செங்கோட்டை அருகேயுள்ள புளியரை முதல் தெற்குமேடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தார்சாலை உள்ளது. இந்த தார் சாலை மாநில நெடுஞ்சாலை துறை சாலையாகும். தற்போது பெருகிவரும் வாகனங்களை கருத்தில் கொண்டு சாலையை விரிவுப்படுத்திடவும்,பாலங்கள் அமைக்கவும்,சாலை அமைக்கவும் தமிழகஅரசு ரூபாய்.ஒருகோடியே 50இலட்சம் ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு இடைஞ்சலாக புளியரை-தெற்குமேடு சாலையில் இருபுறமும் இருந்த 7 கடைகளும், நேற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் பெர்க்குலைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
செங்கோட்டை- புளியரையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
Published:

