கொஞ்சம் புன்னகைக்கலாம்..! லேசா தண்ணி கூடியிருக்கு அருவியில!

உள்ளூர் செய்திகள் சுற்றுலா நெல்லை

courtallam waterfalls july08 - 2026

குற்றாலம் பேரருவியில் இன்று தண்ணீர் வரத்து நேற்று இருந்ததை விட சற்று அதிகரித்துள்ளது.

குற்றாலம் பேரருவியில் ஜூலை 8, திங்கள் கிழமை காலை தற்போது தண்ணீர் ஓரளவு கூடுதலாகவே விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் சுமாராக விழுவதால் பெண்கள் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றால பிரதான அருவி மட்டுமல்லாமல், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சற்று தண்ணீர் வரத்து கூடியுள்ளது. நேற்று மாலை சுமாரான மழை விட்டு விட்டு இருந்தது.

மலைப் பகுதியில் மேகமூட்டமாக உள்ளது. வெய்யில் அதிகம் தெரியாமல், சற்றே இதமான சூழல் நிலவியது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சுற்றுலா பயணியர் அதிக அளவில் குவிந்திருந்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.