Home Blog Page 6095

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

red-sanders-killed-andhra ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ஆந்திர மாநில அரசு இதனைத் தெரிவித்தது. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆந்திர அரசின் சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இ. த. ச. பிரிவு 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது, ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…

 

 

 

 

 

 

 

 

 

 

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

rajendran-arrested-chit சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கு 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ர.தன்ராஜ் (51). இவர் விருகம்பாக்கம் ஸ்பெசிபிக் வில்லா முதல் பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த அ.ராஜேந்திரனிடம் (57) ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தாராம். இதேபோல பலர் ராஜேந்திரனிடம் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பலரது சீட்டு முதிர்வடைந்த பின்னரும், ராஜேந்திரன் அவர்களுக்கு பணத்தைக் கொடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தன்ராஜ், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தார். தன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ராஜேந்திரன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து, ராஜேந்திரன் புதன்கிழமை நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், சென்னை தங்கச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தனது மனைவி பெயரில் கோயம்பேட்டில் சாந்தி ஹோட்டல் வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், குடும்பச் செலவுக்காகவும், ஹோட்டல் தொழிலில் அதிக வருமானம் இல்லாமலும், ஹோட்டலை விரிவுபடுத்தவும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் ஏலச்சீட்டு நடத்தி, அதில் கிடைத்த பணத்தை குடும்பத்துக்காகவும், ஹோட்டலை விரிவாக்கவும் செலவு செய்துள்ளார். மேலும், கந்துவட்டிக்கு பணம் கொடுத்தும் உள்ளார். இதனால் பணத்தைக் கட்டியவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். இவ்வாறு ஏலச்சீட்டு மூலம் ராஜேந்திரன் ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போதைய செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…

 

 

 

 

 

 

 

 

 

 

பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக, நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. பெட்ரோல் விலை (உள்ளூர் வரிகளை கணக்கிடாமல்) லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலைக் குறைப்புக்கு ஏற்ப உள்ளூர் வரிகளும் குறைந்ததால், நகரங்களுக்கு ஏற்ப விலை வேறுபட்டது. சென்னையில், பெட்ரோல் லிட்டர் ரூ.62.75 ல் இருந்து, 85 காசு குறைந்து ரூ.61.90 க்கு விற்கப்படுகிறது. தில்லியில் 80 காசு குறைந்து, ரூ.59.20 க்கும், கொல்கத்தாவில், 67 காசு குறைந்து, ரூ.66.81 க்கும், மும்பையில் 84 காசு குறைந்து, ரூ.61.69 க்கும் விற்பனை ஆனது. சென்னையில் ரூ.51.61 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.1.40 விலை குறைந்து, ரூ.50.21க்கும், தில்லியில், ரூ.1.30 குறைந்து ரூ.47.20 க்கும். கொல்கத்தாவில் ரூ.1.15 குறைந்து, ரூ.52.08க்கும், மும்பையில் ரூ.1.43 குறைந்து ரூ.54.26க்கும் விற்பனை ஆனது. “கடந்த முறை விலை குறைக்கப்பட்ட பின்னர், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பலனை நுகர்வோருக்கு அளிக்க, இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுகிறது” என்று இந்திய எண்ணெய்க் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய செய்திகள்

petrol-diesel

பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

இந்தியா, சற்றுமுன்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது…

 

 

 

 

 

 

 

 

 

 

ஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஆந்திராவில் இருபது தமிழர்களை சுட்டு வீழ்த்திய ஆந்திர மாநில அரசை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ)சார்பில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் D.S.R.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சை தமிழ்ப்பித்தன் வரவேற்றார்journalist-union. காங்கிரஸ் கட்சி சார்பில் அமெரிக்கை நாராயணன், அ,தி.மு.க.சார்பில் ஆவடி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஜாகுவார் தங்கம், CPMA வெங்கட்ராஜ், ஆரணி C,குணசேகரன், கோவை A.K.பிரபாகரன், பரபரப்பு செய்தி ராமநாதன், மற்றும் TUJ நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். D.அல்லாபகேஷ், சார்லஸ் S.குணசேகரன்,G.மேகராஜன், பிப்பிள் டுடே G.சத்யநாராயண், நமது நகரம் சரவணன், V.அனந்தராமன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

