Home Blog Page 6098

நெல்லை மாவட்டம் அரியப்பபுரத்தில் வில்லிசை மாநாடு

திருநெல்வேலி: அரியப்பபுரத்தில் நெல்லைமாவட்ட வில்லிசை கலைஞர் சங்கம் சார்பில் 30 வது வருட வில்லிசை மாநாடு நடைபெற்றது 34 வில்லிசை குழுவினரின் தொடர் வில்லிசை நிகழ்ச்சிக்கு இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வில்லிசை கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கி வாழ்த்தி பேசினார் அவர் பேசுகையில் 30 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது முத்தமிழையும் வில்லிசையில் ரசிக்கலாம் கடவுளின் வரலாறு ,தலபுராண சிறப்பு ,அரசர்களின் ஆட்சி விதம் என அனைத்தயும் வில்லிசை கலைஞர்கள் கண் முன்னே கொண்டு வரும் சிறப்புபெற்றவர்கள் ,முன்பெல்லாம் நம் முன்னோர்கள் விழாக்கலங்களில் வில்லிசையை விடிய விடிய கேட்டு ரசிப்பார்கள் இப்போதெல்லாம் இந்த கலையை ரசிக்க மறந்துவிட்ட இந்த தலைமுறை தொலைக்காட்சியில் பெரும் பாலான நேரத்தை செலவு செய்து விடுகின்றனர் ,இந்நிலைமாறி மரபு சார்ந்த கலைகளையும் தேர்ந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் இவ்வாறு பேசினார் விழாவில் ஒன்றிய துணைத்தலைவர் குணம் ,மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி,கீழப்பாவூர் பேரூர் கழக செயலார் பாஸ்கர் ,தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் மதியழகன் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் இராதா ,தமிழ்[எ] இராமசாமி ,மற்றும் சுரேஷ் லிகோரி ,உட்டபட பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை பால்வண்ணபெருமாள் செய்திருந்தார்

ரயில்வே: தமிழகத்தின் தலையில் மிளகாய் அரைக்கும் கேரளம்!

