Home Blog Page 6237

“பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்” (லோக கருணை)

“பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்” (லோக கருணை)சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்
குறைகளையும் கஷ்டங்களையும் திருப்பித் திருப்பி
சொல்லிவிட்டு, ‘பெரியவாள் அனுக்ரஹம் பண்ண
வேண்டும்’ என்று வேண்டும் காட்சி ஸர்வஸாதாரணம்.
பெரியவாளை தரிசித்து விட்டு ஒன்றும் வேண்டாமல்
செல்பவர்கள் மிக மிக அரிது. 
 
இந்நிலையில் தினசரி விடியற்காலம் விசுவரூப
தர்சனத்திலிருந்து தொடங்கி, தொடர்ந்து பல மணி
நேரம் பக்தர் கூட்டம் அலைமோதித் தம் கஷ்ட 
நஷ்டங்களை பல முறை (வலம் வந்து வந்து)
கூறினாலும் கூட நிகரற்ற பொறுமையுடன்
அதைக் கேட்டு தன் திவ்ய கரத்தை உயர்த்தி அபயம்
கூறும் அருளை யார்தான் விளக்க முடியும்?
 
ஒரு பாட்டி காஞ்சி மடத்தில் ஒரு சமயம் தன் குடும்ப
சச்சரவு பற்றி திரும்பத் திரும்பக் கூறினார்.
அந்த செய்திகளைப் பெரியவாளின் செவியில்
விழும்படி கூறும் ஒரு சிப்பந்தி, சற்றுக் கடிந்து 
கொண்டு உரத்த குரலில் ‘பாட்டி உங்களுக்கு வேறு 
வேலையில்லை?எத்தனை தடவை திருப்பி திருப்பி
 கூறுவது? என்றார்.
 
ஸ்ரீபெரியவாள்,”ஏண்டா! யாரது? ஏன் கத்தரே?”
 
“யாரோ பாட்டி, சொன்னதையே திருப்பித் திருப்பி 
கூறுகிறாள்.”“என்ன சொல்றா, என் காதில் விழவில்லையே மறுபடி ஒரு முறை நீ கேட்டுச் சொல்லு” என்றதும்
பாட்டிக்கு எத்தனை ஆனந்தம்!
 
சில நேரத்தில் கஷ்ட பரிஹாரங்கள் கூறுவார்கள்.
பக்தர்களின் நிதிநிலையைக் கேட்டு, அதற்கு
ஏற்றபடி கோவில்,குளம்,தானதர்மம் செய்யுமாறு
உத்திரவாகும். அதில் ஒரு நிகழ்ச்சி.
 
வணிகத்துறை பிரமுகர் ஒருவர் காஞ்சிபுரம் வந்து
மஹாஸ்வாமிகளைத் தரிசித்துக் கூறினார்.
 
எனக்கு பல நாட்களாக பிஸினஸ் மந்தம்.
பல கவலைகள். ராத்திரி படுத்தா தூக்கம் வரவில்லை
மன உளச்சலை தாங்க முடியவில்லை. பெரியவாள்
அருள் தேவை.
 
ஸ்ரீபெரியவாள், “நீ ஒரு கார்யம் பண்ணுவாயோ?”“காத்துக் கொண்டிருக்கேன்” “பௌர்ணமி அன்று இரவு உன்னால் முடிந்த மட்டில்
ஆகாசத்தில் பூர்ண சந்திரனைப் பார்த்துண்டே,
ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை சந்திரமண்டலத்தில்
246400_479182102136836_1433845875_nஇருப்பதாக தியானம் பண்ணு.ஸகல கவலையும் விலகும்.”(என்ன கருணை)

“ஸ்ரீ பெரியவாளின் புரட்சி” (என்னே கருணை!)

10482143_599228513527816_46027082804070919_n

“ஸ்ரீ பெரியவாளின் புரட்சி” (என்னே கருணை!) சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
எந்த ஊரில் (பொட்டல் கிராமமாக இருந்தாலும்)
இரவு எவ்வளவு நேரமானாலும் கூட ஸ்ரீ பெரியவாளின்
முகாமிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆகாரம்
செய்து வைக்குமாறு சிப்பந்திகளுக்கு ஆக்ஞை
செய்வார்கள். அதோடு நிற்காமல், சற்று நேரத்திற்குப்
பிறகு அந்த சிப்பந்திகளை தனித்தனியே அழைத்து
‘வந்தவாளுக்கு என்ன ஆகாரம் பண்ணி வைத்தாய்?
என்று வினவும் பாங்கு பெரியவாளுக்கு உரியது.
 
வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது.
 
பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம் பெரியவாள், “எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று கேட்பார்கள்.
 
