அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்வேலவன் மனைவி கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம்(52) என்பவர், அவரிடம் தவறாக நடக்க முயன்றாராம். இது குறித்து அந்தப் பெண் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிந்து வேலாயுதத்தை கைது செய்தார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
