Home Blog Page 6183

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 3

பாகம் – 3 குட்டிக் கொள்ளும் போதே கணபதியையும், அவரது ஆவாஹன மந்திரத்தையும் நிப்பாட்டி விட்டு எங்கோ மேயப்போய்விட்டேனே என்று இப்போது என்னை நானே குறை சொல்லி, நொந்து கொள்ளப் போவதில்லை. சுவைக் குறைவான ஸ்ரீ மஹா பெரியவாளை இப்படித்தான் என்றில்லாமல் எப்படியோ ஒரு விதத்தில் சிந்தனையில் இருத்தி, அச்சுவையில் இதுதான் என்றில்லாமல் எதையும் ருசித்து இன்புறுவதுதான் நூலின் லக்ஷ்யம். எச்சுவையாயினும் அந்த இன்டரஸ்டிங் பெர்சனாலிடி குறித்தது ஆகையால் அதுவும் ஒன்று, ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்து நேராகவே இன்புறுத்தும், (ஆம், அவர் சராசரி மனுஷ்யராகத் தெரிவதுங்கூட “நம்மில் ஒருவரே” என்ற இறுக்க ஹவையே ஏற்படுத்தி இன்புறுத்தும். அஸாதாரணரின் ஸாதாரண நிலை என்பதாலேயே அதுவும் ரஸமாயிருக்கும்.) அல்லது அவர் சராசரிக்கும் கீழ் போல் காட்டி நொந்துகொள்ளும்போது நாமும் நோவுறுவதே நம் பாபத்தைச் சற்று கழுவி நமக்குத் தெரியாமலே நமது நித்திய இன்பத்திற்கு சற்று வழி திறந்து உதவும். பிற்பாடு,‘ஏனப்படிச் சொன்னார்?’ என்று யோஜிக்கும்போது ‘ஏன்’ என்று தீர்மானமாகப் புரிந்துதான் விடாது என்றாலும், புரியாததனாலேயே இன்டரஸ்டிங்காக இருக்கும்! ஆகையால், முக்யமாக ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டே இங்கு ஒவ்வொரு கட்டுரையும் எழுதப்பட்டிருக்கின்றதே அன்றி அவ்விஷயம் ஒன்றையே சொல்லவேண்டும் என்று இல்லை. அந்த நீரோட்டத்தில் இயல்பாக வேறு நதிகள் வந்து விழுவதற்கோ, பிரிவதற்கோ தடையில்லை. அந்த எல்லா நதிகளுக்கும் மூல நதி ஒன்றேயான அவர்தான் என்பதால். அவரும் அப்படித்தானே உபந்நியாசங்கள் செய்தார்? முக்யா விஷயம் என்று அவர் எடுத்துக் கொண்டு பேசியதில் எத்தனை வேறு விஷயங்களும் வந்து கலந்து பஞ்சாம்ருதமாக ஆகின? ஸ்ரீ சரணாளிடமே அனுமதி பெற்று அவரது வாழ்க்கை வரலாற்றை 1966 ஆகஸ்டில் ‘கல்கி’வெள்ளிவிழா இதழில் தொடராகத் தொடங்கினேன். ‘பூரணகும்பம்’ என்ற முகுடத்துடன் முகவுரை மட்டும் முதழிதலில் வெளிவந்தது. அடுத்து பிரஹ்மஸ்ரீ ஸாம்பமூர்த்தி சாஸ்திரியார் ஸ்ரீமடத்தில் இருந்து வந்தார். வேதாம்ருதம் போல் தொடங்கி அவர் கூறிய செய்தி விஷமாக முடிந்தது! இந்திர ஸரஸ்வதியார் வஜ்ராயுதம் ப்ரயோகம் செய்ததாகவே தோன்றியது! “கொழந்தை பூர்ணாகும்பம் குடுத்தான், வாங்கிண்டேன். அதுவே பூர்ணமா ரொம்பிடுத்து, மேற்கொண்டு தொடர் வரவேண்டாம்’னு உத்தரவாயிருக்கு”  என்றார் ஸ்ரீ சாஸ்திரிகள். எனக்கு பேச்செழவில்லை. கலங்கிப் போன அந்நாள் கல்கி அதிபர் பவ்யமாக, “ஆசீர்வாதம் வாங்கிண்டு தானே ஆரம்பிச்சோம்?இப்ப வேண்டாம்-கிறதுக்கு என்னவாவது காரணம் சொன்னாளா? மறுபடி கேட்டுப் பாக்கலாம்னு தோன்றதா?” என்று கேட்டார். சாஸ்திரிகள் முதலில் கூறிய உத்தரவையே எழுத்துக்கெழுத்து திரும்பக்கூறி, “இவ்வளவுதான் சொன்னா, காரணம் ஒண்ணும் சொல்லலை. ஆனா, தீர்மானமா இப்ப இந்த தொடர் வேண்டாம்ங்ற அபிப்ராயத்துல இருக்கா-ன்னு மட்டும் தெரியறது. அவ்வளவு அவசரப்படுத்தி, ‘அடுத்த இஷ்யு வேலை இப்பவே ஆரம்பிச்சு நடந்திண்டிருக்கும், ஒடனே போய்ட்டு வா’ன்னு அனுப்பிசா” என்றார். வேறு வழியின்றி தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் அடுத்த இதழும் தயாராகிவிட்டிருந்தது. அந்நாள்களில் எந்த ஞாயிறின் தேதியை ஒரு கல்கி இதழ் தாங்கி வருமோ அதற்கு முந்தய வெள்ளி இரவே கடைசியாக அச்சாகும் இதழ்ப் பகுதியும் அச்சாகத் தொடங்கிவிடும், எனவே பூர்ணகும்ப முகவுரையை அடுத்து எழுதிய முதல் அத்யாயம் கல்கியில் வெளிவந்து விட்டது. அந்த அத்யாயம் “வெட்ட வெளிச்சமான ஒரு தூய வாழ்க்கை பிறந்து விட்டது போல் தோன்றுகிறது” என முடிகிறது. கதைக்குள் அடக்க முடியாத,அடைக்க முடியாத வெட்ட வெளிச்சமான அகண்டாகார வாழ்க்கை என்று சூசனை செய்வதுபோல் அல்லவா அவ்வாசகம் அமைந்துவிட்டது? ஏமாற்றத்துடன் – உண்மையைச் சொல்லணுமானால், கோபத்துடனேயே – அப்போது ஸ்ரீ காளஹஸ்தியில் இருந்த ஸ்ரீசரணர்களிடம் சென்றேன். அவரது வரவேற்புக் கேள்வி விசித்திரமாக இருந்தது. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

