திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, ஜாமீன் மனு தாக்கல் செய்யும் முடிவில் இருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இதற்காகத் தயங்கக் கூடும். என்று தெரிகிறது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்து, தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் செந்தில் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது, செந்தில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் குமார் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதற்கான விளைவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாராம். அதனால் அவர் அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருந்தார். செந்தில் குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தால், தானும் தாக்கல் செய்யலாம் என்று எண்ணியிருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இப்போது அந்த யோசனையில் இருந்து பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமை பொறியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் செந்தில் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது, செந்தில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு கொலை மிரட்டல்: ஐ.எஸ். இயக்கம் இமெயில்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயர் அடங்கிய ஐ.டி.யில் இருந்து கொலை மிரட்டல் இமெயில் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு, isis583847@gmail.com என்ற இமெயில் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது என்று மும்பை போலீஸாரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. ரகுராம் ராஜனின் இ-மெயிலுக்கு வந்த இந்த கொலை மிரட்டலில், “உங்களைக் கொல்ல எனக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு கொடுக்கப்பட்டதைவிட, நீங்கள் அதிகமாகக் கொடுத்தால், நாம் இதுகுறித்து பேசி முடிவு எடுக்க முடியும்” என்று இ-மெயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரகுராம் ராஜனுக்கு மிரட்டல் கடிதம் வந்ததை மும்பை காவல் ஆணையர் ராகேஷ் மரியா உறுதிசெய்துள்ளார். இது குறித்து புகார் வரப்பெற்றதாகவும், இ-மெயில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை லேசாக எடுத்துக் கொள்ளாமல், குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். இந்த இமெயில் மிரட்டல் குறித்த விசாரணை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இமெயில் முகவரி தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு கோரி கூகுள் நிறுவனத்தை சைபர் க்ரைம் பிரிவு அணுகியுள்ளது.
குடியிருப்பை காத்துக்கொள்ள முஸ்லீமாக மதம் மாற்றியுள்ளது தேசத்துக்கு அவமானம்: ராம.கோபாலன்
தமிழ்நாடு அரசின் திருக்குறள் பரிசு பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கரூர் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாளில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் முழுமையாக முற்றோதல் செய்யும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் பண விடையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு கடந்த 14 ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் கரூர் மாவட்டத்தை சார்ந்த காந்திகிராமம் சு.ர.திவ்யங்கா, புகளூர் மாணவி எஸ்.வைஷ்ணவி தேவி ஆகியோர் கரூர் மாவட்டத்தின் சார்பில் இந்த பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வீரமணியிடம் இருந்து பெற்றார்கள். இவர்கள் தான் கரூர் மாவட்டத்தில் இருந்து முதன் முதலில் பரிசு பெற்றுள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கரூரில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் பரப்புதல் மாவட்ட தலைவர் மேலை.பழநியப்பன், மூத்த அரிமா ஏ.எஸ்.ஜெனார்த்தனன், மாவட்ட ஆளுநர் கே.பிரேம், முன்னாள் ஆளுநர் ஈரோடு தனபால், திருச்சி முருகேஷன், மாவட்ட தலைவர் சுமங்கலி செல்வராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர். விழாவில் கரூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், நொய்யல், புகளூர், உப்பிடமங்கலம், குளித்தலை, வெள்ளியணை உள்ளிட்ட லயன்ஸ் சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு
பாவூர்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூர் கீழக்காலனி தெருவை சேர்ந்த அன்புசெல்வம் அவரது மனைவி சமுத்திரக்கனி. இவருக்கும் இதே தெருவை சேர்ந்த பகவதி (70), உஷா (27), லட்சுமி (50) ஆகியோர் பொதுகுழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் பகவதி, உஷா, லட்சுமி ஆகியோர் சேநர்த சமுத்திரக்கனி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அன்பு செல்வமும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் . புகாரின் பேரில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட பகவதி, உஷா, லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மூவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
சூதாட்டம் 6 பேர் கைது
