Home Blog Page 6182

“பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை”

“பாடசாலை பையனுக்குக் கிடைத்த உயர் ரக போர்வை” (என் மெயில் பாக்ஸில் 2011-ல் கிடைத்த ஒரு பொக்கிஷம்)10357599_860696523975514_1831596007967451521_n வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. ’emergency ‘ கொட்டகையில் இரவு கடுங்குளிராக இருக்கும் என்று எண்ணினார். பழுத்த கனபாடிகளுக்கே வழங்கப்படும் சால்வைகளை, அந்த பிஞ்சு வித்யார்த்திகளுக்கே வழங்க செய்தார். அதுகளுக்கு கொள்ளை சந்தோஷம். பாதாள கங்கை சென்றார். திடீரென்று அங்கே ஒரு பழுத்த கனபாடிகளே வந்துவிட்டார். தரிசனம் முடிந்தவுடன் புறப்பட வேண்டிய அவசரத்தில் இருந்தார். பெரியவா அவரை சம்மானிக்க சால்வை கொண்டுவர சொன்னார். மானேஜருக்கோ அந்த குறுகிய நேரத்திற்குள் முகாமுக்கு சால்வை எதுவும் கொண்டு வரவில்லை. சட்டென்று அன்று பாடசாலை பசங்களுக்கு புது சால்வை கொடுத்தது நினைவு வந்தது. எனவே, பெரியவாளிடம் எதுவும் பிரஸ்தாபிக்காமல், காதும் காதும் வைத்தாற்போல் ஒரு பையனிடமிருந்து சால்வையை திரும்ப பெற்றுவந்து, கனபாடிகளுக்கு கொடுத்துவிட்டார். இரவு ஏமாற்றத்துடனேயே கையை காலை முடக்கி கொண்டு, அந்த பையன் தூங்கிபோனான். காலையில் எழுந்திருக்கும்போது,அதி சொகுசும், கதகதப்பும் தன்னை ஆற அணைதிருப்பதால் அதிசயித்தான். அவன் இழந்ததைவிட உயர் ரகமான சால்வை அவன் மீது போர்த்தபட்டிருந்ததே அந்த சுகத்துக்கு காரணம். “போர்வை வந்துதாடா?” மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது. கூர்ந்த திருஷ்டி கொண்ட பெரியவா, கனபாடிகளுக்கு கொடுத்த சால்வை, பாடசாலை சிறுவனுடையது என்று கண்டுபிடித்து விட்டார். அதற்குபின் மாலை அனுஷ்டானம், இரவு பூஜை, எல்லாம் முடிந்ததும், மனேஜரை கூப்பிட்டு விசாரித்தார். அவர் செய்தது தனக்கு திருப்தி இல்லை என்றும், தன் சகாக்களுக்கு கிடைத்தது தனக்கு தங்கவில்லையே என்று எப்படி அந்த குழந்தை வருந்தும் என்று விளக்கினார். விட்டால், எங்கே தன்னுடைய சால்வையையே கொடுத்துவிடுவாரோ என்று மனேஜருக்கு கவலை வந்துவிட்டது. எனவே தாம் முந்திக்கொண்டு “எனக்கு போர்த்திகொள்ள நல்ல கம்பிளி போர்வை இருக்கு. அதையே பையனுக்கு கொடுத்துடறேன்” என்றார். “தூங்கிண்டு இருந்தா எழுப்பாதே! நைஸா மேலே போத்திட்டு நீயும் போய் விஸ்ராந்தி பண்ணிக்கோ” “நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை பாலனுக்கு கிடைத்து

அறுபத்து மூவர் உற்சவம்: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

arubathimoovar-festival சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் உற்சவத்தை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உற்ஸவத்துக்கு வருவர் என்பதால், போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி திருவிழா இன்று (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கீழ்கண்டவாறு கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. கச்சேரி சாலையிலிருந்து, மத்தள நாராயணன் தெருவிற்கும், சித்ரகுளம் கீழ் தெருவிலிருந்து சித்ரகுளம் வடக்கு தெருவிற்கும், நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து, கிழக்கு மாட தெருவிற்கும், ஆர்.கே. மடம் சாலையிலிருந்து தெற்கு மாட தெருவிற்கும், புனிதமேரி சாலையிலிருந்து ஆர்.கே. மடம் சாலை சந்திப்பிற்கும், டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலைக்கும், லஸ் சந்திப்பிலிருந்து, ஆர்.கே. மடம் சாலைக்கும் வாகனம் அனுமதிக்கப்படமாட்டாது.

  • ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, சி.பி.ரமசாமி ரோடு, புனித மேரி சாலை, ஆர்.கே.மடம் ரோடு வழியாக மந்தைவெளி அடையலாம்.
  • அடையாரிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, டாக்டர் ரங்காரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் ரோடு, கற்பகம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் அடையலாம்.
  • மைலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் தேர்திருவிழா அன்று காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 2-ந் தேதி அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும் தினத்தன்றும் பிற்பல் 2 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் மரணம்: உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு!

indian-restaurant-englandலண்டன்: வேர்க் கடலைக் கறி சாப்பிட்டு வாடிக்கையாளர் ஒருவருக்கு அலர்ஜி ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அந்த உணவக உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உணவகம், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவருடயது. இது இங்கிலாந்தில் முதல் முறையாக போடப்பட்ட வழக்காகக் கருதப் படுகிறது. இந்த உணவக உரிமையாளர், இந்திய உணவகங்களில் மிகச் சிறந்ததாக, இங்கிலாந்தில் விருது பெற்று புகழ் அடைந்தவர். இங்கிலாந்தின் வடக்கு யார்க்சயர் மாநிலத்தின் திர்ச்க் நகரைச் சேர்ந்த 36 வயதான பால் வில்சன் கடந்த 2014 ஜனவரியில் இந்தியர் ஒருவர் நடத்தும் உணவத்தில் இருந்து நிலக்கடலை சேர்த்து சமைக்கப்பட்ட உணவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றைக் கலக்கி ஒவ்வாமை ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட உடல் அயற்சியால் குளியல் அறையில் மயங்கி விழுந்து இறந்தார். அவரது இறப்புக்கு முக்கியக் காரணம், அவர் உண்ட உணவுதான் என்று கூறப்பட்டது. அவர் உணவு வாங்கிய இந்தியன் கார்டன் உணவக உரிமையாளர் மொஹமத் காலிக் ஜமான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், இங்கிலாந்தில் உணவக உரிமையாளர் ஒருவர் இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் நாளை நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டப்படி உணவகத்தில் விற்கப் படும் உணவுகளுக்கு, அந்தக் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய அலர்ஜி குறித்து தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஆனால் இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகே இச்சட்டம் இயற்றப்பட்டது. இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் உணவு ஒவ்வாமையால் 10 பேர் உயிரிழக்கிறார்களாம்.

முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: சிவாஜி பேரவை

சென்னை: காவிரி நீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன் தலைவர் .சந்திரசேகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் பாயும் காவிரியில் தமிழகத்திற்கான பங்கு வரையறை செய்யப்பட்டு, காவிரி நடுவர் மன்ற ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் தமிழகத்திற்கு அநீதியே இழைக்கப்பட்டு வந்துள்ளது. கர்நாடகத்தில் அதிக மழை பெய்து அதனால் வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் உபரி நீர் நமக்கு திறந்துவிடப்பட்டுவருகிறது. அதாவது வெள்ள வடிகாலாகவே தமிழத்தை கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே எந்த அனுமதியும் பெறாமல் கர்நாடகம் புது அணைகள் கட்ட முயற்சிப்பது, தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது ஒரு டெல்டா விவசாயிகளின் பிரச்சினை என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல், டெல்டா விவசாயி விவசாயம் மேற்கொள்ளாவிட்டால், நாம் சாப்பிட அரிசிக்குக் கூட வெளிநாட்டில் கையேந்தும் நிலை வந்துவிடும் என்று எண்ணிப்பார்த்து, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டிய நேரமிது. இது காவிரி டெல்ட்டா விவசாயிகளுக்கான போராட்டம் என்று நினைக்காமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை உணர்ந்து, காவிரியில் கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டும் பிரச்சினைக்காக, வரும் 28-03-2015, சனிக்கிழமை நடைபெறும் முழு அடைப்பில் கலந்துகொண்டு, நமது ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்… என்று கூறியுள்ளார்.

ஏப்.9ல் பிரான்ஸ், ஜெர்மன், கனடாவுக்கு மோடி பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல்9-ஆம் தேதி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறையாக 7 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9-ந்தேதி பிரான்ஸ்ஸுக்கு செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் பிரான்ஸ்வா ஹொலாந்தை சந்தித்து பேசுகிறார். அங்கு நிகழ்ச்சிகள் சிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கலந்து கொள்ளும் மோடி, ஏப்ரல் 12ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனி செல்கிறார். அங்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். அங்குள்ள வர்த்தகக் கண்காட்சியிலும் பங்கேற்கும் மோடி பின்னர் ஏப்ரல் 14-ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கனடா செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்துப் பேசுகிறார். கனடாவில் டொரண்டோ நகரில் இந்திய வம்சாவளியினரின் சார்பில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.3 நாடுகள் பயணத்தை ஏப்ரல் 16-ந்தேதி நிறைவு செய்கிறார். இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தகவல் தெரிவித்தார்.  

