கம்,

“வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்” வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவரயிருக்கும் படம் “ரஜினி முருகன்” இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் நகைச்சுவை திரைப்படமாக இருக்கும்.

என்னுடையா “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் வேலைக்கு செல்லாமல் இருப்பதை கொள்கையாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர்களின் வாழ்வியலை நகைச்சுவையாக கொடுத்திருந்தேன். ஆனால் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் எந்த விதமான சங்கமும் இடம் பெறாமல் சற்று புதுமையாக வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வியலை காட்சியமைத்து இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் டீ கடை வைத்தாவது பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் பேரன் சிவகார்த்திகேயன், அவருக்கு தாத்தாவாக ராஜ்கிரண் இருவருக்கும் இடையில் நடக்கும் வாழ்வியலை சுவாரசியத்துடன் நகைச்சுவையாக கொடுத்திருக்கிறோம்.

திரைப்படத்தின் பெயர் “ரஜினி முருகன்” எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பையும், விளம்பரத்தையும் ஏற்படுத்தியது. மதுரை மீனாட்சி திரையரங்கில் படபிடிப்பு நடத்தினேன் படத்தில் ரஜினி சார் படம் வெளிவருவது போல் காட்சியமைப்பு நாங்கள் எந்த வித அறிவிப்பும் கொடுக்கவில்லை ஆனால் அந்த பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து ரஜினி திரைப்படம் வெளிவந்தால் எந்த மாதிரியான சூழல் அமையுமோ அதை ஏற்படுத்தி தந்தனர் அதுமட்டும் இன்றி ரஜினி சார் பெயர் வைத்திருக்கிறீர்கள் படம் வெற்றியடையும் என வாழ்த்தி சென்றனர் அந்த தருணம் படப்பிடிப்பில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

படத்தின் கதை எல்லா குடும்பத்திலும் பிரச்சனைகள் வரும் அவ்வாறு வரும் பிரச்சனைகளுக்கான காரணம் சின்னதாகவும் இருக்கும் அல்லது பெரிதாகவும் இருக்கும் அவ்வாறு சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை அழகாகவும், எளிமையாகவும், நகைச்சுவை உணர்வுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணமாகவும் குடும்பத்துடன் வந்து ரசிக்கும் விதமாகவும் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றார் இயக்குநர் பொன்ராம்.

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

 

விடிய விடிய கொட்டித் தீர்த்தது: சென்னையில் 8ம் தேதி வரை மழை என சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் சென்னை, மற்றும் கடலூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய சென்னைவாசிகள் மீண்டும் பெய்யும் கனழையை அடுத்து கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

சென்னை நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

அந்தமான் அருகே தென் கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ளது. இது மெதுவாகத்தான் நகரும்.

அதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. இன்றும் 01-12-2015, நாளையும் 02-12-2015, கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்ய கூடும் .

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தையும் சேர்த்தால் 5 நாட்களுக்கு மழை உண்டு. சென்னையில் 8ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

ஏன் இத்தனை அவதூறு வழக்குகள்? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

 

தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் தொடர்ந்து குவிவதால் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று30-11-2015 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கடந்த அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் பேசியபோது அவதூறு செய்ததாக விஜயகாந்த் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இதனை எதிர்த்து விஜயகாந்த் சார்பாக செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி மிஸ்ரா கூறியதாவது :-

அவதூறு வழக்குகள் தமிழக மாநிலத்திலிருந்து அதிகம் வருகின்றன… ஏன்?

இந்தக் கருத்துகள் ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்கள். இதில் தனிநபருக்கு எதிராக எதுவும் இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் அதே நீதிபதிகள் அமர்வுதான் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்த மனுக்களை விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தது. சுப்பிரமணியன் சுவாமி மீதும் தமிழக அரசு பல அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது .

இதே நீதிபதிகள் அமர்வு அவதூறு வழக்குகளை தண்டனைக்குரிய குற்றம் என்பதிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த மனுக்கள் மீது விரிவான விசாரணைகள் மேற்கொண்டது.

நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இது குறித்து வாதிடுகையில், அவதூறு வழக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பது காலனியாதிக்க கால சட்டம் என்றும், ஆனால் தற்போது சுதந்திரத்துக்கு பிறகான காலக்கட்டத்தில் இந்த சட்டம் கருத்துரிமை, பேச்சுரிமையை முடக்குவதோடு நல்லாட்சிக்கு அத்தியாவசியமான உண்மை மற்றும் பொது விவாதம் ஆகியவற்றையும் முடங்கச் செய்கிறது என்று கூறினர்.

மேலும், அரசியல் சாசன சட்டம் பிரிவு 19(1)-ன் கீழ் உள்ள பேச்சுரிமைக்கு அவதூறு வழக்குகள் இடையூறு விளைவித்து வருகிறது என்று அரசியல் தலைவர்கள் பலரும் கூறியதும் இந்த விசாரணைகளின் போது நிகழ்ந்தது.

பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் அவதூறு வழக்குகளை கடுமையாக கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மனு மீதான விசாரணையில் ‘ஏன் தமிழகத்திலிருந்து இவ்வளவு அவதூறு வழக்குகள்?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மக்களின் வரிப்பணத்தை இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு வீணடிக்கிறது, அத்துடன், எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கும் நோக்கத்திலேயே, தமிழக அரசு இதுபோன்ற அவதூறு வழக்குகளை அதிக எண்ணிக்கையில் தொடுக்கிறது என்று குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

 

பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து புதுடெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை குறித்து எவ்வித கருத்தும் மோடி தெரிவிக்காததால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றார்.

ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களிடையே சகிப்பின்மையை உருவாக்கி வருகின்றனர். மேலும், அவர்களில் பலர் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.

அஸ்ஸாம் மாநில ஆளுநர் இந்தியா இந்துக்களுக்கே, முஸ்லீம்கள் பாகிஸ்தான் அல்லது சிரியாவுக்கு சென்றுவிடுங்கள் என்கிறார். அவர்கள் அனைவரும் இந்தியா ஒர் ஒற்றுமையான நாடு என்பதை மறந்துவிட்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் கவனம் தேநீரிலிருந்து தற்போது மாடுகளுக்கு மாறிவிட்டது என்ற சிந்தியா, பிரதமர் மோடி இதுவிஷயத்தில் மௌனமாகவே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை காவல் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து கலைத்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் இவர்தான்: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படம் நீண்ட இழுவைக்கு பிறகு டிசம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்க்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது. இந்த பாடல் படத்திற்க்கு அடையாளமாகவும் மாறியுள்ளது அதற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு என் நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதை செய்து முடித்து பெரியாளாக வேண்டும் என்பதை குறிக்கோளாக எடுத்து கிராமத்தில் வாழும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்வியலை சுவாரசியமாகவும் நகைச்சுவை உணர்வுகளுடன் காட்சியமைத்து இருக்கிறோம். என்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் இயக்குநர் சமுத்திரகனி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் எந்த விதமாக சந்தேகமும் இல்லை.

“ரஜினி முருகன்” திரைப்படத்தின் பெயர், அனைத்து தரப்பு மக்களை சென்றடைவதற்குகான முக்கியமான காரணமாகும். இந்த பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது மனதில் சிறிய அச்சம் ஏற்ப்பட்டது. ஏன்னென்றால் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன் அதே நேரத்தில் அவருடைய பெயரை அவரது அனுமதியுடன் எனது படத்திற்க்கு வைப்பது என்பது பெருமைக்குரியது. நான் பல சுவரொட்டிகளில் பார்த்திருக்கிறேன் ரஜினி சார் ரசிகர்கள் அவர்களது பெயருக்கு முன்னால் ரஜினி சார் பெயரை சேர்ப்பது வழக்கம். அதனால் எதுவும் பிரச்சனை வருமோ என்ற அச்சம் இருந்தது ஆனால் தற்போது அவர்களின் பெரும் ஆதரவுடம் படம் வெளிவரப்போகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் ரஜினி சாருக்கு பிடிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் நானும் ஒருத்தன் என்பதால் தான் எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இந்த திரைப்படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும் எடுத்துக்காட்டாக வயதானவர்கள் விரும்பும் விதமாக குடும்பத்தின் வாழவில்லை நகைச்சுவையுடனும், இளைஞர்களுக்கு ரசிக்கும் விதமாக காதல் காட்சிகளும், குழந்தைகள் விரும்பும் விதமாக பாடல்கள் மற்றும் நகைச்சுவைகளை சேர்த்து ஒரு கதம்பமாக கொடுத்துள்ளோம். படத்தின் சிறப்பு தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் அவரை சுற்றி நடக்கும் குடும்ப அழகியலை நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்துள்ளோம். இந்த திரைப்படத்தில் புகைபிடிப்பது போன்ற எந்த காட்சிகளும், இடம் பெறவில்லை.

