Home Blog Page 6140

மலையாள இயக்குநரை 2வதாக கரம்பிடித்த நடிகை ஜோதிர்மயி

jothirmayi-marrageதிருவனந்தபுரம்: கேரள நடிகை ஜோதிர்மயி, பிரபல மலையாள இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இவருக்கு 2ஆவது திருமணம். கேரளாவைச் சேர்ந்த நடிகை ஜோதிர்மயி தமிழில் தலைநகரம், விஜயகாந்துடன் சபரி, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வரும் முன்பே திருமணமான இவர், கல்லூரியில் படித்த காலத்தில் நிஷாந்த் என்பவரைக் காதலித்து மணந்தாராம். பின்னர் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், மலையாள இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத்தை காதலித்து வந்தார் ஜோதிர்மயி. இருவரும் கொச்சியில் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனராம்.

காலைக் கவ்விய முதலையைத் தாக்கி மகளை மீட்ட 58 வயது வீரத் தாய்

vadodara-girl-rescued-by-motherவடோதரா: 58 வயதான தாயார், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது மகளை முதலை கவ்வியதைப் பார்த்து குதித்து முதலையிடம் இருந்து அவரைக் காப்பாற்றிய சாகசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் உள்ள திகாரியா முபாரக் கிராமத்தின் வழியாக ஓடுகிறது விஸ்வாமித்ரி ஆறு. வடோதராவில் இருந்து கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம். இந்த ஆற்றில், நேற்று காலை கன்டா (19) என்ற இளம் பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முதலை அவரது வலது காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்தது. முதலையின் பலம் வாய்ந்த பிடியில் சிக்கிய அந்த இளம் பெண் வலி தாளாமல் அலறித் துடித்தார். அப்போது அருகில் ஓடி வந்த அவரது தாய் திவாலினென் வாங்கர், மகளின் கையைப் பிடித்துக் கொண்டார். மகளை தண்ணீரில் இருந்து வெளியே இழுக்க முயன்றார். ஆனால் முதலை கன்டாவை தண்ணீருக்குள் இழுத்தது. இதனால் ஆத்திரமுற்ற திவாலி வாங்கர் தன் கையில் வைத்திருந்த பானையால் முதலையை தாக்கத் தொடங்கினார். அவரது தாக்குதலில் நிலை குலைந்த முதலை, கன்டாவின் காலை விட்டுவிட்டு ஆற்று நீருக்குள் ஓடி மறைந்தது. வலது காலில் பலத்த காயம் அடைந்த கன்டா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திவாலினென் வாங்கரின் வீரச் செயலை கிராம மக்கள் பாராட்டினர். இது குறித்து கருத்து தெரிவித்த வனத் துறை அதிகாரி அசோக் பாண்ட்யா, இந்த ஆற்றைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு முதலைகள் வருவது குறித்து நாங்கள் ஏற்கெனவே கிராம மக்களை எச்சரித்துள்ளோம். கவனமாக இருக்க அறிவுரை கூறியுள்ளோம்.,. என்றார்.

பாஜக அலுவலகம் சூறை: காங்கிரஸார் கைது; பாஜக-காங். போட்டி மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய விவகாரத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட 8 பேரை புதுவை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காங்கிரஸாருக்கு போட்டியாக எதிர்ப்பு மறியலை பாஜகவினரும் அதற்கு எதிர்ப்பாக காங்கிரஸாரும் மறியல் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்தார். அதனைக் கண்டித்து நாடு முழுவதும் சில இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். புதுவையில் இளைஞர் காங்கிரசார் இந்திரா காந்தி சிலையிலிருந்து நேற்று மதியம் ஊர்வலமாக ரெட்டியார்பாளையம் ஜான்சி நகருக்குச் சென்று அங்குள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அழுகிய முட்டை, தக்காளியை வீசியும், கற்களை எடுத்து வீசியும் வன்முறையில் இறங்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பாஜக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி போர்க் களமானது. இதனிடையே பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எஸ்பி அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வடக்கு எஸ்பி ரவிக்குமார் சமாதானப்படுத்தினார். பின்னர், பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல், கல் வீசித் தாக்குதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் அசோக் ராஜா, பிரபு, கணேஷ், பரூக், சிவாஜி, வரதராஜ், சத்யா உள்பட 8 பேரை ஆட்டுப்பட்டி அருகே நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் லாஸ்பேட்டை நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து செல்லப்பட்டு மாஜிஸ்திரேட் விஜயகுமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, அவரது உத்தரவின் பேரில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இளைஞர் காங்கிரஸார் பேரைக் கைது செய்ததைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலை அருகே நடந்த மறியலில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியலிங்கம், நாராயணசாமி உள்பட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்றனர். முன்னதாக கிரிராஜ் சிங் உருவப் படத்தை அவர்கள் திடீரென எரித்தனர். இவ்வாறு பாஜகவும், காங்கிரஸும் போட்டியாக மேற்கொண்ட மறியல் போராட்டங்களால் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏப்.8-ல் மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