05-04-15 Railway photo 01 கேரளவுக்காக இயக்கப்படும் ரயில்களை பராமரித்து கழுவும் கக்கூஸ் ஆக தமிழக ரயில் நிலையங்கள்…. தமிழகத்தில் உள்ள  ரயில் இருப்புபாதை தடங்களில் ஓசூர் – சேலம் வழித்தடம் தவிர மற்ற அனைத்து வழித்தடங்களும் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய கோட்டங்கள் தமிழகத்தில் உள்ளது. இது தவிர தமிழகத்தில் உள்ள இருப்புபாதைகளில் ஒரு சில பகுதிகள் கேரளாவில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களில் கீழ் அமைந்துள்ளது.  ஆக மொத்தம் தமிழகத்தில் மொத்தம் 3846 கி.மீ தூரம் இருப்புபாதை வழித்தடங்கள்  உள்ளன. தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அந்த ரயில் குறிப்பிட்ட அளவு கி.மீ தூரம் இயக்கப்பட்டதும் பராமரிப்புக்கு என தனியாக கட்டப்பட்டுள்ள பிட்லைன் என்று சொல்லப்படும் ரயில்வே தண்டவாளத்தின் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்படும். இவ்வாறு பாராமரிப்பதற்கு என ரயில்வே வாரியம் தனியாக பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் அடிப்படையில் ரயில்கள் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பல்வேறு ரயில்நிலையங்களில் உள்ள பிட்லைனில் வைத்து ரயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கோயம்பத்தூர், ஈரோடு, ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் ரயில்களை பராமரிக்கும் பிட்லைன் பனிமனைகள் உள்ளது. தமிழகத்துக்கு என ரயில் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் எல்லாம் இந்த ரயில் நிலையங்களிலிருந்து அதிக அளவில் புறப்படும் படியாகவே அறிவிக்கப்படும். ஏனென்றால் ரயில்கள் எல்லாம் இதில் உள்ள எதாவது ஒரு பனிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தெற்கு ரயில்வேயின் கீழ் கேரளாவில் திருவனந்தபுரம், ஷொர்ணூர், பாலக்காடு, கொச்சுவேலி, ஆலப்புளா, எர்ணாகுளம் ஆகிய இடங்களிலும் கர்நாடகவில் உள்ள மங்களுரிலும் பிட்லைன் பனிமனைகள் மூலமாக ரயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு ஓவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்டிஜெட்டில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்படும் சொற்ப புதிய ரயில் வழித்தடங்களில் ஒன்றிரண்டாவது தமிழகத்திற்குள் (கோவை, நெல்லை  மற்றும் குமரி) நுழைகிற நிலையில்தான் ரயில்கள் இருக்கும் உண்மையில் அத்தகைய ஒரு ரயிலுக்கு தமிழக மக்கள் கோரிக்கை வைத்திருக்வே மாட்டார்கள். ஆனாலும் அழையா விருந்தாளியாக பெரும்பாலும் நள்ளிரவு வேளைகளில் தமிழகத்திற்குள் தலையைக் காட்டிவிட்டு மறுநாள் நள்ளிரவில் இங்கிருந்து இந்த ரயில்கள் விடப்படும் விதத்தில் கால அட்டவணை நிர்ணயித்திருக்கும். இது முழுக்க முழுக்க பராமரிப்பு பணிகளுக்காகவே வேண்டி தமிழகத்திலிருந்து புறப்படுமாறு அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இணைக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் ரயில்களில் ஒரு தினசரி ரயில் கூட கேரளாவில் பராமரிக்கப்படுவது இல்லை. இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும், கர்நாடகாவில் உள்ள மங்களுரிலும் பராமரிக்கப்படுகிறது.  எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு:- தமிழகத்தில் ரயில் பராமரிப்பில் அதிக பிட்லைன்கள் சென்னையில்தான உள்ளது. இந்த காரணத்தினால்தான் மற்ற பகுதிகளை காட்டிலும் சென்னையிலிருந்து அதிக ரயில்கள்  அறிவித்து இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கேரளாவுக்கு என பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வளவு ரயில்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து அதே மாநிலத்துக்கு உட்ப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூட இயக்கப்படவில்லை. இவ்வாறு கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் சென்னையில் உள்ள பிட்லைன்களில் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அவைகளான திருவனந்தபுரம் – சென்னை மெயில், திருவனந்தபுரம் – சென்னை சூப்பர்பாஸ்டு, ஆலப்புழா – சென்னை தினசரி ரயில், திருவனந்தபுரம் – சென்னை முழுவதும் குளிர்சாதன ரயில், சென்னை – மங்களுர், சென்னை எழும்பூர் – குருவாயூர், சென்னை எழும்பூர் – மங்களுர், எர்ணாகுளம் – காரைக்கால் ரயில் ஆகிய ரயில்கள் ஆகும். இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள மற்ற பல்வேறு ரயில் நிலையங்களிலும் இது போன்ற பல்வேறு ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. இதைப்போல் திருநெல்வேலியில் திருநெல்வேலி – பிலாஸ்பூர், திருநெல்வேலி – ஹாப்பா ஆகிய ரயில்களும் ராமேஸ்வரத்தில் திருவனந்தபுரம் – சென்னை அனந்தபுரி ரயிலும், நாகர்கோவிலில் நாகர்கோவில் – ஷாலிமர், நாகர்கோவில் – காந்திதாம் , கன்னியாகுமரி – திப்ருகர், கன்னியாகுமரி – மும்பை தினசரி, கன்னியாகுமரி – ஜம்முதாவி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் விழுப்புரத்தில் மங்களுர் – புதுச்சேரி இரு ரயில்கள் என பல்வேறு ரயில் ஆகிய ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் ரயில்கள் பராமரிப்பு இவ்வாறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு பயணிகள் ரயில்களும் பராமரிக்கப்படுகிறது. இதில் அதிமான ரயில்கள் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிக்கப்படுகிறது. அவைகளான நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில்கள் அனைத்தும், திருவனந்தபுரம் – கொல்லம் பயணிகள் ரயில், கொல்லம் – புனலூர் பயணிகள் ரயில்கள் அனைத்தும், கொல்லம் – ஆலப்புழா பயணிகள் ரயில், ஆலப்புழா – எர்ணாகுளம் பயணிகள் ரயில், நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் ரயில், நாகர்கோவில் – கோட்டையம் பயணிகள் ரயில், கோட்டையம் – எர்ணாகுளம் பயணிகள் ரயில், எர்ணாகுளம் -நிலாம்பூர் பயணிகள் ரயில்,  கோட்டையம் – கொல்லம் பயணிகள் ரயில், கோயம்பத்தூர் – மங்களுர் பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் நாகர்கோவில் பராமரிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளாக தூத்துக்குடியில் கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயிலும், மதுரையில் மதுரை – புனலூர் பயணிகள் ரயிலும் பராமரிக்கப்படுகிறது. பரிதாப நிலையில் மங்களுர் தமிழகத்தில் இவ்வளவு ரயில் பராமரித்து இயக்கும் போது கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களுர் ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்தில் உள்ளது. இந்த மங்களுர் ரயில் நிலையத்தில் பராமரித்து கேரளா பயணிகளுக்கு வேண்டி திருவனந்தபுரம் – மங்களுர், திருவனந்தபுரம் – மங்களுர் மாவேலி ரயில்,  நாகர்கோவில் – மங்களுர் பரசுராம் ரயில், நாகர்கோவில் – மங்களுர் ஏரநாடு ரயில், மங்களுர் – சென்னை,  மங்களுர் – சென்னை வெஸ்டு கோஸ்டு,  மங்களுர் – கோவை இன்டர்சிட்டி, மங்களுர் – ஜம்முதாவி  ஆகிய தினசரி ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. கேரளாவில் பராமரிப்பு செய்து தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்கள் கேரளாவில் பராமரிக்கப்பட்டு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களான ஒருசில ரயில்கள் இருக்கின்றன. இதில கொல்லம் – கன்னியாகுமரி மெமு ரயில், ஷொர்ணூர் – கோவை பயணிகள் ரயில்,   பாலக்காடு – கோவை, ஈரோடு – கோவை, கோவை – சேலம் பயணிகள் ரயில்கள் ஆகும். இதில் கொல்லம்  -கன்னியாகுமரி மெமு ரயில் 92 கி.மீ கேரளாவிலும் 51 கி.மீ தமிழகத்திலும் இயங்குகிறது. ஷொர்ணூர் – கோவை பயணிகள் ரயில் 75 கி.மீ கேரளாவிலும், 21 கி.மீ தமிழகத்திலும் பயணக்கிறது. இந்த ரயில்களும் கேரளாவை சார்ந்த பயணிகள் தமிழகத்துக்கு வந்து செல்வதற்காக வேண்டியே இயக்கப்படுகிறது. தமிழகத்துக்கு ஏற்படும் இழப்புகள் கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்கள் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிக்காமல் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக அளவு பராமரிப்பதால் இங்கு உள்ள பிட்லைன்கள் எப்போதும் பராமாரிப்பு பணிகளுக்கு வேண்டி நிரம்பி வழியும். இவ்வாறு இருப்பதால் தமிழக பயணிகளுக்கு பயன்படுமாறு புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். கடந்த  ஐந்து ஆண்டுகளாகவே தமிழக பயணிகள் அதிக அளவில் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில் புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ரயில்வேத்துறை இந்த கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு ரயில்கள் இயக்க தேவையான அடிப்படைகட்டமைப்பு வசதிகள் அதாவது பிட்லைன்கள் மற்றும் ஸ்டேபளிங் லைன்கள் இல்லாததே ஓர் முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு கேரளா ரயில்களை இங்கு பராமரிப்பதால் தமிழக பயணிகள் பயன்படும் படியாக புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்க முடியாது. இது தமிழக பயணிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தண்ணீர் பிரச்சனை:- சென்னையில் கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களில்  தினசரி  ரயில் பெட்டிகள் பராமரித்து சுத்தம் செய்யப்படுகிறது. ஒரு ரயில் பெட்டியை முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்வதற்கு சுமார் 2000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இது மட்டுமில்லாமல் ஒரு ரயில் பெட்டிக்கு பயணிகள் பயணம் இரண்டு தண்ணீர் நிரப்பும் கொல்கலன்களில் 1600 லிட்டர் தண்ணீர் வீதம் நிரப்பபடுகிறது. 