இயக்குநர் பொன்ராம் கதையை விவரிக்கும் தருணத்தில் என்னிடம் கூறியது இந்த திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றார் அத்துடன் குழந்தைகள் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திரைப்படத்தில் நான் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவில்லை அதுமட்டுமின்றி இதற்கு முன் நான் நடித்த எந்த திரைப்படத்திலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தேவைப்படவில்லை அதனால் தவிர்த்திருக்கிறேன் அத்துடன் அதுபோன்ற எண்ணமும் எனக்கு கிடையாது. இதைத்தாண்டி மக்களின் நிலைப்பாடும் தற்போது தெளிவாக உள்ளது மக்கள் திரைப்படத்தை பார்த்து ரசித்து விட்டு பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். நகைச்சுவை கலந்து ஒரு திரைப்படம் கொடுக்க நினைக்கும் போது நாம் இது போன்ற கருத்துகளை ஆராயமுடியாது. என்னை ரசிப்பவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாக இருப்பதால் அவர்களை மதித்து அவர்கள் ரசிக்கும் விதமாக தான் காட்சியமைத்து இருக்கிறோம். இந்த திரைப்படம் மதுரையின் மண் வாசனை மாறாமலும் அதே நேரத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமத்தின் கொண்டாட்டமனான் தருணத்தை நகைச்சுவையாக தந்துள்ளோம்.

படத்தை பார்த்து மக்கள் தான் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் நாங்கள் நினைத்ததை சிறப்பாக கொடுப்பதற்கு ஏற்ப என்னுடன் சூரி, ராஜ்கிரண், இயக்குநர் சமுத்திரகனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியம் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக அமைந்தனர். அதனால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. என் குழந்தைக்கு ரஜினி, விஜய், அஜித் இவர்களை பார்த்தால் பெயர் சொல்லும் அளவிற்க்கு தெரியும் தொலைக்காட்சிகளில் பார்த்தால் அவர்களது பெயர் சொல்லி மாமா என்று கூப்பிடுவாள். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதற்க்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் மா கா பா ஆனந்த நண்பர் என்பதால் தொடர்ந்து அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவோம்.

புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்கள் கிடையாது. அலைபேசியில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரை கவனிக்கவே நேரம் போதுமானதாக உள்ளது. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் தான் இப்போது வரைக்கு என் நெருங்கிய நண்பர்கள் அவர்களுடன் தான் நான் இருக்கிறேன். அவர்களில் ஒரு நண்பர் அருண்ராஜா பாடலாசிரியாரகவும் மற்றும் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இன்னும் இரண்டு நண்பர்கள் தயாரிப்பு துறையில் வேலை செய்கின்றனர். எனக்கு வாய்ப்பளித்த அனைவரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். என்னை ஒரு கதாநாயகனாக வைத்து இயக்கிய இயக்குனர்களுக்கு தான் நான் பெரிய நன்றி தெரிவிக்க வேண்டும். நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது கதாநாயகனாக திரையில் வருவேன் என்று. இயக்குநர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான் அதற்கு காரணம்.

இயக்குநர் பாண்டிராஜ் தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார். இயக்குநர் துரை செந்தில்குமார் “எதிர் நீச்சல்” படத்தில் கடைசி இருவது நிமிடம் என்னை வசனம் பேசாமலே நடிக்க வைத்தார். இயக்குநர் எழில் என்னை வைத்து முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்தார். இயக்குநர் பொன்ராம் சத்தியராஜ் போன்ற பெரிய நடிகருக்கு இணையாக நடிக்க வைத்திருந்தார் இவை அனைத்தும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டும் தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்து கொள்கிறேன் இவர்கள் தான் என் குரு. நான் முதலில் நடனம் தொலைக்காட்சிகளில் கற்றுக் கொண்டது தான் பிறகு பல முயற்சிகளுக்கு பின் தற்போது முன்பை விட நன்றாக ஆடுகிறேன் என்கின்றனர் அதனால் சிறிய நம்பிக்கை வந்துள்ளது.