dindivanam-car-accidentவிழுப்புரம்: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். திருச்சி – லால்குடியை அடுத்துள்ள அன்பில் பகுதியைச் சேர்ந்த மோகன் (61) தனது குடும்பத்தினருடன் சென்னை நோக்கிச் சென்றார். காரை லால்குடியைச் சேர்ந்த சசிகுமார் (38) என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில் கார் சென்றபோது, திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பனை மரத்தில் மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த மோகன், அவரது தங்கை வசந்தா (47), வசந்தாவின் மகள் ஹரிணி (22), மோகனின் மகள் ரம்யா (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரம்யாவின் மகள்கள் லூசியா(8), சமயா(5), ராஜேஷ் என்பவரின் மகள் மகாதி(6) மோகனின் மனைவி குமாரி (54) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த சசிகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஒலக்கூர் போலீஸார் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!

villupuram gh விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உயிரிழந்ததால், குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. புதன்கிழமை நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் விழுப்புரம் உள்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 7 குழந்தைகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தன. இந்தக் குழந்தைகளில் உளுந்தூர்பேட்டை- ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனனின் 27 நாள் ஆன பெண் குழந்தை, திருக்கோவிலூர்- ரங்கராஜநல்லூரைச் சேர்ந்த இளையராஜாவின் 3 நாள் ஆண் குழந்தை, திருக்கோவிலூர் ஏமபேர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷின் 4 நாள் ஆண் குழந்தை, சங்கராபுரம்- சீர்பனந்தலைச் சேர்ந்த முனியனின் 3 நாள் ஆண் குழந்தை என 4 குழந்தைகள் புதன்கிழமை அடுத்தடுத்து உயிரிழந்தன. குழந்தைகள் இறப்பு குறித்து, மருத்துவமனை மருத்துவர்கள் கூறியபோது, இறந்த குழந்தைகளில் 3 குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளன. மற்றொரு குழந்தை பிறந்து 27 நாள்கள் ஆகியிருந்தது. அந்தக் குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தனர். பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்தக் குழந்தைக்கு கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அந்தக் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினர். ஆனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா சதாசிவம் இது குறித்துக் கூறியபோது, குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகளுக்கு நாங்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரே நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது என்றார். இந்நிலையில், இன்று காலை வரை அங்கே சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 குழந்தைகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்

chennai_press_clubசென்னை ஏப்.24 ஆம் தேதி சென்னையில் குண்டு வெடிக்கும். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெயரில் மர்ம கடிதம் நேற்று வந்தது. சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள சென்னை பிரஸ் க்ளப் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நேற்று மர்ம தபால் ஒன்று வந்தது. அதில் இருந்த கடிதம் சிவப்பு மையால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில்… சென்னையில் 50 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக்கொல்வோம். கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைப் போன்று சென்னையிலும் வரும் ஏப்ரல் 24–ந் தேதியன்று குண்டுகள் வெடிக்கும். – இப்படிக்கு, ஐ.எஸ். என்று எழுதப்பட்டிருந்தது. இதுபோன்ற கடித நகல் சட்டம்–ஒழுங்கு மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர் மன்றத்துக்கு அனுப்பினால்தான் அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு இந்த தகவல் போய் சேரும் என்பதால், இந்தக் கடிதத்தை பத்திரிகையாளர் மன்றத்துக்கு அனுப்பி உள்ளோம் என்றும் கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த மர்ம கடிதம் தொடர்பாக சென்னை நகர உளவுப்பிரிவு போலீசாரும், திருவல்லிக்கேணி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடிதம் எங்கிருந்து வந்துள்ளது என்பது பற்றியும் விசாரணை தீவிரமாக நடக்கிறது.

மங்கலச் சொல் என்ற மனோதத்துவம்!

