Home Blog Page 5928

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பற்ற திணறும் ராணுவம் : மக்கள் பீதி

 

வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் பல லட்சம் மக்களை காப்பற்ற முடியாமல், ராணுவம் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில்மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கடந்த 20 நாட்களுக்கு முன் மழை பெய்தது. தொடர் மழையால், தென் பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது. பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். முடிச்சூர், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தன. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.

திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை விடாது கொட்டியது. இதனால் ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரி நிரம்பி வழிந்தது. இப்போது மீண்டும் கொட்டிய தொடர் மழையால், மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஏரிக்கு வர ஆரம்பித்தது. இதனால் செவ்வாய்கிழமை அதிகாலையில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின் 8 ஆயிரம், 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 30 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. இதனால் தாம்பரம், முடிச்சூர், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்கள் தண்ணீரில் மூழ்கின. கீழ்தளம் மட்டுமல்லாது முதல் தளம் வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல செம்பரம்பாக்கத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் நகருக்குள் பெய்த மழை மூலம் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் அடையாறு ஆற்றில் பாய்வதாலும் வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றில் இடம் கொள்ளாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்ததால், கரையோரங்களில் உள்ள பல லட்சம் மக்கள் வீடுகளில் மாட்டிக் கொண்டனர். காலையிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டி.வி. இயங்கவில்லை. இதனால் தகவல் தெரியாமல் பலர் மாட்டிக் கொண்டனர். அவர்கள் 2வது மற்றும் 3வது மாடியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. ஆற்றில் இருந்து சுமார் 100 அடி முதல் 200 அடி தூரம் வரை தண்ணீர் 8 அடி, 10 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் மீட்பு படையினர் அந்தப் பகுதிகளுக்குள் செல்ல முடியவில்லை. ஓரமாக இருந்த ஒரு சிலர் மட்டும் உடனடியாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். அவர்களும் உடமைகள், பணம், நகைகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது ஆற்றின் ஓரமாக பல லட்சம் மக்கள் வீட்டில் தவித்து வருவதால், அவர்களை மீட்க முடியவில்லை. மீட்பு படையினர் சென்றால் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் ஓரளவு மக்களையே மீட்க முடிகிறது. இதனால் பல லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படுகிறது. பலர் வெள்ளம் வடியும் என்று காத்திருக்கின்றனர். நேற்று மாலை முதல் மழை ஓய்ந்திருந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். ஆனால், மீண்டும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை : முதலமைச்சர் ஜெயலலிதா

 

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து கொட்டித்தீர்த்த மழை காரணமாக சென்னை,கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், 14 ஐஏஎஸ் அதிகாரிகளையும் அனுப்பி போர்க்கால நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 24 ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து ஜெயலலிதா நேரடியாக களத்தில் இறங்கி சென்னையில் ஆர்.கே.நகர்,வில்லிவாக்கம், பெரம்பூர், திருவிகநகர் ,மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களை நேரில் ஆய்வு செய்து ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரே நாளில் 49 சென்டிமீட்டர் மழை பெய்தது.
மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம். புழலேரி, ரெட்டைஏரி உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் கொள்ளளவை தாண்டி நிரம்பி வழிந்தது. இதனால் வெளியேற்றப்பட்ட நீர் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. வரலாற்றி்ல் 100 ஆண்டுகளுக்கு இல்லாத மழை வெள்ளத்தால் சென்னையில் பல இடங்களில் நீர் வீடுகளில் ஒரு மாடிக்கு மேலான உயரத்தில் மழை நீர் புகுந்தது.

இதன்காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். உடனடியாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்னையில் 300 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். மொட்டை மாடிகளில் தவித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.,

இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை ஐ.என்.எஸ். அடையார் கடலோர காவல்படை தளத்தில் ராணுவ தனி விமானத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-

வடகிழக்கு பருவ மழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் முடிய உள்ள காலம் தமிழகத்திற்கு முக்கியமான மழைக் காலம் ஆகும். வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். மேலும், பெரு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டிருந்தேன்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 28 ம்தேதி தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக நவம்பர் 8ம் தேதி முதல் 16.ம்தேதி வரை பெய்த பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின. இந்த மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைத்திடவும் அமைச்சர் பெருமக்கள் குழு ஒன்றினையும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் நான் அனுப்பி வைத்தேன். வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக, வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழத்தம் காரணமாக மீண்டும் டிசம்பர் 1ம்தேதியில் இருந்து இந்த மாவட்டங்களில் மீண்டும் பெருமழை பெய்யத் துவங்கியது.

ஒரு சில மணி நேரங்களிலேயே 20 செ.மீ. வரை சில இடங்களில் மழை பெய்தது. மேலும், ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கன அடி உபரி நீரும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 25000 கன அடி உபரி நீரும், செங்குன்றம் நீர்த்தேக்கத்திலிருந்து 5800 கன அடியும், சோழவரம் நீர்த்தேக்கத்திலிருந்து 400 கன அடி உபரி நீரும் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, இந்திய ராணுவம், கப்பற் படை, விமானப் படை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 50 நிவாரண முகாம்களில் 6358 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14,97,653 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் 146 நிவாரண முகாம்களில் 38495 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,53,101 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் 97 முகாம்களில் 62267 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவன்றி, 17,28,349 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 முகாம்களில் 57516 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,17,333 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2 சென்னை மாநகராட்சியில் 470 பம்புகள், 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், 82 ஜே.சி.பி மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் முறிந்து விழும் மரங்கள் சிறப்புக் குழுக்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்தினை சீர் செய்யும் வகையில் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்த இடங்களில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், இப்பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பின்னர் மின் விநியோகம் படிப்படியாக சீர் செய்யப்படும். இம்மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகராட்சி ஆணையரோடு இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மண்டலம் ஒன்றுக்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுடன் இணைந்து 13 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர்.

கனமழையின் காரணமாக வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்புப் பணியில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனது வேண்டுகோளின்படி கூடுதலாக 15 குழுக்கள் விமானம் மூலம் வரவுள்ளனர். எனது வேண்டுகோளின்படி இந்திய இராணுவம் ஏற்கனவே 9 குழுக்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், இந்திய கடற்படையின் 200 வீரர்களும் மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் வீரர்களும் தங்களது படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை நான்கு ஹெலிகாப்டர்களுடன், இரண்டு கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாநில பேரிடர் மீட்பு குழுவின் 150 பயிற்சி பெற்ற வீரர்கள், கடலோர காவல் படையின் 3 குழுக்கள், 60 பயிற்சி பெற்ற வீரர்களுடன் தமிழ்நாடு காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வீரர்கள் இரவு பகலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவலர்களும் போக்குவரத்து காவலர்களும் வெள்ள பாதிப்பினால் மக்கள் வெளியேறிய பகுதிகளில் திருட்டுகள் நிகழா வண்ணம் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு துறைகளை சார்ந்த குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், மின்சாரம், கால் நடை பராமரிப்பு மற்றும் மீன் வளம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் இரவு பகலாக வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம், அதிலும் குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சரியான நேரத்தில் பொது மக்களை மீட்டு பத்திரமாக நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது மற்றும் நிவாரண முகாம்களை சுகாதார முறையில் பேணுவது ஆகியவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் இன்றும் நேற்றும் நான் பார்வையிட்டேன்.

ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, திருவொற்றியூர் பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் அசோக்நகர், வியாசர்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சடையான்குப்பம், மணலி புதுநகர், மற்றும் ரெட்டை ஏரி, புழல், பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றையும் பார்வையிட்டேன். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதிகளும் செய்து தரப்படுகிறது. வெள்ள நீர் சூழ்ந்த பல பகுதிகளில் மக்கள் உயர்தளங்களில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உயர்தளங்களிலுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய் மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் உள்ள மக்களுக்கு பால் கிடைத்திடும் வகையில் அவர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பவுடர் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். என முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு முதலமைச்சர் ரூ.5 கோடி நிவாரண நிதி

 

 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று வழங்கினார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது :-

பீகார் மாநிலமும் தமிழகத்தை போல ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் சோகத்தை பீகார் மக்களும் பகிர்ந்து கொள்வார்கள். வெள்ளத்தால் உயிர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என நான் உறுதியாக நம்புகிறேன். துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தன்னுடைய முதல் மாத சம்பளத்தை தமிழக வெள்ள நிவாரண நிதியாக வழங்க முன் வந்துள்ளார் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார் .

தமிழகத்திற்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமர் மோடி உத்தரவு

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ. 940 கோடி நிவாரண நிதிவழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படையும், தமிழக காவல்படை மற்றும் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் புதுடெல்லியில் இருந்து அரக்கோணம் வந்தார்.

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ராணுவ ஹெலிகாப்டரில்வந்த பிரதமர் மோடி அடையாறில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு சென்றார். கடற்படை அலுவலகத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக ஆளுநர் ரோசயாவுடன் வெள்ளத்தினால் ஏற்பட்டுஉள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார். வெள்ளச் சேதத்தை ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது :- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்திய அரசு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் பார்வையிட்ட மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், பாதிப்பு குறித்து, பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார் . மிகவும் கடுமையாக பெய்த கனமழையினால் ஏற்பட்டுஉள்ள சேதம் மற்றும் துயரத்தை நானே நேரில் பார்த்தேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு கூறியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் நிலைமை சற்று கவலையளிப்பதாக உள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

இது குறித்து மத்திய வானிலை துறையின் பொது இயக்குனர் எல்.எஸ்.ரத்தோர் தெரிவித்துள்ளதாவது : –

தென்னிந்தியாவின் கடலோர பகுதிகளில், குறிப்பாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு மழையின் அளவு குறைந்தாலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் வேலூரில் வழக்கத்தை விட 139 சதவீதமும், சென்னையில் 89 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நிலைமை சற்று கவலை அளிப்பதாக உள்ளது என மத்திய வானிலை ஆய்வு மைய பொதுஇயக்குனர் எல்.எஸ்.ரத்தோர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி

 வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னை மாநகரில் தாம்பரம்,  பெருங் களத்தூர், முடிச்சூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத மழை யால்  கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.  50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தை விட பலமடங்கு தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதனால் பலவீடுகளில் முதல் மாடி வரை தண்ணீரில்  முழ்கியது.  மீட்பு பணியில்  தீயணைப்பு வீரர்கள்,  தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மீனவர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.

 வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை படகுகள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு ஹெலிகாபடர் மூலம் உணவு விநியோகம் செய்யபடுகிறது.

 வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.

 மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு  பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில்  இருந்தும்  உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை சாலைமார்கமாக கொண்டு சென்று இலவசமாக  வழங்கி வருகின்றனர்.

 இந்த நிலையில் வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சென்னை சின்னாபின்னமாக யார் காரணம்?

 

 
2.bp.blogspot.com vOpanxKOmj8 Vl 0w60CMtI AAAAAAAAGcY uL52BY34C7Q s320 chennai floods 20151130.jpg - 2026
 
சென்னையில் தற்போது பெய்கின்ற பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
 
 
3.bp.blogspot.com YENx3f4Cx3M Vl 98jDF3QI AAAAAAAAGfI TR6dVlyzQio s640 Chennai Floods 2015 - 2026

சென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுப்பாடற்ற வளர்ச்சியுடன், அதிவேகமாக மாறிவரும் இந்தப் பெருநகரம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவுள்ள கடுமையான இயற்கை நிகழ்வுகளால் (extreme weather event) எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியங்கள் தெரிகின்றன.
 
2.bp.blogspot.com LHYKreUPtDM Vl 1XRh5sfI AAAAAAAAGco WUOZHMGA2qw s640 chennai rains rescue - 2026
 
பெருமழையா?
 
நவம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 236 மி.மீ. என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் விடாமல் மழை பெய்தது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகமாகப் பெய்த மழையின் அளவு 150 மி.மீ. மட்டுமே. அது நடந்தது 2009 நவம்பர் மாதம்.
 
1.bp.blogspot.com Rz3D969rSe0 Vl 1sdjGnwI AAAAAAAAGcw 0SEvcRc45N0 s320 chennai rain 759 - 2026
 
சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,468 மி.மீ. நவம்பர் மாதத்தில் சராசரியாக 374 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் பெய்த மழைப்பொழிவு மாதச் சராசரியில் 63 சதவீதமும், ஆண்டு சராசரியில் 16 சதவீதமும், இந்தப் பருவமழைக்கான சராசரியில் 80 சதவீதமும் ஆகும்.
 
3.bp.blogspot.com BpylNQ4Ea68 Vl - 2026
 
சென்னையின் நிலஅமைப்பு
 
சென்னை மாநகரம் தட்டையான கடற்கரை சமவெளிப் பகுதியின் மீது எழுந்துள்ளது. இந்தச் சமவெளிப் பகுதிகள் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளில் முடிவடைகின்றன. சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றில் தண்ணீர் ஓடுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தடை ஏற்படுத்தப்பட்டு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆறுகளின் பக்கவாட்டில் இருக்கும் வெள்ள வடிநீர் பகுதிகள் முழுவதும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அது மட்டுமில்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்களை மணல்மேடு தொடர்ச்சியாக அடைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மழை பெய்யும்போது வெள்ளம் வரத்தானே செய்யும்.
 
1.bp.blogspot.com ZKujJ71G7Ks Vl 2VI95sJI AAAAAAAAGdA GyKAZSDOTM s640 2015 12%2524largeimg02 Wednesday 2015 211011551 - 2026
 
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளபடி, 1976 நவம்பர் மாதம்தான் அதிகபட்சமாக 452.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அன்றைக்கு அந்தப் பெருமழையைச் சென்னை தாங்கியிருந்தாலும், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெருமழைப் பொழிவுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைச் சென்னை பெருநகரம் படிப்படியாக இழந்து வந்திருக்கிறது.
 
3.bp.blogspot.com FquD9fPZp0k Vl 2hmbstsI AAAAAAAAGdI vffkOlmIQLw s640 02 1449066082 rain140 - 2026
 
தாக்கமும் விளைவும்
 
கடந்த சில பத்தாண்டுகளில் சென்னை, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துப் பகுதிகள் இணைந்து ஒரு பெருநகராக உருவெடுத்துள்ளது. மக்கள்தொகை பெருமளவு அதிகரித்த இந்திய நகரங்களில் சென்னை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் சேர்த்துச் சென்னையின் மக்கள்தொகை 86.53 லட்சம். 2001-ல் இருந்த 65.6 லட்சத்தைவிட, இது 31 சதவீதம் அதிகம். இந்த மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பங்கு, தகவல் தொழில்நுட்பப் பணிக்காகப் பெருமளவு சென்னை வந்தவர்களாலேயே ஏற்பட்டது.
 
 
2.bp.blogspot.com sHLKOrNjmbo Vl 8ZaQuQ I AAAAAAAAGe8 LDIA9IUfZc4 s640 565780314 Chennai Rains 3 6 - 2026

அதையொட்டிச் சென்னையையும் மாமல்லபுரத்தையும் இணைக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, அதையொட்டியுள்ள சதுப்புநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுவழி, நான்குவழி அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையை ஒட்டி அலுவலகங்கள், உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எழுந்தன. இந்தப் பகுதியை நகரத்தின் மற்ற பகுதியுடன் இணைக்கும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டன. அவற்றையொட்டியும் கட்டுமானங்கள் வளர்ந்தன. தெற்குப் பகுதி பெருத்து வீங்கிக்கொண்டே போனது.
 
1.bp.blogspot.com sdTegHuivwg Vl 29pd0fdI AAAAAAAAGdY DIMjriCL0pU s320 2015 12 02T142604Z 1 LYNXMPEBB10OM RTROPTP 4 INDIA FLOOD - 2026
 
கட்டிடக் கழிவும் குப்பையும்
 
தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம், அத்துடன் இணைந்த நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த பெருங்குடியில் பிரச்சினைகளை மோசமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தது. மாநகராட்சி தரும் புள்ளிவிவரத்தின்படி சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு 45,00,000 கிலோ குப்பையும், 70,000 கிலோ கட்டிடக் கழிவும் உற்பத்தியாகிறது. இதில் பாதிக்கு மேல் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன.
 
4.bp.blogspot.com wcNmAO075w8 Vl 3Mjw zqI AAAAAAAAGdg pVPN2SqBml4 s640 437387 rainsinchennai - 2026
 
சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2007-ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் 317 ஹெக்டேர் பரப்பைப் பாதுகாக்கப்பட்ட காடாகத் தமிழக அரசு அறிவித்ததால், அந்தப் பகுதி மட்டும் கட்டுமானங்களிலிருந்து தப்பித்து இருக்கிறது.
 
1.bp.blogspot.com BOQTC5Hjlkg Vl 3ftkC DI AAAAAAAAGdo n6hojls4AaA s640 Chennai%2BFlood - 2026
 
சென்னை மாநகரில் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்பது, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் கடைசிக் கண்ணியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்தது. முந்தைய பத்தாண்டுகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த குளங்களும் நீர்நிலைகளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன அல்லது குப்பை, கட்டிடக் கழிவு கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.
 
2.bp.blogspot.com iV6gjQKbnPw Vl 3vKMbKoI AAAAAAAAGdw JCojoGw4QhQ s640 Chennai%2Brains%25281%2529 - 2026
 
சமநிலை சீர்குலைவு
 
சென்னைநிலஅமைப்பியல் ரீதியில் தட்டையான ஒரு நகரம். கடல் மட்டத்திலிருந்து இந்த நகரத்தின் உயரம் 2 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே. இந்தப் பின்னணியில் நீர்நிலைகள் மட்டுமே, சென்னையின் நீர் சமநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. அதிகப்படியான கனமழையைத் தாங்கிக்கொண்ட அவை, அந்த நீரைத் தக்கவைத்துக்கொண்டு கோடைக் கால நீர்த்தேவையையும் பூர்த்தி செய்தன. எவ்வளவு காலத்துக்கு என்று கேட்டால், சில நேரம் 10 மாதங்கள்வரைக்கும்.
 
3.bp.blogspot.com DTrtxFuVNE8 Vl 4Cf7HVNI AAAAAAAAGd4 Xz9s60Zm 9g s640 chennai floods 0 - 2026
 
இப்படியாக நீர் சமநிலையைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெருமழை பெய்யும்போது ஒன்று வெள்ளம் வரும் அல்லது மழைநீர் கடலைச் சென்றடையும். நகரில் ஓடும் ஆறுகளின் கரைகளும், வெள்ள வடிநிலப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், நகரில் இருக்கும் ஆறுகள் வெள்ளத்தைச் சுமந்து சென்றிருக்கும். ஆனால் அடையாறு, கூவம் கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆற்றின் வழியாக வெள்ளநீர் செல்வதைத் தடுக்கின்றன. அதன் காரணமாகக் கரைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக வெள்ளம் ஊருக்குள் நுழைந்து வெள்ளக் காடாக்குகிறது.
 
4.bp.blogspot.com RNAlOpqL3Ls Vl 4WhJHu I AAAAAAAAGeA xBiyyeQDnhs s640 Chennai floods - 2026
 
கூடுதல் பிரச்சினை
 
சென்னை துறைமுகப் பகுதியில் 1960-களில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், வெள்ளம் ஏற்படுவதற்குக் கூடுதல் சாத்தியத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நகரின் வடக்குப் பகுதியில் உள்ள மணல் அடித்துவரப்பட்டு, துறைமுகத்துக்குத் தெற்கில் உள்ள கரைப் பகுதியில் மணல் சேர்கிறது. இதன் காரணமாகவே நாட்டிலேயே மிகவும் அகலமான மெரினா கடற்கரை உருவானது.
 
3.bp.blogspot.com D47xc5OgDOU Vl 4maBSsPI AAAAAAAAGeI S6oABA X3L0 s640 chennai rains 759 - 2026
 
ஒரு பக்கம் அகலமான கடற்கரை அழகாக இருப்பதாகத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் கூவம், அடையாறு ஆற்று முகத்துவாரங்களை மணல்மேடுகள் தடுப்பதால் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆற்று முகத்துவாரத்தை மணல்மேடு அடைக்காமல் பார்த்துக்கொள்வதும், மழைநீர் வடிகால் அமைப்பைப் பராமரிப்பதும் பெருமளவு நேரம், மனித உழைப்பு, பணத்தைக் கோரும் செயல்பாடுகள் என்பதை மறந்துவிடக் கூடாது. 
 