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று கணக்கீட்டு பார்த்தால் அதுவே பெரிய அளவில் தேவைப்படுகிறது. இவ்வாறு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர் பிடிப்பதற்கும் அதிக அளவில் தண்ணீர் தேவைபடும். தற்போது சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தண்ணீர் சென்னை மெட்ரோ மூலமாக லாறிகளில் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில்வேத்துறைக்கு ரயில் பெட்டிகள் சுத்தம் செய்வதற்கு அதிக அளவு தண்ணீர் வினியோகிப்பதால் சென்னையில் உள்ள சதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையாக தண்ணீர் வினியோகிக்க முடியாமல் உள்ளது. இந்த ரயில்களை தண்ணீர் அதிகம் உள்ள கேரளாவில் பராமரித்தால் கேராளாவில் தண்ணீர் வளம் குறைந்துவிடும் என்று கேரளா அதிகாரிகள் அங்கு ரயில்களை பராமரிக்க முயற்சி மேற்கொள்வது இல்லை. தமிழக ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லை: தமிழகத்தில் பராமரித்து கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லாமல் கேரளாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லுமாறு இயக்கப்படுகிறது.  ஏனென்றால் தமிழக ரயில் நிலையங்களில் நின்று சென்றுவிட்டால் தமிழக பயணிகள் பயணம் செய்துவிடுவார்கள். இவ்வாறு தமிழக பயணிகள் பயணம் செய்தால் கேரளா மாநிலத்தவருக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்துக்காக வேண்டியே குறுகிய மனபான்மையுடன் நிறுத்தம் மறுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலே பராமரிக்கப்பட்டு தமிழக பயணிகளுக்கு பயன்படாமல் இவ்வாறு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் நீட்டிப்பு செய்ய மறுப்பு: கேரளாவில் பராமரிக்கப்பட்டு கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களை நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு நீட்டிப்பு செய்து தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை செய்யலாம் என்று என்று கோரிக்கை வைத்தால் கூட அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஏனென்றால் இந்த ரயில்கள் குறைந்த பயணம் தூரம் வழியாக மும்பை செல்வதால் தமிழக பயணிகள் பயணம் செய்துவிடுவார்கள். இவ்வாறு தமிழக பயணிகள் பயணம் செய்வதால் செய்வதால் கேரளா மாநிலத்தவருக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்றும் இந்த ரயில்கள் தமிழக பயணிகளுக்கும் பயன்படும் படியாகவும் அமையும் என்ற காரணத்தால் எந்த ஒரு ரயிலையும் நீட்டிப்பு செய்ய அவர்கள் விரும்புவது இல்லை. கேரளாவுக்கு சாதகம் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இயக்கப்படும் ரயில்களை தமிழகத்தில் பராமரிப்புதால் அவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இன்றி புதிய ரயில்கள் சேவை கிடைத்துவிடும். அவர்கள் அங்கு உள்ள ரயில் நிலையத்தில் வைத்து எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்ய வேண்டாம். காலையில் கேரளாவுக்கு வந்து சேரும் ரயில் பெட்டிகளை மாலைவரை காலியாக நிறுத்திவைத்து விட்டு மாலையில் புறப்பட்டு தமிழக ரயில் நிலையங்களுக்கு வந்துவிட்டு இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அங்கு உள்ள பிட்லைன்கனை பயன்படுத்தி 100 சதமானம் கேரளா மாநிலத்தவரின் பயன்படும் படியாக உள்ள ரயில்களை அதிக அளவில் இயக்குகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து மங்களுர், கோவா வழியாக வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கேரளா மாநிலத்தவர் மட்டுமே பயன்படுத்தும் ரயில்கள் ஆகும். இவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து நீட்டிக்கப்பட்ட ரயில்கள்: சென்னையிலிருந்து பல்வேறு நெடுந்தூர ரயில்கள் ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் எல்லாம் கேரளாவில் உள்ள  ரயில் நிலையங்களில் பராமரிக்கப்படுகிறது. இது போன்ற ரயில்கள் கோவை, ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுவதால் இந்த பகுதிகளில் உள்ள தமிழக பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் இதிலும் இந்த பகுதி பயணிகள் அதிக அளவில் பயணம் செய்துவிட கூடாது என்ற காரணத்துக்காக இந்த தடத்தில் பயணிக்கும் அனைத்து நெடுந்தூர ரயில்களுக்கும் முன்பதிவு இடஒதுக்கீடு மிகமிக குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிட்லைன் இடநெருக்கடி தற்போது கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களை அதிக அளவில் தமிழகத்தில் பராமரிப்பதால் இங்கு உள்ள ரயில் நிலையங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் இடநெருக்கடியாக உள்ளது. பிட்லைன்களில் இனிமேல் எந்த ஒரு புதிய ரயிலும் பராமரிப்பு பணிக்கு என சேர்க்க முடியாத நிலை உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மட்டும் ஒருசில புதிய ரயில்கள் பராமரிப்பு செய்ய முடியும் என்ற அளவிற்கு பிட்லைன்களில் காலி இடம் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் எந்த ஒரு புதிய ரயிலும் இயக்க முடியாதநிலை ஏற்படும். கிடப்பில் புதிய பிட்லைன்கள் அமைக்கும் திட்டம் தமிழகத்தில் அதிக  ரயில் இயக்க வேண்டும் என்ற காரணத்தில் சென்னையில் தாம்பரத்தில் புதிதாக பிட்லைன்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. இது தவிர கடந்த 2014 ரயில் பட்ஜெட்டில் ராயபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் புதிதாக முனையவசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை:- ஓவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய வழித்தடங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு வைக்கப்படும் கோரிக்கைளின் அடிப்படையில் ரயில்வேத்துறை திட்ட கருத்துரு தயார் செய்யும். ஓவ்வொரு ஆண்டும் இவ்வாறு திட்ட கருத்துரு தயார் செய்துவிட்டு பின்னர் ரயில்பெட்டிகள் பராமரிப்பு என்று வரும் போது பிட்லைன்களில் பராமரிக்க போதிய இடம் இல்லாத காரணத்தால் இது போன்ற பல்வேறு நல்ல திட்டகருத்துருக்கள் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளாவுக்கு புதிய ரயில்கள்: ஒவ்வொரு ஆண்டும் ரயில்பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கேரளாவுக்கு கணிசமான அளவில் ரயில்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள ரயில் நிலையங்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கே முன்பே நெருக்கடி நிலையை எட்டியது. ஆனாலும் பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவித்து கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு அறிவிப்பின் சூட்சமம் தெரியாமல் தமிழக பயணிகள் உள்ளனர். திருவனந்தபுரத்துக்கு ஓர் புதிய ரயில் அறிவிக்கப்பட்டால் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஓர் பழைய ரயில் தமிழகத்துக்கு பராமரிப்புக்கு என அனுப்பபடும். இவ்வாறு அனுப்ப முடியாத பட்சமாக இருந்தால் தமிழகத்துக்கு ரயில் நீட்டிப்பு என்ற பெயரில் அறிவித்துவிட்டு இங்கு பராமரிக்கப்படும் படியாக செய்து விடுவார்கள். கேரளாவுக்கு என இயக்கப்படும் ரயில்களை அங்கே பராமரிக்கப்பட கோரிக்கை: இது குறித்து தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் இணைந்து ரயில்வே அமைச்சரை முறையீட்டு தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே இயக்கப்படும் ரயில்களில் பகுதி ரயில்கள் கண்டிப்பாக கேரளாவில் பராமரிக்கப்பட வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பராமரிப்பு செய்யப்படும் ரயில்களை கேரளாவில் உள்ள ரயில் நிலயங்களுக்கு பராமரிப்பை மாற்றிவிட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேளி ஆகிய இடங்களில் தற்போது பராமரிக்கப்பட்டுவரும் கொங்கன்பாதை ரயில்களை இங்கு நீட்டிப்பு செய்து தமிழகத்தில் பராமரிக்கலாம். இவ்வாறு ரயில்களை நீட்டிப்பு செய்து பிட்லைன் பராமரிப்பை மாற்றி இயக்கும் போது அனைத்து பகுதி பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். புதிதாக அதிக அளவில் பிட்லைன்கள் அமைக்க கோரிக்கை:- தமிழகத்தில் தற்போது பிட்லைன்கள் உள்ள அனைத்து ரயில்நிலையங்களையும் விரிவாக்கம் செய்து கூடுதல் பிட்லைன்கள் அமைக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் டெல்டா மாவட்ட பகுதிகளில் தற்போது பிட்லைன் வசதி எந்த ஒரு ரயில்நிலையத்திலும் இல்லை. ஆகவே அந்த பகுதியில் புதிதாகபிட்லைன் வசதி ஏற்படுத்தபட வேண்டும்.

