நாளை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய காட்சி ஊடகம் ஒன்று விராட் கோலியைப் பேட்டி கண்டது. அப்போது, விராட் கோலி, எங்களுக்கு எந்த விதமான நெருக்கடியும் இல்லை, நெருக்கடியில் நாங்கள் விளையாடவில்லை, ஆஸ்திரேலியாவுக்குத்தான் நெருக்கடி அதிகம்; இந்தியா நிச்சயமாக ஆஸ்திரேலியாவின் மிரட்டலில் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குத்தான் நெருக்கடி: விராட் கோலி
அஸ்வின் சுழலை எதிர்கொள்ள க்ளார்க் ‘பெண்டை நிமிர்த்துகிறார்’ ஷேன் வார்ன்
சிட்னி: நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியை எப்படி எதிர்கொள்வது என்று தீவிர பயிற்சி அளித்து வருகிறார் ஆஸ்திரேலிய முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியினர் சிட்னி மைதானம் சுழலுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்த நிலையில், இந்த பெண்ட் நிமிர்த்தும் வேலையில் ஷேன் வார்ன் இறங்கியுள்ளார். இந்திய அணிக்கு ஆதரவாக ஐசிசி செயல்படுகிறது என்று முதலிலேயே ஆஸ்திரேலிய அணியினர் புகார் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் தனது நாட்டு அணிக்காக களத்தில் குதித்துள்ள ஷேன் வார்ன், ஆஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, மிக்கேல் க்ளார்க்குக்கு தீவிரமாக சுழற் பந்து வீசி பயிற்சி அளித்தார். தற்போது, பார்மில் இருக்கும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வினின் சுழலை நாளை எதிர்க்கொள்ளத் தேவையான நுணுக்கங்களை க்ளார்க்குக்கு அவர் பாடம் எடுத்துள்ளாராம். சிட்னி கிரிக்கெட் க்ரௌண்டில் 14 போட்டிகளில் 64 விக்கெட் சாய்த்தவர் ஷேன் வார்ன். இங்கே 26 ஒருநாள் போட்டிகளில் 43 விக்கெட்களை சாய்த்துள்ளார். 23 வருடங்களுக்கு முன் இங்கே அவர் அறிமுகமானாராம். ஷேன் வார்ன்னின் பயிற்சி முயற்சி குறித்து, ஆஸ்திரேலியாவில் பரவலாக டிவிட்டர் செய்திகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. லெக் ஸ்பின்னில் கலக்கும் வார்ன் எப்படி, அஸ்வினின் வித விதமான ஸ்டைலை எதிர்கொள்ள க்ளார்க்குக்கு கற்றுத் தரப் போகிறார் என்று கமெண்ட்டும் இல்லாமலில்லை!
.@ShaneWarne helping @MClarke23 prepare. @FOXSportsNews @FOXCricketLive pic.twitter.com/665utOVzNE — Neroli Meadows (@Neroli_M_FOX) March 25, 2015
Lol Aus so scared abt spin they asked Shane Warne to put down the mike and bowl pic.twitter.com/9H8sMXxFJT #AusvInd #INDvAUS — Viraj Deshpande (@criczest) March 25, 2015
சுரங்க முறைகேடு வழக்கு: சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் மனு
புது தில்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அளித்த சம்மன் உத்தரவை எதிர்த்து மன்மோகன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட மன்மோகன் சிங், குமார்மங்கலம் பிர்லா ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மன்மோகன் சிங் மற்றும் பிர்லா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக, ஜனவரி 20-ஆம் தேதி மன்மோகன் சிங்கின் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. வரும் ஏப்ரல் 8-ம் தேதி மன்மோகன் சிங்கும், குமார்மங்கலம் பிர்லாவும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ம.பி.,ஆளுநர் மகன் மர்ம மரணம்
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்தியப் பிரதேச ஆளுநரின் மகன் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மத்திய பிரதேசம் மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகன் சாய்லேஷ் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்வு வாரிய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். சாய்லேஷ் யாதவ் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, காவல் துறை அதிகாரி வீரேந்திர பகதூர் சிங் கூறுகையில், “ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்வின் அரசு வீட்டில் இறந்த நிலையில் சாய்லேஷ் யாதவ் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி விசாரித்து வருகிறோம்…” என்றார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர். இந்த ஊழலில் சாய்லேஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பணி நியமன முறைகேடு குறித்து மாநில சிறப்பு அதிரடிப் படை விசாரணை நடத்தி வருகிறது. ராம்நரேஷ் யாதவ்,உத்தரப் பிரதேச முதலமைச்சராக் இருந்தவர். 2011ல் காங்கிரஸ் கட்சியினால் மத்திய பிரதேச ஆளூநராக நியமிக்கப்பட்டவர்.