4.bp.blogspot.com V9Kxnty82Yc Vl 46Vgbm2I AAAAAAAAGeQ W SIlJXWhlg s640 chennai 480 ap - 2026
 
கடும் வானிலை நிகழ்வு
 
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் இணைந்து சென்னை நகரை எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியதாக மாற்றுகின்றன. பருவநிலை மாற்றத்தால் சென்னை எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நவம்பர் மாதப் பெருமழையைப் போலக் கடும் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.
 
3.bp.blogspot.com JzbD1d5z0fQ Vl 5Ov7BPrI AAAAAAAAGeY bV19BzOdRXA s400 Nandambakkam%2Bflood%2Bresque%2Boperation%252C%2BChennai%2B%25284%2529%2Bcopy - 2026
 
அத்துடன் வங்கக் கடல் பகுதியில் ஓராண்டில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் காற்று, கடுமையான புயல் காற்று போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 1950 முதல் 2014 வரையிலான தரவுகளின்படி, 1966-ல் அதிகபட்சமாக 16 இயற்கைச் சீற்றங்களும், அதற்கு அடுத்த ஆண்டு 14 இயற்கைச் சீற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமீபத்திய பத்தாண்டுகளில் 2006-ல்தான் அதிகபட்சமாக 10 இயற்கைச் சீற்றங்கள் வந்துள்ளன. எனவே, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கவில்லை.
 
2.bp.blogspot.com 8DvPGQaKCZU Vl 5sTZbs3I AAAAAAAAGeg iSA6f9yJpmU s640 pti12 1 2015 000300a kuma - 2026
 
 இனிமேலாவது பெருமழை நேரங்களில் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதை, சென்னை மாநகர நிர்வாகமும் மக்களும் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யப் பணிபுரிய வேண்டும். அந்தச் செயல்பாடு மட்டுமே எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் கடும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நமக்கு உதவும்.
 
– பானோஸ் 
தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர்.
 
(‘த ஹிந்து’ நாளிதழில் வெளிவந்த கட்டுரை) 
 
2.bp.blogspot.com upQ OGcJgfc Vl 56OeuZOI AAAAAAAAGeo isc7X6sAMWM s640 18NOVCHTMA01 FL CH 2625820g - 2026
நிவாரண முகாம்
4.bp.blogspot.com q0qOuGzynBE Vl 6pt751nI AAAAAAAAGew rLJRZOJNnC8 s640 Cuddalore crop 2631199f - 2026
பயிர்கள் சேதம்

படங்கள் : கூகுள் இமேஜ்.

குடிநீரின் தரம் கண்டறியும் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம்

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின்தரம்  கண்டறியும் முறை மற்றும் குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது 

நிர்வாகபொறியாளர்  முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்  , உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடேஷ் , உதவிப் பொறியாளர்கள் முருகையா ,சிவசண்முகவல்லி, குடிநீர் பரிசோதனை அலுவலர் கோபாலன் ,ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவி இந்திரா செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முகாமில் அதிகாரி பேசியதாவது: பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி, மக்களின்  சுகாதாரத்தை பேணிகாப்பதில்  குடிநீர் வாரியம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது .  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிவருகிறது  . தொழிற்சாலைகளில் இருந்துவேளியேறும் கழிவுகள் மற்றும் வீட்டில் இருந்து கொட்டப்படும் குப்பைககள் மூலம் மற்றும் மாறிவரும் சுற்றுச்சூழல் என குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது உலக சுகாதார நிறுவனமும் ,இந்திய தரக் கட்டுப்பாட்டும நிறுவனமும் அனுமதிபட்ட அளவின் படி நீரின் தன்மை பரிசோதிக்கப்பட்டு  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது ,தற்போது பொதுமக்கள்  சுத்தம் கருதி கேன்களில் அடைக்கப்பட்டுள்ள குடிகுடிநீரை பயன்படுத்திவருகின்றனர்  இது பார்வைக்கு  சுத்தம் இருக்கும் அதில் சத்துக்கள் இருக்காது நீரில் பி.எச்  அளவு குறியீடு 6.5 க்கும் குறைவாகவும் 8.5 க்கு அதிகமாகவும் இருத்தல் கூடாது ,பி.எச்  என்பது ஹைடரஜன் அயனியின் அளவாகும்  பி.எச்  அளவு  அதிகமாக இருந்தால் அது வயிற்றில் உள்ள செரிக்கும் திரவத்தின் சக்தியை முறியடித்து ஜீரண சக்தியை இழக்க செய்யும் எனவே பொதுமக்கள் ஆற்று நீர்,கிணற்று மற்றும் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீரினை கொதிக்க வைத்து குடிக்கலாம் தாங்கள் பயன்படுத்தும் நீரில் அமிலத்தன்மை ,காரத்தன்மை பற்றிய சந்தேகம் இருப்பின்  நீர் மாதிரி எடுத்து  தரத்தினை பரிசோதித்துக் கொள்ளலாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உருவாக்கப்பட்ட களப்பரிசோதனை பெட்டியின் மூலம் குடிநீரின், 12 தரக்கட்டுப்பாடுகளை பரிசோதனை செய்யலாம்.  தமிழகத்தின் அனைத்து ஒன்றியஅலுவலகங்கள் ,பஞ்சாயத்து அலுவலகங்களில் இக்களப்பரிசோதனை பெட்டி  இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் பேசினார்  மேலும் தரமற்ற குடிநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து,விளக்கும்  செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது  .