“என் பாக்கியம்”
 
“சிவாஸ்தானம் யானைகட்டித் தெருவிலே உள்ள
வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு,காரம்
பக்ஷணங்களை பண்ணி நீயே போய் கொடுத்துட்டு வா”
 
பிறகு சில நாட்களில் அந்தப் பாடசாலை குழந்தைகள்
வந்தால் உடனே, “அன்று பக்ஷணம் வந்ததா?
சாப்பிட்டாயா? என்று அக்கறையோடு கேட்பார்கள்.
 
(மாடுகூடத் திங்காத அழுகல் வாழைப்பழம்
வேதபாடசாலைப் பையன்களுக்கு’ என்று பழமொழிபோல்
கூறப்பட்ட காலத்தில் ஸ்ரீபெரியவாளின் பெரிய புரட்சி இது)
 
ஸ்ரீமடம் எங்கு முகாம் செய்தாலும் பெரியவாளின்
உத்திரவுப்படி, விசேஷமாக, கோடை காலத்தில்
தண்ணீர் பந்தல் போல் பக்த ஜனங்கள் யாவர்க்கும்
நீர்மோர் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்.
 
விசேஷமாக ஓரிருக்கை கிராமத்தில் கடும் கோடையில்
பாலாற்றின் கரையில் பெரியவாள் குடிசையில் அமர்ந்து
கொண்டு, வருபவர்கள் அனைவருக்கும் நீர்மோர்
வழங்கும் குளிர்ச்சியான காட்சி வர்ணிக்க முடியாது.

90% பெண்கள் இந்தியாவில் பயணங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு

delhimetrotravel6 மும்பை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக செய்திகள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 94 சதத்துக்கும் அதிகமான பெண்கள், தாங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பயணப் படுவதாக தெரிவித்துள்ளனர். அண்மைய சர்வே முடிவு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஹாலிடேஐக்யு என்ற அமைப்பு அண்மையில் எடுத்த சர்வேயில், 18-24 வயதுடைய இளம் பெண்கள், தாங்கள் இந்தியாவில் பயணப்படும் போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 92 சத 25-34 வயதுடைய பெண்கள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், 35-44 வயதுடைய 79 சத பெண்களும், 45-54 வயதுடைய பெண்களில் 87 சதவீதம் பேரும், 55-64 வயதுடைய பெண்களில் 47 சதவீதம் பேரும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தில்லியில் 71 சத பெண்கள் தாங்கள் பயணங்களில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்றும், 60 சதம் பேர் அவற்றை விடுமுறையில் கழிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

போக்குவரத்து பணியாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச்.20ல்!

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் இன்று போக்குவரத்து ஊழியர்களுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 3ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் மார்ச் 20ல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதா: தமிழிசை

சென்னை: எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: அதிகாலை புதிய தலைமுறையின் ஊடக அலுவலகம் டீபன்பாக்ஸ் வெடி குண்டினால் தாக்கப்பட்டிருக்கிறது. வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதா எந்தவித வன்முறையையும் ஊக்குவிப்பது கிடையாது. ஆக ஊடகத்தின் மீது நடந்த இந்த தாக்குதலை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆனால், அதே சமயத்தில் எங்கே எந்த தாக்குதல் நடத்தினாலும் அதை பா. ஜ. க-வைச் சேர்ந்தவர்கள் மீதும் சங்க குடும்பங்கள் மீதும் பழி சுமத்துவதும், எதை எடுத்தாலும் உடனே அனைவரும் ஒரே நோக்கில் ஒரே இயக்கத்தையும். அதைச் சார்ந்த இயக்கங்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று தெரிவதற்கு முன்னாலே சில அமைப்புகளை குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல. அதுவும் ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான். தமிழகத்தில் கண்டனம் தெரிவிப்பதில் கூட பாராபட்சம் நிலவுகிறது. சில மதங்கள், சில அமைப்புகள் சில போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் என்றால் அவர்களைத் தாஜா செய்வதும், அதனை கண்டிக்காமல் விடுவதும், மிதமாக இருப்பதும், ஆனால் அதே சமயத்தில் பண்பாடு ரீதியாக சில விமர்சனங்கள் வரும்போது அதை யார் எதிர்த்து கேட்டாலும் உடனே இந்து அமைப்புகள் மீது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதும் வருந்தக்கது. ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கும் உடனே கண்டனம் தெரிவிப்பதிலும,; யார் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்பும் கண்டனம் தெரிவிப்பதில் கூட பாரபட்சம் இருப்பதும் அதேபோல், சில பொய் குற்றங்கள் சுமத்தப்பட்டு சில அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்படும்போது, ஏன் கொலை செய்யப்படும்போது கூட கண்டனக் குரல்கள் எழுப்பபடுவதில்லை என்பது வேதனை. ஆக ஊடகங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தின் மீது தீவிர நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