கட்டுரை: பி. எட்வர்ட் ஜெனி

(கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலர்) email: kkdrua@gmail.com

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும்: அமித் ஷாவின் கணக்கு!

புது தில்லி: பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச் செயலர் அமித் ஷா. பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக., சார்பில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசியபோது: ஜனதா கட்சிகள் இணைந்து எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும், பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், அது வெற்றி பெறாது. இங்கே பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தானே வரும். அதுபோலத்தான், பாஜகவுக்கு எதிராக நிதீஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் அமைக்கும் கூட்டணியும். ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 2010ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவின் முதுகில் குத்திய நிதீஷ் குமார், காட்டாட்சி நடத்திய லாலு பிரசாத் யாதவுடன் மீண்டும் கைகோக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

ஜனதா பரிவார்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு?

புது தில்லி: ஜனதாக் கட்சிகள் இணைந்த ஜனதா பரிவார் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகளை ஒன்றிணைத்து, ஜனதா பரிவார் – ஜனதா குடும்பம் என புதிய கட்சி குறித்து, இன்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன், முலாயம் சிங் யாதவ் வீட்டில் நடைபெறும் கூட்டத்தில் நிதீஷ்குமார், சரத் யாதவ், ஐ.ஜ.கட்சியின் பொதுச் செயலர் கே.சி.தியாகி, மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுட, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் கமல் மொரார்கா, இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர் துஷ்யந்த் செளதாலா, முலாயம் சிங் யாதவின் சகோதரர் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சிக்கு, சமாஜவாதி ஜனதா கட்சி என்றோ சமாஜவாதி ஜனதா தளம் என்றோ பெயரிட முடிவு செய்யப்பட்டதாம். அக்கட்சியின் சின்னமாக சமாஜவாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தையே அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது; விவசாயப் பணிகளுக்கே! : அமித் ஷா

புது தில்லி: விவசாயிகளின் நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது, அவற்றை நிச்சயமாக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்காது; அவை விவசாயம் சார்ந்த பணிகளுக்கே எடுக்கப்படும் என்று பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித்ஷா கூறினார். பீகாரில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளுமே அங்கு வெற்றி பெற போட்டி போடுகின்றன. அனைத்து ஜனதா கட்சிகளையும் இணைத்து ஜனதா பரிவார் என போட்டியிட நிதிஷ், லாலு, முலாயம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். பாஜகவும் தன் பங்குக்கு ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது. இந்நிலையில், நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், தங்கள் தரப்பு பிரசாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று தில்லி காந்தி மைதானத்தில் பாஜக., தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பேசினர். அந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரசாரம் செய்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. விவசாயிகளின் ஒரு அங்குல நிலம்கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த நிலம் கிராமங்களின் மேம்பாட்டுக்காகவும், விவசாயிகளின் நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காகவுமே பயன்படுத்தப்படும். எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க பாஜக., தொண்டர்கள் இந்தத் தகவல்களை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். பீகாரில் 12 சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான நிலங்கள் எங்கே சென்றன என்பதை முதல்வர் நிதிஷ் குமார் விளக்க வேண்டும். ஆனால் அவரோ இந்த விஷயத்தில் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறார். அந்த நிலங்களை அவர் தனது நண்பர்களுக்கும், அமைச்சர்களின் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். இதனால் பீகார் மாநில மேம்பாட்டுக்கான ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன என்றார்.

“கபட சந்யாஸி” “பெரியவா கேட்ட காளிதாஸன் கதை”

20683_671948076266709_3512172854606087227_n சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர் தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும் நிறைய உண்டு. ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம். வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள், உடன் சென்று கொண்டிருந்தோம். “நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப் பார்த்திருக்கியா?” “இல்லே” “நாகராஜா….நீ” “இல்லே..” ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, ” நீ கபட சந்யாஸியைப் பற்றிக் கேட்டிருக்கியா?” என்று கேட்டார். “கேட்டிருக்கேன்…ராவணன்,அர்ஜுனன்…” என்றேன். “அவ்வளவு தானா?” நான் தயங்கியபடியே, “காளிதாஸன்…” என்றேன். “காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?..” “பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா, நாங்க கேட்டுண்டே..நடப்போம். “இல்லை..நீயே சொல்லு..” போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது? ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப் பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற முரசறைவித்தான். ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி. பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள்பெற்று,மாறுவேஷத்தில் போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு சந்யாஸியைப் பார்த்தபோது, ‘இவர் காளிதாஸனோ’ என்ற சந்தேகம் வந்தது. பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று. துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து “நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன். அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. வெளியே வந்து விட்டேன்…” “ஆ!…. என் போஜன் இறந்துவிட்டானா?” என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும், வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான். அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல் தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி சியாமளா தண்டகம் பாடி, “இதோ,போஜன் எழுந்துவிட்டான்!” என்ற பொருள்பட இன்னொரு சுலோகம் பாடினான். உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான். இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன். கடைசியில் “இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன், சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்…” என்றேன். பெரியவாள்,”ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. நடந்து வந்த களைப்பே தெரியல்லே!” என்றார். அம்பத்தூர் வந்துவிட்டது.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை திருட்டுத்தனமாக நடத்திய கி.வீரமணி: எச்.ராஜா பாய்ச்சல்