ஏற்றமும் ஏமாற்றமும் கலந்துள்ளது: பட்ஜெட் குறித்து சேம்பர் ஆஃப் காமர்ஸ் கருத்து
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள தமிழக பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், சிலவற்றுக்கு வரவேற்பு தெரிவித்தும், சிலவற்றுக்கு ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்… மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் சமர்ப்பித்துள்ள 2015-2016-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொழில் வணிகத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் வகையிலும் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளமைக்காக எங்கள் பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பிற மாநிலங்களுடன் தமிழக வணிகம் அதிகரிக்கும். பிற மாநிலங்களுடன் தமிழக வணிகம் அதிகரிக்கும். தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு “ஊ” படிவம் பெற்று சரக்கை விற்றாலும் 3 சதவிகித உள்ளீட்டு வரி வரவை ரத்து செய்ய வேண்டும், “ஊ” படிவம் இல்லாமல் விற்றால் மிக உயர்வான உள் மாநில வரி விகிதங்களை விதிப்பதுடன் அப்பொருளுக்கான உள்ளீட்டு வரி வரவு முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்ற இரட்டைத் தண்டனை ஆகிய சட்டப் பிரிவுகளின் காரணமாக தமிழக வணிகர்கள் வெளி மாநில வணிகர்களுடன் போட்டியிட முடியாமல் தங்கள் வணிகத்தையே சுருக்கிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக வரவு செலவுத் திட்ட முன் ஆலோசனையில் தெரிவித்திருந்ததை ஏற்று மேற்குறிப்பிட்ட இரண்டு உள்ளீட்டு வரி வரவு ரத்து சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பது அனைத்திந்திய அளவில் நம் மாநில தொழில் வணிகர்கள் சிறப்பாக வணிகம் செய்ய உதவிகரமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையிலும் வரவேற்கத்தக்க வரிச் சலுகைகள்: உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக வணிக வரி வருவாய் குறையும் என்பதாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற்றத்தால் வணிக வரி வசூல் வரும் ஆண்டில் ரூ. 2,141 கோடி அளவிற்கு குறையும் என்பதாலும், 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான மொத்த நிதிப் பகிர்வு மற்றும் மானிய உதவிகளின் மொத்த அளவு வரும் ஆண்டில் ரூ. 1,531 கோடி குறையும் என்பதாலும் பெரும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் அண்டை மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் புதிய வரி விதிப்புகளும், வரி உயர்வும் தவிர்க்க முடியாதது என்ற அச்சத்தில் இருந்த தொழில் வணிகத் துறையினரையும், பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் எந்தப் புதிய வரி விதிப்பும், வரி உயர்வும் இல்லை என்று அறிவித்துள்ள முதலமைச்சரை மிகவும் பாராட்டுகிறோம். அதுமட்டுமல்லாது மின் உற்பத்தியை ஊக்குவிக்க உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வரி விலக்கு அளித்திருப்பதும், மீன்படி கயறுகள், மீன் வலை முறுக்கு நூல், கொசு வலை, நூலுக்குப் பசையிடும் ஒப்பந்தப் பணிகள் ஆகியற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து முழுவிலக்கு அளித்திருப்பதும், ஏலக்காய், டுநுனு விளக்குகள், காற்றழுத்த கருவிகள், பத்து குதிரை திறன் வரையிலான மோட்டார் பம்புகள், கைபேசிகள் ஆகியவற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியை கணிசமாகக் குறைத்திருப்பதும் தொழில் வணிக வளர்ச்சியை குறிப்பாக சிறு தொழில் துறையை ஊக்குவிக்கும் சலுகைகளாகும். பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும்: தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளையும் சிறப்பு நகரங்களாக (ளுஅயசவ ஊவைநைள) மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரூ. 400 கோடி ஒதுக்கியிருப்பதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்து உரிமங்களையும் எளிதில் பெற்று புதிய தொழில் துவங்க பெரிய தொழிற்சாலைகளைப் போல் ஒற்றைச் சாளர முதலீட்டாளர் இணைந்தளம் 2015-2016-ல் அறிமுகப்படுத்த விருப்பதும், புதிய தொழில் முனைவோருக்கு “தொழில் முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சி மையம்” அமைக்கப்படவிருப்பதும், மின் துறைக்கு மொத்தம் ரூ. 13,586 கோடி ஒதுக்கியிருப்பதும், காவல் துறைக்கு முன் எப்போதையும் விட அதிக அளவில் ரூ. 5,568 கோடி ஒதுக்கியிருப்பதும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும். 2-வது பசுமைப் புரட்சி உறுதி: வேளாண்மைத் துறைக்கு எந்த ஆண்டிலும் இல்லாத அளவு இந்த ஆண்டு ரூ. 