Home Blog Page 6096

எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார்.

தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்று பவானி சிங் கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள், இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து பவானி சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டபோது, “இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையின் போது எனக்கு ஆதரவாக தீர்ப்பு அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார் பவானி சிங்.

Recent Posts

supreme-court-India

எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

இந்தியா, சற்றுமுன்

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு…

 

 

 

 

 

 

 

 

 

 

சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு

யுஜிசி சார்பில் சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறை சிபிஎஸ்இ நடத்தியது. இதேபோல இந்த முறையும் யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெட் தகுதித் தேர்வு பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், மானுடவியல், கல்வியியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா, சமஸ்கிருதம் உட்பட 84 பாடங்களுக்கு ஜூன் 28ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வு எழுதலாம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். ஏப்ரல் 16ம் தேதி முதல் www.cbse.nic.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 15ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்

DIET – Instructions and Private Candidate Application – May – 2015  மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.04.2015  முதல் 22.04.2015  மாலை 5.00 மணி வரை அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சென்னையில் இன்று பலத்த மழை: நாளையும் நீடிக்குமாம்!

rain-sengottaiஅக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், நேற்று வெப்பத்தைத் தணிக்கும் வகையில், சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. குமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை திடீரென கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசை வாக்கம், சாந்தோம், வடபழனி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், திருவான்மியூர், அடையார், பாலவாக்கம், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பெருங்குடி, தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. காலை 8.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நீண்ட நேரம் விடாமல் நீடித்ததால், வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டனர். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மழை நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இன்று முதல் படப்பிடிப்பில் “புரொடக்ஷன் நெ. 14”

சீ.வீ.குமார் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” தயாரிப்பில் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” வழங்கும் புதிய படம் “புரோடக்ஷன் நெ.14”
மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்றபடங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமார் அவர்களின்“திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”.
தற்போது திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் தனது 14வது படத்தின் தயாரிப்பை தொடங்கியுள்ளது. சூதுகவ்வும்  வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்டுடியோ கீரின் நிறுவனம் வழங்குகிறது.
விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
production num
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொக்குப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி பகுதியில் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார்., அந்தப் பகுதியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரை வீட்டுக்குள் புகுந்து, அவர் படிக்கும் அதே பள்ளியில் படித்துவரும் 7ஆம் வகுப்பு மாணவனும், 9ஆம் வகுப்பு மாணவனும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து போலீஸில் புகார் பதிவு செய்யப்பட, தலைமறைவாக உள்ள மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்

VKSingh ராய்புர்: கடந்த 1987ல் இலங்கைக்கு ஐபிகேஎஃப் – இந்திய அமைதிப் படையை அனுப்பியது, நமது உச்சபட்ச கொள்கை அளவிலான தோல்வி என்று குறிப்பிட்டார் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங். உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்ற “தைரியமும், தண்டனையும்´ என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே.சிங் பேசியபோது குறிப்பிட்டது… விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போரில், இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது. இது, நமது கொள்கை ரீதியில் ஏற்பட்ட உச்ச பட்ச தோல்வி. இந்திய அமைதிப் படையால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அமைதிப்படைக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி, இந்திய ராணுவத்தால் அமைதியை ஏற்படுத்த முடியாமல் போனதுதான்… மேலும், அமைதியை ஏற்படுத்த முடியாமல், இந்திய ராணுவமே போரில் சிக்கிக் கொண்டது. இலங்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பலமுறை நெருங்கியபோதும், ஒவ்வொரு முறையும் ஒரு கட்டளைகள் வந்து, அவர் தப்பிச் செல்வதற்கான பாதுகாப்பான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தன… என்று கூறினர் வி.கே.சிங். அதே நேரம் அப்போதைய இலங்கை அதிபர் ரனசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு, இந்திய அமைதிப் படையை எதிர்ப்பதற்கு பலவிதங்களில் உதவினார் என்றும் கூறினார் வி.கே.சிங்.