சென்னை தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி திருட்டுத்தனமாக நடத்தியுள்ளார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரி பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்த தகவல் கிடைத்ததும் இந்து முன்னணியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக பெரியார் திடல் வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் அதற்கு முன்னர், எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அதில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தாலி அகற்றும் நிகழ்ச்சி கடும் கண்டத்துக்கு உரியது. 10 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துவிட்டு, முன்கூட்டியே காலை 7 மணிக்கு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். திருட்டுத்தனமாக நடைபெறும் தாலிகட்டும் திருமணங்களைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சியை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இந்த நிகழ்ச்சியை நடத்திய கி.வீரமணிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன் என்றார்.

உ.பி.யில் 18 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

child-rape பதான் (உ.பி.) உத்தரப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் 18 மாத பெண் குழந்தை ஒன்று, பக்கத்து வீட்டுக்காரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் நேற்று இரவு 18 மாதக் குழந்தையை பக்கத்து வீட்டுக் காரரான சஞ்சய் ஜோஷி என்ற நந்தா மறைவான இடத்துக்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கே வைத்து அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அன்று அந்தக் குழந்தை இரவு முழுவதும் வலியால் அழுது கொண்டே இருந்தது. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள் இன்று காலை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் அந்தக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ந்த குழந்தையின் பெற்றோர் இது குறித்து காவல்துறையில் புகார் செய்தனர். அவர்களது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நந்தாவை கைது செய்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

சேலம் அருகே சாலை விபத்து: 4 பேர் பலி

சேலம்: சேலம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் நங்கவல்லி மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் இருந்து உறவினர்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக பெரம்பலூருக்கு 2 வேன்களில் சென்றனர். அவர்கள் சென்ற வேன் வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியது. இந்த விபத்தில், வேனில் இருந்த பெண் உயிரிழ்ந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்

அம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்?: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி

  ஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய அடையாளங்களான சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பிஆர் அம்பேத்கர் ஆகியோருக்கு காங்கிரஸ் எப்படி மதிப்பளித்தது என்பது தெரிகிறதே என்று அவர் கூறியுள்ளார். பட்டேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்து நாட்டை ஒருங்கிணைத்தவர். அம்பேத்கர் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் சட்டத்தின் மூலமான பாதுகாப்பை உறுதி செய்தவர் என்று கூறினார் வெங்கய்ய நாயுடு. அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெங்கய்ய நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், இத்தகையவர்களுக்கு நம் சமூகம் என்ன செய்தது? ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர், நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. இதைச் சொன்னால் அவர்கள் கோபப் படலாம். ஆனால், இதைச் சொல்ல நமக்கு பயம் எதுவுமில்லை என்று கூறினார். டாக்டர் அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது? அதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன? அடுத்து, அவருடைய படம் நாடாளுமன்றத்தில் இடம்பெற எத்தனை வருடங்கள் ஆகின? என்று கேள்வி எழுப்பிய நாயுடு, 1953ல் உஸ்மேனியா பல்கலை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை நினைவு கூர்ந்தார். நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸைச் சாடிய நாயுடு, எத்தனை காலத்துக்குத்தான் உண்மையை மூடி மறைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றும் விதம் குறித்துப் பேசிய நாயுடு, மத்திய அரசின் திட்டங்களான, ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி, ஸ்வாச்ச பாரத் திட்டம், அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை எல்லாம் சமூகத்தின் ஏழை மக்களின் வளர்ச்சிக்கானது என்று கூறினார்.