6,614 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், பயிர் கடனுக்காக ரூ. 5,500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், பயிர் கடனை முறையாக செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் முறையாக செலுத்துவோருக்கு வட்டி இல்லை என்றும் அதற்காக வட்டி மானியம் ரூ. 200 கோடி ஒதுக்கியிருப்பதும், பல மாவட்டங்களில் வேளாண் பயிர்கள் வீணாவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குகளும், குளிர் பதன கிடங்குகளும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், நுண்ணீர் பாசன மானியத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கியிருப்பதும், அணைக்கட்டுகளை புனரமைக்கவும், மாநில நதிநீர் இணைப்பிற்கும் போதிய நிதி ஒதுக்கியிருப்பதும் தமிழகத்தில் 2-வது பசுமைப்புரட்சியை நோக்கி வேளாண் பெருமக்களை அழைத்துச் செல்லும் திட்டங்களாகும். ஏமாற்றம்: தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சி ஏற்பட முயற்சிகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு சர்வதேச முதலீடுகளை வரவேற்கும் வகையில் வருகின்ற மே மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ள முதலமைச்சர், தொழில் துறையில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் குறிப்பாக துரித தொழில் வளர்ச்சிப் பாதை என்று அறிவிக்கப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி உயர் சாலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் துவங்க வருவதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய விமானங்கள் வந்தாக வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. மொத்தத்தில். . . 2015-2016-ம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 9 சதவிகிதமாக இருக்கும் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டும் வகையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் பட்ஜெட் இது. – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும்: பி.தனபால்
சென்னை தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார். தமிழக அரசின் 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 4 நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை நடைபெறாது. வெள்ளிக்கிழமை பட்ஜெட் அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும். சனிக்கிழமை, பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டின் முன் பண மானியக் கோரிக்கைகளும், நடப்பு நிதி ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் பேரவையில் தாக்கல் செய்யப்படும். அவற்றின் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். அன்று நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால், திங்கள், செவ்வாய் இரு நாட்களிலும் நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை அன்று பொது விவாதங்களுக்கு பதில் அளிக்கப்படும் என்றார் தனபால்.
பட்ஜெட் – மாநில உண்மை நிலையை மூடி மறைத்துள்ளது: மார்க். கம்யூனிஸ்ட்
சென்னை: தமிழக பட்ஜெட் மாநில உண்மை நிலையை மூடி மறைத்துள்ளதாக மார்க். கம்யூனிஸ்ட் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதிமுக அரசினுடைய 2015-2016-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தினுடைய வளர்ச்சிக்காண திட்டமுமில்லை. மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளுமில்லை. பட்ஜெட் மாநிலத்திலுள்ள உண்மை நிலையை மூடி மறைத்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வந்த நோக்கியா உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் மூடப்பட்டதால் 25,000-த்துக்கும் மேற்பட்ட நிரந்தர, காண்டிராக்ட் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். ஆலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்ததை வேடிக்கை பார்த்த மாநில அரசு உண்மை நிலையை மறைத்து உலகிலேயே தொழில்மயமான பகுதிகளில் ஒன்றாக மாநிலத்தை திகழச் செய்யப்போவதாக பட்ஜெட் மூலம் கூறுகிறது. தொழிலாளர்களுக்கான நலவாரியங்களின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கும் அவலத்தை மாற்ற எந்த அறிவிப்பும் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மாநில அரசு சிறு,குறு தொழில்களை பாதுகாக்க, ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்திலுள்ள 4 1/2 லட்சம் சிறு, குறு தொழில்களில் சரிபாதி தொழில்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறி நலிவடைந்து வருவதால் விவசாயத்தை நம்பியுள்ள ஒரு பகுதியினர் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி குடிபெயரும் அவல நிலை தொடர்கிறது. கடந்த ஆண்டு நெல்லுக்கும், கரும்புக்கும் மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலைக்கு மேல் மாநில அரசு கூடுதலாக கொடுத்ததாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், முந்தைய ஆண்டு அறிவித்த தொகைக்கு மேல் சென்ற ஆண்டு கூடுதலாக அளிக்கவில்லை என்ற உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும் பகுதியினருக்கு கடன் கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டுக்கான இலக்கு 5500 கோடி ரூபாயாக இருந்தாலும் தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்குமா? என்பதுதான் கேள்வி. ஐசிடிஎ° மற்றும் பள்ளிகளில் மதிய உணவுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட பெரிதாக உயர்த்தப்படவில்லை. மின்துறையில் சரியாக திட்டமிடாதது, நிர்வாக சீர்கேடு, முறைகேடு போன்ற காரணங்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாரத்தை மக்கள் மீது சுமத்த மின் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியது. உடன்குடி மின்திட்டத்திற்கான டெண்டரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ததே முறைகேடு நடந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. புதிய தொடக்கப்பள்ளிகள் துவக்கப்பட்டதாகவும், சில தொடக்கப்பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் தரம் உயர்த்தியதாக பட்ஜெட்டில் கூறும் மாநில அரசு சமீப காலத்தில் மூடப்பட்ட 1500 அரசுப்பள்ளிகளைத் திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவிலலை. சுமார் 2000 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20 அல்லது இதற்கும் குறைவாக உள்ளதை அதிகரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் அரசினுடைய அடிப்படை நோக்கம் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதே. அரசுப்பள்ளிகளை பாதுகாக்க உருப்படியான எந்த ஆலோசனையும் பட்ஜெட்டில் இல்லை. உயர்கல்வி பெரும்பான்மையாக தனியார் மயமாகிட அனுமதித்து விட்டு, தனியார் சுயநிதிக் கல்வி நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளதை அரசின் சாதனையாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி என்பது பெரும்பான்மையாக வசதி படைத்தவர்களுக்கே என்றாகி விட்டது. தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்ற சட்டப்பிரிவு பரவலாக மீறப்படுவதை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. உணவுப்பாதுகாப்பு மற்றும் பொது விநியோக முறையை பொருத்தவரை 5300 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-2014-லிலேயே 5000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் கழித்து வெறும் 300 கோடி அதிகரிப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே மத்திய அரசு உணவுப்பாதுகாப்பை கைகழுவி விடும் நிலையில் மாநில அரசின் ஒதுக்கீடும் இவ்வளவு குறைவாக இருந்தால் பொது விநியோக முறையை பாதுகாக்க முடியாது. கடந்த 3 ஆண்டு காலமாக தமிழகத்திலுள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளிலுள்ள மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. இதனால் மேற்கண்ட விடுதிகளில் வழங்கப்படும் உணவு, விடுதிகள் பராமரிப்பு தரம் உள்ளதாக இல்லை. கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் முறையாக வழங்கப்படவில்லை. பலருக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்குரிய கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்படவில்லை. மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் பலவீனங்கள் நீடிக்கின்றன. துறைவாரியான ஒதுக்கீட்டில் பெண்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலின நிகர்நிலை கண்ணோட்டத்துடன் பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காத்து வருவதாக பட்ஜெட் கூறுகிறது. ஆனால், உண்மை நிலை வேறானது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 100 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு சமூக விரோத, சாதி ஆதிக்க பின்புலம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள், மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத மாநில அரசு சிறப்பாக பேணிக்காப்பதாக கூறுவது உண்மைக்கு மாறானது. மொத்தத்தில் மாநில அதிமுக அரசினுடைய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டமுமில்லை, குவிந்து கிடக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுமில்லை என மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. – என்று கூறியுள்ளார்.