சோனியா மருமகனிடம் ரூ.41 கோடியை வசூலிக்க ஹரியானா அரசுக்கு பரிந்துரை

  ஹரியானா மாநிலத்தில் அரசிடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு சலுகை விலையில் வாங்கிய நிலத்தை ராபர்ட் வதேராவின் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ரூ.58 கோடிக்கு விற்ற விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் இருந்து ரூ.41 கோடியை ஹரியானா அரசு வசூலிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மாநில கணக்குத் தணிக்கை அதிகாரி அளித்துள்ள பரிந்துரையில், நில விற்பனை தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திடம் இருந்து ரூ.41.51 கோடியை ஹரியானா அரசு வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் … ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை அறிய இந்தியா முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 12 (1) (சி) பிரிவின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி 2013–14 ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 21.40 லட்சம் இடங்கள் நலிவடைந்த பிரிவினரைக்கொண்டு நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் 29 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மொத்தம் 1.43 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், இவற்றில் வெறும் 11 சதவீத இடங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினரைக்கொண்டு நிரப்பப்பட்டதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள் 2013–14 ஆம் கல்வி ஆண்டிற்கானவைதான் என்ற போதிலும், கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து பின்னர் கடந்த 5 ஆண்டுகளாகவே இதே நிலைதான் நிலவுவதாக ஆய்வு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். அதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு விவரங்கள் அமைந்துள்ளன. வேறு சில புள்ளிவிவரங்களும் தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன. 2013–14 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இரு கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகவும், அதற்கு பிறகும் வெறும் 31 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பட்டதாகவும் தமிழக அரசின் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்திருக்கிறார். நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட 89,941 இடங்கள் நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவர்களைக்கொண்டு நிரப்பப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கான கல்விக் கட்டணமாக ரூ.26.13 கோடி நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியும், செயலாளர் சபீதாவும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளி விவரங்களில் மொத்தம் 2,959 மாணவ, மாணவியர் மட்டும்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கல்வி உரிமை சட்டப் படியான மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. கல்வி உரிமைச் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமே பணக்கார மாணவர்களை கொண்டு தனியார் பள்ளிகள் நிரப்பி விடுகின்றன என்பதையும், அவர்களிடம் பெருமளவில் பணம் வசூலித்துக்கொண்டு அவர்கள் அனைவரையும் நலிவடைந்த பிரிவினராக கணக்கில் காட்டி மக்களை ஏமாற்றுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். கல்வி பெறும் உரிமைச் சட்டம் தமிழகத்தில் இதுவரை எவ்வாறு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, வரும் கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். – என்று கூறியுள்ளார்.

கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: தொடர்புடைய 2 பேர் கைது

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ரானாகத் பகுதியில் 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸார் மும்பையில் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பல் பின்னர் தப்பி ஓடிவிட்டது. இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதை அடுத்து, சிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யமுடியாமல் சி.ஐ.டி. போலீஸார் திணறினர். இந்நிலையில், சிக்கந்தர் ஷேக் என்ற முகமது சலீம் என்ற நபரை மும்பையில் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸார் இன்று கைது செய்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து அவரைக் கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரிகள் கூறினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார். சுமார் 12 நாட்களுக்குப் பிறகு கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது போலீசாரின் மத்தியில் சுறுசுறுப்பைக் கொடுத்துள்ளது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள குற்றவாளிகளையும் பிடித்து விடுவோம் என மேற்கு வங்க போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வங்கதேச சுதந்திர தினம்: பிரதமர் வாழ்த்து

புதுதில்லி: வங்கதேச சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில்… இந்தியாவின் முக்கியமான மற்றும் நிரந்திரமான நண்பனாக பங்களாதேஷ் உள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு கிட்டப் பார்வை: தமிழிசை பதிலடி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்புவுக்கு கிட்டப்  பார்வை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பாஜகவுக்கு தமிழகத்தில் முகவரி இல்லை என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தாம்பரத்தைத் தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று அவர் பேசி இருப்பதால், அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது என்பது தெரிகிறது. குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும். என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன். மேலும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் இருக்கிறது.  குஷ்பு ஒரு பிரபலமான நடிகையாக இருந்தாலும், பாஜகவை பற்றி பேசித்தான் அரசியல் முகவரி தேடிக் கொள்ளும் நிலையில் அவர் இருக்கிறார் என்று பதிலளித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.