ஊழல் வழக்கில் ராஜபட்சவின் தம்பியைத் தேடுகிறது போலீஸ்: அமெரிக்காவிலிருந்தும் தப்பிவிட்டாராம்!

ராஜபட்ச தலைமையிலான முந்தைய ஆட்சியில் இலங்கை பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அவரது தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபட்சவை போலீசார் தேடி வருகின்றனர். இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபட்சவும், அவரது தம்பிகளும் பதவியை பயன்படுத்தி செய்த குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. மேலும், அவர் குடும்பத்தினர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. எனவே, அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படுவர் என்று கூறப்பட்டது. இதனால், ராஜபட்சயின் தம்பிகள் கோத்தபய, மற்றும் பசில் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். பசில் ராஜபட்ச கடந்த 11ஆம் தேதி தனது மனைவியுடன் அமெரிக்கா சென்று விட்டார். பின்னர் முதல் வேலையாக, சுதந்திரா கட்சி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். இதையடுத்து, பசில் ராஜபட்ச சட்ட விரோதமான முறையில் நாட்டில் இருந்து தப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையதாக தலைமை ஆலோசகராக இருந்த பசில் ராஜபட்ச மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பசில் ராஜபட்சவை இலங்கை போலீசார் தேடிவருவதாக அந்நாட்டின் போலீஸ் உதவி சூப்பிரண்ட் ருவான் குணசேகரா கூறியுள்ளார். இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற பசில், தற்போது அமெரிக்காவில் இல்லை என்றும், வியட்நாமுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிப்படை கொள்கையில் இருந்து பாமக விலகுகிறது: வியனரசு

அடிப்படை கொள்கைகளில் இருந்து பாமக விலகிச் செல்கிறது என தமிழர் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் மேலும் கூறியது: தமிழக அரசியலில் தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி, அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து பாமக விலகிச் செல்கிறது. இனிமேல் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் திராவிடக் கட்சிகளோடு பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் : அன்புமணி ராமதாஸ்

டெல்லியைப் போன்று தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் நடக்கும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் கூறியது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். எங்களின் முதல் கையெழுத்து அதற்காகத்தான் இருக்கும். மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்போம்.  தமிழகத்தில் சமச்சீர் கல்வியை சிபிஎஸ்சி தரத்திற்கு உயர்த்துவோம். அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் உருவாகும் என்றார். பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச் செயலாளர் திருமலைக்குமாரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்வேலவன் மனைவி கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம்(52) என்பவர், அவரிடம் தவறாக நடக்க முயன்றாராம். இது குறித்து அந்தப் பெண் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிந்து வேலாயுதத்தை கைது செய்தார்.