புது தில்லி: மத்திய அமைச்சரவை இம்மாதம் 8ம் தேதி மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமைச்சரவையில் 26 கேபினட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 13 பேரும், 26 இணை அமைச்சர்களும் உள்ளனர். இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும், அதில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முக்தர் அப்பாஸ் நக்வி அத்துறையின் கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்படலாம் எனவும் தகவல் வெளியானது. காஷ்மீரில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா, அனில் தேசாய் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையில் நடைபெறும் போட்டிக்கு 6 ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்

ipl-chennai 8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆம் தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் மோதும் போட்டிக்கான , 11 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனும் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இதற்கிடையே சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டை, in.bookmyshow.com என்ற இணைய தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

நாடு முழுவதும் ஜே.இ.இ தேர்வு இன்று தொடக்கம்

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. பிரதான தேர்வு) நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ளது. சனிக்கிழமை எழுத்துத் தேர்வும், ஏப்ரல் 10,11-ஆம் தேதிகளில் இணைய வழித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து   13 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதான தேர்வும், பின்னர் ஜே.இ.இ. முதன்மைத் (அட்வான்ஸ்டு) தேர்வும் நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும். ஜே.இ.இ. பிரதான தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர முடியும். இப்போது 2015-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வின் எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடத்தப்படுகிறது. வரும் 10,11 தேதிகளில் இணையவழி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் இருந்து 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வு முடிவு ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.ஜே.இ.இ.முதன்மைத் தேர்வு 24-5-2015 அன்று நடத்தப்பட உள்ளது. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்த “அட்வான்ஸ்ட்” தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்.

கரூரில் பலத்த சூறாவளி: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

karur1கரூர்: கரூர் பகுதியில் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளிக் காற்றினால் வீடுகளின் கூரை ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொப்பம்பட்டி, ஒண்டியூர், சங்கம்கரை, துக்காச்சி உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் நேற்று நள்ளிரவு திடீரென சூறாவளி காற்று வீசியது. இந்த பயங்கர சூறாவளிக் காற்றால் இந்த பகுதியில் சுமார் 40 வீடுகளில் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்கள் காற்றில் பறந்தன.karur2 கிராமப் பகுதியில் இருந்த மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் சில சாய்ந்ததால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்;டது. இதனால் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். “குடிசை வீடுகள் இழந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மற்ற நிவாரணங்களும், லேசாக் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2500-ம் மற்ற நிவாரணங்களும் கிடைக்கும். ஆனால், இங்கு ஓட்டு வீடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் கோரிக்கைகள் அரசுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்” என்று ஆட்சியர்ர் ஜெயந்தி அவர்களிடம் உறுதியளித்தார்.

தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் – கருணாநிதி கோரிக்கை

04-04-15 Dmk Karunathi Leter photo 01தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று  கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்., இந்திய மீனவர்கள் பிரச்சினை என்று தான் தீருமோ? இலங்கை மீனவர்களோடு நமது மீனவர்கள் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேசும்போது பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று தோன்றிய போதிலும், நமது மீனவர்களின் துன்பங்கள் தொடர்கதையாகவே நீடிக்கின்றன. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, படகுகளுடன் சிறை பிடிக்கப்படுவது, மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடிக் கருவிகளையும், வலைகளையும் பறிமுதல் செய்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நின்றபாடில்லை. நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து 37 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, 37 தமிழக மீனவர்களையும் சிறை பிடித்து, அவர்களுடைய விசைப்படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கடந்த மாதம் கூட 24-3-2015 அன்று 9 மணி நேரம் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில், இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.இலங்கை மீனவர்களிடம் தமிழக மீனவர்களின் சார்பில் இலங்கைக் கடல் பகுதிக்குள் ஆண்டுக்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி உள்ளிட்ட ஏழு அம்சக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுப் பிரதிநிதிகளுடன் இலங்கை மீனவர்கள் விரைவில் பேசி மே மாதம் முடிவுகளைத் தெரிவிப்பது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டதாக ஏடுகளில் செய்தியும் வந்தது. இலங்கைச் சிறையிலிருந்து 54 தமிழக மீனவர்கள் விடுதலையாகித் தமிழகம் வந்தனர். இருநாட்டு மீனவர்களுக்கிடையே நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்சினை தீர்வு ஒன்றினை எட்டி விடும் என்று எண்ணியிருந்த வேளையில், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்கள், அந்த நாட்டுக் கடற்படைக்கு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இலங்கை கடற்பகுதிக்குள்அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அனைத்து விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் போஸ் கூறும்போது, “இலங்கை அரசு திடீரென்று எல்லை தாண்டி வரும் மீனவர்கள் கைது, படகு பறிமுதல் என்று முடிவு செய்திருப் பது மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த முடிவுக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு வார்த்தை கூட எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை” என்று சொல்லி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறும்போது, “இந்தியாவுடன் இலங்கைக்கு இருக்கும் நீண்ட கால நட்புறவுகள் பாதிக்கப்படாத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கும் கருத்து நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது என்றாலும்; மத்திய அரசு குறிப்பாக நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நமது மீனவர்களின் நெடுங்கால பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்தி, உடனடியாக இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளையும், தமிழக அரசினரையும், அழைத்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபரிடம் நேரடியாகப் பேசி, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் கண்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.  

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையில் நடைபெறும் போட்டிக்கு 6 ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடக்கம்

8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் மே 24–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆம் தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் மோதும் போட்டிக்கான , 11 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனும் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இதற்கிடையே சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டை, in.bookmyshow.com என்ற இணைய தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 04-04-15 Cricket IBL News photo 02 04-04-15 Cricket IBL News photo 01

தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் – கருணாநிதி கோரிக்கை

தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று  கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்.,இந்திய மீனவர்கள் பிரச்சினை என்று தான் தீருமோ? இலங்கை மீனவர்களோடு நமது மீனவர்கள் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேசும்போது பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று தோன்றிய போதிலும், நமது மீனவர்களின் துன்பங்கள் தொடர்கதையாகவே நீடிக்கின்றன. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, படகுகளுடன் சிறை பிடிக்கப்படுவது, மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடிக் கருவிகளையும், வலைகளையும் பறிமுதல் செய்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நின்றபாடில்லை. நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து 37 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, 37 தமிழக மீனவர்களையும் சிறை பிடித்து, அவர்களுடைய விசைப்படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கடந்த மாதம் கூட 24-3-2015 அன்று 9 மணி நேரம் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில், இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.இலங்கை மீனவர்களிடம் தமிழக மீனவர்களின் சார்பில் இலங்கைக் கடல் பகுதிக்குள் ஆண்டுக்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி உள்ளிட்ட ஏழு அம்சக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுப் பிரதிநிதிகளுடன் இலங்கை மீனவர்கள் விரைவில் பேசி மே மாதம் முடிவுகளைத் தெரிவிப்பது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டதாக ஏடுகளில் செய்தியும் வந்தது. இலங்கைச் சிறையிலிருந்து 54 தமிழக மீனவர்கள் விடுதலையாகித் தமிழகம் வந்தனர். இருநாட்டு மீனவர்களுக்கிடையே நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்சினை தீர்வு ஒன்றினை எட்டி விடும் என்று எண்ணியிருந்த வேளையில், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்கள், அந்த நாட்டுக் கடற்படைக்கு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இலங்கை கடற்பகுதிக்குள்அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அனைத்து விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் போஸ் கூறும்போது, “இலங்கை அரசு திடீரென்று எல்லை தாண்டி வரும் மீனவர்கள் கைது, படகு பறிமுதல் என்று முடிவு செய்திருப் பது மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த முடிவுக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு வார்த்தை கூட எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை” என்று சொல்லி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறும்போது, “இந்தியாவுடன் இலங்கைக்கு இருக்கும் நீண்ட கால நட்புறவுகள் பாதிக்கப்படாத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கும் கருத்து நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது என்றாலும்; மத்திய அரசு குறிப்பாக நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நமது மீனவர்களின் நெடுங்கால பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்தி, உடனடியாக இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளையும், தமிழக அரசினரையும், அழைத்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபரிடம் நேரடியாகப் பேசி, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் கண்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.04-04-15 Dmk Karunathi Leter photo 03 04-04-15 Dmk Karunathi Leter photo 02 04-04-15 Dmk Karunathi Leter photo 01