2ஜி முறைகேடு: இறுதி வாதம் தொடக்கம்; மே 25க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் இன்றுதுவங்கியது. இதன் அடுத்த கட்ட விசாரணை வரும் மே 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கின் இறுதி வாதம் ஏப். 15 ஆம் தேதி தொடங்கும் என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மார்ச் 24ஆம் தேதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை இறுதி வாதம் தொடங்கியது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தின் போது தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2ஜி கொள்கை முடிவு தொடர்பாக ஆ.ராசா அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை தவறாக வழிநடத்தினார். தனக்கு சாதகமான தனியார் நிறுவனங்களுக்கு ஏற்றபடி, அலைக்கற்றை ஒதுக்கீடு பெறத் தகுதியில்லாத ஸ்வான் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசைகளை ஒதுக்கினார் – என்று ஆ.ராசா மீது சிபிஐ தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டினார். இதில் மேலும் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க அவகாசம் கேட்டார்.ஆ.ராசா தரப்பிலும் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து அடுத்த கட்ட வாதம் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்வானியைக் காணவில்லை: காந்திநகரில் பரபரப்பு போஸ்டர்கள்!

advani-missing-posters-hits-gandhinagar ஆமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அத்வானியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியைக் காணவில்லை என்று தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததற்குப் போட்டியாக தற்போது, அத்வானி குறித்து ஒட்டப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. இந்நிலையில் காந்திநகர் தொகுதியில் தங்கள் எம்.பி அத்வானியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,‘கடந்த சில ஆண்டுகளாக அத்வானியைக் காணவில்லை தொகுதி மக்களாகிய நாங்கள் அவரிடம் தொகுதியின் பிரச்னைகள் குறித்துத் தெரிவிக்க விரும்புகிறோம். காந்திநகரில் அவரை யாராவது பார்த்தால் தெரிவிக்கவும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில், இவண் என ஆம் ஆத்மி கட்சி பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த போஸ்டர்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ: மிரட்டி மீண்டும் கற்பழித்த 5 பேர் கைது

தருமபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டியே மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை வலை வீசித் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியும் தர்மபுரி மாவட்டம் கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த ராகுல்(19) என்ற இளைஞரும் நண்பர்களாம். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, வகுப்பு முடிந்து தன் கிராமத்துக்குத் திரும்பினார். அவர் வரும் வழியில் மொரப்பூர் அருகே உள்ள கோபிநத்தம்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞர்கள் இருவர், அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அந்தச் சிறுமியை மிரட்டி, அருகில் உள்ள சுடுகாட்டின் மேல்புறத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் அந்தக் காட்சிகளை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், தாங்கள் அழைக்கும் போதெல்லாம் இவ்வாறு வரவேண்டும். இல்லையென்றால் பதிவு செய்த வீடியோக்களை வெளியில் விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்தச் சிறுமி பயந்துள்ளார். தொடர்ந்து மறுநாளும் அந்த 2 இளைஞர்களும் அந்த மாணவியை வழிமறித்து, செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை போட்டுக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் பண ஆசை காட்டி அந்தச் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதை அடுத்து அந்த வீடியோ காட்சிகளை 2 இளைஞர்களும் தங்களின் நண்பர்களான சந்தோஷ்(19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு 17 வயது இளைஞருக்கும் காட்டியுள்ளனர். அதன் பின்னர், இந்த நான்கு இளைஞர்களுடன் கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியின் நண்பர் ராகுல்(19), போஸ் என்கிற சந்திரபோஷ்(20) ஆகிய 6 பேரும் சேர்ந்து மீண்டும் அந்த மாணவியிடம் வீடியோவைக் காட்டி மிரட்டி ஊரின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அப்போதும் அதனை செல்போனில் வீடியோ படம் எடுத்துள்ளனர். ஆறு பேரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலால், மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் அந்த மாணவியால் எழுந்து நடக்கக் கூட இயலவில்லை. இந்த நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து மாணவி தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, அங்கே விரைந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து, ஆட்சியரிடம் நடந்த சம்பவங்களை அவர்களும் கூற, உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது. போலீஸாரிடம் அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, இச்சம்பவத்தில் தொடர்புடைய கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவியின் நண்பர் ராகுல்(18), ஆர்.கோவிந்தநத்தம்பட்டியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், சந்தோஷ்(19) என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் தர்மபுரியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரில், ஒரு இளைஞர் போலீஸார் தேடுவதை அறிந்து, தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியை போலிஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.