Home Blog Page 6147

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், மலிண்டோ விமானம், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதியைச் சேர்ந்த, முத்துராமன் (35) என்பவர், பையில் தங்கத்தினாலான, இரண்டு ராடுகளை வைத்திருந்தார். இவை, 592 கிராம் எடையும், 15.65 லட்சம் ரூபாய் மதிப்பும் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த, வினோத்(28) என்பவரும், இரண்டு தங்க ராடுகளைக் கொண்டு வந்தார். இவை, 591 கிராம் எடை கொண்டவை. இவற்றின் மதிப்பு, 15.63 லட்சம் ரூபாய். இவ்வாறு ஒரே நாளில், ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட இளைஞகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மலேசிய ஓபன்: சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி

கோலாலம்பூர்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டனில் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். சீனாவின் ஸு யாவ் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா 21-13, 21-9 என்று நேர் செட்களில் அவரை வீழ்த்தினார். இவர் 2014-ம் ஆண்டு மலேசிய ஓபனில் சாய்னாவை வீழ்த்தி வெளியேற்றியவர். இந்த ஆட்டம் 30 நிமிடங்களே நீடித்தது. இதையடுத்து காலிறுதியில் மற்றொரு சீன வீராங்கனை சுன் யூ என்பவரை சாய்னா எதிர்கொள்கிறார் சாய்னா. ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வியைத் தழுவி வெளியேறினர். இரட்டையர் பிரிவில் ஜ்வாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இந்தோனேசிய இணை நித்யா கிருஷிந்தா மகேஸ்வரி-கிரேசியா பொலீ ஆகியோரிடம் 23-21, 8-21, 17-21 என்ற செட்களில் தோல்வி அடைந்தது.

காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்

சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தவேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தாடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒற்றுமை ஏற்படுத்தி கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்திட மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழலில் காவிரி நீரில் கழிவு நீரை கலந்துவிடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. தமிழகத்திகு காவிரி தண்ணீர் பிரிந்து வருகின்ற பகுதியில் பெங்களூருவின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து தினமும் வெளியாகும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கால்வாய்கள் வழியாக தமிழகத்திற்குள் திறந்து விடுவதாகவும், மேலும் பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் 1,950 மில்லியன் லிட்டர் நீரில், சுமார் 60 சதவீதம் (889 மில்லியன் லிட்டர்) கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாகவும், மீதமுள்ள 40 சதவீதம் கழிவுநீரானது, அர்காவதி மற்றும் காவிரி கிளைநதிகள் மூலமாகவும் கலந்துவிடுவதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறுபாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்திற்கும்காவிரி நீர் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதரமாக காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகம் ஓட்டுமொத்த கழிவு நீரையும் காவிரியில் கலந்துவிடுவதால் பேராபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் அவசரகால நடவடிக்கை எடுத்து மத்தியஅரசின் நீர் வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு பாரத பிரதமரை வலியுறுத்தி மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பிவைத்து காவிரி பாசன பகுதிகள் மற்றும் கழிவு நீர் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கசெய்திட வேண்டும். அதுபோல் தமிழக எல்லையில் வருகின்ற காவிரி தண்ணீரின் தன்மை பற்றி ஆராயவேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்ற பேராபத்துதிலிருந்து தமிழக மக்களை காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தலித் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தில் தீர்ப்பு

ஹரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டம் பகவான்பூர் கிராமத்தில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 செருப்படி மட்டும் வழங்கி கிராமப் பஞ்சாயத்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் மாதம் 25ல் நடந்துள்ளது. 19 வயது இளம் பெண் அருகில் உள்ள வயல்வெளிக்கு கால்நடை தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது 22 வயது இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் இது குறித்து கிராமத் தலைவரிடம் முறையிட்டுள்ளது. பின்னர் ரஞ்சித்பூர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். கிராமக் கூட்டத்தை கூட்டிய தலைவர், பஞ்சாயத்துக் கூட்டத்தில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 செருப்படி வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வழங்கபட்டபோது இந்தப் புகாரை விசாரிக்க வந்த காவல்துறையினரும் அங்கே இருந்துள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த வேறு யாரும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. ஆனால், இந்த கட்டப்பஞ்சாயத்தில் தாங்கள் இருந்துள்ளதை போலீஸார் பின்னர் மறுத்தனர். ஆனால், இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மஹிபால் கூறிய போது:- இந்தப் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டது பலாத்கார சம்பவத்துக்காக அல்ல. தகராறு குறித்து விசாரிப்பதற்காகத்தான். இது குறித்து காவல் துறையினர் முன்பு தீர்வு ஏற்பட்டுள்ளது என்றார்..