ஜெயலலிதா புகழ்பாடும் பட்ஜெட் உரை: மு.கருணாநிதி

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜால ஏமாற்று வேலை என்றும், ஜெயலலிதா புகழ்பாடும் அறிக்கை என்றும் திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த கருத்துகள்… தமிழக அரசின் நிதிநிலை கடும் நெருக்கடியில் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில் வாசகங்களள் இடம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். மத்திய அரசு மீது பட்ஜெட்டில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி மத்திய நிதியமைச்சர் அதிமுக-வின் தலைவியை அவரது இல்லத்திலேயே சந்தித்த போது முதலமைச்சருடன் இருந்து இந்த கோரிக்கைகளை எடுத்துச் சொல்லாதது ஏன்? விவசாயிகளின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை, உடன்குடி மின் திட்டம், நெடுஞ்சாலை பணியாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை … 150 மெகாவாட் சூரியஒளி மின்சார திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 3ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதில் எஞ்சியது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை … ஜெயலலிதா புகழ்பாடும் வார்த்தைகள் தான் நிதிநிலை அறிக்கையில் திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளன. நாட்டு மக்களுக்கு பயன்படும் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வாய்ஜாலத்திலேயே உள்ள ஏமாற்று வித்தையை போலத் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

மார்ச் 27ல் பாரத ரத்னா பெறுகிறார் வாஜ்பாய்

vajpayee புது தில்லி: வரும் மார்ச் 27 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பெறுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், வாஜ்பாய்க்கான பாரத ரத்னா விருது, நாளை மறுநாள் மார்ச் 27ம் தேதி வழங்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, அவரது வீட்டுக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கவுள்ளார். அதேபோல், மதன்மோகன் மாளவியாவுக்கு வரும் மார்ச் 31 ல் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

வித்வான் ல.சண்முக சுந்தரம் காலமானார்

சென்னை: ரசிகமணி டி.கே.சி., என்றழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்ற இலக்கிய வட்டத்தில் இருந்து தமிழ்ப் பணி வளர்த்த வித்வான் ல.சண்முகசுந்தரம் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. வித்வான் இல.ச., என்றும், எல்.எஸ். என்றுvidwan-ila-shanmugasundaramம் இலக்கிய அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தமது மகன் வீட்டில் இன்று காலமானார். இவரைப் பற்றி… திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலும், குற்றாலத்திலும் டி.கே.சி நடத்தும் “வட்டத்தொட்டி” கூட்டங்களிலும், ஏனைய இலக்கியக் கூட்டங்களிலும் ல.ச.வின் முக்கியப் பங்கேற்பு இருக்கும். இவர் கி.ராவுக்கு நெருக்கமானவர். இவரிடம் எழுத்தாளர் கழனியூரன் பேட்டிகளும் எடுத்துள்ளார். அந்தப் பேட்டிகள் கதைசொல்லி இதழிலும் வெளிவந்துள்ளது. தன் இறுதிகாலத்தில் தென்காசி அருகே மேலகரத்தில் வாழ்ந்தார். டி.கே.சியின் பேரன் தீப.நடராஜனோடு கடைசிவரை நட்பு பாராட்டியவர். ரசிகமணியினுடைய வாழ்கை வரலாற்றை நூலாக வடித்தவர் ல.சண்முகசுந்தரம். அந்நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டது. இலக்கிய உலகில் டி.கே.சியின் புகழைத் தாங்கி நின்ற கடைசி சீடர்.

இந்திய அணியின் புத்தெழுச்சிக்கு தோனி தலைமை காரணம்: மைக்கேல் கிளார்க்

clark-ausie உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது மற்றும் கடைசி அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்தத் தொடரில் இந்தியா மிகக் கடுமையான போட்டியை எங்களுக்குக் கொடுக்கப் போகிறது. இந்தியாவின் இந்தப் புத்தெழுச்சிக்கு கேப்டன் தோனியின் தலைமையே காரணம் என நான் கருதுகிறேன். இந்திய அணி தற்போது மிகச் சிறந்த நிலையில் உள்ளது. நாங்களும் அதற்கேற்பத் தயாராகி வருகிறோம். இது எங்களுக்கு மிக அருமையான வாய்ப்பு. ஆஸ்திரேலியாவுக்காக ஒவ்வொரு முறை நாங்கள் களத்தில் இறங்கும்போதும், அது எங்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே இருந்துள்ளது. நாளையும் அதுபோல் இருக்கும். எந்த வித்தியாசமும் அதில் இல்லை. ஆனால், மிகச் சிறந்த அணி ஒன்றுக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம்” என்றார்.

செங்கோட்டை- புளியரையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்

sengottai-enchrochment செங்கோட்டை அருகேயுள்ள புளியரை முதல் தெற்குமேடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தார்சாலை உள்ளது. இந்த தார் சாலை மாநில நெடுஞ்சாலை துறை சாலையாகும். தற்போது பெருகிவரும் வாகனங்களை கருத்தில் கொண்டு சாலையை விரிவுப்படுத்திடவும்,பாலங்கள் அமைக்கவும்,சாலை அமைக்கவும் தமிழகஅரசு ரூபாய்.ஒருகோடியே 50இலட்சம் ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு இடைஞ்சலாக புளியரை-தெற்குமேடு சாலையில் இருபுறமும் இருந்த 7 கடைகளும், நேற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் பெர்க்குலைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.