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை! மீட்பு பணிகளுக்கு பாராட்டு

டெல்லி

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கன மழை கொட்டித் தீர்க்கிறது. மனித உயிர்களும், கட்டுமானங்களும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை அறிந்து, கவலையடைந்துள்ளேன் என, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கன மழை காரணமாக, மனித உயிர்களும், கட்டுமானங்களும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை அறிந்து, கவலையடைந்துள்ளேன். மாநில அரசும், அனைத்து துறைகளும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சில் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசும், தேசிய பேரிடர் மீட்பு படையும், குடிமை சமூக அமைப்புகளும் மேற்கொண்டுவரும் நிவாரண பணிகளை பாராட்டுகிறேன்.” இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சினிமாவிற்குள் புகுந்த ராதிகா மகள்!

திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான். இன்றியமையாததும் தான். பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார்.

புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்றக் கூற்றுக்கு ஏற்ப, இவரும் தற்போது தனது தாயின் வழியிலே ஊடக துறையில் கால் பதிக்க வருகிறார். New media division என்ற ஒரு நிறுவனத்தை ராடன் டி வியின் உட்பிரிவாக தொடங்கி அதன் மூலம் பல்வேறு யு tube சானல்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.

பல்வேறு கலை நிகழ்சிகளும், ரியாலிட்டி shows ஆகியவை இந்தப் பிரிவின் கீழ் இயங்கும். பெரிதும் போற்றப் பட்ட எண்பதுகளின் நடிகர்களின் சங்கமம் இவரது சீரிய பொறுப்பில் தான் இயங்கியது. இவர் தற்போது தமிழ் திரை உலகிற்கு பல் வேறு திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் ராடான் குறும் பட விழா ஒன்றை நடத்த இருக்கிறார்.

திரை உலகில் தங்களது திறமையை வெளி படுத்த வேண்டும் என்று இளைஞர்களின் கனவை நிறைவேற்ற இந்தப் போட்டி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். எங்களது நிறுவனத்தில் திறமையான இளைஞர்களுக்கு என்றுமே சிவப்பு கம்பள வரவேற்ப்பு உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த குறும் பட விழா.

இயக்குனர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், படதொகுபாளர் இயக்குனர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியில் கலந்துகொள்ளும் சிறந்த குறும் படத்தை தேர்வு செய்வார்கள்.

டிசம்பர் 20 ஆம் தேதி, போட்டியில் கலந்துக் கொள்ள படங்களை அனுப்பும் கடைசி தேதியாகும். பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இறுதி சுற்று நடக்கும். இதில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசும், அவர்களது படைப்புக்கேற்ப பெரிய கௌரவமும், அங்கீகாரமும் தரப்படும். இது அவர்களது கலை பயணத்தில் பெரிதும் உதவும்’ என சாதிக்க போகும் நம்பிக்கையுடன் கூறினார் ரயான்.