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட காவல்துறையினர் நாகல்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள கோவில் மைதானத்தில் பணம் வைத்து சூதாடியதாக நாகல்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (46), கணபதி (51), காசிப்பாண்டி (33), முருகன் (46), மருதையா (60), வெள்ளியப்பன் (66) உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநங்கைகளை தொடர்ந்து நரிக்குறவர் வாழ்க்கையிலும் மாற்றம்: கரூர் ஆட்சியர் நடவடிக்கை
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” – என்ற வள்ளுவத்திற்கிணங்க தான் நல்லமுறையில் நீதி, பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் அரசன் மனிதனாகப் பிறந்திருந்தாலும் மக்கள் அவரை காக்கும் காவல் தெய்வமாக கருதிப் புகழ்வார்கள். “அத்தகைய காக்கும் கடவுளாக மக்களை காத்து நல்வழிகாட்டிடும்; மக்களின் மனித தெய்வமாக வாழ்ந்து வரும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஊர் ஊராக சுற்றித்திரிந்த எங்களை வாழ வழிகாட்டிய அவர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என நரிக்குறவர்கள் புகழாரம்”
மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் சீரிய திட்டங்களினால் பல்வேறுதரப்பட்ட சமுதாயத்தினரும் சரிநிகராக வாழ்ந்திட வேண்டும் என சமுதாயத்தில் எவ்வித பாகுபாடுமின்றி எல்லோருக்கும் எல்லாவித திட்டங்களும் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நரிக்குறவர்கள் தங்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்ற நோக்குடன் அவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பசுமைவீடு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என அரசின் அனைத்துத்திட்டங்களும் வழங்கி வருவதுடன் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுழல்நிதிகடன்களையும் மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி; தெரிவித்ததாவது கரூர் மாவட்டத்தில் 170 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசுத்திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு விலையில்லா வீட்டுமனைப்பட்டாவுடன் பசுமைவீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல்கட்டமாக 29 நபர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நரிக்குறவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் பெற நலவாரியம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கப்பட்டு தற்பொழுது 149 உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நலவாரியத்தின் மூலம் 60 பயனாளிகளுக்கு சிறு தொழில் துவங்க, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை என ரூபாய் 5,30,000ஃ- மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நலவாரியத்தின் மூலம் விபத்து காப்பீடுத்திட்டம், விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமணநிதியுதவி, மகப்பேறு உதவி, மூக்குக்கண்ணாடி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மற்றும் ஓய்வ+தியத்திட்டத்தில் 10 நபர்களுக்கு மாதந்தோறும் ஓய்வ+தியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் புதிய குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதுடன் கரூர் மையப்பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு அமைக்கப்பட்டுள்ள வணிகவளாக கட்டிடத்தில் 10 நபர்களுக்கு கடைகள் வழங்கப்பட்டு அதன்மூலம் சிறுதொழில் நடத்தி வருவதால் 10 குடும்பத்திற்குத்தேவையான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளார்கள். மேலும் அவர்களுக்கு சிறுதொழில் கடன் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நரிக்குறவர்களின் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டுமென்ற நோக்குடன் அவர்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் நேரடியாகவும் நகர் பகுதிகளுக்கு சென்று களஆய்வு மேற்கொண்டு அதிலும் பள்ளிக்குச்செல்லாமல் வியாபார பணிகளை மேற்கொண்ட குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களையும் பள்ளியில் சேர்த்து விடுதியின் மூலம் தங்கி படிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது பிள்ளைகள் முழுமையான அளவிற்கு பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசின் திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்படும். தகுதியுள்;ளவர்கள் அரசு திட்டங்களை பெற்று பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி; தெரிவித்தார்.
கரூர் ஊராட்சி ஒன்றியம் அரசு காலனியைச்சேர்ந்த கஜேந்திரன்; தெரிவிக்கையில் கரூரில் நான் ஐம்பது ஆண்டு காலமாக வசித்து வருகிறேன். எங்களுடைய குலத்தொழில் பாசி, பவழங்கள் விற்பனை செய்வது மட்டுமே தொழிலாக இருந்து வந்தது. அதுவும் ஊர், ஊராக சுற்றித்திரிந்துதான் பிழைக்கவேண்டிய நிலை இருந்து வந்தது. அதனால் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் நிலையற்ற நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்த பின்னர் தான் எங்களையும் மனிதர்களாக மனிதநேயத்துடன் அரவணைத்து எங்களுக்காக நிரந்தரமான வீடுகளை வழங்கியதுடன் ஒரே இடத்தில் சொந்தமாக தொழில் செய்வதற்கு கடனுதவி வழங்கி தொழில் செய்ய வழிகாட்டியதுடன் எல்லோரையும் போல் நாங்களும் நியாய விலைக்கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்காக குடும்ப அட்டை, வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதுடன் தற்பொழுது எங்களால் நம்பமுடியாத அளவிற்கு எங்கள் வீட்டுப் பெண்கள் சௌரியமாக சமையல் செய்ய மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி கனவு வாழ்க்கையை நிஜவாழ்க்கையாக மாற்றி அமைத்துக்கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களே. தற்பொழுது நான் நகரின் மைய பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வருகிறேன். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவுப்படி அரசாங்க இடத்தில் கடை கட்டி தந்துள்ளதால் எனது குடும்பத்தாருடன் குலதொழிலான பாசி மற்றும் பவழங்கள் விற்பனை செய்து வருகிறேன். அதற்கு கடனுதவியும் அம்மா அவர்களே வழங்கியதால் நான் மட்டுமின்றி எங்கள் சமுதாயமே அம்மாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாகவே வாழ்வோம் என தெரிவித்தார். மணவாசி ஊராட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவிக்கையில் கரூரில் நான் எனது தந்தை காலத்திலிருந்து வசித்து வருகின்றேன். எங்களது குலத்தொழில் பாசி மற்றும் பவழங்கள் விற்பனை செய்வது மட்டுமே தொழிலாக இருந்து வந்தது. கல்வியறிவு என்பதே எங்களுக்கு கிடையாது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் தான் எங்களது பிள்ளைகளுக்கு கல்வியறிவு பற்றிய அவசியம் தெரிந்தது. தற்பொழுது எங்களது பிள்ளைகளும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கின்றனர். நாங்கள் தான் கல்வி கற்க முடியாமல் போனாலும் எங்களது பிள்ளைகள் கல்வி கற்பதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. இந்தப் பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். கல்வி மட்டுமின்றி நாங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்குடன் எங்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உதவி செய்துள்ளார்கள். நாங்கள் ஊர், ஊராக சுற்றித்திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் தொழில் செய்ய உதவி செய்த அம்மா அவர்களுக்கு என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம். நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்க குடும்ப அட்டை, வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதுடன் எங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வீடுகள் கட்டிக்கொடுத்து சுயதொழில் செய்ய பொருளாதாரக்கடனுதவி வழங்கிய தங்க மனம் கொண்ட கடவுள் மாண்புமிகு அம்மா அவர்கள் தான் என தெரிவித்தார்.
தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்
பாவூர்சத்திரம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய. தி.மு.க,செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரம் ஒன்றிய தி,மு.க அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்தலைவர் தி.காசிமணி தலைமைதாங்கினார் சுரண்டை பேருர்கழக செயலாளர் வே.ஜெயபாலன்.ஒன்றியபொருளாளர் இராஜேந்திரன்.ஒன்றிய துணைசெயலாளர் ஸ்டீபன்சத்தியராஜ்.ஜேசுராஜன் மாவட்டபிரதிநிதிகள் இராமர்.வேல்சாமி.ஆகியோர் முன்னிலைவகித்தனர் குலசேகரப்பட்டி ஊராட்சி செயலாளர் மதிச்செல்வன் வரவேற்றார். ஒன்றியகழக செயலாளர் பொ.சிவபத்மநாதன் கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசினார் ,நாகூர்ஹனிபா , ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் மற்றும் ஒன்றியபகுதிகளில் மறைந்த கழகத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர அரசுக்கு கண்டனம்.,மின்வெட்யை சீர் செய்ய தவறிய அரசை கண்டித்தும்…
புதிய வாக்காளர்சேர்ப்பு.ஆதார்அட்டை இணைப்பு பணியில் தீவிரமாக செயல்படுவது..
கலைஞர் பிறந்தநாளில் 92நபர்கள் இரத்த தானம் வழங்குவது என்றும்.ஒவ்வொரு சனி ஞாயிற்று கிழமைகளில் தொடர் தெருமுனைக்கூட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
.ஸ்டாலின் பிறந்த நாளில் இரத்ததானம் வழங்கிய கழக தோழர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்சியில்ஊராட்சி செயலாளர்கள் தெய்வராஜ்.மாணிக்கராஜ்.ஜெயராஜ்.காளிச்சாமி.முத்துப்பாண்டியன்.சு.முருகன்.முருகேசன்.இரா.சமுத்திரபாண்டியன். அப்துல் காசிம்.சு.நாகராஜ்.ஆர்.சமுத்திரபாண்டியன் ஒன்றியபிரதிநிதிகள் சிவசக்தி.செல்லத்துரை. மாரிமுத்து .அருள்தங்கம்அப்துல் சேட்டு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரணி ஊராட்சி செயலாளர் க.சீனித்துரை நன்றி கூறினார்.
எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
கீழப்பாவூர்: முன்னாள் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் ஒன்றியச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த கீழப்பாவூரை சேர்ந்த கு.காளிமுத்து சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவரது குடும்பத்திற்கு, கட்சி பிரமுகர்கள் மூலம் நிதி திரட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழப்பாவூர் யூனியன் துணைத்தலைவர் உத்திரகுணபாண்டியன், , கீழப்பாவூர் நகர செயலாளர் ஆர.பாஸ்கர், மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் மு.சேர்மப்பாண்டி, பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராதா, கூட்டுறவு சங்க தலைவர்கள் சுரேஷ்லிகோரி, வேல்சாமிபாண்டியன், யூனியன் கவுன்சிலர் ஆண்டபெருமாள், மேலவைபிரதிநிதி வி.கே.கணபதி, மாநில பேச்சாளர் அப்பாத்துரை, ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