Kannadasan `மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது.சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது. மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில், யாரோ யாரையோ, நீ நாசமாய்ப் போக’ என்றோ,உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக் கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது. இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது. நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை. மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும்வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள். வலம்’ என்பதுநாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது. `வலியோம், வல்லோம், வல்லம், வலம்’ இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை. தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள் இந்துக்கள். சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது, `போய் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு போவார்கள். அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே. அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும் போது, “போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதன் பொருள், “இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டியதாயிருக்காது” என்று நம்பிக்கைட்டுவதாகும். மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்? உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள், இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாக விரியும். மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் `பதினாறும் பெற வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள், விழுது விட்டு விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்! ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கலவழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள். `கணவரின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள். யாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் `வாழ்க’ என்பார்கள். `தும்மினேனாக வழுத்தினாள்’ என்றான் வள்ளுவன். தும்மும் போது சிலர் `நூறு வயது’ என்பார்கள். எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள். தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள்.வளர்த்து விடு’ என்பார்கள். வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதைக் குறிக்கும் போது `சிவலோகப் பதவியடைந்தார்; பரலோகப் பிராப்தியடைந்தார்’ என்பார்கள். பெண் ருதுவாவதைப் `பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள். அதாவது `பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள்’ என்பது அதன் பொருள். மணமக்களின் முதலிரவை `சாந்தி முகூர்த்தம்’ என்பார்கள். “காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள். இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும். நான் சொல்லுவது சராசரி இந்துக்களை. ஆத்திரக்காரர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல. நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில்வாவரசி’ என்பார்கள். பெரும்பாலான இந்து சமூகங்களில் `கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணியவேண்டும்’ என்று விதிவகுத்து வைத்திருப்பது ஏன்? இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும்தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும். ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே. அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன. “இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைப்பதன் நோக்கம். வாழாமல் இறந்துபோன குழந்தைகளை, வாலிபர்களை,கன்னிப்பெண்களை, இந்துக்கள் புதைக்கிறார்கள். கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதியடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள்? “ஆறுபோல உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்கே. இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள். இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும். மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும். அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், `அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்லுவது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம். “பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.” என்றான் வள்ளுவன். உலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது. நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.

கவியரசர் கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்து மதத்தில்” இருந்து…

சிதம்பரத்து ஆட்டக்காரன்!.

20683_671948076266709_3512172854606087227_n (இந்த வார கல்கி) ஆடல் கலை என்றதும் ஒரு விநோத விளையாட்டுதான்! நிஜமாக வாழ்க்கையிலே எழும்பாத பாவங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாத ஜதி பேதங்களைப் போட்டுக் கொண்டு, இல்லாத பாத்திரங்களை இருக்கிறதாக வைத்துக் கொண்டு அபிநயம் செய்கிறதால் அது விளையாட்டுதானே? “நிஜம்’ என்று நாம் நினைக்கும் வாழ்க்கையே பொய்ம்மாயையாகிவிடும் அநுபூதி வரை அபிநயக் கலை அதன் உச்ச ஸ்தானத்தில் கொண்டுவிட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானாலும், அதுவும் விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டு விநோதமாகவே போவதுதானே? உச்சியான பூர்த்தி ஸ்தானத்தில் விளையாட்டே வினையாவதாகச் சொல்லலாம்! (ஸ்ரீசரணர் சிறிது பொழுது தமக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்து, பின்னர் தொடர்வார்) ஸரியாய்ச் சொன்னால், விளையாட்டால் வினையே போவதாகச் சொல்லலாம்! அப்படிப்பட்ட நாட்டிய விளையாட்டாகவே இந்தப் பொய்ம் மாய ஜகத்தின் ஸ்ருஷ்டியிலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து விடுவித்து சிதம்பரமான ஞானாகாசமாகிற பரம ஸத்யத்தில் சிவமாகிற தன்னுடன் தானாகவே ஐக்கியப்படுத்திக் கொள்வதான அவுக்ரஹம் வரையில் “ஐந்தொழில்’கள் என்கிறவற்றைப் பண்ணி விடுபவன்தான் சிதம்பரத்து ஆட்டக்காரன். ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் (என்பவை) எல்லாருக்கும் தெரிந்த மூன்று தொழில்கள். இந்த மூன்றுமே பரம ஸத்யத்தை மறைத்துவிடும் மாயை என்ற திரைக்குள் நடப்பவைதான்! அந்த மாயத் திரையைப் போட்டு மறைக்கும் “திரோதானம்’ என்பது நாலாவது தொழில், திரையை நீக்கி, ஞானாகாசத்தில் மோக்ஷமளிக்கிற “அநுக்ரஹம்’ ஐந்தாவது தொழில். சாந்தன் எனப்படுகிற பரமேச்வரன் ஆட்டமாக ஆடிப் பண்ணும் இதையே மாயா விநோதன் எனப்படுகிறவன் சாந்தமான தூக்கமாகப் பண்ணிக்காட்டுவதில் அந்த இருவரும், யுனிடி இன் டைவர்சிடி நிரூபித்துக் காட்டுகிறார்கள்.

  • ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?

வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன? நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015, “வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே’ என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை. 1928… மேட்டூர் அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டு இருந்தார். பக்தர்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ “கோவிந்த கோவிந்த…’ என்ற கோஷம் காற்றில் மிதந்து வந்தது. “”இந்த சப்தம் எங்கிருந்து வருகிறது?” எனக்கேட்டார் பெரியவர். “”பக்கத்தில் பாலமலைன்னு ஒரு இடம்… அதன் உச்சியில் சித்தேஸ்வரர் கோயில் இருக்கு! அங்கு ஏறும் பக்தர்கள் தான் இப்படி கோஷமிடுவார்கள்,” என்றார் ஒருவர். “”சிவன் கோயிலில் கோவிந்த கோஷமா.. ஆச்சரியமா இருக்கே! நானும் அந்தக் கோயிலுக்கு போகணும்!” என்றார் பெரியவர். “”அந்த மலையில் ஏற வேண்டுமானால் 12 மைல் (18 கி.மீ.,) நடக்கணும். வழித்துணைக்கு ஆள் வேணும்,” என்ற ஒரு பக்தர், அங்கு வழிகாட்டியாக இருந்த பெருமாள் கவுண்டர் என்பவரை அழைத்து வந்தார். கவுண்டருக்கு அப்போது 25 வயதிருக்கும்.கவுண்டர் வழிகாட்ட பெரியவர் ஆர்வமாக மலையேறி சித்தேஸ்வரரை தரிசித்தார். “”நீங்க வேணுமானா பாருங்க! இந்த சித்தேஸ்வரருக்கு ஒருத்தர் தன் சொந்தச் செலவில் கோயில் கட்டுவார். இது நடக்கும்,” என்று தன்னுடன் வந்த பக்தர்களிடம் சொன்னார் பெரியவர். ஆனால், ஆண்டுகள் வேகமாக ஓடி விட்டது. 62 ஆண்டுகள் சென்ற பின் 1990ல் சேட் ஒருவர் சித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவரே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். மேட்டூர் அணைக்கு வந்த பெரியவர், “”அடியிலே பொக்கிஷம்’ என்று சொன்னார். அங்கிருந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அதற்கான விளக்கமும் யாரும் கேட்கவில்லை. 70 வருடங்கள் கழித்து, அணையில் சில பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. உள்ளிருந்து அனுமன், ராமன், சீதா சிலைகள் கிடைத்தன. அப்போது தான் பெரியவர் சொன்னதன் அர்த்தம் ஊர் மக்களுக்கு புரிந்தது. சிலைகளை ஒரு மினிலாரியில் ஏற்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர். அவற்றை பார்வையிட்ட பெரியவரிடம், “”இந்தச் சிலைகளைக் கொண்டு நாங்கள் கோயில் கட்ட தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்,” என்றனர். “விரைவில் நடக்கும்’ என ஆசிர்வதித்த பெரியவர், “”அது சரி…உங்க ஊருக்கு நான் 1928ல் வந்த போது, எனக்கு வழிகாட்டினாரே பெருமாள் கவுண்டர்…அவர் சவுகரியமா இருக்காரா!” என்று கேட்டார். வந்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். நேற்று பார்த்த ஒருவரையே மறந்து விடும் இந்தக் காலத்தில், 70 வருடம் கழிந்தும் தன்னோடு வந்த வழிகாட்டியை பற்றி விசாரித்தது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது. “”அவருக்கு 95 வயசாச்சு! இன்னும் நல்லாஇருக்கார்,” என்று அவர்கள் சொல்லவே, ஒரு தாம்பாளத்தில் புதுவஸ்திரங்கள் வைத்து, இதை அவரிடம் கொடுத்துடுங்கோ! நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ” என்றார் பெரியவர். மகாபெரியவரின் கருணைக்கும், ஞாபகசக்திக்கும் ஈடு இணையே இல்லை18698_10153209347029244_3030028360467212073_n