இதே போல் கடினமாக உழைத்தால் பிற்காலத்தில் ஒரு நல்ல நடனமாடும் நாயகனாக வருவேன் என்று நினைக்கிறேன். என்னுடைய காதலி மற்றும் தோழி அனைவருமே என மனைவி மட்டும் தான். காரைக்குடியில் பிரியா மெஸ் கடையில் சாப்பிட்டதில் இருந்து டையட் என்பதை மறந்துவிட்டேன் அந்த அளவுக்கு நன்றாக உணவு இருந்தது. பள்ளியில் ஒரே ஒரு முறை மேடை ஏறி பேச்சுப் போட்டியில் கலந்து இருக்கிறேன் அதற்கு பிறகு கல்லூரி காலங்களில் மட்டும் தான் மேடை ஏறியுள்ளேன்.

நான் பேட்டி எடுத்த நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விக்ரம். அவர்ளுடன் ஒருமுறை பேட்டி எடுக்கும் போது அவர் கூறினார் ஒருநாள் நீ கதாநாயகனாக வருவாய் அப்படி நடிக்கும் போது நான் அதில் வில்லனாக நடிப்பேன் என்றார். அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக விகரம் சாரைப் பார்த்து வில்லனாக நடிக்க கேட்பேன். ரஜினி முருகன் திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

உறுமீன் படத்தின் கேமை வெளியிட்ட ஆர்யா!

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் படத்தை D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் படத்தின் prediction game ஐ ஆர்யா வெளியிட்டார்.

இந்த கேமை வெளியிடும் போது உறுமீன் படகுழுவினர், இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி, கதா நாயகன் பாபி சிம்ஹா, இசை அமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸ்மி மேனன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும்.

Prediction game ஐ விளையாட இணைப்பை கிளிக் செய்க – https://skytousolution.com/urumeen/

தமிழக போலீஸை கடனாளியாக்கிய காவல் துறை !

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டிகொண்டு பொதுமக்கள் எந்த உதவியாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியிடுவதை அணைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் காவல் துறையில் சென்னையில் பணியாற்றும் காவலர் மதன்குமார் என்பவர் அவரது மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அந்த காவலர் அவரது மனைவியை காப்பாற்ற அவசர மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு உடனடியாக வழங்க வேண்டிய நல வாரிய நிதியை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் காவல் துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகளின் மெத்தன செயல்ப்பட்டால் காவலருக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காததால் அவர் கடன் வாங்கி அவரது மனைவியை காப்பாற்றியதாக ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் தெரிவித்துள்ளதாவது :-

மனிததன்மை இன்றி பணியாற்றி தமிழக காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்

காக்கும் காவல்துறைக்கே கலக்கமா?.

ஊரிலுள்ளோருக்கு பிரச்னை என்றால் காவல்துறைக்கு போவோம்… அந்த காவல்துறையினருக்கே ஒரு பிரச்னை என்றால் யாரிடம் போவது?.

சென்னை மாநகர காவல் கட்டுபாட்டில் உள்ள திருமங்கலம் வி5 காவல் நிலையத்தில் காவலராகப் மதன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறாராம்.

கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது மனைவியை சிறுநீரக செயல் இழந்து கோமா நிலையில் வானகரத்தில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 8.11.2015 அன்று அட்மிட் செய்துள்ளாராம்.

இந்த நிலையில் 20.11.2015 அன்று பத்து இலட்சம் கட்ட வேண்டும் என்று பில்வந்ததும் கலங்கிப் போனவர் காவலர்துறையில் இயங்கும் நல வாரியத்தையும், மருத்துவக் காப்பீடு நிறுவனத்தையும் அணுகியுள்ளார்.