டிவி அலுவலக குண்டு வீச்சு: அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலக வளாக குண்டுவெடிப்பில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (மார்ச் 12) காலை சுமார் 3 மணி அளவில் இரண்டு பைக்குகளில் வந்த நபர்கள் புதிய தலைமுறை தொலைகாட்சி அலுவலக வளாகத்திற்குள் இரண்டு குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது இது மூன்றாவது முறை நடத்தப்பட்ட தாக்குதலாகும். கடந்த மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தையொட்டி ஒளிபரப்ப இருந்த நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக அலுவலகத்திற்கு வந்து ஒளிப்பதிவாளரை தாக்கியதோடு, கேமிராவை உடைத்தனர். ஒரு பெண் நிருபரையும், தலைமை செய்தியாளரையும் அந்த கும்பல் தாக்கியது. இதனுடைய தொடர்ச்சியாகவே, இன்று (12-03-2015) அதிகாலை புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தை குண்டு வீசி தாக்கியுள்ளனர். கருத்து சுதந்திரத்தை பறிக்கக்கூடிய நோக்கத்தோடு சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொலைக்காட்சி மீதும், தொலைக்காட்சியில் பணியாற்றுகிறவர்கள் மீதும் தொடுத்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட வன்முறையாளர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும்: பாரிவேந்தர்

சென்னை: 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாரிவேந்தர் அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (13 -ம் தேதி) நல்லுறவு பயணமாக பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இலங்கைக்கு செல்ல உள்ளார். இப்பயணத்தின் போது, இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகுக்கும்,  இலங்கையின் 13 – வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர்களின் பெரும் பகுதிகளை இலங்கை ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வட – கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை ராணுவம் மற்றும் சிறப்பு காவல் படையை உடனே திரும்பப்பெறவேண்டுமெனவும், தமிழர்களின் நிலப்பரப்புக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் எனவும் இலங்கை அரசை இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பெருமளவில் வாழும் நிலப்பரப்பில் சிங்களர்கள் அத்துமீறி குடியேறுவதை உடனே தடுத்து நிறுத்த இலங்கை அதிபரிடம் பேசவேண்டும். இலங்கையின் உள்நாட்டு போரின்போது “மனித உரிமை மீறல்” மற்றும் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்தியதின்மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும், செத்து மடிந்தனர். இலங்கையில் நடந்தது ”இனப்படுகொலைதான்” என்பதனை வலியுறுத்தும் விதமாக ஐநா சபை அமைத்துள்ள பன்னாட்டு விசாரணைக் குழுவிற்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளித்து, போர் சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் அவர்களுக்கு தரவேண்டும் என இந்திய பிரதமர் இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன் பிடிக்கும்போது “எல்லை தாண்டி வந்தார்கள்” என்ற காரணத்தைக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடித்தும், அவர்கள் மீது பொய்யான வழக்குகளை புனைந்தும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தும் இலங்கை ராணுவத்தின் மனித தன்மையற்ற செயலை உடனடியாக இலங்கை அரசு கைவிடவேண்டும் எனவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில் கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியாவிற்கு இலங்கை கொடுக்க வழிவகை செய்யும் சட்டதிருத்தம் அல்லது புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி சிறையில் அடைப்பு

traffic-ramasamyசென்னை: சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். வேப்பேரி ஜவஹர்நகரைச் சேர்ந்த வீரமணி (59) ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். வீரமணி புதன்கிழமை வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் டிராபிக் ராமசாமி வழியை மறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தாராம். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வீரமணி, டிராபிக் ராமசாமியை சாலை ஓரம் நின்று பேட்டியளிக்குமாறு கூறினாராம். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றியதில், டிராபிக் ராமசாமி, வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்து, வீரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வீரமணி, வேப்பேரி காவல் நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தி.நகரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை போலீஸார் வியாழக்கிழமை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமசாமி, சைதாப்பேட்டை 14வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கயல்விழி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், டிராபிக் ராமசாமி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜக உயர்மட்டக் குழுவில் 5 தமிழர்கள்

சென்னை: பாஜக., வின் செயற்குழுவை அதன் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று மாற்றி அமைத்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி, வி.சண்முகநாதன் ஆகியோர் தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் காப்பீடு மசோதா நிறைவேற்றம்

புது தில்லி: மாநிலங்களவையில் இன்று காப்பீட்டு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற காங்கிரஸ், மற்றும் சில கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனால் காப்பீட்டு மசோதா சிக்கல் இன்றி மாநிலங்களவையில் நிறைவேறியது. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை 26%ல் இருந்து 49% ஆக அதிகரிக்க வகை செய்யும் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக கடந்த 4ம் தேதி மக்களவையில் இந்த மசோத நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.