முதல்வருக்கு எதிராகக் குரல்: கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி திடீர் கைது
பெங்களூரு: பெங்களூரில் பலராலும் அறியப்பட்ட கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி புதன்கிழமை இன்று பெங்களூரு போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டார். பழம்பெரும் கன்னடக் கவிஞர் தேவரதாசி மையாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி கன்னட முதல்வர் சித்தராமையாவின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 84 வயதான எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார். ஜெதாதேவரதாசி மையாவின் படைப்புகள், தேவரதாசி மையாவின் படைப்புகளைக் காட்டிலும் அதிக வலுவானவை, சமூகத்துக்கு பயனுள்ளவை என்று கூறி, அரசின் தேவரதாசி மையாவின் பிறந்த நாள் விழாக்களுக்கு சிதானந்த மூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தனராம். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து முதல்வரிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். ஆனால் பதில் அளிக்காமல் அவர் நகர்ந்துவிட்டார். இருப்பினும், சிதானந்த மூர்த்தி கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்று கர்நாடக கலாசார அமைச்சர் உமா ஸ்ரீ ஊடகத்தினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜகதீஷ் ஷெட்டர், முன்னணி எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Bengaluru: Veteran Kannada writer Chidananda Murthy dragged and arrested at an event where CM was in attend… https://t.co/5BWz5Xn6ES — ANI (@ANI_news) March 25, 2015
I condemn the harassment of Shri M Chidananda Murthy, he is a senior intellectual of Karnataka: Jagdish Shettar, BJP pic.twitter.com/FcietMxpq9 — ANI (@ANI_news) March 25, 2015
பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர்
சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர். இது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. மார்ச் / ஏப்ரல் 2015-க்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று (25.03.2015) காலை 09.15 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.00 மணி வரை நல்ல முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடைபெற்று முடிந்தது. இன்று நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை கிருஷ்ணகிரி 1 பள்ளித் தேர்வர், மதுரை 5 தனித் தேர்வர்கள், அரியலூர் 4 தனித் தேர்வர்கள் கடலூர் 43 தனித் தேர்வர்கள் , 1 பள்ளித் தேர்வர் திருவண்ணாமலை 8 தனித் தேர்வர்கள், 1 பள்ளித் தேர்வர் வேலூர் 9 தனித் தேர்வர்கள், 1 பள்ளித் தேர்வர் சென்னை 1 தனித்தேர்வர் என மொத்தம் 74 தேர்வர்கள் (4 பள்ளித் தேர்வர்கள் ; 70 தனித்தேர்வர்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டாக அறிவிக்கப்பட்டதே இப்போதும்; மக்களுக்குப் பயனற்ற பட்ஜெட்: வைகோ
சென்னை: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, நான்கு ஆண்டுகளாக அறிவித்ததை இப்போதும் அறிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இன்று பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட கருத்து அறிக்கை: தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களோ, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற அறிவிப்புகளோ எதுவும் இடம் பெறவில்லை. இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும், கடந்த நான்கு ஆண்டு காலமாக அறிவிக்கப்பட்டவைதான். தமிழகத்தில் வேளாண் மற்றும் தொழில்துறைகளின் உற்பத்தி வளர்சசி இலக்குகளை எட்டாமல், மாநிலத்தின் மொத்த வளர்ச்சி 9 விழுக்காடு அளவைத் தாண்டிவிடும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மாநிலத்தின் சொந்த வரி வருவாய் நடப்பு ஆணடில் 2140 கோடி ரூபாய் குறையும் என்றும், மத்திய அரசின் நிதிப் பகிர்வின் மூலம் தமிழகத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அப்படியானால், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. காவல் துறைக்கு 5568.8 கோடி ரூபாய்; வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 6613 கோடி; அதிமுக அரசு விவசாயத் துறைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் எத்தகையது என்பதைக் காட்டுகிறது. கடந்த காலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற ஆரவார அறிவிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை? வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க வேளாண் இயதிரமயமாக்கும் திட்டம், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் போன்றவை வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 3500, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையிலும் எந்த அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. தஞ்சையில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி முதல்வர் அறிவிக்காதது ஏன்? மின்சாரத் தேவையை நிறைவு செய்து இருப்பதாக முதல்வர் பாராட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. மின் உற்பத்தித் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அதிக விலை கொடுத்து மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்தது சாதனையா? செய்யாறு, உடன்குடி மின்சாரத் திட்டங்கள் நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன் என்று முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை. பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, மின்சாரத்துறைக்கு 13,586 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்து இருப்பதன்மூலம், மின்சாரத்துறையில் தமிழகம் தன்னிறைவு அடைய வழி இல்லை. மக்கள் நலவாழ்வுக்கு 8248 கோடி ரூபாய் ஒதுக்கீடு மிகவும் குறைவு. மொத்த ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறைக்கு 10 விழுக்காடு அளவு அளித்ததால்தான் பெருகி வரும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். ஆனால், வெறும் 4.52 விழுக்காடு மட்டுமே ஒதுக்கீடு செய்து உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 31,206 கோடி ரூபாய்க்குத் தொழில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பதையும் அரசு விளக்க வேண்டும். அந்நிய நிறுவனங்களான நோக்கியா, பாக்Þகான் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள தமிழ்நாட்டில் ஒற்றைச்சாளர அனுமதி மூலம் இனி தொழில்துறை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லப்படும் எனறு முதல்வர் கூறுவது எப்டி சாத்தியமாகும் என்று தெரிவிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக அரசு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. 2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, மாநிலத்தின் கடன் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நான்கு ஆண்டுகளில் அரசின் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதுதான் நான்கு ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை ஆகும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. வருமானத்திற்காக டாÞமாக் மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ள அரசு, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் தமிழக அரசின் கருñலத்துக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு ஊழல்களும், அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளும்தான் காரணம் என்பதை உணரவில்லை. அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

