Home Blog Page 6092

சவுரவ் கங்குலி – இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர்

saurav-ganguly புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளர் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், சவுரவ் கங்குலி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து விளையாடிய போது, இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித் தந்தார். மிகவும் ஆக்ரோஷமாக விளையாட்டை வெளிப்படுத்தும் கங்குலி, இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து சாதனைகள் படைக்க உதவினார். கங்குலி கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில்தான், ஹர்பஜன், யுவராஜ், சேவக், காம்பீர், முகமது கைப் போன்ற திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்குக் கிடைத்தனர். இந்நிலையில், கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால் திறம்படச் செயலாற்றுவார் என்று வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 26ஆம் தேதி பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கங்குலி குறித்து முடிவு எடுக்கப்படலாமென்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் படுகொலையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவை இளைஞரிடம் விசாரணை

புதுச்சேரி: ஆந்திர மாநில போலீஸாரால், திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுச்சேரியில் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் என்ற காரணம் கூறி, 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால், நாடு முழுவதும் ஆந்திர மாநில போலீஸாருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர உயர்நிதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இது விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநில போலீசாரிடம் பிடிபட்டு தப்பி வந்த நபர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவ்வாறு தப்பி வந்தவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்ட மலை கிராமமான ஜமுனா மருதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளங்கோவிடம் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரி இந்திரா நகரில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் வைத்து இந்த விசாரணை நடத்தப் பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணைய துணைப் பதிவாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை காலை தொடங்கி மதியம் 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடந்தது. இந்த விசாரணைக்குப் பின்னர் இளங்கோவை அதிகாரிகள் தங்களுடன் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, ஆந்திர மாநில போலீசாரின் சித்ரவதை குறித்து இளங்கோ தெரிவித்ததாகவும், பாதுகாப்பு கருதி அவரை புதுவைக்கு அழைத்து வந்து விசாரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு பீதி: திருப்பதியில் குறைந்தது தமிழக பக்தர்கள் கூட்டம்

tirupathi-temple-golden-door திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர மாநில போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட பீதி காரணமாக, திருப்பதி கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுவாக தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏராளமான தமிழக பக்தர்கள் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் திருப்பதியில் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஆந்திர மாநில போலீஸாரின் கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூடு காரணமாக உண்டான பீதி இன்னும் மறையவில்லை. இதனால், தமிழக பக்தர்கள் திருப்பதிக்குச் செல்வதை இந்த முறை தவிர்த்து விட்டனர். இதனால், தமிழ்ப் புத்தாண்டு அன்று திருப்பதியில் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆந்திர மாநில போலீசார் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, பக்தர்களின் மனதில் அச்சமற்ற சூழ்நிலையை விதைப்பது ஆகியவற்றால் மட்டுமே திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் மீண்டும் அதிக அளவில் செல்வதைக் காண முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்குறது கனடா: ஒப்பந்தம் கையெழுத்து

narendra-modi-canada-visit இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை வழங்க ஒப்புக் கொண்டது. இதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக கனடா நாட்டுக்கு புதன் கிழமை சென்றார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். கனடா சென்றடைந்த மோடிக்கு, கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை மோடி சந்தித்துப் பேசினார். வெகு நேரம் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவுக்கு கனடா யுரேனியம் வழங்குவதற்கான சுமார் ரூ.1,600 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. இதுகுறித்து கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்த மோடி, செய்தியாளர்டம் பேசியபோது, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம். இதன்படி, கனடாவின் கேமகோ அணு உற்பத்தி நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு ஐந்தாண்டுகளுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்கப்படும். ரஷியா, கஜகஸ்தான் நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடு கனடா. இதன் மூலம் இந்தியாவின் மின்சார, எரிசக்தித் தேவைகள் நிறைவு செய்யப்படும். மேலும், இந்தியா – கனடா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல் திட்டம் விரைவில் தயாரிக்கப்படும். கனடா இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது, இந்தியா மீது அந்நாடு வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றார். இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை 1976ல் கனடா தடைசெய்தது. அப்போது, கனடா நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா அணுகுண்டு தயாரித்தது. இதையடுத்து, கனடா இந்தத் தடையை விதித்தது. இந்நிலையில், நீண்ட கால தடையை விலக்கிக் கொண்டு, கனடா இப்போது இந்த முடிவினை எடுத்துள்ளது. இதற்கான யுரேனியம் கேமிகோவிலிருக்கும் வடக்கு சாஸ்கெட்சவான் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய யுரேனியச் சுரங்கம் இதுதான். 2012ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இதன்படி, கனடா நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், இந்தியா யுரேனியத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை யார் கண்காணிப்பது என முடிவுசெய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது. வரும் 2032ஆம் ஆண்டில் 63,000 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்தியாவில் 22 அணுமின் நிலையங்கள் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 40 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாதிட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாற்காலிக அரசியல் பகையாளர்கள் கூட்டணி: பாஜக விமர்சனம்

புதுதில்லி: தில்லியில் ஜனதா பரிவார் என 6 கட்சிகளின் கூட்டணி இணைந்து சமாஜ்வாதி ஜனதாக் கட்சியாக உருவாகி, முலாயம் சிங் யாதவ் அதன் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, இந்தக் கட்சிகளின் இணைப்பை விமர்சித்து பாஜகவின் தேசியச் செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் கூறியபோது … இந்தக் கூட்டணியில் இடம்பெறுள்ள தலைவர்களிடையே எக்காலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டதே கிடையாது. அரசியல் பகையாளர்களின் கூட்டணியாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இந்தக் கூட்டணி தாற்காலிகமானதுதான் என்றார்.

ஜனதா பரிவார் – ஆறு கட்சிகளின் சங்கமம் : தலைவராக முலாயம் !

janata-parivarபுதுதில்லி: முன்னர் ஜனதா கட்சியுடன் இருந்த தலைவர்கள் பின்னர் தங்களுக்கென கட்சிகளை உருவாக்கி பிரிந்து சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை எழுந்துள்ளதால், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய ஜனதா கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இந்தப் புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்கும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கான கூட்டம் தில்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், பொதுச் செயலர் கே.சி.தியாகி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவெ கவுட, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தங்களின் ஜனதா பரிவார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ்… இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முந்தைய ஜனதா கட்சிகள் மீண்டும் இணைந்திருக்கின்றன. இது மிகவும் உறுதியான கூட்டணி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை குறித்து முடிவெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தேவகவுட, இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரசாத், ஓம்பிரகாஷ் சௌதாலா, சரத் யாதவ், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர் கமல் மொரார்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள தே.ஜ.கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே புதிய கட்சியின் குறிக்கோள். எந்தவொரு விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அராஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் முலாயம் சிங்.

செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் காணாமல் போன மாணவன்: தேடுதல் வேட்டை தீவிரம்

செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் காணாமல் போன மாணவன்: தேடுதல் வேட்டை தீவிரம்

student-teacher-missing-sengottai

காணாமல் போன கடையநல்லூர் பகுதி மாணவன் சிவசுந்தர், செங்கோட்டை பகுதி ஆசிரியை கோதை

செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார், ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களின் மகன் சிவசுந்தர் (15), தென்காசி – கடையநல்லூர் சாலையில் குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் மாணவன் சிவசுந்தரைக் காணவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில் மாணவனை போலீஸார் தேடி வந்தனர். செங்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை கோதை லட்சுமி (23) இவர் திடீரென மாயமானார். இவர் காணாமல் போனது குறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே வயது வித்தியாசத்தையும் ஆசிரியை மாணவன் முறையை மீறி காதல் ஏற்பட்டதாகவும், 2 பேரும் வெளியூருக்கு தப்பிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் பல்வேறு கோணங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவர் குறித்தும் மேலும் பல்வேறு தகவல்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகி, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும், இருவரும் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சில புகைப்படங்கள் வெளியாயின. ஆனால் இவற்றில் பெரும்பாலான படங்கள், இதற்கு முன்பு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளின் படம் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டது. வாட்ஸ் அப்பில் போலியான படங்கள் மற்றும் தகவல் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆசிரியை மற்றும் மாணவனைக் கண்டுபிடிக்க செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் மீட்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இருவரின் படத்தையும் வைத்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சற்றுமுன்…

rahul-gandhi-returns

தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை!