செங்கோட்டையில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு

செங்கோட்டை மேலூர் முகம்மது நபி சமுதாய நலக் கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாத் பெண்கள் பிரிவு ஷகிரா பானு தலைமை தாங்கினார். மைதீன் பாத்திமா, ஹாரூன் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேட்டை மீரா ஆலிமா வரவேற்புரை நிகழ்த்தினார் இ ந்திய தவ்ஹீத் ஜமாத் தலைமை ஆலிமா பரக்கத் நிஷா  “குடும்பத்தில் ஆண்களின் பங்கு “என்ற தலைப்பிலும், நாதிரா ஆலிமா “மாறியது மனம் , மாற்றியது இஸ்லாம்” எனும் தலைப்பிலும், நூருன் நிஷா “சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்கு” எனும் தலைப்பிலும், பரக்கத் பதர் நிஷா “அங்கீகரிக்கப்பட்ட பண்பாடு சிதைவு” எனும் தலைப்பிலும் பெண்கள் விழிப்புணர்வு குறித்து பேசினர். இந்த மாநாட்டில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1) மது, வரதட்சணை, வட்டி போன்ற தீமைகளுக்கு எதிராக பெண்கள் சமுதாயம் பாடுபட வேண்டும். 2) திருச்சி மாணவி சுல்தானா பாலியல் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். 3) அரசு மருத்துவமனைகளில் இறந்த பெண்களை பிரேத பரிசோதனை செய்ய பெண் மருத்துவர்களையே நியமிக்க வேண்டும். 4) பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆடை ஒரு காரணமாக உள்ளது. பெண்கள் கண்ணியமாக தங்களை காத்துக் கொள்ள வேண்டும். 5) நாட்டில் தலை தூக்கி வரும் மதவாத பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 6) மத்திய அரசின் மதவாதக் கொள்கைகளை அனைத்து சமுதாய மக்களும் எதிர்த்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நபினா ஆலிமா நன்றி கூறினார்.

மதுவிலக்கு சோதனைசாவடியில் வைக்கோல் லாரி கவிழ்ந்தது.

IMG_1940 செங்கோட்டை : தமிழக கேரள எல்லையான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் சுமார் 2ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை புளியரையிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி  கேரளா நோக்கி ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை மது என்பவர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது லாரி திடீர் என ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மதுவிலக்கு சோதனை சாவடி மீது கவிழ்ந்தது. அப்போது பணியிலிருந்த காவலர் ஜமால் என்பவர் அதிர்ஷ்டவசமாக சுதாரித்து ஓடியதால் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் நகைச்சுவை த்ரில்லருடன் “நெருக்கம் “

nerukkam மிக நெருக்கமான அன்போடு அமைதியாக வாழ்ந்து வரும் தம்பதிகள் ஒரு சமயத்தில் அந்த நெருக்கமே அவர்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை ஒரு உண்மை சம்பவத்தின் பாதிப்பில் படமாகி இருக்கும் படம்தான் நெருக்கம் .. கதா நாயகனாக அஸ்வினி கார்த்திக் , கதாநாயகிகளாக வித்ர்ஷா , சனா .நடிக்க I சசி இயக்கியிருக்கிறார் . படத்தின் கடைசி காட்சி வரை ஒரு திரில் இருப்பதுடன் காதலுடன் கூடிய நகைச்சுவையும் இருக்கிறது , பொழுது போக்கு நிறைந்த படமாகவும் வந்திருக்கிறது .. குற்றங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் அதை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும் இருக்கும் . முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும்படம் தமிழக கேரள எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் வெளிவர இருக்கிறது .

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற வைக்கோல் லாரிகளுக்கு தடை

IMG_0533 செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சரக்கு ஏற்றி சென்று வருகின்றன. அதே சமயம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும் மாடுகளுக்கு தீவனமான வைக்கோல் சின்ன பிக் அப் என்றழைக்கப்படும் ஜீப்களில் மட்டுமின்றி லாரிகளிலும் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் சாலைகளில் வைக்கோலை ஏற்றிவரும் போது சாலைகள் முழுமையாக அடைத்து சாலையின் ஓரங்களில் இருக்கும் மின் கம்பங்களை இடித்து சேதப்படுத்திவிட்டு செல்வதால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும், லாரிகள் சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் உரசி தீ பிடித்து எரிவதும் ஆங்காங்கே நடந்து வருவதால் குறுகிய சாலையான புளியரை-கேரளா சாலைகளில் அதிகளவு வைக்கோலை ஏற்றி கேரளவுக்கு செல்லும் லாரிகளுக்கு போலீசார் நேற்று மாலைமுதல் தடை விதித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை, புளியரை ஆகிய பகுதிகளில் சாலையின் ஓரங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஓட்டுனர்கள், கிளினர்கள் சாலையிலேயே படுத்து சாப்பாட்டுக்கு தவித்து வருகின்றனர்.

2024 ஒலிம்பிக் அகமதாபாத்தில்! திட்டமிடுகிறார் மோடி

புது தில்லி: வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில். தன் சொந்த மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார் மோடி. இது குறித்த இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்தியா வரும் சர்வதேச ஒலிம்பிக் கழக தலைவர் தாமஸ் பச்சிடம் மோடி, ஒலிம்பிக் திட்ட அறிக்கையை அளிக்க உள்ளார்.

பிரேம்ஜிக்கு அறிவுரை கூறிய சூர்யா

surya47சூர்யா தற்போது மாஸ் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் வழக்கம் போல் அவரது தம்பியையே காமெடி பண்ண வைத்திருக்கிறார். மாஸ் படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரையும் கவனித்த சூர்யா தண்ணி அடிப்பதை நிறுத்தும்படி அட்வைஸ் செய்திருக்கிறார். அதோடு, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதின் அவசியம் பற்றியும் லெக்சர் எடுத்திருக்கிறார். இதை பிரேம்ஜியே பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.