நல வாரிய பெண் அதிகாரி அனைத்து பேப்பர்ளையும் வாங்கி வைத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவனத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அவர்களோ டிஸ்சார்ஜ் ஆகாமல் சான்றிதழ் தர மறுத்து விட்டபடியால், மீண்டும் நல வாரிய அலுவலரிடம் வந்தாராம். அவர் ஏடிஜிபியிடம் அழைத்து சென்றுள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் உடனே மேலொப்பமிட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி ஆவன செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால், மீண்டும் 27.11.2015 அன்று அழைத்த அந்த பெண் அதிகாரி, தனது உதவியாளரிடம் பேசுமாறு கூறியுள்ளார். அவரோ, திங்கட்கிழமை 30.11.2015 அன்றுதான் கடிதத்தை தட்டச்சு செய்ய முடியும்.

அதற்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாராம். செய்வதறியாமல் தவித்த இவர் காப்பீடு நிறுவனத்திலிருந்து கிடைத்த ரூ. லட்சம் போக மீதமுள்ள தொகைக்காக உறவினர்கள், நண்பர்ள் அனைவரிடமும் மன்றாடி பணத்தைப் புரட்டி 28.11.2015 அன்று மருத்துவமனையில் கட்டி, மனைவியை டிஸ்சார்ஜ் செய்து விட்டு இப்போது தவிக்கிறாராம்.

இதைத்தான் “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லை” எனச் சொல்வார்களோ?

என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டி கொண்டுள்ளவர்கள் காவல் துறையில் பணியாற்றும் காவலர் குடும்பத்தின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட உடனடியாக உதவாததை என்னவெண்பது .?

 

இயக்குனர் ராதா மோகனின் நகைச்சுவை சுழலில் ‘உப்பு கருவாடு’

நட்சத்திர படங்கள் தான் ஓடும், சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்றுக் கூறப்படுவதை உடைத்து எறிந்து இருக்கிறது ‘உப்பு கருவாடு’. திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப் படத்தை திரை இட பெருகி வரும் கோரிக்கையே இதற்க்கு சாட்சி.

ஊடகங்களின் பாராட்டு, திரை உலகினரின் பிரமிப்புடன் கூடிய பாராட்டு, படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களிடம் இந்தப் படத்தை பாராட்டி, பார்க்க வேண்டிய படம் எனக் கூறுவது ஆகியவை படத்தின் வெற்றிக்கு உரமாக செயல் படுகிறது.

நடித்த பெரும் பாலான படங்களில் வெற்றி பெரும் அதிர்ஷ்ட தூதர் கருணாகரன், மிக சிறந்த நடிப்பு என எல்லோராலும் பாராட்ட படும் நந்திதா, வித்தியாசமான வேடத்தில் கலக்கும் எம் எஸ் பாஸ்கர், புதிய வரவான ‘டவுட்’ செந்தில், விழா நோக சிரிக்க வைக்கும் மயில் சாமி, தனது வசன வரிகளால் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த வசன கர்த்தா பொன் பார்த்திபன், துள்ளலான பாடல் மற்றும் பின்னணி இசையால் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், தனக்கே உரிய ஒரு பிரத்தியேக வடிவத்தில் படத்தை செதுக்கிய இயக்குனர் ராதா மோகன், தேவைக்கேற்ப திட்டமிட்டு செலவு செய்த தயாரிப்பாளர் ராம்ஜி, முறையாக விளம்பரம் செய்து, போட்டிக்கிடையே நிறைய திரை அரங்குகளில் படம் திரை இட்ட விநியோக நிறுவனம் ஆரா சினிமாஸ் என ‘உப்பு கருவாடு’படத்தின் வெற்றிக்கு வித்து இட்டவர்கள் ஏராளம்.

‘நாங்கள் எல்லோரும் எங்களுக்கு இடப்பட்ட பணியை செவ்வனே செய்தோம். ஆயினும் ஒரு நல்ல captain ஆக இந்தக் திறம் பட நடத்தி செல்லலும் இயக்குனர் ராதா மோகனுக்கு தான் இந்த வெற்றி உரியது.

திரை இட பட்ட இடங்களில் எல்லாம் பெருகி வரும் உற்சாகம் ஒரு நல்ல படத்தை விநியோகித்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கதை இருந்தால், ரசிகர்களுக்கு சின்ன படமும் பெரிய படம் தான் என உணர்த்திய படம் தான் ‘உப்பு கருவாடு’ எனக் கூறினார் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.