இந்தியா, சற்றுமுன்

புது தில்லி: சுமார் 2 மாத கால நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தில்லி திரும்பினார். அதே நேரம், அவர் தில்லிக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு…

 

 

 

 

 

 

 

 

 

 

தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை!

rahul-gandhi-returns புது தில்லி: சுமார் 2 மாத கால நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தில்லி திரும்பினார். அதே நேரம், அவர் தில்லிக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் சோனியாவும் பிரியங்காவும் ராகுலின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கே இருவரும் ஒரு அறையின் கதவைப் பூட்டிவிட்டு, ரகசியமாகப் பேசியுள்ளனர். யாருக்கும் தெரியாமல் அவர்கள் மிகவும் ரகசியமாகப் பேசியதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 2 மாத கால நீண்ட விடுப்புக்குப் பின்னர் தலைநகர் தில்லி திரும்பியுள்ளார். விடுப்பில் சென்ற ராகுல் எங்கே சென்றார், எங்கே தங்கியிருந்தார், என்ன செய்தார் என்பது குறித்தெல்லாம் யாருக்கும் தகவல் அளிக்கவில்லை. மிக ரகசியமாக அவரது விடுப்புப் பயணம் வைக்கப்பட்டிருந்தது. வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த மிக முக்கியமான கட்டத்தில், அரசியலுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ராகுல்காந்தி ரகசியமாகச் சென்றது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாம, பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது ரகசியப் பயணம், அவரைக் கேலிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், ராகுல்காந்தி வீட்டுக்குத் திரும்பியபோது, அவரது தாய் சோனியாவும் சகோதரி பிரியங்காவும் அவரை வரவேற்றுள்ளனர்.

கரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை

16-04-15 Karur Pmk Koottam News photo 01 கரூரில் பா.ம.க வின் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ்  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் தர்மபுரியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான மகளிர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு பெண்களிடமும் பெரும் வரவேர்ப்பைபெற்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்க்கு  வருகைபுரியும்  மருத்துவர் அன்புமனிராமதாசிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும்  ஆர்பாட்டத்திற்கு பெரும் திரளான மகளிர் அணியையும் பெண்களையும் திரட்டுவதோடு  பொதுமக்களிடையே பா.ம.க வின் ஆடிப்படை கொள்கைகளை எடுத்து கூறியும் திண்ணை பிரச்சாரத்தின் மூலமும் சுமார் 50 அயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலாகம் முன்பு அல்லது கரூர் வட்டாட்சியர் அலுவாலாகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பலார்களாக பா.ம.க மாநில துணைதலைவர் கடலூர் சண்முகம் , மாநில துனை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரான் ,வன்னியர் சங்க மாநில துனை தலைவர் மாருத்துவார் மணி , நகர செயலாளர்கள் முருகேசன், குமார் , ஒன்றிய செயலாளர்கள் ராஜா , முத்துசாமி மகளிர் அணியில் பாக்கியம் உள்ளிட்ட கட்சி ஒன்றிய, நகர , பேரூர் செயலாளர்கள் முக்கிய பொருப்பாளர்கள் என ஏராளமானோர் இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனார். 16-04-15 Karur Pmk Koottam News photo 02 மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், கரூர் மாவட்டத்தில் சுமார் 122 மதுபானக்கடைகள் உள்ளன. பொதுமக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த மதுபானக் கடைகளை, தமிழகத்தின் மது விளக்கு போராளி ஐயா இராமதாசு உத்திரவை பெற்று இந்த மதுபானக்கடைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும் என இக்கூட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பா.ம.க முதல்வர் வேட்பாளரை தமிழக அளவில் அதிகப்படியான வாக்குகள் பெற்று கரூர் மாவட்டத்தை ஒரு முன்னோடி மாவட்டமாக்குவோம் எனவும் ஒவ்வொரு அடிப்படை தொண்டனும் சபதமெடுத்துக்கொண்டோம் என சூளுரையாற்றினார்